சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 March 2010

நீங்க LKG : Pass-ஆ..? Fail-ஆ..??

















வர வர இந்த Schools பண்ற
லொள்ளு அளவே இல்ல..

LKG சேர்த்துக்கவே Interview...!!

சென்னையில இருக்கிற
என் Friend ஒரு மாசமா
ஸ்கூல்., ஸ்கூலா
ஏறி இறங்கிட்டு இருந்தான்..,
மகனை LKG சேர்க்க..,

ஆனா..,
வீட்ல எது கேட்டாலும்
பதில் சொல்லுற அவனோட மகன்..,
Interview-ல மட்டும் வாயே திறக்க
மாட்டேங்கறானாம்..!

ஸ்கூல்லயும்..,
" உங்க மகனுக்கு ஒன்னுமே
தெரியல., சீட் இல்லைன்னு
சொல்லிடறாங்களாம்..! "

என் Friend ஒரே புலம்பல்..

அடப்பாவிகளா..!!
ஒன்னுமே தெரியலைன்னு
தானே School-லயே சேர்த்தறது..!!

நேத்து என் Friend
Phone பண்ணியிருந்தான்.

நண்பன் : ( ஒரு ஸ்கூல் பெயரை சொல்லி )
என் பையனுக்கு சீட் கிடைச்சிடுச்சிடா..!!

நான் : சந்தோஷம்டா..!
எப்படியோ ஒரு வழியா
உன் மகன் பாஸ் பண்ணிட்டான்..,

நண்பன் : அவன் எங்கடா பாஸ்
பண்ணினான்..! Currency தான்
பாஸ் ( Pass ) ஆச்சு..!

எதோ ஒன்னு பாஸ் ஆனா சரி...!

பின் குறிப்பு :
இந்த வருஷம்
எங்க ஊர்ல நிறைய பேர்
CBSC School-க்கு மாறுறாங்க..,
சமச்சீர் கல்வி வர்றதால..,

என் மகனை நான் மாத்தலை..
இருந்தாலும் Confusion-ஆ இருக்கு..!
விவரம் தெரிஞ்சவங்க
Comment Section-ல சொல்லலாம்..
.
.

19 Comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

உங்களுக்கு கல்யாணம் ஆயுடுச்சா .............!
பாக்குறதுக்கு College போற பய்யன் மாதிரி இருக்கீங்க ......!

மாதேவி said...

"Currency தான் பாஸ் ( Pass ) ஆச்சு..!"
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
எங்கும் இதன் ஆட்சி.

வெங்கட் said...

உலவு.காம்..,
அட.., நிஜமாவா சொல்லுறீங்க..?
கேட்கவே சந்தோஷமா இருக்கே..!
நன்றி...!

வெங்கட் said...

மாதேவி..,
ஆமாங்க..,
" பிடல் காஸ்ட்ரோ " பத்தி ஒரு
Book படிச்சேன்..
அதுல இருந்த ஒரு விஷயம்
ஆச்சரியமா இருந்தது.. அது..,
" Cuba-ல எல்லா மக்களுக்கும்
அனைத்து கல்வியும் இலவசம்..! "
( டாக்டருக்கு படிச்சாலும்
இலவசம்தான்..! )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உலவு.காம் venkat 50 vayasaana youth ngaa. avaroda peraandi ya lkg la sera poraar.

வெங்கட் said...

ரமேஷ்..,
உஷ்..,
வயசை பத்தி பேசக்கூடாது..
எனக்கு 20 வயசுதான்
12 வருசமா
நடந்திட்டு இருக்கு..!

Unknown said...

வெங்கட்

CBSCக்கு மாத்தறது நல்லதுன்னு என் கருத்து...
விவரமா போன்ல பேசலாம்...

"அபியும் நானும்" படத்தில "school admission scene"நிஜம்...
இங்க Dubaiல நானும் ரொம்ப பயந்து போயிருந்தென்.
ஆனா அப்படி ஒன்னும் நடக்கல...
என்ன ஒன்னும் கேக்கல...
அப்படி கேட்டிருந்தா Pranav & Pooja Salemலயே படிக்க வேண்டியிருந்திருக்கும்...
நல்லவேள ஆண்டவன் நம்ம பக்கம் இருக்கான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Venkat enakku romba payamaa irukku. 18 vayasukku melathaan ottu podanumnu goverment solluthu.

aanaa naan unkalukku ottu pottukitte irukken. 16 vayasu paiyan ottu podurathu thappunu ennai yaaravathu arrest panninaa neengathaan jaaminla edukkanum

வெங்கட் said...

ஜனா.,
சமச்சீர் இந்த வருஷம்
1st Std and 6th Std மட்டும் தான்
அறிமுகம் ஆகுது..
சூர்யா இப்போ 3rd Std.,
So., இந்த வருஷம் Wait
பண்ணி பார்த்துட்டு.,
Next Year Try பண்ணலாம்..

வெங்கட் said...

ரமேஷ்..,
நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க..,
Supreme Court-க்கு வேணாலும்
போயி சுத்தி பார்த்திட்டு.,
இல்ல.., இல்ல..,
ஒரு கை பார்த்திட்டு
உங்களை வெளியே கொண்டு
வந்துடறேன்..

( ஒரு ஓட்டுன்னா.., சும்மாவா..?! )

பனித்துளி சங்கர் said...

////////////வெங்கட் சொன்னது…
ரமேஷ்..,
நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க..,
Supreme Court-க்கு வேணாலும்
போயி சுத்தி பார்த்திட்டு.,
இல்ல.., இல்ல..,
ஒரு கை பார்த்திட்டு
உங்களை வெளியே கொண்டு
வந்துடறேன்..

( ஒரு ஓட்டுன்னா.., சும்மாவா..?! )////////////////


நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க .நீங்க இரண்டுபேரும் மாட்டிக்கொண்டாலும் நான் இருக்கேன் .

வெங்கட் said...

சங்கர்..,
நன்றி..,
நீங்க இருப்பீங்க சரி..!
நாங்க அப்ப எங்கே இருப்போம்..??!!

மாயாவி said...

//" Cuba-ல எல்லா மக்களுக்கும்
அனைத்து கல்வியும் இலவசம்..! "
( டாக்டருக்கு படிச்சாலும்
இலவசம்தான்..! )//

கியூபாவுக்கு ஏன் போறீங்க!! பக்கத்தில
இலங்கையிலேயே டாக்டருக்கு படிச்சாலும் படிப்பு இலவசம்தான்!!

வெங்கட் said...

மாயாவி..,
அப்படியா..!!
தெரியாத தகவல்..,
தெரிவித்தமைக்கு நன்றி..!!

பனித்துளி சங்கர் said...

இது என்ன கேள்வி வெங்கட் சின்னபுள்ளதனமா? உங்களுக்கு என்ன 5 star ஹூடல்ல ரூம்போட்ட தருவாய்ங்க?மாமியா வீடுலதான்!!

வெங்கட் said...

சங்கர்..,
ஹி..,ஹி.., ஹி..!!
எனக்கு பதில் சொல்ல தெரியல
அதான் சிரிச்சி மழுப்பிட்டேன்..

Anonymous said...

இலங்கையில் மாஸ்டர்ஸ் பண்ணுவது என்றாலும் இலவசம் தான். ஒரு விடயத்தில் எனக்கு இலங்கையை பிடிக்கும். இலவச கல்வி, இலவச மருத்துவமனை என்ற முக்கிய இலவசங்களுக்குத் தான் :)) சீருடை துணி கூட இலவசம். பாடப் புத்தகங்கள் கூட இலவசம். ஏன் ஹொஸ்டல் மிகவும் மலிவு. அரசாங்க பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருப்பதால் இலவச கல்வி சாத்தியமாக இருக்கிறது.

இந்த ஸ்கூல் அல்மிஷன் பத்தி நிறைய படிச்சிருக்கேன். சாமி படத்தில விவேக் அம்மா அப்பாவுக்கு சீட் குடு என்று சொல்வது ஞாபகத்தில் வருகிறது.

வெங்கட் said...

அனாமிகா.,
இது இலங்கையை
பற்றிய இன்னொரு கோணம்..
நிறைய பேருக்கு தெரிந்திருக்க
வாய்பில்லை..
தகவலுக்கு நன்றி..

( யாரப்பா அது..! நம்ம Blog-ல
Message இல்லைன்னு சொன்னது..?
இனிமே அப்படி சொல்லக்கூடாது..! )

cheena (சீனா) said...

அது சரி ஏதோ ஒண்ணு பாஸான சரி அவ்ளோதான்