சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

12 April 2010

சுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 2

இரண்டாம் வகுப்பு படிக்கும்
என் மகன் பள்ளி ஆண்டுவிழாவில் 
பேசியது..

தலைப்பு : தேச ஒற்றுமையில்
குழந்தைகளின் பங்கு..

( இந்த தலைப்பே எனக்கு கொஞ்சம் Confusion.,
Atleast மாணவர்களின் பங்குன்னாவது
கொடுத்து இருக்கலாம்..! )

O.K Speech-க்கு போலாம்...

" எல்லாரும் நல்லவங்கள
பார்க்க தான் ஆசைப்படறாங்க..,
நல்லவங்களா வாழ ஆசைப்படல.. "
அதுதான் இப்ப பிரச்சினையே..!

நம்ம நாடு ஒத்துமையா இருக்கா..?
இருக்குகுகுகு....,
ஆனா இல்ல்ல்ல...

நம்ம நாடு மத்த நாடுங்க மாதிரி
யுத்த பூமியா இல்ல.. - ஆனாலும்
காஷ்மீர்., குஜராத்., காவேரி
இந்த மாதிரி பிரச்சினைங்க
எல்லாம் இருக்கு..!

" மீனுன்னா முள்ளு இருக்கும் - அதையே
பாத்துட்டு இருந்தா மீனை எப்ப சாப்பிடறது..?
நாடுன்ன பிரச்சினை இருக்கும் - அதை பத்தியே
பேசிட்டு இருந்தா எப்ப சரி பண்றது..? "

அதை சரி பண்ண நம்மள மாதிரி
குழந்தைகளால முடியுமா..?

" முடியும்..! "

காந்திஜி கூட குழந்தையாத்தான் இருந்தாரு..,
அப்புறமா தான் மகாத்மாவா ஆனாரு..!

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி-ன்னு
அப்பவே MGR சொல்லிட்டாரு...

நம்ம நாட்ல குழந்தைங்க கொஞ்சம்
பேருதான்..

ஆனா..,
எண்ணிக்கை தான் முக்கியம்னா.,
தேசிய விலங்கா புலி இருக்க முடியாது
எலி தான் இருக்கும்..!

குழந்தைங்க.., நல்ல குழந்தைங்களா
மாறுறது School-ல தான்..

நமக்கு..,
கடவுள் கொடுத்த Gift - நம்ம Parents.,
Gift-ஆ வந்த கடவுள் - நம்ம Teachers..!

" அன்னையும்., பிதாவும் முன்னறி தெய்வம்..! "

" ஒன்றே குலம்., ஒருவனே தேவன்..! "

" சாதிகள் இல்லையடி பாப்பா...! "

" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்..! "

இதையெல்லாம் அவங்க தான் நமக்கு
சொல்லி தர்றாங்க..!

நல்ல மாணவன் தான்
நல்ல குடிமகனா வரமுடியும்..!

Teachers மட்டும் இல்லைன்னா
நம்ம நிலைமை என்ன ஆயிருக்கும்...?

" Building Strong.., Basement Weak "

நம்ம நாடு ஒத்துமையா இருக்க
ஒரே வழி..,

படிச்சி முடிச்சிட்டாலும்.,
School-ல கத்துகிட்டதை என்னிக்குமே
மறக்க கூடாது..

" Aeroplane மேல வந்திடுச்சீன்னு
Engine-ஐ OFF பண்ணலாமா..? "

இதை தான் திருவள்ளூவர்..

" கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக " - ன்னு
சொல்லுறாரு..

நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்..
Punch Dialogue எல்லாம் கடைசில
தான் சொல்லணும்..

நாங்க நினைச்சா...
இந்த தேச ஒத்துமைக்கு மட்டுமில்ல..,
உலக ஒத்துமைக்கே பாடுபடுவோம்..

" எவ்வள்வோ பண்ணிட்டோம்..!
இதை பண்ண மாட்டோமா...??!! "

பின் குறிப்பு :
பேசிய பிறகு..,

சீனியர் Students சாக்லேட் வாங்கி 
தர்றாங்க.., 
Teachers-லாம் முத்தம் குடுக்கறாங்க 
( என் பையனுக்கு ).., - ஆனா..,
Prize மட்டும் 2nd Prize தான்
தர்றாங்க...


டிஸ்கி : மேலும் சில பேச்சு போட்டிகள்..


பேச்சுப்போட்டி - 1
பேச்சுப்போட்டி - 3
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
.

44 Comments:

KANMANI said...

பர்ஸ்ட் prize வாங்கின மாணவருக்கு சாக்கலேட் கிடைச்சுதா ???

Anonymous said...

யார் எழுதி கொடுத்தது....

நல்லவங்கள
பார்க்க தான் ஆசைப்படறாங்க
நல்லவங்களா வாழ ஆசைப்படல

நல்லாஇருக்கு...

படிச்சி முடிச்சிட்டாலும்.,
School-ல கத்துகிட்டதை என்னிக்குமே
மறக்க கூடாது..

ம‌ற‌க்காம‌ இருக்க பார்த்துகொள்ளுங்க‌....

ப‌ரிசு என்ன‌ இவ்வ‌ள‌வு பேசி இருக்கிறானே அதுவே பெறிய‌ விச‌ய‌ம‌ அல்ல‌வா

முத்தம் (என் பையனுக்கு) ......யாரும் உங்களுக்குனு நினைத்துகொள்ளமாட்டார்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pulikku piranthathu poonai aagumaa?

KANMANI said...

புலிக்கு பிற‌ந்த‌து பூனை ஆகுமா???

இதை நான் வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறேன்

உமர் | Umar said...

கும்மி: சுனாமிகா கொஞ்சம் கிள்ளுங்க

சுனாமிகா: எதுக்கு?

கும்மி: கிள்ளுங்க சொல்லுறேன் .

சுனாமிகா கிள்ளுகிறார்.

கும்மி: ஆ! கிள்ளச் சொன்னா டைனோசர் பெராண்டுன மாதிரி பெராண்டுறீங்க?

சுனாமிகா: என் ஹிட் லிஸ்ட்ல இருந்தா இப்படிதான். அது சரி எதுக்கு கிள்ள சொன்னீங்க?

கும்மி: நான் ஒரு பதிவு பாத்தேன். அது நெஜம்தானான்னு, நான் கனவு ஏதும் காணலையேன்னு confirm பண்ணிக்கதான் கிள்ளச் சொன்னேன்.

சுனாமிகா: அப்படி என்ன பதிவு?

கும்மி: இல்ல நம்ம வெங்கட் ஒரு பதிவு போட்டிருக்கார். அதுல 4 வரிக்கு மேல இருந்துச்சு. அதான் எனக்கு கொஞ்சம் குழப்பமா போச்சு. இது கனவா இல்லை நெஜமான்னு.

சுனாமிகா: நல்ல வேளை. சொன்னீங்க. நான் அந்த பதிவப் படிச்சிருந்தா அதிர்ச்சில மயக்கமே போட்டிருப்பேன். இப்ப எஸ்கேப்பாகிர்றேன்.

அனு said...

@கும்மி

நீங்க இன்னும் என் reply படிக்கலயா???

https://www.blogger.com/comment.g?blogID=154558242198752046&postID=3289411442268675555

Anonymous said...

மீள் பதிவுன்னு டிஸ்கி போடுங்க. கொமன்ட் போடலனாலும், ஃபொலோ பண்ணிட்டு தான் இருக்கேன். இன்னும் வீசிங் போகல. க்ளாஸ் கட் பண்ணிட்டு வீட்ல இருக்கேன். ஈஈஈஈஈஈயா!

எட்டு வயசு பையனுக்கு எப்படீங்க ட்ரெயினிங் கொடுத்தீங்க. இதில் சொன்னமாதிரியே இரண்டு குட்டிகளும் வளர்ந்தாலே போது.

எனக்கு Patriotனு சொல்லிட்டு சும்மா தேசிய கொடியை ஆட்டிட்டு நிக்கிறதில் உடன்பாடில்லை. நல்ல குடிமகனாக இருப்பந்தாலே அவர்களும் தேசாபிமானிகள் தான். தான். (டிஸ்கி:குடிகாரனா குடிமகன்னு கேட்டு சீரியஸ் பதிவ காமடியாக்காதீங்க.)

உமர் | Umar said...

@சுனாமிகா

நான் இவ்வளவு கும்மியடிச்சும் இந்த பதிவ படிச்சீங்களா? எவ்வளவு எழுதுனாலும் படிக்கிறாங்கன்னு, இனிமே வெங்கட் இப்படி நீள, நீளமாவே பதிவ எழுதிடப் போறாரு.

அனு said...

@கும்மி

இந்த பதிவ போட சொன்னதே நான் தான்.. இதுதான் உங்களுக்கு முதல் எச்சரிக்கை...

இதுக்கு மேலயும் என் பேர ரிப்பேர் ஆக்குனா, இன்னும் பல வெடிகுண்டுகள் காத்திருக்கின்றன...

உமர் | Umar said...

@ சுனாமிகா
//இதுக்கு மேலயும் என் பேர ரிப்பேர் ஆக்குனா, இன்னும் பல வெடிகுண்டுகள் காத்திருக்கின்றன...//

அனகோண்டா என்னாச்சு?

வெங்கட் said...

கண்மணி..,
1st Prize வாங்கின
மாணவனுக்கு சாக்லேட்
கிடைக்கலை..!

வெங்கட் said...

பெயரில்லா.,
என்னங்க இப்படி
கேட்டுட்டீங்க..,!!
Script-ல என் Style
தெரியலையா..?

வெங்கட் said...

@ ரமேஷ்..,
Thanks..

வெங்கட் said...

@ கும்மி..,
பதிவை படிச்சீங்களா..?

ஏன் கேட்கறேன்னா..,
உங்க Comment-ஐ பார்த்தா
நீளத்தை அளந்துட்டு இருந்த
மாதிரி தெரியுது..!!

Don't Worry..
எப்பயோ ஒரு தடவை தான்
இப்படி நீளமா போகும்..!

உமர் | Umar said...

//பதிவை படிச்சீங்களா..?//
நான் போட்ட கமென்ட் சும்மா லுலுல்லாயிக்கு. ஒன்லி சிரியஸ்; நோ சீரியஸ்.

வெங்கட் said...

@ அனாமிகா துவாரகன்.,
அந்த Training குடுத்த கதைய
ஏன் கேக்கறீங்க..
அது பெரிய கதை..
இப்படி வித்தியாசமா
எழுதினா
இவங்க Correspondent Madam
ஒத்துக்காது...
அது ஒரு " லூசு "

வெங்கட் said...

@ அனு..,
வெடிகுண்டு.,
கத்தி., சோடா பாட்டில்.,
அனகோண்டா.., 420.,
இப்படி உங்க Activities
எல்லாமே கிரிமினல்
மாதிரியே இருக்கே..!

எங்கே கொஞ்சம் நல்ல
புள்ள மாதிரி நடிங்க
பார்க்கலாம்..!

ர‌சிக‌ன் said...

கருத்தும் எழுத்தும் பிரமாதம்.

ஒரு சின்ன கருத்து..

உங்க style பிடிக்காதவங்க எல்லாம் லூசுகளும் இல்ல..
பிடிச்ச நாங்க எல்லாருமே புத்திசாலிகளும் இல்ல..
2ம் பரிசு வருத்தத்திற்குரிய விஷயமும் இல்ல..
1ம் பரிசோட கருத்தும் எழுத்தும் பேசும் விதமும்
தெரியாம ஏதும் சொல்லுறதுக்கு இல்ல..

Keep Encouraging HIM... :-)

அனு said...

மிகவும் நல்ல பதிவு... நாட்டுப் பற்று மனதளவில் மட்டுமல்லாமல் செயலிலும் இருக்க வேண்டும் என்பதை நன்றாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்..

இந்த சிறு வயதில் இவ்வளவு நன்றாக பேசிய உங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள்.. ஜெயிப்பதை விட ஆர்வமாக இத்தகைய போட்டிகளில் பங்கு பெறுவது மிக முக்கியம்... மிக சிலரால் தான் இப்படி மேடை பயம் இல்லாமல் பேச முடியும்..

ஒரு தகப்பானாக உங்கள் மகனுக்கு பக்கபலாமாக இருந்து உதவியிருக்கிறீர்கள்... இந்த உற்சாகம் சிறிதும் குறையாமல் அவருடைய திறமையை வளர்த்தீர்களானால், வருங்காலத்தில் அவர் பெரிய அளவில் வருவார் என்பது நிச்சயம்..

அடுத்த முறை(யிலிருந்து) முதல் பரிசு பெற அவருக்கும், தொடர்ந்து இது போன்ற நல்ல பதிவுகளை தர உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

Vimalraj R said...

Venkat,

நம்ம நாட்ல குழந்தைங்க கொஞ்சம்
பேருதான்..

ஆனா..,
எண்ணிக்கை தான் முக்கியம்னா.,
தேசிய விலங்கா புலி இருக்க முடியாது
எலி தான் இருக்கும்..!


etharukku pathil...

தேசிய விலங்கா புலி இருக்க முடியாது
mosquito தான் இருக்கும்..!


would be the right one from my view.. Chennaila mosquito torture thaga mudiyala..

வெங்கட் said...

@ ரசிகன்.,
வஞ்சப்புகழ்ச்சிக்கு உங்களுக்கு
நிகர் நீங்க தான்..

" 1947-லே நாம் பெற்ற
இந்த சுதந்திரம்.,
எண்ணற்ற தியாக செம்மல்கள்
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு
எதிராக போராடி.,
தங்கள் இன்னுயிரை ஈந்து
பெற்று தந்தது..."

இப்படி எழுத எனக்கும்
தெரியும்..

ஆனால் என்னிடமும்
இதைதான் எதிர்பார்க்கிறதா
இந்த ஸ்கூல்...?

வெங்கட் said...

@ அனு..,
ரொம்ப நன்றி..!

அட..,
நம்ம அனுவா இது..??!!
ரொம்ப நல்ல புள்ளயா
இருக்கே..!

" கட்.., ஷாட் ஓ.கே.,
பேக் அப்...! "

வெங்கட் said...

@ விமல்.,
என்ன சொல்லறீங்க..?
கொசு விலங்கா..?
இது விளங்குமா..???

அனு said...

@வெங்கட்

ரொம்ப நன்றிங்க...

Anonymous said...

யாருப்பா இந்த கும்மி. நம்ம சுனாமிகாவை இப்படி கிண்டல் பண்ணுவது. உங்களுக்கு அவங்களப் பத்தி தெரியல. புளொக் வரலாற்றிலேயே முதன் முதலா நம்ம சுனாமிகாவுக்குத் தான் ரசிகர் மன்றமே திறந்திருக்காங்க. தெரியுமா? அவங்களப் போய்... =))

வெங்கட் சார், சுனாமிகான்னா அப்படித் தான் இருப்பாங்க. நான் அடிக்கடி சொன்னமாதிரி அவங்க பெயரைக்கேட்டாலே அதிரணும். அவங்களுக்கு நடிக்க எல்லாம் தெரியாது.

அனு said...

@ அனாமிகா

ரொம்ப நன்றிங்க., உங்களை மாதிரி Support-க்கு தான்
Wait பண்ணிட்டு இருந்தேன்..

கும்மிக்கும் எனக்கும் பிரச்சினையே அவர் என்னை
சுனாமிகா-ன்னு சொல்றதுதான்:(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இவங்க Correspondent Madam ஒத்துக்காது...அது ஒரு " லூசு "//

இத அப்படியே உங்க பையன் ஸ்கூல் க்கு மெயில் அனுப்பிடுறேன். நாராயண நாராயணா(தேங்க்ஸ் அனாமிகா)

அனு said...

அனாமிகா... பாருங்க, உங்கள ரமேஷ் நாரதர்-னு சொல்றார்.. வந்து என்னன்னு கேளுங்க...
நாராயண நாராயண...

வெங்கட் சார், யாருமே(உங்களைத் தவிர) என்னை அனு-னு கூப்பிட மாட்டேங்றாங்க :(

வெங்கட் said...

அனு..,
அப்படியானால் இன்று முதல்
" அனுமிகா " என்று
எல்லோராலும்
அன்போடு அழைக்கப்படுவீர்கள்..!

உமர் | Umar said...

@ சுனாமிகா
//கும்மிக்கும் எனக்கும் பிரச்சினையே அவர் என்னை
சுனாமிகா-ன்னு சொல்றதுதான்:( //

ஆனா பாருங்க. அனாமிகா துவாரகன் அவங்க கமென்ட்லையும் உங்களை சுனாமிகான்னுதான் சொல்லியிருக்காங்க. எப்படி இருந்தாலும் அதுதான் உங்க பேருன்னு ஆயிரிச்சு. :-)

Anonymous said...

எல்லாம் சரி தாங்க. ஆனா எதுக்கு இத்தனை புல்ஸ்டாப்ஸ்(....), கமாஸ்(, அதுவும் வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து), ஆச்சர்ய குறி(!). எங்கெங்க யூஸ் பண்ணணுமோ அங்க மட்டும் கரெக்டா யூஸ் பண்ணினா நல்லா இருக்கும்ன்ன்றது என்னோட தாழ்மையான கருத்து.

அனு said...

@அனாமிகா & அனாமிகா ரசிகன்
சீக்கிரம் வந்து என்னை காப்பாத்துங்க....

@கும்மி
வேணாம்... அழுதுருவேன்....

Anonymous said...

@ கும்மி, நாங்க சுனாமிகா ரசிகர் மன்றத்தில இருக்கிறவங்க. சாறி. உங்கள சேர்க்க முடியாது. =)) எங்களுக்கு மட்டும் தான் அவங்கள சுனாமிகானு கூப்பிட உரிமை இருக்கு.

@கபாலிகா, எங்க சப்போட்டு எங்கள் தலைவிக்கு எப்பவும் உண்டு,

Unknown said...

$ கும்மி
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
(என் மனசில இருக்கறத அப்படியே சொல்லுறீங்க)
நீங்க இப்படியே தொடரலாம்...
வாழ்த்துக்கள்...

$ ரசிகன்
//2ம் பரிசு வருத்தத்திற்குரிய விஷயமும் இல்ல..
1ம் பரிசோட கருத்தும் எழுத்தும் பேசும் விதமும்
தெரியாம ஏதும் சொல்லுறதுக்கு இல்ல..//

இப்ப நீங்க முடிவா என்ன சொல்ல வரிங்க.

இவ்வளவு நல்லா பேசியும் 2வது பரிசாஆஆஆ...
அப்படின்னு கேட்டா அது நியாயம்.
முதல் பரிசு எப்படி பேசினாங்கன்னு தெரியாதுன்னு
சொன்னா அது அநியாயம்.

கொஞ்சம் ஆறுதலா பேசலாம்ல.

$ AD (அனமிகா துவாரகன்)
உண்மையா சொல்ல போன நீங்க பெரிய ஆளூங்க...
அலுங்காம,குலுங்காம, யாருக்கும் வலிக்காம
நீங்க "அவுங்களா" போட்டு வாங்குறீங்க...
அது தெரியாம ஐயோ...ஐயோ...

$ வெங்கட்

தயவு செஞ்சி இன்று ஒரு தகவல் பகுதிய
தொடரனும்னு நான் உங்ககிட்ட
கேட்டுக்கறேன்...

வெங்கட் said...

@ பெயரில்லா..,
Economics Exam-ல பேப்பர்
நிரப்ப இப்படி எழுதுவேன்..
அந்த பழக்கம் தான்..

என்னோட இந்த இம்சை
தாங்காம தான் எங்க
Economics Professor
லோகநாதன் வேலையவே
விட்டாருன்னு என் மேல
ஒரு நல்ல பேரு கூட உண்டு..

kanna said...

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

திருடா.காம்

இத்தளத்தைப்பற்றி உங்க பாணியில் ஒரு பதிவு போடுங்கண்ணா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

ர‌சிக‌ன் said...

@jana
நான் studentஆ இருக்கும் போது என் logic..
நம்ம கிட்ட எங்கயோ சின்ன மாற்றம் தேவைன்னு நினைச்சா..
அடுத்த முறை , விட்டதை பிடிக்க தோணும்..
Teacher கிட்ட தான் தப்புன்னு தோணிட்டா..
போதும் போன்னு அலுத்து போயிடும்..

ஆறுதல் சொல்லுற அளவுக்கு இது பெரிய தோல்வியா என்ன?

Openions differs .. ofcourse..

ப‌திவ‌ரே...
உங்க‌ styleஐ த‌ப்பி த‌வ‌றி கூட‌ மாத்த‌ சொல்ல‌ மாட்டேன்..

I just love the way u write...

நான் சொல்ல‌ வந்த‌‌து..

" சாதிகள் இல்லையடி பாப்பா...! "

இதை உங்க‌ little super star சாதார‌ண‌மா சொல்லி இருந்தா..

பார‌தியின் ஆக்ரோஷ‌த்தோட‌ சொல்ல‌ சொல்லி குடுங்க‌..

Correspondent கேட்குற‌ Traditional touch வ‌ந்துடும்ல‌...
(just a eg)

(நாங்க‌ளும் para para வா அடிப்போம்ல‌...)

அனு said...

@ரசிகன்..

நீங்க இவ்வ்வ்ளோ பேசி முதல் முறையா பாக்குறேன்... உங்கள் கருத்துக்கு கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்..

Unknown said...

Today second-Tomorrow first.Best wishes for the child.

Mala said...

அடடா... இவ்ளோ பேசியும் 2ம் பரிசுதான் கிடைச்சதா...
உங்க பையன் ரொம்ப feel பண்ணிணாரா??

ரசிகன் said...

@அனு..
கன்ன பின்னான்னு வழிமொழிஞ்ச அனுவுக்கு..
(Bullet proof போட்டுகிட்ட தைரியம் வந்துடுச்சிங்க...)
ஏராள தாராள நன்றிகள்....

வெங்கட் said...

@ சுரேஷ்.,
@ மாலா.,

பாராட்டுக்கு நன்றிங்க.
என் பையன் Feel பண்ணல.,
Feel பண்ணினது நான் தான்..!

cheena (சீனா) said...

ஏம்பா வெங்அட் - உன் பையன் பேசுற போதெல்லாம் மொதப் பரிசு கொடுக்க மாட்டாங்களா - நான் வரேன்யா ஜட்ஜா - ஆமா எழுதிக் கொடுக்கறது யாரு - அவன் அம்மாவா