
அது ஒரு Pet Shop..
Pet வாங்க வந்த
ஒரு Customer 3 கிளி
அங்கே இருக்கறதை
பார்க்கிறார்..
மூணுமே பார்க்கிறதுக்கு
ஒரே மாதிரி இருந்தாலும்
Rate மட்டும் வேற வேற..,
கஸ்டமர் : இந்த முதல் கிளி எவ்ளோ..?
கடைக்காரர் : 1000 ரூபாங்க..,
இது நல்லா பேசும்.,
நல்லா பாடும்...
கஸ்டமர் : இந்த ரெண்டாவது கிளி..?
கடைக்காரர் : 3000 ரூபாங்க..,
இதுவும் பேசும், பாடும்.,
கம்பியூட்டர் கூட Work பண்ணும்..
கஸ்டமர் : இந்த மூணாவது கிளி..?
கடைக்காரர் : 5000 ரூபாங்க..,
ஆனா., இந்த கிளி என்ன
பண்ணும்னு எனக்கு தெரியாது.
கஸ்டமர் : அப்புறம் எதுக்கு 5000 ரூபா..?
கடைக்காரர் : அந்த ரெண்டு கிளியும்
இதை " பாஸ்" -னு கூப்பிடுதே..
கஸ்டமர் அந்த கிளியவே வாங்கிட்டு
போயிடறார்..
இதை பார்த்திட்டு இருந்த ஒரு மைனா
அந்த ரெண்டு கிளிகளை பார்த்து..
மைனா : அவர் தான் உங்க பாஸா..?
2 கிளிகள் : இல்ல..,
மைனா : பின்ன..?
2 கிளிகள் : அவன் பேரு பாஸ்கர்.
நாங்க செல்லமா " பாஸ்னு "
கூப்பிடுவோம்..
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( அருண், திருச்சி )
IPL - சசி தரூர்..?
இப்பல்லாம்
விளையாட்டு அரசியலா போச்சு.,
அரசியல் விளையாட்டா போச்சு..!!
இன்று ஒரு தகவல் :
---------------------
எல்லா Boss-ம் அறிவாளியாதான்
இருப்பாங்கன்னு தப்பு கணக்கு
போடக்கூடாது..!!
.
. Tweet
18 Comments:
:-) 1st he he
////இப்பல்லாம்
விளையாட்டு அரசியலா போச்சு.,
அரசியல் விளையாட்டா போச்சு..!!///
....Yes, Boss!
OK Boss
@ உலவு.Com
Thanks..
உங்க தளத்தில பதிவுகள்
இணைக்கிறப்ப சில சமயம்
Problem வருதே ஏன்..?
@ சித்ரா & ரமேஷ்.,
// Yes, Boss!, OK Boss //
நான் சுட்ட தோசைய
எனக்கே போடக்கூடாது..
ஓகே..!!
அவன் பேரு பாஸ்கர்.
நாங்க செல்லமா " பாஸ்னு "
கூப்பிடுவோம்..
கதை புதிதாகவும் அருமையாகவும்..கொஞ்சம் குட்டு கொடுக்றமாதிரி இருக்கு...இந்த கிளிகளுக்கு இருப்பதுக்கூட அந்த வாங்கின ஆளுக்கு இல்லையே..எங்கிருந்த
..இறக்கம் ...சுயசிந்தனை/காப்பி...
எதுவான என்ன மிளகாய கடித்தமாதிரி...
இப்பல்லாம்
விளையாட்டு அரசியலா போச்சு.,
அரசியல் விளையாட்டா போச்சு..!!///இதுதான் இன்றய யதார்த்தம்...நம்மளையாரு மண்டைய உடைத்துக்கொள்ள சொன்னது.கிரிக்கட்த்தான் உலகம்..புத்திசாலித்தனம் என்று ஓடினால் இப்படித்தான் நம்மளை பகடைக்காயாக்குவாங்க..அவங்க இரண்டுபேரும் (விளையாடுபவனும் / நடத்துபவனும்) சம்பாதிக்றாங்க அனா நம்ம...மக்களே உசார் இனியாவது...பொன்...
///IPL - சசி தரூர்..?
இப்பல்லாம்
விளையாட்டு அரசியலா போச்சு.,
அரசியல் விளையாட்டா போச்சு..!!///
அருமையான பதில்!
கேட்ட ஜோக்-ஆ இருக்குதேன்னு யொசிச்சேன்.. கடைசியில உங்க punch வச்சுட்டீங்க.. ஆனா, இதுல ஒண்ணு உண்மைங்க.. என் பாஸ் என்ன வெலை பாக்குறார்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியாது..
------------
எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருதுங்க..
ஒரு பாஸும் ரெண்டு அசிஸ்டண்ட்ஸ்-ம் பேசிட்டு இருக்கும் போது ஒரு genie வந்து ஆளுக்கு ஒரு வரம் குடுத்துச்சாம்.. (genieக்கு எப்பவுமே மூணு வரம் தான் quota)
அசி 1: நான் ஒரு பீச்சுல எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா இருக்க விரும்புறேன்
poof.. அதே மாதிரி நடந்தது..
அசி 2: நான் ஒரு நல்ல மலைபிரதேசத்தில இயற்கைய பாத்துட்டே இருக்க விரும்புறேன்
poof again.. அவனும் காணாம போய்ட்டான்..
அப்போ மூணவதா பாஸ் சொன்னாராம், "அந்த ரெண்டு பேரும் மத்தியான மீட்டிங்-க்கு முன்னாடி ஆபீஸ்ல இருக்கனும்"னு
இதனால, எல்லோருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னன்னா, பாஸ்-அ முதல்ல பேச விடுறது பெட்டர்...
-----------
என் ஆபிஸ் desktop wallpaper-la நான் போட்டிருக்க quote:
If you think your boss is stupid, remember: you wouldn't have a job if he was any smarter..
@ பொன்.,
// எங்கிருந்த இறக்கம்..?
சுயசிந்தனை/காப்பி.
எதுவான என்ன மிளகாய
கடித்தமாதிரி... //
ஹி., ஹி..,ஹி..
நிறைய பேருக்கு தெரியாதுன்னு
நினைச்சேன்..
ஆனா எல்லாருமே அந்த Book-ஐ
படிச்சிட்டாங்க போல..
@ அருண் பிரசாத்..,
ரொம்ப Thanks..
இந்த கேள்வி அனுப்பின
அருண் நீங்களா..?
@ அனு..,
ஹா., ஹா., ஹா.,
// என் ஆபிஸ் desktop wallpaper-la நான்
போட்டிருக்க quote:
If you think your boss is stupid, remember:
you wouldn't have a job if he was any smarter.. //
இவ்ளோ தன்னடக்கமான
ஆளா நீங்க..?
எப்படியோ ஒரு உண்மைய
உலகம் இப்ப தெரிஞ்சிக்கிச்சி..!!
உங்களுக்கு Genie Jokes..
நிறைய தெரியும் போல..
உங்ககிட்ட Genie மூணு
வரம் குடுத்தா நீங்க என்ன
கேட்பீங்க..?
அனு வெங்கட்டடிடம்: பாஸ் உங்க பதிவு சூப்பர்
ஜனா: பாஸ் உங்க பதிவு சூப்பர்
எல்லோரும் வெங்கட்டை பாஸ் அப்டின்னு சொல்றீங்களே. அவர் உங்க பாஸ் ஆ?
அனு: இல்லைங்க பாஸ் அவரோட பூனை (சாரி புனை பெயர்)
Genie அனுவிடம்: உனக்கு strong-ஆ ஒரே ஒரு வரம் மட்டும் தர்றேன்.. என்ன வேணும்??
அனு: இந்த உலகம் முழுவதும் சமாதானம் அடையனும்..
Genie: இதெல்லாம் ரொம்ப கஷ்டமான விஷயம். வேற எதாவது?
அனு: விளையாட்டு அரசியல், அரசியல் விளையாட்டுகள் எல்லாத்தையும் நிறுத்தனும்..
Genie: அட.. என்னைப் பாத்தா என்ன காமெடி பீஸு மாதிரி இருக்கா? என்னால முடியாத வேலையவே செய்ய சொல்லிக்கிட்டு... ஒழுங்கா ஒரு வரம் கேக்குறியா.. இல்ல, திரும்ப விளக்குக்குள்ள போய்டவா?
அனு: ஒகே ஓகே.. வெங்கட் பதிவு எழுதுறத நிறுத்தனும்..
Genie: ம்ம்ம்.. உலக சமாதானமா, அரசியல் சீர்திருத்தமா.. எதை செய்யட்டும்??
@ரமேஷ்
பாஸ் பாஸ்-னு சொல்லி வெங்கட்-ட இப்படி பீஸ் பீஸா ஆக்கிட்டீங்களே...
@ அனு.,
Genie சொன்ன டயலாக்கை
உங்க வசதிக்கு Cut பண்ணிடறதா..?
இதோ அந்த முழு டயலாக்..
அனு: ஒகே ஓகே.. வெங்கட் பதிவு
எழுதுறத நிறுத்தனும்..
Genie: ம்ம்ம்..
அதெல்லாம் முடியாது..
நான் அவரோட Fan.,
சரி., சரி., உலக சமாதானமா,
அரசியல் சீர்திருத்தமா..
எதை செய்யட்டும்??
எப்டீங்க. பழைய வெங்கட் டச் வருகுது. அப்படியே எழுதுங்க.
@அனாமிகா
//பழைய வெங்கட் டச் வருகுது. அப்படியே எழுதுங்க.//
எங்க இந்த விஷப் பரிட்சை.. நீங்க சொல்றது உண்மை-னு நினைச்சு அவரும் continue பண்ணிட போறாரு..
அன்பின் வெங்கட்
பாஸூக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்ல - ஆனா பாஸா இருக்கத் தெரிஞ்சாப் போதும் - அது பாஸ்கர் பாஸானுலும் சரி
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
Post a Comment