சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 April 2010

ஹாய் வெங்கட்

( ரசிகன் )
ஆழம் தெரியாமல் காலை விடுதல்
என்றால் என்ன.?

இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை
சீண்டி பார்க்கறது..


( கண்மணி., மலேசியா )
உங்கள யாராவது திட்டினால்
உங்க பதில் என்ன..?

ஹி.., ஹி..,ஹி.., ( மனைவி திட்டினா )

ஐய்யோ..,
அது நான் இல்லீங்க..! ( மத்தவங்க திட்டினா )( சே.ரா.பாலா )
" கேள்வின்னா " என்ன..?

பொதுவா நாங்க பதில் என்னான்னு
தெரியாம தான் முழிப்போம்..
நீங்க என்னடான்னா கேள்வியே
என்னான்னு தெரியாம முழிக்கறீங்க..!


( அனாமிகா துவாரகன்., ஆஸ்திரேலியா
http://reap-and-quip.blogspot.com )
நானும்., சுனாமிகாவும் சேர்ந்து உங்க
வீட்டுக்கு வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க..?

நான் உங்களை
கேள்விதானே அனுப்ப சொன்னேன்..
இது மாதிரி மிரட்டல் அனுப்பினா எப்படி..?


( வடிவேலன் ஆர்.
http://www.gouthaminfotech.com )
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..
நீங்கள் எழுதற பதிவு எல்லாம் கவிதை
மாதிரி ஒன்னுக்கு கீழ ஒன்னா இருக்கு
என்ன காரணம்..?

இதுக்கு போயி உண்மை தெரிஞ்சாகணும்
ரேஞ்சுக்கு ஏன் Feel பண்ணுறீங்க..!
அப்படி எழுதலைன்னா பதிவு
ரெண்டே வரியில முடிஞ்சிடும்..!!


( அனு )
தியேட்டர்ல ரெண்டு பக்கமும்
Arm Rest இருக்கும்.. அதுல
எது நம்மளோடதுன்னு எப்படி
கண்டுபிடிக்கறது..?

ரெண்டுமே நம்மளது இல்லீங்க..,
தியேட்டர்காரங்களுது..!


(தினேஷ் பாபு.க.நா )
தயிர்ல போட்ட தயிர் வடை,
போடலைன்னா மெது வடை,
ஓட்டை இருந்தா அது ஓட்டை வடை....
இத பத்தி உங்களோட கருத்து என்ன ?

தம்பி..! இவ்ளோ ஆராய்ச்சி பண்ணினா
வடை ஊசி போயிடும்..
அப்புறம் Feel பண்ணுவீங்க
" ஆஹா.., வடை போச்சே..! "


( தேஜு )
Confidence , Over Confidence என்ன
வித்தியாசம்..?

" Over "


( ரமேஷ்
http://sirippupolice.blogspot.com )
யானைக்கும் அடி சறுக்கும்னு
சொல்லுறாங்களே..,
அது எத்தனை அடி சறுக்கும்..?

யானை ஆணா..? பெண்ணா..?
வயசு என்ன..?,Weight எவ்வளவு..?
இதெல்லாம் சொல்லணும்ல..
ஒவ்வொன்னுக்கும் ஒரு
Formula இருக்கு..


( சுசித்ரா )
Stadium-ல நாம உக்கார்ற இடத்துக்கு
ஏன் " Stand "-ன்னு பேரு..?

Stadium-ல நீங்க Stand-ல
உக்காருவீங்களா..?
நாங்கல்லாம் Seat-ல தான்பா
உக்காருவோம்..!


பின் குறிப்பு :
கேள்வி அனுப்பின எல்லோருக்கும்

நன்றி..! இந்த பகுதியை தொடர்வதா.?
வேண்டாமான்னு நீங்க தான்
முடிவு பண்ணனும்..!

இன்று ஒரு தகவல் :

இன்னிக்கு தமிழ் வருஷம்
" விக்ருதி " பிறக்குது..,


தமிழ் வருஷங்களை 60-ஆ
பிரிச்சி வெச்சிருக்காங்க..- ஆனா.,
அந்த 60 வருஷத்தோட பெயர்ல
ஒன்னுகூட தமிழ் பெயர் கிடையாது..
எல்லாமே வடமொழி பெயர்..
.
.

35 Comments:

ரசிகன் said...

ஹாய் வெங்கட்....
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்..."
இந்த பகுதிக்கும் , உங்களுக்கும்..
கலக்கலான தொடக்கம்...
Continue பண்ணுங்க Brother...

அனு said...

கேள்விகள் பதில்கள் அனைத்தும் அருமை.. உங்கள் ரசிகர்கள் எனபதை நிருபித்து விட்டார்கள்.. நல்ல நகைச்சுவையோடு புத்தாண்டை ஆரம்பித்தாயிற்று...

"இன்று ஒரு தகவல்" சிந்திக்கும் படியாக் உள்ளது.

//நீங்கள் எழுதற பதிவு எல்லாம் கவிதை
மாதிரி ஒன்னுக்கு கீழ ஒன்னா இருக்கு
என்ன காரணம்..? //
எனக்கும் அதே doubt தான்...

விக்ருதிக்கும் உங்களுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

ஹா ஹா ஹா. தொடருங்க. ஆனா இது தான் சாட்டுன்னு மத்த பதிவு எழுதாமல் விடாதீங்க.

jana said...

என் இனிய வெங்கட்,

இன்று பிறந்த நாள் கானும் நீ...
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாண்டு
நீ உன் குடும்பத்தோடு
சந்தோஷமாக வாழ
என் நாளும் ஆண்டவனை
பிரார்த்திக்கும் உன் நண்பன்...


"ஹாய் வெங்கட்" பகுதியில
கேட்டகப்பட்ட கேள்விகள்
எல்லாம் ரொம்ப ரசிக்கும்படியாவும்
குரும்புத்தனமாவும் இருக்குது...
நீங்க இத கண்டிப்பா தொடரனும்...

கேள்வி அனுப்பிச்ச நம்ம ரசிகன்,
ரமேஷ் தல, "AD" & "அவுங்க" etc...
எப்படிங்க இப்படி...?
ரூம் போட்டு யோசிப்பிங்களோ...
நல்லாயிருங்க...நல்லாயிருங்க...

உங்களோட பதில் எல்லாமே
அருமை வெங்கட்...

எல்லொருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹாய் வெங்கட்....
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்..."

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

continue, eppadiyum engalai taarcher panniteengaa

Chitra said...

ஹாய் வெங்கட், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும்.
தொடர்ந்து ஹாயுங்க.......!

வெங்கட் said...

Dear Friends,
Thanks.
Now i'm spending time with my Family. So commentsukku reply after 5 pm.

பாலா said...

thodurunga naan 100 kelvi pola ezhuthi anupuren readya irunga

வெங்கட் said...

@ ரசிகன்.,
நன்றி..,
continue பண்ணுங்கன்னு
சொல்லிட்டு ஓடிபோய்
ஒளிஞ்சிக்க கூடாது..
கேள்வி அனுப்புங்க என்
E-Mail ID-க்கு..

வெங்கட் said...

@ அனு..,
நன்றி..,
நல்ல புள்ள மாதிரி நடிக்கிறது
நம்ம Blog-ல மட்டும் தானா..?
AD Blog-ல அடிச்ச Comment-ம்
நான் பார்த்தேன்..

வெங்கட் said...

@ அனாமிகா துவாரகன்..,
நன்றி..,
அப்படியெல்லாம் விட மாட்டேன்..
கொஞ்சம் Gap தேவைப்படுது..

எனக்கு Birthday Wish பண்ண நீங்க
எழுதின பதிவு Super..
எல்லோரும் கொஞ்சம் போயி
பாருங்களேன்..!

http://reap-and-quip.blogspot.com/2010/04/14.html

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்

வெங்கட் said...

@ ஜனா..,
ரொம்ப Thanks..
இன்னிக்கு உன் தங்கச்சி
Surprise Gift-ஆ
Dress ( Shirt & Pant )
குடுத்தாங்க..,
Super-ஆ இருக்கு..!

வெங்கட் said...

@ ரமேஷ்..,
நீங்க அனுப்பின 5 கேள்வியில
நான் நாலு கேள்வி Choice-ல
விட்டுட்டேன்..
அந்த கடைசி கேள்விக்கு மட்டும்
பதில் என்னான்னு எனக்கு மெயில்
அனுப்புனீங்கன்னா Bit அடிச்சி
பாஸ் பண்ணிடுவேன்..

வெங்கட் said...

நன்றி..,
@ சித்ரா
@ உலவு நண்பர்கள்
@ அருண் பிரசாத்

வெங்கட் said...

@ பாலா..,
100 கேள்வியா..?
அனுப்புங்க.., அனுப்புங்க..!

( கடவுளே..!
ஒரு 50 கேள்விக்காவது
பதில் தெரியணும்..! )

Gavaskar said...

Macha ,Wish you a Happy birthday.

Gavaskar

துபாய் ராஜா said...

பிறந்த நாள் வாழ்த்துக்களோடு தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

//ஹி.., ஹி..,ஹி.., ( மனைவி திட்டினா )//
இது... இது.... இது தான் புருஷ லட்சணம்

கலக்கல் தான் போங்க... இப்படி எழுதிட்டு தொடர்றதா வேண்டாமா மெரட்டினா எப்பூடி?

இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@jana :
நாங்க இப்போ VOMS (வெங்கட்டால் ஒரு மாதிரி ஆனோர் சங்கம் ல) இல்ல இருக்கோம். அப்படிதான் யோசிப்போம்.

@வெங்கட்:
தமிழ்ல எனக்கு பிடிக்காத இங்கிலீஷ் வார்த்தை பிட்...

Mala said...

பகுதி நல்லா இருக்கு...
Birthday wishes..
என்கிட்ட ஒரு கேள்வி..
அண்ணன் பெண்டாட்டிய அண்ணின்னு சொன்னா,
தம்பி பெண்டாட்டிய என்னன்னு சொல்றது? தண்ணின்னா??
அடுத்த பதிவுல பதில் சொல்லுங்க..

வெங்கட் said...

Birthday Wish பண்ணின
@ மாப்ளே கவாஸ்கர்.,
@ துபாய் ராஜா.,

மற்றும் பலருக்கும்
நன்றி..

வெங்கட் said...

@ அப்பாவி தங்கமணி..,
பாராட்டுக்கு நன்றிங்க.
இப்படி சொல்லிட்டா மட்டும்
பத்தாது.
கேள்வி அனுப்பனுங்க...
சரியா..!!

வெங்கட் said...

@ ரமேஷ்..,
எனக்கு தமிழ்ல பிடிக்காத
வார்த்தை எது தெரியுமா..?
" ரமேஷ் "

வெங்கட் said...

@ மாலா.,
Thanks for your Wish..,

கேள்விகளை மெயில்
பண்ணுங்க..
Comment Section-ல எழுதினா
எனக்கு சங்கடம்..
( ஒரு வேளை பதில் சொல்ல
முடியலைன்னா..!! )

இந்த பதிவுலகூட 3 பேரு
அவங்க கேள்வி வராததை
நினைச்சி Feel பண்ணி
இருப்பாங்க..

அவங்க அனுப்பினது ஒரே ஒரு
கேள்வி தான்..
எனக்கு பதில் சொல்ல முடியல..

So. கேள்வி அனுப்பறவங்க
எனக்கு கொஞ்சம் Choice
குடுங்கப்பா.

எல்லா கேள்வியும் நல்லா
இருந்தா அடுத்தடுத்த பதிவுல
Use பண்ணிக்கலாம்..

Anonymous said...

யானை ஆணா..? பெண்ணா..?
வயசு என்ன..?
Weight எவ்வளவு..?
இதெல்லாம் சொல்லணும்ல..
ஒவ்வொன்னுக்கும் ஒரு
Formula இருக்கு..


good reply....it shows that you could manage the siutation.pon

மங்குனி அமைச்சர் said...

இது நல்லா இருக்கே , நானும் ஆரம்பிக்க போறேனே , ஹி ஹி ஹி .....................

வெங்கட் said...

பொன்..,
ரொம்ப Thanks-ங்க..,
நீங்க ஏன் கேள்வி
அனுப்பலை..?
எதிர்பார்த்தேன்..

வெங்கட் said...

மங்குனி..,
கலக்குங்க.., கலக்குங்க..
நான் கூட கேள்வி
அனுப்புவேன்..
சொல்லிபுட்டேன் ஆமா..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ் தமிழ் கிடையாது. ஷ் வடமொழி எழுத்து . தொப்பி தொப்பி

ரசிகை said...

நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போட்ட உங்க அப்பா போட்டோ ரொம்ப நல்லா இருந்தது. ஏன் இப்போ எடுத்துட்டீங்க?

வெங்கட் said...

@ ரசிகை..,
என்ன சொல்லுறீங்க..?
கனவு எதாவது கண்டீங்களா..?

cheena (சீனா) said...

கேள்வி பதில் நல்லாவே இருக்கு - யானைக்கு அடி சறுக்கினா - வி.வி.சி
தொடர்க வெங்கட்