சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 April 2010

ஹாய் மதன் - ஹாய் வெங்கட்

இதன் மூலம் எல்லார்க்கும்
சொல்லுறது என்னான்னா..,

" ஹாய் மதன் " மாதிரி
" ஹாய் வெங்கட் " - னு
ஒரு பகுதி ஆரம்பிக்கலாம்னு
இருக்கேன்..

அதுக்கு உங்க ஒத்துழைப்பு
தேவை..
கேள்விகள் நீங்க தான்
கேட்கணும்..!

ஒருத்தரே எத்தனை கேள்வி
வேணாலும் கேட்கலாம்..
என்னால பதில் சொல்ல
முடிஞ்சா அத்தனையும்
பதிவுல வரும் (உங்க பெயரோட )

கேள்வி எப்படி இருந்தாலும்.,
பதில் மொக்கயா தான்
இருக்க போவுது..
So., கேள்வியும் மொக்கயா
இருந்தா Better..!

எப்பவும் கேள்வி கேக்கறது Easy.,
பதில் சொல்லுறது தான் கஷ்டம்..,

கேள்விகளை என் E-Mail-க்கு
அனுப்புங்க..,
venkatappan311@gmail.com

பின் குறிப்பு :
குறைஞ்சது 5 கேள்வியாவது
வேணும் இந்த பகுதி Start பண்ண..,
.
.

15 Comments:

அனாமிகா said...

இது வேறயா??? கடவுளே.. இந்த பூமி தாங்குமா??

அந்த wicket keeper பக்கத்துல குழி எப்படி வந்துச்சு-னெல்லாம் கேக்கலாமா? (எனக்கு தெரியும்னாலும் வாசகர்களும் தெரிஞ்சுக்கனும்ல..)

வெங்கட் said...

அனாமிகா..,
அதெல்லாம் தாங்கும்..,
தாங்கும்..!
ஏற்கனவே கண்மணி,
வடிவேலன்., ரசிகன்
எல்லாம் கேள்விகள்
அனுப்பிட்டாங்க..

நீங்க இன்னும் கேள்வி
அனுப்பலையா..?
மொக்கையா Comment
மட்டும் தான் போட
தெரியுமா..?
கேள்வி கேட்க தெரியாதா..???!!

அனாமிகா said...

நான் கேக்குற கேள்விகெல்லாம் உங்களால பதில் சொல்ல முடியுமா???..

முதல்ல இதுக்கு answer சொல்லுங்க.. அப்புறம், மத்தத பாக்கலாம்..

ஜெகன் said...

வெங்கட், நீங்க ஏன் "கற்றதும் பெற்றதும்", "ஏன் எதற்கு எப்படி" லாம் ஆரம்பிக்க கூடாது?

அனாமிகா ரசிகன் said...

@அனாமிகா

என் அக்கவுண்ட்ட (ம்க்கும்..) யாரோ hackக்கிட்டாங்க... என் பேருல கமெண்ட்ஸ் வர ஆராம்பிச்சுருக்கு.. நம்ம கட்சியில யாரோ கல்லெறிய பாக்குறங்க.. பாத்து சூதனமா இருந்துக்கோங்க..

அனு என்கிற அனாமிகா said...

@அனாமிகா ரசிகன்

எங்க பாட்டி சொல்வாங்க "A rabbit hunting dog can be identified by seeing its face"-ன்னு... (தமிழ்ல எழுதுனா ஏதோ திட்டுறேன்னு வெங்கட் கத்திரி போட்டாலும் போட்ருவார்)

அத மாதிரி உங்க comments-a வச்சே உங்களை கண்டுபிடிச்சுடுவோம்.. dont worry...btw, நீங்க உங்க பேர 'அனு ரசிகன்'னு மாத்திடுங்க...

@அந்த இன்னொரு அனாமிகா ரசிகன்

உங்க ஆர்வம் புரியுது.. நீங்களா பேர மாத்தினா நல்லது.. இல்லாட்டி, 'அனாமிகா ரசிகன்' பேரை மாத்த வெங்கட் கிட்ட இன்னொரு பதிவு போட சொல்ல வேண்டியிருக்கும்.. இப்போ, என்ன சொல்றீங்க..(யப்பா, பயபுள்ளைகள எப்படியெல்லாம் பயமுறுத்த வேண்டியிருக்கு...)

அனாமிகா துவாரகன் said...

I second(du) in Anu. ha ha ha.

ஒரு ரகசியம் சொல்லவா அனாமிகா. அம்மா என்னை சுனாமிகா என்று தான் கூப்பிடுவார்கள். ஹி ஹி. தம்பியோ அனாமி ஒரு சுனாமி என்று சொல்லுவான். அப்பா தான் கண்ணா என்று கூப்பிடுவார்.

அனாமிகா துவாரகன் said...

Hello Jana Sir,
How are you?

- Anamika Duwaragan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதில் எப்ப கிடைக்கும்?

வெங்கட் said...

@ ஜெகன்..,
உங்களை மாதிரி ரசிகர்களின்
வேண்டுகோளுக்கு இணங்க
" கற்றதும்., பெற்றதும்..! "
" ஏன்.,எதற்கு., எப்படி "
இதெல்லாம் விரைவில்
ஆரம்பிக்கப்படும்...

வெங்கட் said...

@ அனு.,
இன்னும் இந்த பினாமி
Account-ஐ ( அனாமிகா ரசிகன் )
விடலையா..?

அனு என்கிற அனாமிகா said...

@வெங்கட்

என் தொண்டரை பினாமி என்று சொல்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்... அவர் பெயரில் வேறு யரோ comment போடுவதாகவும் கேள்விப்பட்டேன்... எங்கள் கட்சிக்கு எதிராக இங்கே ஏதோ சதி நடக்கிறது...

விசாரணைக்குப் பின் அது யாராக (blog owner-ராக) இருந்தாலும தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

வெங்கட் said...

@ அனு.,
நெ. 1: என்னப்பா இந்த பொண்ணு
கட்சி., அது இதுன்னு எல்லாம்
பேசுது...? எந்த கட்சியா
இருக்கும்..?

நெ 2 : அதாம்ப அவங்களே
பேசி., அவங்களே கை
தட்டிக்குவாங்களே.,
அந்த கட்சி..!

நெ 1: ஓ.. அந்த மானங்கெட்ட
கட்சியா..?

வெங்கட் said...

@ ரமேஷ்.,
கோடிக்கணக்கான பேரு
லட்சக்கணக்கான கேள்வி
கேட்டு இருக்கறதால..,
அதையெல்லாம் பரிசீலனை
பண்ணி..
" ஹாய் வெங்கட் "
புதன் கிழமை வரும்..!

cheena (சீனா) said...

வெக்கடப்பன் யாருயா