சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 April 2010

கவிதை by கண்மணி
என் Friend கண்மணியின்
கவிதைகள் இவை..!

இவை " ஹாய் - ஹைகூ "
பதிவில் Comment Section-ல்
இவர் எழுதி இருக்க
வேண்டியவை..
ரொம்ப கூச்சப்பட்டார்..,

" சரி குடுங்கன்னு "
நான் அதை பிடுங்கி
பதிவாகவே இங்கே
போட்டுட்டேன்..

ஏன்..,
பெண்கள் " காதல் கவிதை "
எழுதக்கூடாதா..???

உன் வீட்டு தஞ்சாவூர்
பொம்மை மட்டும்
தலையை ஆட்டுவதற்கு
பதிலாக கண்ணடிக்கிறதே..!
அதற்கும்
உன் மேல் காதலா...!!

என் வானத்தில்
இரு சந்திரன்
ஒன்று மேலே
மற்றது என்னருகில்...!!

காற்றின் மேல்
எனக்கு தீரா கோபம்..!
ஐந்து அங்குல
இடைவெளியில்
நீ கொடுத்த முத்தத்தை
காற்று எனக்கு வேண்டும்
என்று கவர்ந்து சென்றது..!!

நீ
எனது
நடமாடும் உயிர்..!

ஒரு நாள்
உன்னுடன் பேசுகையில்
நகம் கடித்த போது..,
" நகத்தை கடிக்காதே..! " என்று
சட்., சட்.., என்று
விரலில் அடித்தாய்
அன்றிலிருந்து
இன்று வரை
நகம் கடிக்காமல்
பேசியதில்லை நான்...!!

பின் குறிப்பு :
"இங்கே விளம்பர செய்யாதீர்கள்னு "
ஒரு சுவத்தில எழுதி இருந்திச்சாம்..,
அதை பார்த்த ஒருத்தன்
ஒரு கரிதுண்டை எடுத்து
" சரின்னு " பெருசா
எழுதிட்டு போனானாம்..

அதே மாதிரி நம்மகிட்ட
ரெண்டு Sincere சிகாமணிகள்
இருக்காங்க..,
( ரமேஷ் & ரசிகன் )

நேத்து Leave-ன்னு Notice போட்டா
அதுக்கும் Comment அனுப்பறாங்கப்பா..!
உங்க கடமை உணர்ச்சிக்கு
ஒரு அளவே இல்லையா..??!!
.
.

30 Comments:

Karthick ( biopen) said...

Nalla kavithaigal. Yen paaruttugalai theriviyungal sagotharikku!

~~Romeo~~ said...

ஹா ஹா ஹா .. இந்த பதிவை படிச்சிட்டு அப்பறம் முடிவு உங்கள் கையில்

http://ennaduidu.blogspot.com/2010/01/blog-post_28.html

Madurai Saravanan said...

கண்மணிக்கவிதைகள் அருமை. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

வெங்கட் said...

ரோமியோ..,
" அஹா.., வடை போச்சே..! "

உங்கள் Blog-ல் இந்த கவிதைகள்
இருப்பது எனக்கு முன்பே தெரியும்..

கண்மணி ( Malaysia )
இந்த கவிதைகளை எனக்கு அனுப்பும்
போதே இந்த Link-யும் அனுப்பி இருந்தார்..
என் வாசகர் வட்டதிற்கு இதை
அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்காக
தான் இதை இங்கே பதிவிட்டேன்..

Anonymous said...

எல்லாம் உங்க பாசக்கார பசங்க தானே. நானும் போடவா என்று நினைத்தேன். எதுக்கு உங்கள டென்ஷன் பண்ணனும்னு ஒரு நல்ல எண்ணத்தோட விட்டுட்டன்.

மரியாதைய நல்ல பசங்கன்னு நம்பிடுங்க. இல்லனா மலேசியா டென்டிஸ்ட்-ஐ உங்க பல்லு செக்கப் பண்ண அனுப்பிடுவான். =)) =))

வெங்கட் said...

நன்றி..
கார்த்திக்..,
சரவணன்..,

கண்மணி உங்கள்
Comments-ஐ பார்த்து
மிகவும் சந்தோஷப்படுவார்..!

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்.,
நம்ம பசங்க எப்பவுமே
பாசக்கார புள்ளங்க தான்..!
இது தெரிஞ்ச விஷயம் தானே..!
அதுக்கு ஏன் இவ்ளோ Terror-ஆ
மிரட்டுறீங்க..?

Anonymous said...

பாசக்கார பிள்ளைங்கனாலும் கொமென்ட் போடாத நல்ல பிள்ளை நான்னு சொல்ல வந்தேன். =(( உங்க கூட கா.

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்.,
என்ன இப்படி பொசுக்குன்னு
" கா " விட்டுடீங்க..,
நாம என்ன அப்படியா
பழகினோம்...!
நாளைக்கு பதிவை உங்களுக்கு
Dedicate பண்ணுறேன்..
ஓ.கேவா..?
இப்ப பழம் தானே..?!

Anonymous said...

ஹைய்ய்ய்ய்ய்ய். ஒரு காவுக்கே எனக்கு ஒரு பதிவு டெடிகேட் பண்ணுவீங்களா? ஆஹா.. இது நல்லா இருக்கே. சரி சரி பழம்.

அஹமது இர்ஷாத் said...

பெண்கள் காதல் கவிதை எழுதக்கூடாதுன்னு யார் சொன்னது. கவிதைஅருமை. . நண்பா வெங்கட் என்னிக்குப்பா உங்க ஒரிஜினல் .........?

வெங்கட் said...

அஹமத்..,
கவுத்திட்டீங்களே பாஸு..,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யா தம்பி வெங்கட் வருத்த படுவாரேன்னு கமெண்ட் போட்டா இப்படி அசிங்க படுத்திட்டீங்களே நானும் உங்ககூட கா. நான் கோபமா கிளம்புறேன். போய் ஒரு கட்டிங் போட்டு வந்து வச்சுகிறேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கண்மணிக்கு வாழ்த்துக்கள்

வெங்கட் said...

ரமேஷ்..,
என்ன ஆளாளுக்கு " கா "
விடறீங்க..!!
இந்த ஆட்டத்துக்கு நான்
வரலை..!!

அனாமிகா said...

சர்தான்...ரைட்டு...
கண்மணி எழுதிய கவிதைகள்-னு சொல்லிட்டீங்க.. so, கலாய்க்க முடியாது...

(என் அளவுக்கு இல்லைனாலும்) நல்லா எழுதுறீங்க கண்மணி... கொஞ்சம் refine பண்ணினா பெரிய ஆளாகிடுவீங்க.. இப்பவே உங்க கிட்ட ஒரு autograph வாங்கி வச்சுக்கறேன்...

btw வெங்கட், உங்களுக்கு கண்மணி மேல எவ்வளவு கடுப்பு இருந்தாலும் இவ்வளவு நல்ல கவிதைகளை 'நகைச்சுவை' பகுதியில் add பண்ணியிருக்க வேணாம்... (ஏதொ நம்மால் ஆனது... நாராயாண... நாராயாண...)

அனாமிகா said...

அஹா... 'காய்' விட்டா நம்ம பேர்ல ஒரு blog dedicate ஆகுமா? இது எனக்கு தெரியாம போச்சே...
நானும் உங்க பேச்சு காய் வெங்கட்..

இப்பவே போய் எல்லா பதிவர்களுக்கும் ஒரு காய் comment போட்டுட்டு வரேன்... பிரபலமாக இப்படியும் ஒரு நல்ல வழி இருக்கா..

வெங்கட் said...

அனாமிகா..,
நாரதரே..! வந்த வேலை
சுபமாக முடிந்ததா..?

" காய் " விட்டா
பதிவ Dedicate பண்ற
Offer முடிஞ்சி போச்சுங்க..
பக்கத்து கடையில
Try பண்ணி பாருங்க...!

Anonymous said...

என்று
விரலில் அடித்தாய்
அன்றிலிருந்து
இன்று வரை
நகம் கடிக்காமல்
பேசியதில்லை நான்...!! அடி வாங்குவதிலும் ஒருசுகம்..அடிப்பவர் அடித்தால்.

ஒரு கரிதுண்டை எடுத்து
" சரின்னு " பெருசா
எழுதிட்டு போனானாம்....

நைஸ்.... உங்கள் நண்பர்கள் உங்களை விடுவதாக இல்லைப்போலும்...பொன்.

வெங்கட் said...

பொன்..,
உங்கள் பாராட்டுக்களை
கண்மணி வந்து
பார்த்து சந்தோஷப்படுவார்..

என் நண்பர்களுக்கு
என் மேல் பாசம் அதிகம்..!

அனாமிகா said...

ஆஹா..வடை போச்சே..
np, அனாமிகா துவாரகன்-க்கு போடுற பதிவ எனக்குன்னு மனச தேத்திக்கிறேன்...

ரமேஷ், நீங்க போடுற கட்டிங்-ல என்னையும் சேர்த்துக்கோங்க...

நாளைக்கு தான் அங்காடித் தெரு பாக்க பொறோம்.. பார்த்துட்டு comment பொடுறேன்..

Anonymous said...

ஹா ஹா ஹா. அனாமிகா அக்க நாரதரே, போட்டீங்களே ஒரு போடு. சூப்பர். எப்டீங்க, நீங்க இப்டி எல்லாம் யோசிக்கிறீங்க. நீங்க எல்லாம் வீடு கட்டி யோசிப்பீங்களா. அப்புறம் அனாமிகா ரசிகன்னு ஒருத்தர் இருக்கார். பேசாம அடுத்த எலக்சனில் நில்லுங்க. எங்க ஓட்டு உங்களுக்குத் தான்.

வெங்கட் சார். மரியாதையா என் பேர சொன்ன மாதிரி டெடிக்கேட் பண்ணிடுங்க. சரியா. வரேன். =))

வெங்கட் said...

அனாமிகா..,
இதுக்காகவா இவ்ளோ Feel
பண்ணி கட்டிங் அளவு
போயிட்டீங்க..!!
So Sad..!

ஆமா.., உங்க ரசிகரை எங்கே
காணோம்..??

வெங்கட் said...

அனாமிகா துவாரகன்..,
" வீடு கட்டி யோசிக்கிறது..! "
ஓ.. ரூம் போட்டு
யோசிக்கிறதுக்கு ஒரு படி
மேல..,
அப்ப நீங்க யோசிச்சதுக்கு
பேரு என்னவாம்..
அதுவும் அதேதான்..!

ஆமாம்பா..,
எல்லாரும் நல்லா கேட்டுகுங்க.,
இவங்க எலக்சன்ல ஓட்டு
போடறாங்களாம்..!
முதல்ல எனக்கு
Tamilish, Ulavu, Tamildaily-ல
ஓட்டு போடுங்க..

ரசிகன் said...

ஏதோ 1ம் தேதி.. ஏமாந்து ஏமாந்து tired ஆனது மட்டும் இல்லாம, சந்து சந்தா கும்மி எடுக்கப்பட்டதால damageம்ஆகி 2ம் தேதி leave போட்டாலும், சின்சியரா leave letter தந்தீங்க. அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது. comment போட்டேன். ம்ஹீம். நல்ல மனச யாரு மதிக்கறா..

கண்மணி.. கூச்சத்தை உதறினா.. competition ku ஆள் readyந்னு தாமரை madamக்கு தகவல் அனுப்பிடலாம். (இந்த பதிவர பார்த்தாவது உங்களுக்கு தைரியம் வரல..!! :-) )

வெங்கட் said...

ரசிகன்.,
உங்க நல்ல மனசை நான்
புரிஞ்சிக்கறேன்..
இனிமே பதிவு எழுதாத
நாளைக்கு எல்லாம் இப்படி
ஒரு Notice போடலாம்னு
இருக்கேன்..ஓ.கேவா..!!

தாமரை மேடம்க்கே தகவல்
அனுப்புவீங்களே..??

கண்மணி..,
இதுக்கு நீங்களே பதில்
சொல்லுங்களேன்..

கண்மணி said...

மன்னிக்கவும் ..மிகவும் தாமதமாக பதில் எழுதுவதற்கு ...
இப்பொழுது இந்த வார்த்தைகளை type செய்யும் போது
உண்மையில் மிக்க மகிழ்ச்சி எனக்கு ....
வெங்கட் உங்களுக்கு Big Thanks
மதுரை சரவணன் ,
கார்த்திக்
ரசிகன் ,
அனாமிகா ,
ரமேஷ் ரெம்ப நல்லவர் (சத்தியமா) , என்னோட கவிதைகளுக்கு பின்னூட்டம் இட்டதற்காக (:-)
அனைவருக்கும் மிக்க நன்றி !!!

இன்னொரு முக்கியமான விஷயம் ..
தாமரை மேடத்திற்கு இந்த லிங்க் யாரும் கொடுத்த விட வேண்டாம்

வெங்கட் சார் ..உங்க friends ரெம்ப நல்லவுங்க

cheena (சீனா) said...

ஹா ஹா கண்ம்னையின் கவிதைகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன - தஞ்சாவூர் பொம்மை சூப்பர்

வெங்கட் said...

கண்மணி..,
இவ்ளோ தாமதமா வந்தா
Comments போடுறது..?
கொஞ்சம் சுறுசுறுப்பா
செயல்படுங்க.. ( என்னை மாதிரி )

வெங்கட் said...

சீனா சார்..,
கண்மணியின் சார்பா நானே
நன்றி சொல்லிக்கிறேன்..