சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 April 2010

இது எப்படி இருக்கு..??" Come On எல்லாரும் நோட்டை
எடுத்து Table மேல வைங்க...! "

இதை சொல்லிகிட்டே தான்
எங்க Maths Master பிரபாகரன்
Class-ல Enter-ரே ஆவாரு..

Class-ல அவரு கணக்கு
போட்டு தள்ளுனாரா.?
இல்ல
எங்கள போட்டு
தள்ளுனாரான்னு கடைசி
வரைக்கும் புரியல.

எப்படியோ நாங்களும்
பிளஸ் 1 அவர்கிட்ட
கஷ்டப்பட்டு படிச்சிட்டோம்..

பிளஸ் 1 ரிசல்ட் வந்தது..

நானும்., என் Friend ஜெகனும்
Maths-ல பார்டர் பாஸ்
ஆயிருந்தோம்...
அதனால எங்களுக்கு ஒரே
Shock..!

இருக்காதா பின்ன.,
எழுதினதே 30 மார்க்குக்கு
தானே..!

அப்புறம்தான் தெரிஞ்சது
எல்லாம் எங்க Principal
புண்ணியம்.

நானும்., அவனும் Discuss
பண்ணினோம்..

நான் : இப்படியே போனா
பிளஸ் 2-ல தேறமாட்டோம்டா..
வேற யாராவது நல்ல Master-ஆ
பார்த்து Tution சேரணும்..

ஜெகன் : ராசிபுரம் SRV School-ல
பிளஸ் 2 Maths-க்கு
ஒரு மாசம் Coaching
தர்றாங்களாம்..
Fees 1000 ரூபா போலாமா..?

நான் : ராசிபுரமா..?
35 கிலோ மீட்டர் வருமேடா..
ரொம்ப தூரம்ல..

ஜெகன் : பிளஸ் 2-ல பாஸ்
ஆக வேணாமா..?

சரின்னு ஒரு மனசா
நாங்க ரெண்டு பேரும்
அங்கே போயி சேர்ந்தோம்..

First Day Class..

" Come On எல்லாரும் நோட்டை
எடுத்து Table மேல வைங்க...! "
சொல்லிட்டே அங்கே Class
எடுக்க வந்தது சாட்சாத் எங்க
Maths Master பிரபாகரனே தான்..!!


ஹாய் வெங்கட் :
-------------------

( ரகு, மும்பை )
கோழி First-ஆ., முட்டை First-ஆ..?

கோழி First., முட்டை Next.

( என் இலையில ரெண்டையும்
வெச்சா எதை நான் முதல்ல
சாப்பிடுவேன்னு தானே கேட்டீங்க..?!! )

இன்று ஒரு தகவல் :
---------------------

நமக்கு ஒரு விஷயம்
பிடிக்கலைன்னா
அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.,

நமக்கு ஒரு விஷயம் பிடிச்சா..
அதுக்கு ஏதாவது ஒரு காரணத்தை
நாமே கண்டுபிடிப்போம்..!
.
.

29 Comments:

ரசிகன் said...

ஹாய் வெங்கட் ல வந்த இந்த கேள்விய நிறைய தடவை கேள்விபட்டிருக்கேன்...
ஆனா இப்படி ஒரு பதில்... Chanceless.. கலக்கிடீங்க..

( அப்புறம்.. உங்க Prabakaran Master தான் இப்போ Boys schoolல HeadMasterஆ இருக்காராம். இந்த Blogஐ அவருக்கு Forward பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன்.

அந்த School பக்கம் போகும் போது மறக்காம ஹெல்மெட் போட்டுட்டு போங்க... ஹி ஹி...ஏதோ நம்மால முடிஞ்ச‌து..)

Chitra said...

நானும்., என் Friend ஜெகனும்
Maths-ல பார்டர் பாஸ்
ஆயிருந்தோம்...
அதனால எங்களுக்கு ஒரே
Shock..!

இருக்காதா பின்ன.,
எழுதினதே 30 மார்க்குக்கு
தானே..!....... Shocking! 30 marksukku eluthineengalaa? ha,ha,ha,,,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிகிட்டு இருந்துச்சாம்...

அந்தக் கதையா இருக்கு..

கரிகாலன் said...

//நமக்கு ஒரு விஷயம்
பிடிக்கலைன்னா
அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.,

நமக்கு ஒரு விஷயம் பிடிச்சா..
அதுக்கு ஏதாவது ஒரு காரணத்தை
நாமே கண்டுபிடிப்போம்..!//

ஆகா.... அருமை..

கரிகாலன் said...

//இருக்காதா பின்ன.,
எழுதினதே 30 மார்க்குக்கு
தானே..!//

சேம் ப்ளட்...

//" Come On எல்லாரும் நோட்டை
எடுத்து Table மேல வைங்க...! "
சொல்லிட்டே அங்கே Class
எடுக்க வந்தது சாட்சாத் எங்க
Maths Master பிரபாகரனே தான்..!!//

அப்புறம் ப்ளஸ் டூ என்னாச்சு?

அனு said...

//இருக்காதா பின்ன.,
எழுதினதே 30 மார்க்குக்கு
தானே..!//

30 மார்க்-க்கு மேல 40 மார்க் போட்டு பாஸ் பண்ண வைக்குறாங்களா? எந்த ஸ்கூல்ல நடக்குது இது. கொஞ்சம் சொல்லுங்க.. பின்னாடி use ஆகும்..

ஆனா, ஒன்னுங்க.. maths-ன்ற ஒரு subject இருக்கிறதால தான் இன்னும் நிறைய பேருக்கு கடவுள் பக்தி இருக்குது.. வேற எந்த subjectக்கும் இந்த பெருமை கிடையாது..

எல்லா ஸ்கூல்-லயும் maths டீச்சர் ஒரே மாதிரி தான் இருப்பாங்க போல.. எங்க ஸ்கூல்லயும் ஒருத்தங்க ஸ்கூலயே கலக்கிட்டு இருந்தாங்க.. ஆனா, அவங்களுக்கும் ஆப்பு வைக்க ஒருத்தி இருந்தா எங்க க்ளாஸ்ல.. Algebra க்ளாஸ்ல அவ கேட்ட கேள்வி:

a + b = c

அதை இப்படியும் எழுதலாம்
4a - 3a + 4b - 3b = 4c - 3c

சோ,
4a + 4b - 4c = 3a + 3b - 3c

4 * (a+b-c) = 3 * (a+b-c)

common termsஅ அடிச்சா,
4 = 3

அப்போ 4=3, கரெக்டா??

(டீச்சர கலாய்க்கனும்னா மட்டும் மூளை overtime போட்டு வொர்க் பண்ணுது)

டிஸ்கி: answer எனக்கு தெரியுமே..

ஜெகன் said...

@ரசிகன்:
//இந்த கேள்விய நிறைய கேள்விபட்டிருக்கேன்...
ஆனா பதில்... Chanceless.//


கேள்விய வேணும்னா நீங்க கேள்விபட்டிருக்கலாம், but பதில எப்படி "கேள்வி"படுவீங்க?


@சித்ரா:
//Shocking! 30 marksukku eluthineengalaa?

அது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எழுதின total marks. BTW, Happy சித்ரா பௌர்ணமி!

@ரமேஷ்:
//கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை..//

அது என்ன ரெண்டு கொடுமை, எப்பவும் ஒரு கொடுமைன்னு தானே சொல்வாங்க? யோசிச்சப்போ தான் தெரிஞ்சது, நீங்க Maths மாஸ்டரோட point of viewல எழுதி இருக்கீங்கன்னு..

நீங்க எப்பவுமே எதிர்க்கட்சி தானா?

@கரிகாலன்:
நாங்க அப்பவே கணக்குல புலி (எங்களுக்கு Zebra தெரியும், Algebra இல்லைன்னு சொல்றேன்)

அனு said...

@ஜெகன்

//நீங்க எப்பவுமே எதிர்க்கட்சி தானா?//

அவர் என் கட்சி...

ஜெகன் said...

@அனு:
//அப்போ 4=3, கரெக்டா?? //

வேண்டாம் அனு, தூங்கற புலிக்கு வீணா மிஸ்டு கால் தரீங்க.. answer எனக்கும் தெரியும், but இங்கிலீஷ்ல எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, "ஜீரோ".

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ஜெகன்
// யோசிச்சப்போ தான் தெரிஞ்சது, நீங்க Maths மாஸ்டரோட point of viewல எழுதி இருக்கீங்கன்னு.//

எப்படி கரெக்டா சொன்னீங்க. நான் Maths மாஸ்டரோட point of viewல தான் எழுதினேன்

@ நன்றி அனு. நான் உங்க கட்சிதான். ஏதாவது பிரியாணி பொட்டலத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.

அனு said...

@ஜெகன்
//தூங்கற புலிக்கு வீணா மிஸ்டு கால் தரீங்க//

புலி எப்ப பாத்தாலும் சோம்பேறியா தூங்கிட்டே இருந்தா என்ன பண்றது?? இப்படித்தான் மிஸ்ஸான கால், கை எதாவது போட்டு எழுப்பி விட வேண்டியிருக்குது.. (இதையெல்லாம் நான் ஒரு பொது சேவையாவே பண்ணிட்டு இருக்கிறேங்க..)

//இங்கிலீஷ்ல எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, "ஜீரோ"//
தமிழ்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை 'முட்டை'னு உங்க Prabakaran Master தான் சொன்னாரு.. அப்படியா??

அஹமது இர்ஷாத் said...

கணக்கு பாடத்த பத்தி பேசுனாலே தூக்கம் தூக்கமா வருது,,,,

ஜெகன் said...

@அனு
//தமிழ்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை 'முட்டை'னு உங்க Prabakaran Master தான் சொன்னாரு

ஐயோ அனு, நீங்க பார்த்தது Prabakaran Master இல்லை, சத்துணவு டீச்சர்!

வெங்கட் said...

@ ரசிகன்..,

// அந்த School பக்கம் போகும் போது மறக்காம ஹெல்மெட் போட்டுட்டு போங்க.//

என்னாது..,
ஹெல்மெட் போட்டுட்டு போறதா..?
என்னை அடையாளம் கண்டுகிட்டு
எதாவது Formula கேட்டார்னா..?!!
எதுக்குப்பா Risk..!!

வெங்கட் said...

@ சித்ரா..,

// Shocking! 30 marksukku eluthineengalaa..? //

இதுல என்னங்க ஷாக்..?
எங்களுக்கு முன்னாடி இருந்த பையன்
30 மார்க்குக்கு தான் எழுதினான்..
அதுக்கு நாங்க என்ன
பண்ண முடியும்..?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

எங்க Maths Master-க்கு Support
பண்ணி Comment போட்ட
நம்ம தல ரமேஷ்க்கு..,
எங்க Maths Master Prabhakaran
ஒரு வாரத்துக்கு Free-ஆ
Tuition எடுக்க ஆவலா
இருக்காருங்கறதை இங்கிட்டு
சந்தோஷமா தெரிவிச்சிக்கறேன்..!

வெங்கட் said...

@ அனு..,

// எங்க ஸ்கூல்லயும் ஒருத்தங்க ஸ்கூலயே கலக்கிட்டு இருந்தாங்க.. ஆனா, அவங்களுக்கும் ஆப்பு வைக்க ஒருத்தி இருந்தா எங்க க்ளாஸ்ல //

இந்த மாதிரி வேலையெல்லாம்
நீங்க தானே பண்ணுவீங்க..
இப்ப மட்டும் எதுக்கு இந்த
நல்ல புள்ள வேஷம்..

வெங்கட் said...

@ ஜெகன்.,

// அது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எழுதின total marks. //

வாடாப்பா பார்ட்னர்.,
அது நம்ம Total Mark-ன்னு
சொன்னியே..!!
அதுல வெங்கட்டுது 20 மார்க்.,
ஜெகன்து 10 மார்க்னு
சொன்னியா..!!!!

மாலா said...

நிஜமா சொல்லுங்க..,
இது நடந்தது
SRV டுடோரியல் காலேஜ்ல
தானே..?
அதைக்கூட Coaching Class
போனோம்னு இவ்ளோ
பில்டப்பா சொல்றீங்களே..!!

வெங்கட் said...

@ கரிகாலன்.,

// அப்புறம் ப்ளஸ் டூ என்னாச்சு.? //

அங்கதாங்க
God is Double Great-ன்னு
புரிஞ்சிக்கிட்டோம்...!!!

வெங்கட் said...

@ அஹமத் இர்ஷாத்..,

// கணக்கு பாடத்த பத்தி பேசுனாலே
தூக்கம் தூக்கமா வருது.. //

நீங்க வேற.,
எங்களுக்கு அதை பத்தி
பேசுனாலே..,
துக்கம் துக்கமா வருது

வெங்கட் said...

@ மாலா..,

// SRV டுடோரியல் காலேஜ்ல
தானே..? //

நாங்க போன வரைக்கும்
அது Coaching Class-ஆ தாங்க
இருந்தது..
ஒரு வேளை நீங்க
போனப்போ.....

அனு said...

@ஜெகன்

//ஐயோ அனு, நீங்க பார்த்தது Prabakaran Master இல்லை, சத்துணவு டீச்சர்!//

ஓ.. சாரிங்க.. Prabakaran Master தான் உங்களுக்கு 'பூஜ்யம்' (தப்பிச்சிட்டோம்ல) போடலயே... அவர் உங்க handwriting-அ பாத்துட்டு -5 தானே போட்டார்.. (நான் blank answer sheet தானே குடுத்தேன்னு சின்ன பிள்ளைத் தனமா கேக்கக் கூடாது. அதுல உங்க பேரு எழுதியிருந்தீங்கல்ல..)

ஜெகன் said...

@அனு
அது -5 இல்லைங்க, :-5. என்னோட handwriting பாத்துட்டு அவர் போட்ட smiley தான் அது.

Anonymous said...

//நமக்கு ஒரு விஷயம்
பிடிக்கலைன்னா
அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.,

நமக்கு ஒரு விஷயம் பிடிச்சா..
அதுக்கு ஏதாவது ஒரு காரணத்தை
நாமே கண்டுபிடிப்போம்..!//

இது நகைச்சுவையல்ல. சீரியசான விசய்ம்.

குறிப்பாக காதல் செய்வோருக்குப் பொருந்தும்.

Anonymous said...

நல்ல் நகைச்சுவை ப்திவு.

தமிழ்மணம் ஆண்டுப்போட்டியில், நகைச்சுவை பதிவுகளை வைக்கிறார்களா எனத் தெரியவில்லை.

வைத்தால், இப்பதிவுக்கு யான் ஓட்டுப்போடுகிறேன்.

வெங்கட் said...

@ ஜோ.,

// தமிழ்மணம் ஆண்டுப்போட்டியில்,
நகைச்சுவை பதிவுகளை வைக்கிறார்களா
எனத் தெரியவில்லை. வைத்தால்,
இப்பதிவுக்கு யான் ஓட்டுப்போடுகிறேன்.//

ரொம்ப நன்றீங்க..
உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு..

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

எப்பா தாங்கலே - இப்படி எல்லாம் கணக்குப் பண்ணி சாரி போட்டு - பிளஸ் ஒன் பாஸ் பண்ணி ...... ம்ம்ம்ம்

ஆமா அனு அந்த கணக்கு எங்க காலத்துலேயே இருந்தி இப்படிததான் இன்னும் இருக்கா - மாறவே இல்லயா

சித்ரா பௌர்ணமி வாழ்த்துகள் சூப்பர் வெங்கட்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பரா இருக்கு