சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 April 2010

PART - 2


சின்ன வயசுல நான் நிறைய
குறும்பு பண்ணுவேன்..

அப்பல்லாம்
நிறைய திட்டு விழும்..,
துரத்தி துரத்தி அடிப்பாங்க..!

ஒரு தடவை
சைக்கிள்ல Wheeling பண்ணி
கிழே விழுந்து
முட்டிய பேத்துகிட்டேன்..,

அப்ப எங்க
அப்பாவும்., அம்மாவும்
என்னை வீடு கட்டி
அடிச்சாங்க..!

இப்ப நாலு நாள் முன்னாடி
என் மகன் சைக்கிள்ல
கையை விட்டுட்டு ஓட்டி
கீழே விழுந்தான்.
மூக்கு உடைச்சிக்கிட்டான்..

அவனையும் எங்க
அப்பா., அம்மா
திட்டினாங்க..,

அதை கேட்டு
நான் Shock ஆயிட்டேன்..

எப்படி திட்டினாங்க தெரியுமா..?

" உங்கப்பன் சரியில்ல..,
நீ மட்டும் எப்படி இருப்ப..? "

என்னை விட்டுடுங்க..
முடியல..
வலிக்குது..!


ஹாய் வெங்கட் :
-------------------

( திருடா.Com )
ஏதாவது பிளான் பண்ணினா
அதை "Master பிளான்"
சொல்கிறோமே..
"Teacher பிளான்னு" ஏன்
சொல்வதில்லை..?

Plan கண்டிப்பா ஜெயிக்கும்னா
Teacher பிளான்னு வெச்சி
இருப்பாங்க..
Plan சொதப்பினா..?
Master தானே எவ்ளோ
அடிச்சாலும் தாங்குவார்..!

இன்று ஒரு தகவல் :
---------------------

கோழி கூவுதுன்னு
சொன்னாலும்.,
உண்மையில கூவுறது
சேவலுங்கோ..!
.
.

27 Comments:

Chitra said...

சும்மா சொல்லக் கூடாது. "புல்லரிக்க" வச்சிட்டீங்க.....!

Sudha said...

சின்ன வயசுல நான் நிறைய
குறும்பு பண்ணுவேன்..

அது என்ன சின்ன வயசுல
இப்ப மட்டும் என்னவாம்..
உங்க அலம்பல் தாங்கல

Anonymous said...

ha ha.

ரசிகன் said...

உங்க அப்பாவ கேட்டு பாருங்க... நீங்க விழுந்தப்ப அவரையும் அப்படிதான் திட்டி இருப்பாங்க.. இதுக்கெல்லாம் இவ்ளோ Feel பண்ண கூடாது..
Note:
( என்ன வேணா சொல்லிகோங்க.. எங்க ஊரிலெல்லாம் இப்போ alarm தான் கூவுது )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கோழி கூவுதுன்னு சொன்னாலும்.,
உண்மையில கூவுறது சேவலுங்கோ..!//

வெங்கட் ப்ளாக் எழுதுகிறார் அப்டினாலும் ஐடியா கொடுக்குறது ரமேஷ் தானுங்க.

ஜெகன் said...

//"Teacher பிளான்னு" ஏன்
சொல்வதில்லை..?//

ஏன்னா அது நல்லா இருக்காதுன்னு தான்.. டீ டீச்சர், புரோட்டா டீச்சர், சரக்கு டீச்சர், ரிங் டீச்சர், Band டீச்சர் இதெல்லாம் நல்லாவா இருக்கு?

வெங்கட் said...

@ சித்ரா..,
நீங்க ரொம்ப Fast-ங்க..,
நான் Posting போட்டு
திரும்பறதுக்குள்ள
உங்க Comment வந்துடுச்சி..!
Very Thanks..

வெங்கட் said...

@ சுதா..,
நீங்க கண்மணி Friend தானே..!
கண்மணி சொன்னாங்க
உங்களை பத்தி..
ஆபீஸ்ல உங்க வேலைய
எல்லாம் கண்மணிய செய்ய
சொல்லிட்டு.,
நீங்க ஓப்பி அடிச்சிட்டு
இருப்பீங்களாமே..!
உண்மையா..?

வெங்கட் said...

@ அனாமிகா துவாரகன்.,
ha ha. - இது செல்லாது.,
செல்லாது..
Comment போடணும்..!

romba thimuru said...

என் தங்க தலைவி அனு comment எங்கே? So I am not writing any comment about this post.

How to type ங். I copy and pasted it here. Need to learn...

Kavasker said...

மாமு,

பொய் சொல்ல குடாது
உனக்கு cycle ஓட்ட தெரீயதுனு
எனக்கு நல்ல தெரீuம்

ராஜ்குமார் said...

நீங்க விழந்தது எப்போ?. உங்க பையன் விழந்தது எப்போ?, GENERATION GAP ரொம்ப அதிகமா இருக்கே?.

ஜெகன் said...

//How to type ங்//
@RT, just type 'ng' in the Google Indic (which Anu had taught you) window.

Try this link to type in Tamil anywhere: Tamil Transliteration Bookmarklet

அனு said...

ஹிஹி.. இன்னைக்கு நீங்க எனக்கு வேலை இல்லாம பண்ணிட்டீங்க.. எப்பவும் நான் பன்ற வேலைய நீங்களே பண்ணிக்கிட்டீங்க... ஏதோ, இப்பவாவது இந்த உலகம் உண்மைய தெரிஞ்சுகிச்சே... அதுவே போதும் எனக்கு..

ஆமா, உங்க பையன் எப்பொழுதெல்லாம் உங்களை மாதிரி behave பன்றானோ, அப்பொல்லாம் அவனுக்கு அடி விழுதுன்னு கேள்விப்பட்டேனே, உண்மையாவா?

தம்பியும் ஒரு வேளை(ரெண்டு வெங்கட்-ட இந்த உலகம் தாங்காது) உங்களை மாதிரி இருந்தா என்ன பண்ணுவான்..

வெங்: Birthday-க்கு என்னப்பா gift வேணும்?
பையன்: எனக்கு ஒரு radio வேணும்பா..

வெங்(டவுட்டாக): radio மட்டும் போதுமா?
பையன்: ஒகே.. radio cum MP3 player-ஆ வாங்கிடலாம்பா..

வெங் (ஓரளவு திருப்தி+டவுட்டுடன்): சரிப்பா, வாங்கிடலாம்
பையன்:ம்ம்ம்.. மறந்துட்டேனே.. அப்படியே அதை சுத்தி ஒரு காரும் வாங்கிடுங்கப்பா...
வெங்: ???!!!

அனு said...

@romba thimuru

நான் கமெண்ட் போடலன்னா நீங்களும் போடமாட்டீங்களா??? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா??? எங்க வீட்டு பக்கத்தில ஆடு மாடு ரொம்ப அதிகம்ங்க... இந்த அளவுக்கு புல்லரிக்க வச்சீங்கன்னா, எனக்கு தான் ஆஆஆஆஆஆஆஆஆஆ (ஆ[பத்து] -நன்றி ரமெஷ்)

பாவம் வெங்கட், ரொம்ப வருத்த படுவார்.. சும்மாவது ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க :)

வெங்கட் said...

@ ரசிகன்..,

// உங்க அப்பாவ கேட்டு பாருங்க...
நீங்க விழுந்தப்ப அவரையும்
அப்படிதான் திட்டி இருப்பாங்க..//

என்னை துரத்து துரத்தி
அடிச்சதே எங்க அப்பா
தானுங்க..

// எங்க ஊரிலெல்லாம் இப்போ
Alarm தான் கூவுது //

சொந்தக்காரங்க வந்தா Alaram-ஐ
அடிச்சி குழம்பு வெக்க முடியுமா..?

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// வெங்கட் ப்ளாக் எழுதுகிறார்
அப்டினாலும் ஐடியா கொடுக்குறது
ரமேஷ் தானுங்க. //

" நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி..? "

வெங்கட் said...

@ ஜெகன்,

// டீ டீச்சர், புரோட்டா டீச்சர்,
சரக்கு டீச்சர், ரிங் டீச்சர்,
Band டீச்சர் இதெல்லாம்
நல்லாவா இருக்கு? //

அட இது ரொம்ப நல்லா
இருக்கே..!
சூப்பரு..!!

வெங்கட் said...

@ RT

// என் தங்க தலைவி அனு
comment எங்கே?//

குடுத்த காசுக்கு மேல
கூவறாங்களோ..?

வெங்கட் said...

@ கவாஸ்கர்..,

// உனக்கு cycle ஓட்ட தெரியாதுன்னு
எனக்கு நல்ல தெரியும்..! //

ஆமான்டா மச்சான்..,
அதனால தாண்டா கீழே
விழுந்தேன்..!!

வெங்கட் said...

@ ராஜ்குமார்..,

நான் விழுந்தது என்
சின்ன வயசுல..
என் மகன் விழுந்தது
நாலு நாள் முன்னாடி..

அப்ப அவனை திட்டாத
ஒரே ஆள் நான் தான் தெரியுமா..?!!

வெங்கட் said...

@ அனு..,

ஏற்கனவே உங்களை ஒருத்தரை
சமாளிக்கவே நான் படாத பாடு
படறேன்..
இதுல உங்க ரசிகர் வேறயா..?

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்..

அவரு உங்களுக்கு ரசிகரா
இருக்கறதால அந்த பேர்
வெச்சிருக்காரா..? - இல்ல
அந்த பேரு வெச்சி இருக்கறதால
உங்க ரசிகரா இருக்காரா..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் என்ன இருந்தாலும் அனுவுக்கு ரொம்ப திமிருன்னு சொல்லி @ரொம்ப திமிர நீங்க அசிங்கபடுத்தி இருக்க கூடாது. நம்ம area-க்கு புதுசா வந்தவரை இப்படியா வரவேற்பது?

//எனக்கு தான் ஆஆஆஆஆஆஆஆஆஆ (ஆ[பத்து] -நன்றி ரமெஷ்)//

நன்றி அனு.

cheena (சீனா) said...

திட்டணும்னா உடனே அப்பன் - பாராட்டணும்னா எம்புள்லே எம்புள்ளே - இந்தப் பொம்பளைங்களே இபப்டித்தான்பா - லூஸ்லே வுடுய்யா

வெங்கட் said...

@ ரமேஷ்..,
சந்துல சிந்து பாடின
நம்ம ரமேஷுக்கு
ஒரு " ஓ " போடுங்க..!

வெங்கட் said...

@ சீனா சார்..,
நான் வீட்லன்னு சொன்னது
எங்க Family Members-ஐ..,
நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க..
என் மனைவி அப்படி
சொல்ல மாட்டாங்க..
பதிவிலயும் Correct
பண்ணிடறேன்..!

Prasanna said...

Goods job , keepit up