சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 April 2010

கிரிக்கெட்ல நம்மள நல்லா ஏமாத்தறாங்கப்பா..!கிரிக்கெட்ல நம்மள நல்லா
ஏமாத்தறாங்கப்பா..

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே
No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு
சொல்வாங்க., ஆனா ஒரு Ball தான்
இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,
ஆனா 10 பேர் தான் Out ஆகி
இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா
ஒரு Batsman அவுட்..,
ரெண்டு கையயும் தூக்கினா Six..
( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம
தடுக்கணும்.. அப்ப..,
Wicket Keeper விக்கெட் விழாம
தடுக்கணும் தானே...!
ஆனா அவரே ஏன் Out பண்ணுறாரு..?


ஹாய் வெங்கட் :
-------------------

(அனு)
அக்டோபர் புரட்சி எந்த மாதம்
கொண்டாடப்படுது..?

புரட்(டா)சி மாசம்.

இன்று ஒரு தகவல் :
---------------------

யார் சொன்னது
ஏழை நாடென்று..,
பிறகெப்படி
2000 கோடிக்கு ஊழல்..??!!

பின் குறிப்பு :
இது 10 வருஷம் முன்னாடி
எழுதினது.,
அப்ப 1000 கோடின்னு எழுதி
இருந்தேன்..

ஹி.. ஹி.., இப்ப தான்
நாம Develop ஆயிட்டோமே..!!
.
.

19 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுக்கு நான் என்ன கமெண்ட் போடலாம்னு ரூம் போட்டு யோசிச்சாலும் ஒன்னும் தோணலை. என்ன எனக்கு சத்தியமா கிரிக்கெட் பத்தி ஒண்ணுமே தெரியாது.

அந்த 2000 கோடி ஊழல்ல நம்ம வெங்கட்டுக்கும் ஒரு ஷேர் இருக்கு (நாராயணா நாராயணா)

ரசிகன் said...

நாங்க எல்லாம் எங்க நகத்த கடிச்சது பத்தாதுன்னு, பக்கத்துல இருக்கறவங்க நகத்தையும் சேர்த்து கடிச்சிக்கிட்டு Match பாத்துகிட்டு இருந்தப்போ, நீங்க உங்க பதிவுக்கு Points யோசிச்சுட்டு இருந்திருக்கீங்க... உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா..?

But U r rightங்க..

என்னதான் Ball Shape மாறாம Roundஆ அப்படியே இருந்தாலும் Wide Ballனு சொல்லி ஏமாத்தறாங்க...

என்னதான் எல்லா பக்கமும் light எரிஞ்சாலும் ஒரு பக்கத்த OFFSIDEனு தான் சொல்றாங்க..

Tea குடிக்கறாங்களோ இல்லயோ Teabreak னு தான் சொல்றாங்க..

சரி சரி... அப்படியே CSK கு ஒரு விசில் போடுங்க...

Chitra said...

அங்கே கிரிக்கெட் மட்டை எங்கேனு தேடிக்கிட்டு இருக்காங்க...... அடுத்த "ஆராய்ச்சி" அதில் தானே......

யாசவி said...

நல்லா இருக்கு

வெங்கட் said...

@ ரமேஷ்.,

அப்படியே அங்கிட்டு பேசி
என் ஷேரை வாங்கிகுடுத்தீங்கன்னா.,
நான் உங்களுக்கு கட்டாயம்
ஒரு ஷேர் தர்றேன்.. ஓகேவா..?

வெங்கட் said...

@ ரசிகன்.,

Wow...,இது சூப்பரு...!
நானே 5 Points எழுதிட்டேன்.,
அதுக்கு மேல 3 Points
எழுதினீங்க பாருங்க..,
அங்க நிக்கறீங்க நீங்க..!
போற போக்க பார்த்தா
சைடு வாங்கிடுவீங்க போல..
Nice..!

வெங்கட் said...

@ சித்ரா..

// அங்கே கிரிக்கெட் மட்டை எங்கேனு
தேடிக்கிட்டு இருக்காங்க //

ஐயோ.,
அது நான் இல்லீங்க..

வெங்கட் said...

@ யாசவி.,

ரொம்ப நன்றி...!

அனு said...

ஐ.. நானும் சொல்லுவேனே...

என்ன தான் கிரிக்கெட்ல நாலு bails இருந்தாலும் அதை வச்சு ஒருத்தர கூட ஜெயில்ல இருந்து வெளிய எடுக்க முடியாது...

ஒரு bowler எவ்வளவுதான் நல்லா delivery பண்ணினாலும் அவரை நம்பி ஒரு லெட்டரையாவது deliver பண்ண முடியுமா?

போடுற Ball எல்லாம் round-ஆ தானே இருக்கு.. சிலது மட்டும் எப்படி dot ball?

Not out-னு சொல்றதுக்கு பதிலா direct-ஆ 'IN'னு சொல்லிடலாமே.. எதுக்கு 4 characters waste??

சில ஒவர் மட்டும் powerplay-னு சொல்றாங்களே.. அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர் இல்லாம இருட்டிலயா விளையாடுறாங்க??

fielder, keeper, bowler இருக்காங்க.. அப்போ, Ballல sweep பண்ணினா sweeper-a??

Last but not the least.. Run Rate, Strike Rateனு எல்லாம் சொல்றாங்களே, அதெல்லாம் இப்போ என்ன ரேட்-ல போய்ட்டு இருக்குது?? (அந்த 2000 கோடில இதுவும் included தானே... ரமேஷ் தான் உங்களைப் பத்தி கரெக்டா சொல்லிட்டாரே..)

அனு said...

@ரமேஷ்

//என்ன எனக்கு சத்தியமா கிரிக்கெட் பத்தி ஒண்ணுமே தெரியாது.//

ஒரு இந்திய குடிமகன் பேசுற பேச்சா இது??

ஆனா, Indian cricket teamல சேருவதற்கு இது தான் qualification-னாம்.. try பண்ணி பாருங்களேன்..
(யாரும் என்னை அடிக்க வராதீங்க.. எல்லாம் சும்மா தமாசு..ஹிஹி..)

வெங்கட் said...

@ அனு.,

ரசிகனையாவது சைடு
வாங்கிடுவீங்க போல
இருக்கேன்னு சொன்னேன்..

ஆனா உங்ககிட்ட
அது வேலைக்கு ஆகாது..
" சைடு Please..! "

மாலா said...

ஆட்டம் முடிஞ்ச உடனே
ஒருத்தரை மட்டும் தான்
" Man of the Match "-ன்னு
சொல்லுறாங்க..
அப்ப மீதி பேரெல்லாம்
Women-ஆ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@அனு

நான் கிரிக்கெட் ல சேருறது பெரிய விஷயம் இல்லை. அப்புறம் நான் விளம்பரப் படத்துல நடிக்கணும்(அப்பகூட நான் கிரிக்கெட் விளையாடனும்னு சொல்லலை பாத்தீங்களா.இங்கதான் என் நேர்மையை நீங்க பாராட்டனும்.). என் மூஞ்சிய நீங்க டெய்லி பாக்கணும் இது தேவையா?

@மாலா

//அப்ப மீதி பேரெல்லாம் Women-ஆ..?//

ஏன் இப்பூடி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@venkat

please login www.venkatshare.com

username: gokulathilsuriyan
password: mokkai(if its not working try padumokkai)

and transfer ur share from this account to ur account.

dont send my share.

என்னுடைய ஷேர் கோகுலதில்சூரியன் ப்ளாக் வளர்ச்சி நிதிக்கு தருகிறேன்.

வெங்கட் said...

@ மாலா.,

அஹா..,
கெளம்பிட்டாங்கய்யா..
கெளம்பிட்டாங்க..!!

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// நான் கிரிக்கெட்-ல சேருறது பெரிய
விஷயம் இல்லை. அப்புறம்
நான் விளம்பரப் படத்துல நடிக்கணும் //

என்ன பெரிசா ஆகப்போகுது...?

நீங்க கிரிக்கெட் ஆடுனீங்கன்னா.,
நான் கிரிக்கெட் பார்க்குற
கெட்ட பழக்கத்தை விட்டுடுவேன்..

விளம்பரதுல வேற வந்தீங்கன்னா
T.v பார்க்குறதையே விட்டுட்டு
போறேன்..
அவ்ளோதானே..!!

அனு said...

@ரமேஷ்

//நீங்க கிரிக்கெட் ஆடுனீங்கன்னா.,
நான் கிரிக்கெட் பார்க்குற
கெட்ட பழக்கத்தை விட்டுடுவேன்..

விளம்பரதுல வேற வந்தீங்கன்னா
T.v பார்க்குறதையே விட்டுட்டு
போறேன்..//

ரிப்பீட்டு...

மங்குனி அமைச்சர் said...

ஆமா கிரிகேட்டுன்னா என்னா சார்?

cheena (சீனா) said...

ஆகா வெங்கட் - சூப்பர்யா - லேடர்ல் திங்கிங்க்னு இதயும் சொல்லலாமா - அய்யோ = தாங்கல - அனு வேற பட்டயக் கெள்ப்புறாங்க

நல் வாழ்த்துகள் வெங்கட் - அனு

நட்புடன் சீனா