சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 April 2010

அனாமிகாவுக்கு ஒரு பேரு வைங்கோ..!!

நம்ம Blog படிக்கிற
எல்லோருக்கும் தெரியும்..
இங்கே ரெண்டு அனாமிகா
இருக்காங்க..

1. அனாமிகா துவாரகன்.,
2. அனாமிகா ( புனை பெயர் )

இவங்க ரெண்டு பேரும்
சிறப்பா, Interesting-ஆ
Comment போடுறவங்க..

ஆனா..,
யார் எந்த Comment
போட்டாங்கன்னு
பல பேருக்கு குழப்பம்.

( சில சமயம் எனக்கே கூட..! )

So.,
இந்த குழப்பத்தை தீர்க்க
நம்ம அனாமிகா..,
அவங்களுக்கு
ஒரு நல்ல பெயரா
Choose பண்ண சொல்லி
நம்ம வாசகர்கள்கிட்ட
கேட்டு இருக்காங்க..

நல்ல பெயரா சொல்றவங்களுக்கு
பரிசு $ 10,000 ( or ) Sweet ( அல்வா )
அனாமிகா கொடுப்பாங்க..!

அதுக்கும் முன்னாடி
இவங்க எழுதின Comments-ஐ
எல்லாம் படிச்சிடுங்க..

அப்பத்தான்
வெறி., வெறியா..
Sorry..,
வெரி Good-ஆ
ஒரு பேரு வெக்க முடியும்..!!

எங்கே ஒரு நல்ல பெயர்
சொல்லுங்க பார்க்கலாம்..!

பின் குறிப்பு :
அனாமிகா..,
நீங்க கில்லாடிங்க..!
எப்படியோ நினைச்சதை
சாதிச்சிட்டீங்க..!

அப்படியே இந்த பதிவுக்கு
வர்ற எல்லா Commets-க்கும்
நீங்களே பதில் போடுங்க..
.
.

40 Comments:

வெங்கட் said...

அனாமிகா..,
முதல்ல நான் Try பண்றேன்..
Actually நீங்க
அனாமிகா துவாரகனுக்கு
பின்னாடி தான் இங்கே வந்தீங்க..
So.. " பினாமிகா..! "
எப்புடி..?

ராஜ நடராஜன் said...

பரவாயில்லையே!முதல்வன் வேகத்துல இருக்கீங்க பின்னூட்டம் போட்ட உடனே குறை தீர்க்கிறீங்க:)

முதல்வர் போஸ்ட் காலியாக போகுது.விண்ணப்பிக்க விருப்பமா?

பல் டாக்டர் அனாமிகா யாரு?
அவங்களுக்கு வேணுமுன்னா பனாமிகா வெச்சுடலாம்:)

jana said...

என் இனிய வெங்கட்,

என் friend அனாமிகாவுக்கு தனியா ஒரு
Blog போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி...

அதுக்காக நீங்க நீண்ட நாள் நல்லாயிருக்கனும்னு
துபாய் கண்ணாத்தாள் கோயில்ல
நாளைக்கு கூல் ஊத்தறேன்...

எல்லொரும் ஒரு பெயர் சொல்லுங்க...
கடைசியா நான் ஒரு பெயர் சொல்லுறென்...
எது நல்லா இருக்கோ (கண்டிப்பா என்னொடதுதான் அவங்க Choose பண்ணுவாங்க) அத வச்சிடலாம்...

என்ன சரியா...?

அனாமிகா No. 2 said...

ஓ...சன்டேனா ரெண்டா???

ரெண்டும் அனாமிகாவுக்கே dedicated-டா?? என்னை ம(மி)திச்சு ஒரு ப்ளாக் போட்டதற்கு நன்றி...

"அனாமிகாவுக்கு ஒரு பேரு வைங்கோ"-ன்னு title-அ மாத்தினா நல்லா இருக்கும்...

பரிசு "$10,000+Sweet(அல்வா)" இல்லீங்கோ "$10,000 or Sweet( அல்வா)" தான். இதில் நடுவர் (அதாவது என்) தீர்ப்பே முடிவானது..(அனாமிகா ரசிகன் எங்க இருக்கீங்க???)

நான் வியர்வை சிந்தி உழைப்பது சிலருக்கு மட்டுமே. அதனால் no sweat for anyone, only sweet... (ஜனா, எங்க இருக்கீங்க, நான் வெங்கட்ட பழி வாங்கிட்டேன்.. ஹா ஹா..)

என்னங்க, tamilish-ல ஓட்டுப் போட வழியில்லாம பண்ணிட்டீங்க...

கும்மி said...

சுனாமிகா அல்லது சுனாமிக்கா

வெங்கட் அந்தப் பரிசை அவங்க பேர மாத்திக்கிறதுக்கு முன்னாடி வாங்கிக் குடுத்துருங்க. பேர மாத்துனதுக்கு அப்புறம் அனாமிகாட்ட போய் வாங்கிக்க சொல்லிட்டா சிக்கலாயிரும் .

எப்படியிருந்தாலும் அல்வாதான். இருந்தாலும் ஒரு ஜெனரல் நாலேஜுக்காக, பரிசு sweet அல்வாவா இல்ல sweat அல்வாவா?

துபாய் ராஜா said...

"பினாமிகா" - சூப்பரரரரப்ப்ப்ப்பு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆட்டோ ராணி
பூலான் தேவி
கோவில்பட்டி வீரலட்சுமி
ஜான்சி ராணி
கற்பகவல்லி குந்தாணி
நீலாம்பரி...

இதுல ஏதாவது ஒன்னு வைக்கலாமா?

வெங்கட் said...

அனாமிகா @ பினாமிகா.,
" சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி
பார்க்கிறது தான்..! "
அதனால என்னை பழிவாங்கிற
எண்ணத்தை விட்டுடுங்க..

சாரி.,
அவசரமா Posting குடுத்ததால.,
Sweet கொஞ்சம் Sweat ஆகி
போச்சி..!

வெங்கட் said...

ஜனா.,
இது கொஞ்சம்
Over Confidence-பா..,

jana said...

வெங்கட்,
இது "over confidence"இல்லப்பா...
நட்பு...
பிசிராந்தையார், கோப்பெருஞ்சொழன்
மாதிரி...
உனக்கு எங்கப்பா அது தெரியப்போகுது...
அனாமிகா நீங்க பீல் பண்ணாதீங்க...
அந்த "Sweet" எனக்குத்தான்....

cheena (சீனா) said...

யோ அதென்ன மே மாசம் திடீர்னு - அது வரைக்கும் இழுக்கப் போறிங்களா இந்தப் பேரு வைக்க்ற சோலிய - பதிவிட்டது மே நாலாந்தேதின்னு சொல்லுது

ரசிகன் said...

கருத்து கபாலிகா..
மறுமொழி மங்காத்தா..
ஜோக் பின்றதால ஜோக்திகா..
கலகமே தொழில் so கலகா..
Uncomparable .. ஏக்தா
சகலமும் தெரிஞ்ச‌ சௌப‌ர்ணிகா
ஏன் இவ்ளோ பாடு..
பேசாம சொந்த பேர் சொல்லுங்க..

வெங்கட் said...

சீனா சார்..,
Date-ஐ மாத்துறதுக்கு
பதிலா Month-ஐ மாத்திட்டேன்
போல..

ரசிகன் said...

ஜனாவோடது Over Confidence இல்லைங்க.. .. நாங்கதான் ஜெயிப்போம்.. இத்தனை vote வித்தியாசத்துலன்னு சொல்லிட்டு களம் இறங்கறதுதான் இப்போ trend..

Jana உங்க friend க்கு 'பிசின்' னு பேரு வச்சிடலாமா..? ('பிசிராந்திகா'வோட shortform )

அனாமிகா ரசிகன் said...

அழகுக்கு ஐஸ்வர்யா
கலருக்கு தமன்னா
குரலுக்கு சுசீலா
விரலுக்கு வித்யா (ஒரு flowல வந்தது)
இப்படி பல பேர் இருக்க, அனானிக்கு பொருத்தமா 'அனாமிகா'னு பேரு வச்ச எங்க தாணையத் தலைவி பேர மாத்துறவன் எவன்டா???

ஏய் பாட்டிலு, ஆட்டோவ சேலத்துக்கு திருப்புடா....

jana said...

ரசிகன்..,
நன்றி உங்க supportக்கும் suggestionக்கும்...
நான் இத mindல வச்சிக்கறேன்...
நீங்க எப்படிங்க இப்படி Superஆ யோசிக்கறிங்க...

நானும் அனாமிகாவும் Discuss பண்ணி
முடிவு அறிவிப்போம் யாரு ஜெயிச்சான்னு...
அப்புறம் அல்வா குடுப்பாங்க நம்ம அனாமிகா...


16"inch TVயா இருந்தாலும்
32"inch TVயா இருந்தாலும்
Remote என்னமோ 6"inchதான்..

அது மாதிரி இத பத்தி சொல்லவேண்டியது
நம்ம பிசின் sorry அனாமிகா...

இப்போ உங்க Turn "அனா"நீங்க தான் வரணும்...
நான் ஜனா... அவங்க "அனா"
இதுவும் நல்லா தான் இருக்கு...

அனாமிகா said...

மக்களே,
ஒரு நல்ல பிள்ளை ஒன்னும் பேசாம இருக்குதேன்னு ஆளாளுக்கு வாரி விட்டுட்டு இருக்கீங்களா? ஆணி பிடுங்கும் போது அங்க இங்க பாத்தா, ஆணி நம்ம கைல தானே படும்னு இவ்ளோ நேரம் அமைதியா இருந்தேன். எங்க ஆபிஸ்காரர் (வீட்டு பாஸ் வீட்டுக்காரர்னா ஆபிஸ் பாஸ் ஆபிஸ்காரர் தானே!!) தலை மறைந்ததும் இந்த comment-அ போடுறென்..

இதனால், எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால், யாரெல்லாம் என்னை கலாய்க்கிறார்களோ அவர்கள் வீட்டிற்கெல்லாம் ஒரு அன்கோண்டா அனுப்பப்படும்... அதையும் மீறினால், வெங்கட் நீங்கள் நிறுத்தும் வரை தினமும் 5 பதிவுகள் போடுவார்!!! (இப்பூடி பயமுறுத்துனா தான் வேலைக்காகும்)

வெங்கட் said...

அனாமிகா @ பினாமிகா..,
Hello..,
இந்த பதிவே உங்களுக்காக.,
இதுல வர்ற Comments உங்களுக்கு..,
அப்படியே நைஸா என்னை கோத்து விடக்கூடாது..
ஓ.கேவா..?
இப்ப நான் ஒரு பேரு சொல்லுறேன்..
அனாமிகா சுருக்கமா
" அனு "

அனாமிகா said...

@அனாமிகா ரசிகன்,
நீங்க தாங்க உண்மையான தொண்டர்... உங்கள் அன்பைக் கண்டு நான் பூரித்து போகிறேன்... உங்கள் நற்பணி தொடரட்டும்...

@ரசிகன் & ஜனா
நீங்க ரெண்டு பேரும் சொல்றதெல்லாம் உயர்வு நவிர்ச்சி அணியா இல்ல வஞ்சப்புகழ்ச்சியணியான்னு அப்பப்போ எனக்கு doubt வருது.. என்னை வச்சு காமடி கீமடி பண்ணலயே??

@ரமேஷ்
ஆமா, நீங்க நிஜாமாவே நல்லரா? கெட்டவரா??

@கும்மி,துபாய் ராஜா

அனகோண்டா confirmed delivery....

வெங்கட் said...

அனாமிகா.,
O.K.., நீங்க
எந்த எந்த பேரெல்லாம்
வெக்ககூடாதுன்னு
நம்ம வாசகர்கள்
இப்ப உங்களுக்கு
சொல்லி குடுத்தாங்க..
தெரிஞ்சிக்கிட்டீங்கல்ல..

முடிவா ஒரு பேரு
சொல்லுங்க..

அனாமிகா said...

ம்ம்ம்...
நமக்கு பேர் வைக்குறதுன்னா சும்மாவா?? மூளைய கசக்கி (கொஞ்சம் இருக்குதுங்க, நம்புங்க..அட, நெசமா தான்) பார்த்தும் எதுவும் பிடிபட மாட்டேங்குது...

அனாமிகா வரட்டும்..அவங்க கிட்ட கேட்டு தான் முடிவு பண்ணனும்... முக்கியமா அதே பேர்ல இன்னொருத்தர் இருக்காங்களான்னு confirm பண்ணனும்... நானும் எத்தனை தடவை தான் பேர மாத்துறது...

ஓட்டுப் பெட்டிய கவனிச்சீங்களா?? எப்படி traffic எகிறுதுன்னு?? (இதெல்லாம் ஒரு பொழப்பா?? எவ்வளவு பினாமி ஓட்டு தான் பொடுவே??) இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...

Anonymous said...

//அழகுக்கு ஐஸ்வர்யா
கலருக்கு தமன்னா
குரலுக்கு சுசீலா
விரலுக்கு வித்யா
அனானிக்கு 'அனாமிகா'/

I love it. PLEASE, DO NOT CHANGE THE NAME ANAMIKA.

அனாமிகா, இந்த ஜனா சார் உங்ககிட்ட ஏதோஓஓஓஓஓஓஒ ரூட்டு போடுற மாதிரி இருக்கு. பெயர் பொருத்தம் எல்லாம் சொல்லுறார். பாத்துப்பா.

சுனாமிகா பெயர் கூட நல்லா இருக்கு. அனாமிகா அக்க சுனாமிகா என்று கூட எழுதலாம்.

இன்னும் யாராவது அனானியா அனாமிகானு பெயர் போட்டு எழுதவிடாம, ஒரு எக்கவுன்ட் ஓபின் பண்ணி கொமன்ற் போடுங்களேன்.

நீங்க தான் நம்பர் வன் அனாமிகா. பட்டய கிளப்புங்க.

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
உங்க பெருந்தன்மை எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு..!

ஜனாவை அப்படி எல்லாம்
தப்பா நினைக்காதீங்க..!
He is a Gem..!!

வெங்கட் said...

அனாமிகா..,
ஓ.., அதானே பார்த்தேன்..,
நம்ம ஆளுங்க மனசு வந்து
6 ஓட்டுக்கு மேல
போடமாட்டாங்களேன்னு..!
எல்லாம் பினாமி ஓட்டா..!!

அப்ப சரி..,
இனிமே நம்ம பதிவு
எல்லாத்துகும் இப்படியே
கொஞ்சம் மனசு வைங்க..!!!!!

Anonymous said...

நாட்டுக்கு ரொம்போ முக்கியம்
ஏம்ப்பா எல்லாரும் போயி அவிங்கவிங்க வேலய பாருங்கப்பா.
ஒரு கொழந்தைக்கு பேர் வெக்க கூட இவ்வ்வ்ளோ மண்டைய குழப்பிக்க மாட்டீங்க (மண்ட காயுது)

அனாமிகா said...

@anamika
வெங்கட் சொன்ன மாதிரி பேர மாத்துறது தான் குழப்பங்களைக் குறைக்கும்.. 'அனு'-வும் நல்லா தான் இருக்கு.. ஆனா ஜனா ஏதோ பேர் சொல்றென்னு சொன்னார்.. அதுக்கு தான் wait பண்ணிட்டு இருக்கேன்.

நம்மளால ஒருத்தரையே சாமளிக்க முடியல.. ஜனா போடுற comments-அ பாத்தா அவரும் அதே நிலைமைல தான் இருக்கிறார்னு தெரியுது.. இதுல எங்க ரூட்டு போடுறது...ஹ்ம்ம்ம்....

@பெயரில்லா
உங்களுக்கு பெயரில்லை-ன்றதுக்காக மத்தவங்களுக்கு பேர் வைக்கும்போது கண்ணு போடக் கூடாது

@வெங்கட்
btw, ஜனா என்ன வெரைட்டி gem?? வைரமா இருந்தா நல்லது... எப்பவாது பணகஷ்டம் வந்த use பண்ணிக்கலாம் :)

Anonymous said...

@Anamika,
Then make it as Sunamika. I like it. :))

Anonymous said...

சுனாமிகா, கருத்து கபாலிகா இரண்டுமே நல்லா இருக்குனு தானே சொன்னேன். கிண்டலா பண்ணினேன். என்னங்க இப்டி சொல்லிட்டீங்க.. ரொம்ப ஃபீலிங்ஸ் ஆச்சு...

ஜனா சார் நீங்க ரூட்டு போட்டுட்டு அப்புறம் என்னோட மல்லுக்கு வரக்கூடாது. ஹி ஹி..

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
பெயர் Selection Super..,
அல்வா உங்களுக்கு தான்
போல..,

அனாமிகா said...

சரிங்க... இந்த post-ஐ ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம்..

முதல்ல, எனக்காக யோசிச்சு பல்லாயிரக் கணக்கான பெயர்களை சொன்ன பல கோடி மக்களுக்கும் நன்றி... (claps..claps)

எல்லோரும் ரிசல்ட் தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பீங்கன்னு தெரியும்...வின்னர் யாருன்னு சொல்லவா???

ok.. ஒரு க்ளு கொடுக்குறேன்.. என் கிட்ட இருந்து அல்வா வாங்குறதுக்கு பொருத்தமான ஆளு யாரு??? சொல்லுங்க பார்ப்போம்...என்னது??? ஜனா-வா?? சே.. சே.. அவர் இல்லைங்க... அவர் ஒரு GEM... அவருக்கெல்லாம் கொடுப்பேனா???


ஆனா கிட்ட வந்துட்டீங்க...


கரெக்ட்...நம்ம எல்லோரையும் பதிவு போடுறேன்னு torture பண்ணிட்டு இருக்குற 'வெங்கட்' தான் அது....

சோ, அவர் சொன்ன 'அனு' (short form of அனாமிகா) என்கிற பெயரை நான் மற்றும் என் தொண்டர்கள் (spl thanks to அனாமிகா ரசிகன்) தீவிர பரிசீலனைக்குப் பின் தேர்ந்தெடுத்திருக்கிறோம்...

வெங்கட் அவர்களை http://www.tirunelvelialwa.com/images/halwa+2.jpg இங்கே பொய் பரிசை வாங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... (வெங்கட், நீங்க என் கைய காலா நினைச்சி, கெஞ்சி கதறி பரிசு வாங்குனத எல்லாம் public-ஆ சொல்ல வேணாம்.. மறைச்சுடுங்க..)

பின்குறிப்பு:
பரிசு கிடைக்காதவர்கள் யாரும் கவலைப்படக் கூடாது.. எப்படியும் 'அனு'-ன்ற பேருலயும் யாராவது comment ஆரம்பிப்பாங்க.. அப்போ திரும்பவும் பேரு வைக்கனும்.. அந்த சமயம் நீங்க சொன்ன பேரை வச்சுக்கலாம்..

@அனாமிகா
நீங்க செலக்ட் பண்ணின பேரெல்லாம் என்னை கலாய்க்குறதுக்காக மத்தவங்க சொன்னது.. நீங்க அதுலயே ஒன்றை select பண்றீங்களே.. என்னோட comments தான் நல்லா இல்ல.. பேராவது நல்லா இருக்கட்டுமே... :)

கும்மி said...

@அனாமிகா

நீங்கள் என்ன பெயர் வைத்துக்கொண்டாலும், எல்லோராலும் 'சுனாமிகா' என்று அன்போடு அழைக்கப்படுவீர்.

வெங்கட் said...

அனாமிகா.,
உங்க ரவுசுக்கு அளவே
இல்லையா..?

உங்களுக்கு கல்யாணம்
ஆயிடிச்சா இல்லையான்னு
எனக்கு தெரியாது..
எப்படி இருந்தாலும்..,
" பாவம் அந்த பலிகடா..! "

அனு என்கிற அனாமிகா said...

@கும்மி

ஒரு ஒன்னும் தெரியாத அப்பாவிக்கு இந்த மாதிரி பயங்கர பேர் வைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு??? இது வரைக்கும் உங்களை நான் torture பண்ணின மாதிரி ஞாபகம் கூட இல்லையே...

comment போடுறதுக்கு முன்னாடி, என்னோட hitlist-ல சேர்ந்தா என்ன ஆகும்னு வெங்கட் கிட்ட கேட்ருக்கலாம்.. சாரி, இப்போ ஒன்னும் பண்ண முடியாது... அனாமிகா(அனு) ரசிகன், லிஸ்ட்ல கும்மி பேர சேத்துக்கோங்கப்பா...

அனு என்கிற அனாமிகா said...

@வெங்கட்

"வானமே எல்லை"

இந்த மாதிரி எல்லாம் கேட்டா, நாங்க உடனே சொல்லிடுவோமா??

கும்மி said...

@ சுனாமிகா @ அனாமிகா @ அனு
//ஒரு ஒன்னும் தெரியாத அப்பாவிக்கு இந்த மாதிரி பயங்கர பேர் வைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு???//

காலேஜ் காலத்துலேந்தே யாருக்கு பேரு வக்கிறதுன்னாலும் நம்மகிட்டதான் வருவாங்க. இப்ப வெங்கட் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டதால, ஆளனுப்பாமையே ஆஜராகி உங்களுக்கு பேரு வச்சான் இந்த கும்மி.

//comment போடுறதுக்கு முன்னாடி, என்னோட hitlist-ல சேர்ந்தா என்ன ஆகும்னு வெங்கட் கிட்ட கேட்ருக்கலாம்.//

நாங்கெல்லாம் கும்மி அடிச்சே பிரபலம் ஆனவுங்க. எங்களுக்கேவா? நாங்க அடிக்கிற கும்மிய கேள்விப்பட்டதில்லையா? கொஞ்சம் ஆல் இன் ஆல் ப்ளாகுக்கு வாங்க.
எங்க டெர்ரர் கும்மியப் பாத்து சின்னப்பொண்ணு அலறி அடிச்சிக்கிட்டு ஓடுன கதை தெரியாம பேசிட்டீங்க. என்ன இருந்தாலும் சின்னப்பொண்ணு தவிர வேற யாரையும் டெர்ரராக்குரதில்லைன்னு நாங்க முடிவு பண்ணியிருக்கதால, உங்கள மன்னிச்சிர்றோம். வரட்டா?

கும்மி said...

//இந்த மாதிரி எல்லாம் கேட்டா, நாங்க உடனே சொல்லிடுவோமா??
//

இப்படியெல்லாம் கேக்கக்கூடாது வெங்கட். உங்களுக்கு எப்ப கல்யாணம்ன்னு கேளுங்க. வெக்கப்பட்டுகிட்டே போன வாரம் நடந்த அவங்களோட 60 ஆம் கல்யாணத்தைப் பத்தி கதை கதையா சொல்லுவாங்க.

கும்மி said...

//அதையும் மீறினால், வெங்கட் நீங்கள் நிறுத்தும் வரை தினமும் 5 பதிவுகள் போடுவார்!!! (இப்பூடி பயமுறுத்துனா தான் வேலைக்காகும்)
//

அவர் போடற பதிவோட அதிகபட்ச நீளமே 4 வரிதான். இதுல 5 என்ன 50 பதிவு போட்டாலும் அரை நிமிஷத்துல படிச்சிட்டு போய்க்கிட்டே இருப்போம்.

வெங்கட் said...

@ கும்மி..,
ஐயம் வெரி Happy..!
ஐயம் வெரி Happy..!
( கவுண்டமணி Style-ல்
படிக்கவும்..! )

கட்சி மாறிடாதீங்க நண்பா..!

கும்மி said...

//கட்சி மாறிடாதீங்க நண்பா..! //

நமக்குத் தொழில் கலாய்த்தல், கும்மியடித்தல் (மூணாவது என்னன்னு சொல்லி யாராவது ஹெல்ப் பண்ணுங்கப்பா)

அனு said...

@கும்மி

உங்க comment-அ பாத்தா, ஏன்னு தெரியல, எனக்கு வடிவேலுவோட 'நானும் ரவுடிதான்' dialogue தான் ஞாபகத்துக்கு வருது...நல்லாயிருங்க...

//நமக்குத் தொழில் கலாய்த்தல், கும்மியடித்தல் // மூணாவது, எஸ்கேப் ஆகுதல்.. அதை இப்போ பண்ணினா நல்லது...

btw, இன்னைக்கு post-டோட நீளம் பாத்தீங்களா?? இது தான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை...