சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 April 2010

சின்ன மீனு..!!எங்க ஊர்ல திருவிழா..,

ஒரு கடையில்
நானும் என் மனைவியும்..,

" ஏங்க.., 60 ரூபா குடுத்திடுங்க..! "

" என்ன வாங்கின..? "

" பொட்டு வாங்கினேன்..! "

" ஒரு Packet பொட்டு 60 ரூபாயா..? "

" ஒரு Packet இல்லீங்க., ஒரு பொட்டு..! "

" என்னாது.., ஒரு பொட்டா..? உனக்கே
இது ஓவரா தெரியல..? "

" இந்த மாதிரி பொட்டுதாங்க Function-க்கு
போகும் போது வெச்சுக்க முடியும்..,
சேலைக்கு Match-ஆ வெச்சுக்கலாம்.. "

நான் அந்த பொட்டை பார்த்து...

" சரி, இந்த பொட்டு எந்த சேலைக்கு Match..? "

" ஓ.., அது இனிமே தானே எடுக்கணும்..!! "

ஐயோ சாமி.., பொட்டே 60 ரூபான்னா..,
Matching-ஆ சேலை எவ்ளோவுக்கு
எடுப்பாங்களோ..!!!

இதுக்கு பேருதாங்க..

சின்ன மீனை போட்டு.,
திமிங்கலத்தை பிடிக்கறது
( கரையில இருந்துகிட்டே )
.
.

46 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்டினா உங்க மனைவிய கூட்டிகிட்டு எப்போ அங்காடி தெரு வுக்கு போறீங்க பாஸ். உங்களுக்கு பிடிக்கலைனாலும் நீங்க அங்காடி தெரு வுக்கு போய்தான் ஆகணும். ஐ வெங்கட் மாட்டிகிட்டார்..

cheena (சீனா) said...

வெங்கிட்டு - பொண்டாட்டிக்குத்தானே எடுத்துக் குடுக்கறே - கொடேன் - தப்பில்ல

ரசிகன் said...

புள்ளியாட்டமாவது ஒரு பொட்டு வச்சிகோமான்னு கெஞ்சுற parents & husbands கிட்ட கேளுங்க.. நீங்க எவ்ளோ Luckyன்னு சொல்லுவாங்க.. கொஞ்சமே கொஞ்சம் costlyன்னாலும்(சேலை வாங்கினதுக்கப்புறம் அதுக்கு match ஆ கம்மல் & நெக்லஸ் வேற வாங்கணுமே.. :-( ) culture காப்பாற்றப்படுதுல்ல.. பெருமைப்படுவீங்களா.. புலம்பறீங்களே.. இதை வன்மையா கண்டிச்சு நான் வெளிநடப்பு செய்யுறேன்..

Anonymous said...

ரசிகன் எழுதியதை ரசித்தேன்..நன்றா எழுதிருக்கிறார்..

எல்லோரையும் மாட்டி விடுற மாதிரி இருக்கிறது. இதைமாதிரியே பொட்டு புடவைனா...எங்கப்போறது...

எங்க ஊர்ல திருவிழா..,
ஒரு கடையில்

உங்க‌ ஊர்ல‌ கடைக்கு கூட‌ திருவிழா ந‌டத்துவாங்களா...ஆச்ச‌ர்ய‌மாக‌ இருக்கிற‌தே..இல‌வ‌ச‌மா எதுவும் உண்டா
...
வார்த்தைகள் தனியாக‌ இல்லாமல் சேர்ந்தே வருவதால் அர்த்தம் வேறமாதிரிப்படுகிறது....பொன்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்லவேளைக்கு இன்னும் நமக்கு கல்யாணம் ஆகவில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரசிகன் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. எனக்கு போட்டு வைக்காத பொண்ணுங்களை பார்த்தா ஓங்கி அறயலாம்னு தோணும். போட்டு வைத்தால் தான் பொண்ணுங்க அழகு...

மங்குனி அமைச்சர் said...

நல்ல எக்ஸ்பீரியன்ஸ் போல தல ?

jana said...

வெங்கட் நம்ம சொந்த கஷ்டத்த ஏன்
இங்க சொல்லுறன்னு எனக்கு தெரியல...
HUSBAND அ இருக்கறது எவ்வளவு சிரமம்னு
நம்மக்குத்தான் தெரியும்...


புரியாதவங்களுக்கு நீ தனி "BLOG" வேற போடுற...

நம்ம சொந்த காசுல நாமலே ஏன் சுனியம் வச்சுக்கனும்...

அதனால நான் இனிமே யாரோட பேரையும் சொல்ற
"IDEA" இல்ல...
அப்புறம் அந்த "அவுங்க" (நான் தான் பேர் சொல்லமாட்டேன்)
வந்து நான் "ரூட்டு" போடறென்னு சொல்லுவாங்க...

அந்த வெளிநடப்பு செஞ்சவங்கள உள்ள வரசொல்லுப்பா...

நான் வரென்பா...

வெங்கட் said...

ரமேஷ்..,
இன்னும் 2 மாசம் கழிச்சி
அங்காடி தெரு போகனும்..,
சொந்தக்காரங்க கல்யாணம்
வருதுல்ல..

ரமேசு.., நீங்க Foreign போனா
ரொம்ப கஷ்டம்..,
அங்கல்லாம் வெள்ளக்கார
பொண்ணுக பொட்டு வெக்க
மாட்டாங்க..
ஒவ்வொருத்தாரா கூப்பிட்டு
அறையவா முடியும்..!!??
பின்னிடுவாங்கலே..!!

வெங்கட் said...

சீனா சார்.,
எடுத்து குடுக்கறேன்..
இல்லைன்னா மட்டும்
விட்டுடவா போறாங்க..

வெங்கட் said...

ரசிகன்.,
என்னாது.., Matching-ஆ
நெக்லஸ்., கம்மல்
வேற வாங்கணுமா..?
என் Wife-க்கு தெரியாததை
எல்லாம் சொல்லி குடுப்பீங்க
போல....

இது என்ன சட்டசபையா..?
ஆளாளுக்கு வெளிநடப்பு
செய்யறீங்க..!!
Feel பண்ணாம உள்ளே வாங்க..

வெங்கட் said...

பொன்.,
சரியா சொன்னீங்க..,

இப்ப அந்த தவறை
திருத்திட்டேன்..
Very Thanks.

வெங்கட் said...

சங்கர்.,
ஹை.. அப்படியெல்லாம்
தப்பிக்க முடியாது..
எப்படியும் ஆகும்ல..!
அப்ப என்ன பண்ணுவீங்க..,
அப்ப என்ன பண்ணுவீங்க..??

வெங்கட் said...

மங்குனி..,
உங்களுக்கு இந்த மாதிரி
எதுவும் Experiance இல்லியா தல..!

வெங்கட் said...

ஜனா..,
எங்கடா தங்கச்சி பாசத்துல
என்னை கும்மி
எடுப்பியோன்னு பயந்தேன்..
நல்லவேளை...

என்னாமா இது...,
இதுக்கு போயி
இவ்ளோ Feel பண்ணிட்டு..!

உனக்கு அவுங்க ( அனாமிகாs )
தான் பதில் சொல்லணும்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naan namma orru ponnukalathaan sonnen venkat. Foreign ponnunga pottu vachaa asingamaa irukkum.

Anonymous said...

இங்க தான் என் பேர் சொல்ல மாட்டேனு சொன்னீங்களா? நான் மத்த பதிவில போய் கொமன்ற் பண்ணினேன்.

அது என்னங்க பொட்டு வைக்காத பொண்ணுனா அறைவீங்களா? ரொம்ப தான் ஓவர். எங்கோ படித்த ஞாபகம். சுடிதார் போட்ட எல்லா பெண்களும் நல்லவர்களில்லை ஜீன்ஸ் போட்ட எல்லா பெண்களும் கெட்டவர்களில்லை என்று. அதே மாதிரி தான் பொட்டும்.சின்ன வயசில எனக்கும் பொட்டு மிகவும் பிடிக்கும். வளர வளர அவ்வளவு இஷ்டமில்லை. அதனால் வைப்பதுமில்லை. ஒவ்வொன்றும் அவரவர் விருப்பம். பொட்டு இப்ப அழகு சாதனமாக ஆகிவிட்டது.

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
உங்க Comment-ல யாருக்காவது
பதில் சொல்லணும்னா., அவங்க
பேரை சொல்லி சொல்லுங்க..,

உதாரணத்துக்கு..,

@ ரமேஷ்..,
அப்படியே உங்களை நச்சுன்னு
நடுமண்டையில குட்டலாம்
போல இருக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனாமிகா துவாரகன்..,
போட்டு வைத்தால் தான் பொண்ணுங்க லக்ஷணமா இருப்பாங்க. அததான் சொன்னேன். தப்பா எடுத்துகாதீங்க. இந்த வெங்கட் பேச்சையெல்லாம் கேக்க வேண்டாம்.

Anonymous said...

சரி வெங்கட் சார்.

//@ ரமேஷ்..,
அப்படியே உங்களை நச்சுன்னு
நடுமண்டையில குட்டலாம்
போல இருக்கு.//

பாத்தீங்களா. நீங்க தான் 4 வரியில் நச்சுனு எழுதுவீங்க. நான் என்னடானா, நான் 12 வரியில் அதுவும் நீளளளளளளமா எழுதி இருக்கேன்.

பாத்தீங்களா ஐயா, எப்படி போட்டுக்கொடுக்கிறார்னு. யாருப்பா அனாமிகா (அக பினாமிகா, கருத்து கபாலிகா) ஐ நாரதர்னு சொன்னது.

அஹமது இர்ஷாத் said...

வெங்கட்டுக்கு என்னா கவலைன்னா புடவைக்கு பணம் கொடுப்பதில் பிரச்சனையில்லை, கடையில போய் நின்று வாங்கனுமே அதானே இப்பவுள்ள பிரச்சனை.


நண்பா வெங்கட் எப்பூடி?!

பிரபா said...

கடை எப்ப சார் திறப்பிங்க?

அக்பர் said...

அட இது ரொம்ப நல்லா இருக்கே

விருது பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html

அவுங்க said...

as usual, ஒன் மோர் மொக்கை

வெங்கட் வேலை பாத்துட்டு இருக்கும் போது ஒரு phone call வருது. எடுத்து பந்தாவா hands freeல போட்டுட்டு பேசுராரு..

அந்த ஸைடுல இருந்து "என்னங்க, ஆபிஸ்லயா இருக்கீங்க??'
வெங்: ஆமா...
போன்: இங்க shopping வந்தேனா.. அழகா பத்தாயிரத்துக்கு ஒரு புடவை அந்த பொட்டுக்கு match-ஆ இருக்கு.. எடுத்துக்கவா???
வெங்: ok ok.. no problem

போன்: பக்கத்துலயே நம்ம ரொம்ப நாளா வாங்கனும்னு நினைச்ச Lancer offer-ல கிடைக்குது
வெங்: ஒகே.. உனக்கு பிடுச்சதுன்னா order கொடுத்துடு..

போன்: அப்படியே நம்ம வாங்க நினைச்ச வீடு நாப்பது லட்சத்துல வருதுங்க...
வெங்: (சிறிது யோசிக்கிறார்.. எல்லோர் கவனமும் அவர் மீது தான்).. ம்ம்ம்ம்... நாப்பது கொஞ்சம் ஜாஸ்தி.. 35-க்கு பார்..max 37 வரைக்கும் try பண்ணு.. ஒகேவா???
போன்: ஒகே பா... ரொம்ப thanks.. உங்க கிட்ட அப்புறம் பேசுறேன்..

வெங்கட் call-அ cut பண்ணிட்டு அங்கிருக்குறவங்கள பாத்து கேக்குறார்.."யாருப்பா இது.. மொபைல இங்க வச்சுட்டு போனது???"

(சுட்டப்பழம் தான்)

அவுங்க said...

@anamika
உங்க point correct தான்.. எல்லாம் அவரவர் விருப்பம்.. அவ்வளவே... இதுக்கு போய் நம்ம டென்ஷன் ஆகலாமா?? டென்ஷனை குறைக்கிற மாதிரி ஒரு நல்ல ஜோக் (நான் சொல்ற மாதிரி மொக்கை அல்ல) சொல்லுங்களேன்....

@jana
அவுங்க பேரை சொல்ல மாட்டேன்னு சொன்னீங்களே... இப்ப என்ன பண்ணுவீங்க??? இப்ப என்ன பண்ணுவீங்க???

வெங்கட் said...

அஹமத்..,
அதே., அதே..!
உங்களுக்கு கல்யாணம்
ஆயிடிச்சா நண்பா..?

வெங்கட் said...

பிரபா..,
அஹா..,
எங்கே இன்னொரு தடவை
சொல்லுங்க..!
ரசிகைன்னா இப்படியில்ல
இருக்கணும்..!
நாளைக்கு ( 8.4.2010 )
Right Side கார்னர்ல
Notice Board பார்க்கல..?

வெங்கட் said...

அக்பர்..,
நமக்கு Award தந்து
கௌரவபடுத்திய நண்பா
மிக்க நன்றி..!

வெங்கட் said...

அவுங்க..,
ஹா.., ஹா.., ஹா..!

அப்பா நான் தப்பிச்சேன்..,
கடைசி ரெண்டு வரில
என் வயிதுல பாலை வார்த்தீங்க..!

எப்படிங்க உங்களுக்கு
மட்டும் சூப்பரா சுட்ட பழம்
கிடைக்குது..!

தமிழ்பாலா said...

இது நல்லா இருக்கே! சின்னமீனப்போட்டு பெரியமீன புடிக்கிறது!அட சக்கேனானா!தேர்தல் டைம்ல காசுக்கு ஓட்டை விக்குற அந்த கேடுகெட்டக் கண்றாவிக்கு இது பரவாயில்லபா! தேசம் உருப்படுற துக்கு வழிஇல்லாதது மாதிரியே அட ! குடும்பமும் உருப்பட்டமாதிரி தாம்பா! ஓடட்டும்பா! நல்லா ஓடட்டும் வண்டி ஓடுற வரைக்கும் ஓடட்டும்பா!

வெங்கட் said...

தமிழ்பாலா..,
என்ன ரொம்ப Tension
ஆயிட்டிங்க போல..,
இதெல்லாம் குடும்பத்துல
சகஜம்க...!

ராஜ்குமார் said...

இதுகெல்லாம் கவலைப்பட்டா எப்படீ.
உங்க தலைப்பே என்ன சொல்லுது , அடுத்த வங்க சந்தோஷம் தான் முக்கியம்.

அஹமது இர்ஷாத் said...

//அஹமத்..,
அதே., அதே..!
உங்களுக்கு கல்யாணம்
ஆயிடிச்சா நண்பா..?//

நமக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளது நண்பா....

வெங்கட் said...

ராஜ்குமார்..,
அதானே..!
நீங்க சொல்லுறதுகூட
சரி மாதிரி தெரியுது..!

வெங்கட் said...

அஹமத்..,
உங்களுக்கு கல்யாணம்
ஆயிடுச்சா..?

( என் அளவு இல்லைன்னாலும் )
நீங்களும் பார்க்க College பையன்
மாதிரிதான் இருக்கீங்க..
( இப்படி எனக்கு எழுத Idea
கொடுத்த அனாமிகாவுக்கு நன்றி..! )

அனாமிகா said...

@அஹமத்
"என் அளவு இல்லைன்னாலும்"
இது மட்டும் தாங்க என் copyright.. மீதி எல்லாம் வெங்கட்டோட கருத்து தான்..

@வெங்கட்
என்னோட copyright sentence-அ என் அனுமதி இல்லாம போட்டதுக்கு உங்களை sue பண்ணப் போறேன். இதுக்கு மேல் என் தொண்டர் அனாமிகா ரசிகன் பாத்துப்பார்...

ஜெகன் said...

//நமக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளது நண்பா....//

என்னது உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா? அடப்பாவிகளா..

வெங்கட் said...

அனாமிகா..,
புலியை பக்கத்துல உக்கார
வெச்சுகிட்டே..,
Full Meals சாப்பிடற Family..,
இந்த பூச்சாண்டிக்கா
பயப்படுவோம்..!!!

வெங்கட் said...

ஜெகன்..,
நான் : மாயாண்டி.., பீட்டர்., மொட்ட..

மாயாண்டி, பீட்டர், மொட்ட: எஸ் பாஸ்.,

நான் : இந்த ஜெகனை இழுத்திட்டு
வந்து சுளுக்கு எடுங்கடா..!!
ஹாஹாஹாஹா ( வில்லன் சிரிப்பு )

அனாமிகா said...

@வெங்கட்

உங்கள் comment-இல் ஒரு சிறு எழுத்துப் பிழை உள்ளது... அது 'புலி' அல்ல 'புளி'.

அதே மாதிரி அது சாப்பாட்டு பக்கத்தில் வச்சு சாப்பிடக் கூடாது.. சாப்பாட்டு செய்யும் போது அதுல போடனும்...

அனாமிகா ரசிகன் said...

ஹஹா வெங்கட்டை நல்லா காலை வாரி விடறீங்க அனாமிகா. I like it.

Anonymous said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
சரி வெங்கட் சார் பேச்சு கேக்கல. ஓக்கேவா.

வெங்கட் said...

@ அனாமிகா.,
புலி ( புளி ) Comment-ஐ
நானே ரொம்ப ரசிச்சேன்..,
நாங்களே பாராட்டுவோம்..

அதுக்குள்ள என்ன அவசரம்..?
பினாமி பேர்ல., ( அனாமிகா ரசிகன் )
உங்களை நீங்களே
பாராட்டிக்கிறீங்க..!!??

Mala said...

என்னது? 60ரூபாய்க்கு பொட்டு வாங்கி தருவீங்களா? ம்ஹீம்... என் ஹஸ்பண்ட் என்னை கடைத் தெருவுக்கே கூட்டிட்டு போனதில்ல...

வெங்கட் said...

@ மாலா..,
என்னது..?
கடைதெருவுக்கு கூட்டிட்டு
போனதில்லையா..?
ரொம்ப அனுபவசாலி போல..!

தமிழ்பாலா said...

சிரிப்போட கொஞ்சம் சிந்திக்கவும் வைங்க சாமியோவ்! மக்கள் ஜன நாயாகம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துங்க சாமியோவ்!