சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 April 2010

அடக்கி வாசிக்கணும்ல...!!
அப்போ எனக்கு பல்வலி..,
பல் டாக்டர்கிட்ட போனேன்..
டாக்டர் நம்ம சொந்தக்காரர்தான்..

" உனக்கு கடைசில ஒரு கடவாய் பல்லு
Cross-ஆ முளைக்குது.., அதை பிடுங்கணும். "

" வலிக்குமா டாக்டர்..? "

" லைட்டா..!! "

" லைட்டான்னா..? "

" பொறுத்துக்கிற அளவு.."

" வலிச்சா பல்ல கடிச்சிட்டு
பொறுத்துக்கலாம்..- ஆனா
பல்லு புடுங்கும் போதே வலிச்சா
என்ன பண்றது டாக்டர்..? "

"  நீ அடங்கவே மாட்டியா.? பல்லு
புடுங்கும் போது கூட பஞ்ச் டயலாக்கா..?  "

பின்னாடி திரும்பி..,

" நர்ஸ் இவன் ஜாஸ்தி பேசறான்..,
ஒரு ஊசி எடுங்க.. வாயிலயே
போடலாம்..!! "

" அவ்வ்வ்வ்வ்..!!!!"


பின் குறிப்பு :
நேத்து எனக்கு பல் டாக்டரை
ஞாபகப்படுத்திய அனாமிகா துவாரகனுக்கு
இந்த பதிவை Dedicate செய்யறேன்..
.
.

45 Comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இப்படியெல்லாம் எந்திரங்கள் காட்டுரீங்களே தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Mr.ஜனா உன்னை பற்றி சொல் உன் நண்பனை பற்றி சொல்கிறேன் நு ஒரு பழமொழி உண்டு. உண்மைய சொல்லுங்க வெங்கட் உங்க நண்பன் தான. எப்படிங்க கல்லூரில அவர் கூட இருந்தீங்க. முடியலட சாமீ.....

வெங்கட் said...

சுரேஷ்..,
எல்லாம் ஒரு பில்டப் தான்..

வெங்கட் said...

ரமேஷ்..,
நல்ல கேள்வி..,
ஆனா இதை ஜனாகிட்ட
கேட்டா அவன் எப்படி
பதில் சொல்லுவான்..?

எங்க Profesors-கிட்ட
கேட்டாலாவது எதாவது
புலம்பி இருப்பாங்க..!

ரசிகன் said...

நீங்க பேசி முடிச்சப்புறம் டாக்டர் மனசில ஓடினத தத்ரூபமா படம் எடுத்து போட்டிருக்கீங்க.. (ஆள் மாற்றம் தவிர).. very good.

நல்லவரே.. கொசு கடிய எப்படி தாங்கிகறேன்னு மூட்டைபூச்சி கிட்டயா கேப்பீக.. எல்லாம் ஒரே wavelength காரங்களா இருந்திருப்பாங்க.. நம்ம பாடு தான் கஷ்டமா இருக்கு :-(

அஹமது இர்ஷாத் said...

நடக்கட்டும் நடக்கட்டும்(ஆடா மாடானெல்லாம் கேட்றக்கூடாது ஆமா)

வெங்கட் said...

ரசிகன்.,
ஹா.., ஹா.., ஹா..,
இந்த படம் அவர் மனசில
ஓடி இருந்தா என் நிலைமை
என்ன ஆகியிருக்கு..?!
ஐயோ.., நினைக்கவே பயமா
இருக்கே..!!

நாங்க ஒரே " Wave Lenght "
இதை சொல்ல வேற
உதாரணமே
கிடைக்கலையா..??!!
இதை கொசு கேள்விபட்டா
எவ்ளோ Feel பண்ணும்..!!??

வெங்கட் said...

அஹமத்..,
நடக்குது., நடக்குது..
( நாங்களும் ஆடா., மாடான்னு
சொல்ல மாட்டோம்..!! )

jana said...

நல்ல ஜோக் வெங்கட்...

இத படிச்சதும் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வருது...
(ஆரம்பிச்சிட்டான்யான்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது)
சரிங்க எல்லோருக்கும் பிடிக்காததால் நான் ஜோக் சொல்லலை...
(அனாமிகா2 சொன்னா நான் எழுதுறேன் இல்லென்னா இல்ல)

ரமேசு...ரமேசு...
என்ன தல நீ...எங்கிட்ட போயி இப்படி கேட்டுட்டே...
உண்மையாலுமே உண்மைய சொல்லனும்னா
உண்மையாவே வெங்கட் என்னோட உயிர் நண்பன்...
இருடல் ஒருயிர் நாங்க...

வெங்கட் எப்படி என்னய பொறுத்தார்ன்னு கேட்டா அது சரியான கேள்வி...
(ரசிகன் சொன்னது 100% சரி)
அவரு ஜினியஸ்...அவரு ரொம்ப பொறுமசாலி...
அவரு ரொம்ப திறமசாலி...
நாம மொக்க...
அவரு மாதிரி நமக்கு சுட்டு பொட்டலும் எழுத, பேச வராதுங்க...
இது போதுமா இல்ல இன்னும் வேணுமா ரமேஷ்...

NOTE :

வெங்கட்...

நீ சொன்ன மாதிரி அப்படியே எழுதிட்டேன்....
இனிமே எல்லொரும் உன்ன மதிப்பாங்க (அனாமிகா உட்பட)
வர்ட்டா...ஆங்...(இத மட்டும் விஜயகாந்த் ஸ்டைலில் படிக்கவும்)

வெங்கட் said...

ஜனா.,
குடுத்த காசுக்கு மேல
கூவரேடா..!!
நீ ரொம்ப நல்லவன்டா...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரசிகன் - இந்த கொசு மூட்டை பூச்சி தொல்லை தாங்க முடியல பாஸ்

வெங்கட் said...

ரமேஷ்..,
ரசிகனை என்ன கொசு மருந்து
அடிக்கிறவர்னு நினைச்சீங்களா..?

jana said...

ரமேஷ்...

கொசு கடிச்சு செத்தவனும் இல்ல...
மூட்ட பூச்சி கடிச்சு முடிஞ்சவனும் இல்ல...
ஆனா...
எருமா கடிச்சு எமலொகம் போனவன் நிறைய பேர் இருக்காங்க..
(உதாரணம் அந்நியன் படம்)
இப்ப எதுக்கு இத சொல்லறேன்னு பாக்குறீங்களா ரமேஷ்.
பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ஆராய கூடாது...

கிளம்பறென் தல...காத்து வரட்டும்...

அனாமிகா said...

ஐ... வடை கிடைச்சுடுச்சே...

அந்த டாக்டர் ஏன் பில்-லை முதல்லயே patient கிட்ட காட்டுறார்?

அப்போ தான் patient திறந்த வாயை மூட மாட்டாராம்

----------------
டாக்: உங்க பல்லை பிடுங்க 500 ஆகும்

patient: ஒரு நிமிஷ வேலைக்கு ஐநூறா??

டாக்: உங்களுக்கு ok-னா நான் மெதுவாவே பிடுங்குறேன்..

--------------------


டாக்: உங்க பையனுக்கு பல் பிடுங்க 3000 ஆச்சு

அம்மா: போன தடவை என் கணவருக்கு 500 தானே வாங்கினீங்க?

டாக்: உங்க பையன் போட்ட கூச்சல்ல வெளிய இருந்த அஞ்சு patients பயந்து ஓடிட்டாங்க...

------------------

டாக்: உங்க பல்லைப் பிடுங்கும் போது கொஞ்சம் சத்தம் போடுங்களேன்..

Pat: அவ்வளவு கஷ்டமா இல்லையே டாக்டர்...

டாக்: வெளிய நிறைய patients இருக்காங்க.. எனக்கு 8 மணிக்கு IPL பாக்க போகனும்..

(எல்லாம் சுட்டதுதாங்க)

பின்குறிப்பு:
Dentist கிட்ட போக பயந்துகிட்டு ஆறு மாசமா நான் ஒரு side-ஆ தான் சாப்பிட்டு இருக்கேன் :( :(

அனாமிகா said...

@jana
அனாமிகா2 நாந்தானே??

என்னை மதிக்கறதுக்கும் ஒருத்தர் இருக்குறாருன்னு நினைக்கும் போது ஒரே புல்லரிக்குது (ஆடு மாடு எதுவும் பக்கத்தில் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்(ல்)கிறேன்.. என்ன, வடை போச்சா??)

ஜோக்-க பயப்படாம சொல்லுங்க.. எல்லாம் நம்ம ஏரியா தான்.. யாரு உங்களை மிரட்டுறான்னு நான் பாத்துக்குறேன்..

அனாமிகா துவாரகன் said...

Say it Jana sir, by the way who is Anamika 2. There is Anamika and Anamika Duwaragan.

I saw this in the morning. Voted, yet didnt get time to comment as I had to rush. Where is our Anamika and Anamika Rasigan.

வெங்கட் said...

அனாமிகா..,
சுட்டாலும்., ரொம்ப நல்ல
ஜோக்கா சுடறீங்க..
அதை சுட்டதுன்னும்
உண்மைய சொல்லுறீங்க..
அந்த நேர்மை பிடிச்சி இருக்கு..!

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
பதிவு Dedicate பண்ணி
இருக்கேனே..
அதை பத்தி ஒன்னுமே
சொல்லலை..
பதிவு எப்படி இருந்ததுன்னும்
ஒன்னுமே சொல்லலை..!
Why..?

jana said...

அய்யோ...அய்யோ
ரெண்டு அனாமிகாவத்தான் (அனாமிகா2)
சுருக்கமா அப்படி சொன்னென்...
நான் Accounts student, MATHSல கொஞ்சம் week...
அதான் தப்பாயிட்டது...
மன்னிச்சுக்கொப்பா...

இப்படி ரெண்டும் ஒரே பேரா இருந்தா எப்படி...
கொஞ்சம் நீங்களாவது வித்தியாசம் காட்டக்கூடாதா...
நான் பாவம்ங்க...

Anyway எனக்கு தைரியம் கொடுத்த "வெறும் அனாமிகா"வுக்கு
சலாமுங்கோ...

அனாமிகா said...

@anamika
நான் வந்துட்ட்டேன்ன்ன்... (மதன் பாபு style-லில் படிக்கவும்)

வெளில போய் படம் பாத்துட்டு இப்போ தான் வந்தோம்... அதான் சுடச்சுட (முந்தைய பதிவில்) விமர்சனம் போட்டிருக்கேன்.. பாக்கலையா??? :)

வெங்கட் said...

ஆமாங்க நானும்
Accounts Student தான்..
அதுக்காக MATHS-ல
Week எல்லாம் இல்ல..
" Month "

அனாமிகா said...

இந்த அனாமிகா குழப்பம் பெரிய குழப்பமால இருக்கு...

இது எனக்கு மொட்டை அடிச்சு காது குத்தி அம்மா அப்பா வச்ச பேரு இல்லை.. ஏதோ anonymous-க்கு equivalent-ஆ இருக்குதேன்னு வச்ச பேரு தான்.. அதனால நான் பேரை மாத்துறது தான் பெட்டர்னு நினைக்குறேன்..

யாராவது நல்ல பேரா இருந்தா சொல்லுங்கப்பா.. மாத்திடுவோம்... (கட்டாயமாக 'நாரதர்' ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது)

ஏங்க வெங்கட், உங்க பதிவிலயே எனக்கு என்ன பேர் வைக்கலாம்னு ஒரு ஓட்டெடுப்பு நடத்துங்களேன்.. அனாமிகா-ன்ற வார்த்தைக்காகவே உங்க blog-ல traffic jam ஆகிடும் :) உங்களுக்கும் விளம்பரம் ஆச்சு.. எனக்கும் ஒரு பேர் கிடைச்சுடும்.. எப்படி என் ஐடியா?? (எப்படியோ என் பேர்லயும் ஒரு blog எழுத வச்சுட்டோம்ல..)

அனாமிகா said...

ஜனா-வை கிண்டல் செய்வதால் இப்பவே நான் வெளிநடப்பு செய்கிறேன்...

(இதுக்கு நீ சமைக்க போறேன்னு direct-ஆவே சொல்லியிருக்கலாம்)

ராஜ நடராஜன் said...

//" நர்ஸ் இவன் ஜாஸ்தி பேசறான்..,
வாயிலயே ஒரு ஊசி போடுங்க..!! "//

ஜாஸ்தி பேசாட்டியும் நர்ஸ் வாயில ஊசி போடுவாங்க.அதுக்கு பேசிட்டே ஊசி வாங்கிக்கலாம்:)

ராஜ நடராஜன் said...

முந்தைய பின்னுட்டம் போடணுமுன்னு ஓடியாந்துட்டேன்.அனாமிகாவின் சரவெடிகளை ரசித்ததால் பாராட்டுக்காக இந்த பின்னூட்டம்.

என்னது இரண்டு அனாமிகாவா?நான் சொல்றது பல் டாக்டர் அனாமிகா:)

வெங்கட் said...

ராஜ நடராஜன்..,
ஓ.., நீங்க அப்படி சொல்றீங்க..
அதுவும் சரிதான்..

இங்கே ரெண்டு அனாமிகா
இருக்காங்க..
1. அனாமிகா துவாரகன்.,
2. அனாமிகா
இந்த குழப்பத்தை தீர்க்க
நம்ம அனாமிகா ஒரு நல்ல
பெயரா Choose பண்ண சொல்லி
நம்ம வாசகர்கள்கிட்ட
கேட்டு இருக்காங்க..
ஏன் நீங்களும் Try பண்ணலாமே..!

வெங்கட் said...

அனாமிகா..,
எப்பவும் உங்க
சமையலை சப்பிட்டவங்க
தானே வெளிநடப்பு செய்வாங்க..
இப்ப இதென்ன புது பழக்கம்...?

( நாங்களும் கலாய்போங்க..!
நட்புக்காக அடக்கி வாசிக்கிறோம்..! )

அனாமிகா துவாரகன் said...

எனக்கு அம்மா அப்பா வைச்ச பெயர் தான். கொடுமை என்னென்னா, அனாமிகானு அறிமுகப் படுத்தினா ஏதோ இந்தி ஆளுங்களுக்கு மட்டும் தான் அந்த பெயர் மாதிரி இந்தியில் பேசத் தொடங்கி வெறுப்பேத்துவாங்க.

பெயர் மாத்தாதீங்க அனாமிகா. அறிமுகமான பெயரே நன்றாக இருக்கு. அனாமிகா.டீ.னு என்ன சொல்லுங்க. அது ஈசி.

பதிவு அவ்ளோனு காமடியா இல்லை. =(( ஆனாலும் டெடிக்கேட் பண்ணினதுக்கு நன்றி.

அனாமிகாவோட காமடியை வாசிச்சு சிரிச்சுட்டிருந்தேனா? பக்கத்தில இருந்த என் தோழி என்னதுனு கேட்டா. ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல அவளும் சிரிச்சுட்டே இருந்தா.

அப்புறம், நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க ஜனா சார்.

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

படம் நிஜமாக நல்வாழ்த்துகள் - உனக்கு இதுவும் வேணூம் இன்னமும் வேணும்

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
ம்ம்.., காமெடி கொஞ்சம் கம்மியா
இருக்கோ..!!
O.K., புதுசா வேற Try
பண்ணலாம்..!
நீங்களும் அனாமிகாவுக்கு
நல்ல பேரா choose பண்ண
வாங்க..!!

வெங்கட் said...

சீனா சார்..,
உங்களுக்கு என் மேல
அன்பே இல்லையா..!
இருந்தா இப்படி
சொல்லுவீங்களா..??

அனாமிகா said...

@anamika
உங்களை எல்லோரும் "டீ" போட்டு கூப்பிட்டா அவ்ளோ நல்லா இருக்காதுங்க... "அனாமிகா420" அப்படின்னு வேணா கூப்பிடலாம்... இது எப்படி இருக்குது???

வெங்கட் said...

அனாமிகா.,
ஏங்க இப்படி..?
அனாமிகா துவாரகன்
உங்களுக்காக எவ்ளோ
சின்சியரா பதில் சொல்லி
இருக்காங்க..
அதுக்குகூட கலாய்ப்பீங்களா..?
So Sad..!!

அனாமிகா said...

@அனாமிகா
ok.. நான் சொன்னத ரப்பர் போட்டு அழிச்சுடுங்க.. அப்பப்போ இப்படி தான், பேசனுமேன்னு எதையாவது பேசிடுவேன்...

just kidding.. pls dont mind...

@வெங்கட்,
so sad-னு சொல்றதுக்கு பதிலா so bad-னு சொல்லியிருக்கனும் :) (ஆமா, இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல!!!)

அனாமிகா துவாரகன் said...

சாரி... நான் கொஞ்ச அயன் பொக்ஸ். 420 என்றால் என்ன? கும்மியில் கலந்து கொள்ள முடியவில்லை மன்னிக்கவும். டே 2 டைப்பண்ணி முடியவும், ஃபயர்ஃபொக்ஸ் கிராஷாகவும் டைம் சரி. இன்னும் எரிச்சல் குறையவில்லை. ரொம்ப மூட் அப்சட். வெங்கட் சார் மாதிரி நச்சுனு நாலு வரியில் எழுதிற ஆளுன்னா பரவாயில்லை. நான் தான் பக்கம் பக்கமாக எழுதுவேனே. அது தான். எப்படி திருப்ப எழுதிறதுன்னு தெரியல. நடந்து ஒரு 8 மணி நேரமாச்சு. இன்னும் டென்ஷன்ல இருக்கேன்.

நீங்க எப்டி வேணுமனாலும் கடியுங்க அனாமிகா. நான் கோவிச்சுக்க மாட்டேன். டீன்னு கூப்பிட்டாலும் கோவிக்க மாட்டேன். நான் கலாக்கிற விஷயத்தில ரொம்ப கூல்லாக்கும்.

அப்புறம் ஜனா சார் ஏதோ சொல்றேனுன்னு சொன்னாரே. எங்க ஆளைக் காணவில்லை.

அனாமிகா பெயர் மாத்தவேண்டாம். உரிமையோட சொல்லுறேன்.

சீ யூ ஆல் சூன்.

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
பார்த்தீங்களா இந்த குழந்தைய..,
420-ன்னா என்னான்னே தெரியல..
இந்த குழந்தையவா அப்படி
சொன்னீங்க..??!!
420-ன்னா ஒரு " Law Section "
Fraud., Cheating செய்யறவங்களை
சுருக்கமா 420-ன்னு சொல்லுவாங்க.

OK., ரூட்ட மாத்து..

நீங்க Azhagi download
பண்ணலையா..?
அதுல Type பண்ணி Save
பண்ணிக்கலாம்..
Complete பண்ணினதுக்கு
பிறகு Copy & Paste பண்ணலாம்..

அனாமிகா தன்னை கொஞ்சம்
வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும்..,
பல பேருக்கு குழப்பமாக தான்
இருக்கு..,
முக்கியமா நீங்க ரெண்டு பேர்
பேசிக்கும் போது..

அனாமிகா துவாரகன் said...

எங்கே அந்த பினாமிகா? 420 ஆ? இப்படியா கவுப்பது. ஐ ஆம் ஹேட். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு இந்த டவுன்டோல் பண்ணுவதுனா கொஞ்சம் அலேஜி. ட்ரை பண்ணுறன். ரொம்ப பிசிங்க. ஒரு வாரம் ஊர் சுத்தின க்ளாஸ் கவர் பண்ண வேண்டாமா? நாளைக்கு கண்டிப்பாக போஸ்ட் போடுகிறேன்.

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,

அனாமிகா Vs அனாமிகா.,
இதுல கருத்து சொல்ல
நாம யாரு..?
நாம தான் வழிபோக்கர்கள்
ஆச்சே..!

அனாமிகா துவாரகன் said...

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம் என்று சொல்வார்கள். வெங்கட் சார், வேண்டாம். இப்பவே சொல்லிட்டேன். ஹா ஹா.

அனாமிகா said...

@anamika
//"அனாமிகா420" அப்படின்னு வேணா என்னைக் கூப்பிடலாம்..//
போன comment-ல அந்த 'என்னை' miss ஆகிடுச்சுங்க.. (எப்படி சமாளிச்சோம்ல..)

நீங்க தான் original... சோ, நான் தான் 420.. நம்புவீங்களோ மாட்டீங்களோ.. என் பேருல mail id கிடைக்காததால, ரொம்ப நாள் வரைக்கும் 420@yahoo.com தான் என் mail id-யா இருந்தது.. என் resume-ல எல்லாம் அது தான் இருக்கும்.. :)

btw,நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வெங்கட்ட கலாய்க்கணுமே தவிர, அவரை குட்டைய குழப்ப விடக் கூடாது.. ஒகே-வா? Lets show our Girl Power!!!!!

அனாமிகா said...

@வெங்கட்

கடைசியில அந்த "நாராயண.. நாராயண.."-வ விட்டுட்டீங்களே..

அனாமிகா said...

"என் பேரு+420"@yahoo.com-னு சொன்னேன் greater than & less than symbols use பண்ணினதால html-a consider ஆகிடுச்சு போல... யாரும் 420@yahoo.comக்கு நான்னு நினைச்சு mail அடிச்சுடாதீங்கப்பா....tension ஆகிட போறாங்க...

வெங்கட் said...

அனாமிகாs..,
ரெண்டு பேரும் ஒன்னா
சேர்ந்தா..,
ஐயோ..,
நினைக்கவே பயங்கரமா இருக்கே..,

மொக்கை ஜோக்கா போடுவாங்களே..!
மயக்கம் வருமே..!

பேசாமா China-க்கு ஓடிட
வேண்டியது தான்..!!

வெங்கட் said...

அனாமிகா..,
// venkat..,
கடைசியில அந்த
"நாராயண.. நாராயண.."-வ
விட்டுட்டீங்களே.. //

நீங்க சொல்லுவீங்களேன்னு
தான் விட்டு வெச்சேன்..
Correct-ஆ சொல்லிட்டீங்க..!

அனாமிகா துவாரகன் said...

////"அனாமிகா420" அப்படின்னு வேணா என்னைக் கூப்பிடலாம்..//
போன comment-ல அந்த 'என்னை' miss ஆகிடுச்சுங்க.. (எப்படி சமாளிச்சோம்ல..)//

அட பாவி. எப்டி எல்லாம் சமாளிக்கிறாங்க பாருங்க‌?

//btw,நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வெங்கட்ட கலாய்க்கணுமே தவிர, அவரை குட்டைய குழப்ப விடக் கூடாது.. ஒகே-வா? Lets show our Girl Power!!!!! //

Yes Go Anamika-s Go!!!