சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 August 2010

ஜாவா + +...!!!
டிஸ்கி : இது ஜாவா பத்தின
Technical பதிவு அல்ல..

1st Part படிக்க இங்கே Click பண்ணுங்க..
------------------------------------------------

நான் Feelings of India ஆயிட்டேன்..

" வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா.,
தடைகல்லும் உனக்கொரு படி கல்லப்பா..,
வெற்றிகொடி கட்டு...!! "

Backround-ல " படையப்பா " பாட்டு..

அப்பதான் ஒரு விஷயம்
எனக்கு Strike ஆச்சு...

எங்களுக்கு Project-ஐ Demo
காட்ட வேண்டியதில்ல..
Project Report-ஐ வெச்சி
Explain பண்ணினா போதும்..

இது போதாதா...!!

சோகத்தை ஓரம் கட்டிட்டு..,
என் Friend சுரேஷோட Project-ஐயே
நானும் Printout எடுத்துட்டேன்..

அதுக்காக ரெண்டு Project-ம்
ஒண்ணுன்னு நினைக்காதீங்க..,

அவன் Project Report-ல
" Suresh-னு " இருக்கும்..

என்னுதுல " Venkat-னு " இருக்கும்..
( எப்புடி..!! Difference இருக்குல்ல.. )

ரெண்டு Project-ம் ஒண்ணுதான்னு
எங்க H.O.D கண்டுபிடிச்சிடுவாரோன்னு
சுரேஷ் தான் ரொம்ப பயந்தான்..

" டேய்.., எனக்கு Java தான்
அரைகுறையா தெரியும் - ஆனா
நம்ம H.O.D பத்தி முழுசா தெரியும்..
அதனால Don't Worry-ன்னு..! "
சொல்லிட்டேன்..

Project Report-ஐ பைண்டிங் பண்றதுக்கு
முன்னாடி H.O.D கிட்ட காட்டி
" O.K " வாங்கணும்...

அதுக்காக நான் காலேஜ் போனப்ப..

என் Friend ஹரி H.O.D Room-ல
இருந்து சோகமா வெளியே வந்தான்..
( அவன் Java-ல சொந்தமா Project
பண்ணி இருந்தான்.. )

நான் : என்னடா ஒரு மாதிரி இருக்கே..?

ஹரி : H.O.D கடுப்படிக்கிறார்டா..
என் Project Screen Shots பார்க்க
Look-ஆ இல்லையாம்..

( ஒரிஜினல் Project-க்கே இந்த கதியா..? )

ஹரி : ஜாவால Design பண்றது
எவ்ளோ கஷ்டம்..?
ஒரு கோடு போட கூட
ஒரு பக்கம் Code எழுதணும்..
உனக்கே தெரியும் தானே..!!

( எனக்கு..?? ஓ.. நல்லா தெரியுமே..!! )

ஹரி : இவருக்கு Java-ன்னா என்னான்னே
தெரியல., நம்மள போட்டு இம்சை
பண்ணிட்டு இருக்காரு...

ஆஹா... அவன் சொன்னதை கேட்டதும்
எனக்கு பல்ப் எரிய ஆரம்பிச்சிடுச்சு..

நான் Project Report-ஐ அன்னிக்கு காட்டலை..
ரெண்டு நாள் கழிச்சி தான் காட்டினேன்..

என் Project Report-ஐ பார்த்து
சுரேஷ் Stun ஆயிட்டான்..

பின்ன என்னோட Screen Shots தான்
எங்க H.O.D கேட்ட மாதிரி
Design., Design-ஆ இருந்ததே..!!

சுரேஷ் : என்னடா பண்ணினே..?

நான் : Microsoft Power Point
Use பண்ணி இந்த Screen Shots
Design பண்ணினேன்..

சுரேஷ் : அப்ப Project Report-ல
இருக்கிற Java Code..??

நான் : அதுக்கும்., இந்த
Screen Shots-க்கும் 5% கூட
சம்பந்தம் கிடையாது..

சுரேஷ் : எங்க Screen Shots எல்லாம்
ரொம்ப சாதாரணமா இருக்கு..,
உன்னுது மட்டும் ஜிகுஜிகுன்னு
இருக்கே.. ஒருவேளை H.O.D-க்கு
சந்தேகம் வந்துட்டா என்ன பண்ணுவே..??

நான் : ரொம்ப Simple..!
அவங்க பண்ணினது ஜாவா.,
நான் பண்ணினது ஜாவா++
சொல்லுவேன்...!!

சுரேஷ் : அடப்பாவி..!!

பின்குறிப்பு :

Project Result வந்தது..
ஹரி - 83 Marks.,
சுரேஷ் - 85 Marks..,
நான் - ??

அதை ஏன் கேட்கறீங்க..??
எனக்கு இப்ப அதை பத்தி
நினைச்சா கூட Feeling ஆகுது...

பின்ன..,
2 Mark-ல Centum-ஐ
மிஸ் பண்ணினா..
Feeling-ஆ இருக்காதா. .??
.
.

48 Comments:

ப.செல்வக்குமார் said...

///என்னுதுல " Venkat-னு " இருக்கும்..
( எப்புடி..!! Difference இருக்குல்ல.. ///
செம different ..!!

///அவங்க பண்ணினது ஜாவா.,
நான் பண்ணினது ஜாவா++
சொல்லுவேன்...!!///
VAS காரங்களோட திறமைய நெனச்சு இதுக்கே தலை சுத்துதா ..? இன்னும் நாங்க கண்டுபிடிச்ச Oracle ++ , VB ++ , .net ++ பத்தி சொன்ன என்ன ஆவீங்க ..??

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

JAVA-ன்னா என்னன்னே தெரியாத ஒருத்தர் HOD. அவர்தான் ப்ராஜெக்ட்டுக்கு மார்க் போடறார், அதுனால (விஷயம் தெரிஞ்ச) ஹரிக்கு 83, ஒண்ணுமே தெரியாத வெங்கட்டுக்கு 98. என்ன கொடுமை சார்இது?

வெங்கட் said...

@ செல்வா.,

// இன்னும் நாங்க கண்டுபிடிச்ச
Oracle ++ , VB ++ , .net ++
பத்தி சொன்னா என்ன ஆவீங்க ..?? //

போச்சுடா..,
VKS-ஐ சீண்டி விட்டுடீங்களே..

இனி நெட்ல எங்கயாச்சும் இருந்து
தப்பான ஒரு புரோகிராமை
காப்பி அடிச்சி எழுதி..
இதுல ஏழு தப்பு இருக்கு
அதை கண்டு பிடிங்கன்னு சொல்லுவாங்க..

அப்புறம் அதை கண்டுபிடிக்கறேன்னு
10 தப்போட ஒரு Answer வேற
சொல்லுவாங்க..

அப்புறம் அவங்களே கைதட்டி., பாராட்டி., அவார்டு குடுத்துப்பாங்க...

இந்த கொடுமையை வேற
நாம பார்க்கணுமே...!!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஒண்ணுமே தெரியாத வெங்கட்டுக்கு 98.
என்ன கொடுமை சார் இது? //

I Object this My Lord...

ஒண்ணுமே தெரியாதன்னு
எப்படி சொல்லலாம்...??!!

எனக்கு தான் எங்க HOD-க்கு
Java தெரியாதுன்னு நல்லா
தெரியுமே..!!

ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க..

சட்டம் நல்லா தெரிஞ்சவன்
வக்கீல்..

ஜட்ஜை நல்லா தெரிஞ்சவன்
நல்ல வக்கீல்..

ஜெகதீசன் said...

:)

LK said...

nee namma inamda

Madhavan said...

நீங்க வேணா வெளையாட்டா சொல்லிப்புட்டீங்க....
நா உண்மையிலே அப்படித்தான் பிராஜெக்டு செஞ்சேன்.'ஜாவா (ஜாவா ++)'க்கு பதிலா "c (c ++)"
என்னது.. மார்க்ஸ் எவ்ளோவா... உங்களைவிட ஜஸ்ட் 3 மார்க்குதான் குறைவு.. (ஆமாம் 'c', 'java ' விட 3 எழுத்து கம்மிதானே..)

வெங்கட் said...

@ LK.,

// nee namma inamda //

ஹி., ஹி., ஹி..!!

நல்லவேளை நமக்கும்
துணைக்கு ஆள் இருக்கு..

வெங்கட் said...

@ மாதவன்..,

Actually 5th செமஸ்டர்ல
எங்க Class-ல என்னை தவிர
மத்த எல்லோரும் " C " -ல
Mini Project பண்ணினாங்க..

அப்ப நான் மட்டும் தான் " C++ "
Mini Project பண்ணினேன்..
இது எங்க HOD-க்கு நல்லா
தெரியும்..

அதுவும் இல்லாம
நான் எதையுமே Different-ஆ தான்
செய்வேன்னு அவரை நம்ப
வெச்சி இருந்தேன்..

அதனால நான் JAVA ++
சொல்லி இருந்தாலும்..,
அவர் கண்டிப்பா நம்பி தான்
இருப்பாரு..

VELU.G said...

ஆஹா இந்த project work ரொம்ப நல்லாயிருக்கே

உங்க power(point)java++ எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்

ஹ ஹ ஹ ஹஹ ஹா

Sen22 said...

//" டேய்.., எனக்கு Java தான்
அரைகுறையா தெரியும் - ஆனா
நம்ம H.O.D பத்தி முழுசா தெரியும்..
அதனால Don't Worry-ன்னு..! "
சொல்லிட்டேன்..//

Superb...!!!! :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//JAVA-ன்னா என்னன்னே தெரியாத ஒருத்தர் HOD. அவர்தான் ப்ராஜெக்ட்டுக்கு மார்க் போடறார், அதுனால (விஷயம் தெரிஞ்ச) ஹரிக்கு 83, ஒண்ணுமே தெரியாத வெங்கட்டுக்கு 98. என்ன கொடுமை சார்இது?//

ஒருவேளை பெயில் ஆக்கிட்டா திரும்ப திரும்ப அரியர் எழுத வந்து தொல்லை கொடுப்பானே அப்டின்னு HOD நினைச்சிருப்பார்.

அருண் பிரசாத் said...

C++ மட்டும் எப்படி? அதுவும் JAVA ++ மாதிரிதான் செஞ்சிருப்பீரு

வெங்கட் said...

@ வேலு..,

// உங்க power(point) java++ எனக்கும்
கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் //

ஹி., ஹி., ஹி..

Fees : Rs 3000

வெறும் 3000 ரூபாயில
Java++ கத்துக்கலாமான்னு
கேட்காதீங்க..

எதையுமே கத்துக்காம..,
கத்துக்கிட்ட மாதிரி பில்டப்
குடுக்கறது எப்படின்னு தான்
நான் கத்து குடுப்பேன்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எங்க TERROR PANDIAN (VAS)?
நம்ம தல இப்படி ஒரு வழியில போய் ப்ராஜெக்ட் முடிச்சிட்டாறேன்னு வருத்தப் பட்டு வரலையோ?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஒருவேளை பெயில் ஆக்கிட்டா
திரும்ப திரும்ப அரியர் எழுத
வந்து தொல்லை கொடுப்பானே
அப்டின்னு HOD நினைச்சிருப்பார். //

அப்ப பாஸ் மட்டும் தானே
பண்ணி விட்டு இருக்கணும்..
98 Marks ஏன் போடறாரு..??!!

ஏன்னா..
நான் Viva- ல எங்க HOD-கிட்டேயும்.,
வந்த External Madam-கிட்டேயும்.,
நான் சுத்தின கலர் கலர் ரீலுக்கு
கிடைச்ச பரிசுங்க அந்த 98 Marks.

வெங்கட் said...

@ அருண்.,

// C++ மட்டும் எப்படி..?
அதுவும் JAVA ++ மாதிரிதான் செஞ்சிருப்பீரு //

யப்பா.. அது ஒண்ணு தாம்பா
நான் உருப்படியா பண்ணினேன்..
இப்படியெல்லாம் சொல்லி.,
அதையும் ரிப்பேர் ஆக்கிடாதீங்க..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆனா ஒண்ணு.......
நானும் வெங்கட்டும் ஒரு விஷயத்தில் ஒரே மாதிரிதான். ரெண்டு பேருக்கும் JAVA தெரியாது, ஒரே வித்தியாசம், அவர்கிட்ட certificate இருக்கு!

என்னது நானு யாரா? said...

எங்க தலைவர்க்கு தைரியம் ஜாஸ்தி. தெரிஞ்சிகோங்க. அந்த H.O.D இந்த பதிவு பார்கிற chance இருக்குன்னு தெரிஞ்சி கூட தன் சொந்த பேர்ல எழுதராரே! அதுவும் தன் போட்டோ வோட. இந்த தைரியம் நம் எதிர் கட்சியான VKS சேர்ந்த யாருக்காவது வருமா? என்று ஆணி தரமாக கேட்கிறேன்.

யாருப்பா அது? சோட கொடுங்கப்பா. தொண்ட காஞ்சிபோகுது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நான் Viva- ல எங்க HOD-கிட்டேயும்.,
வந்த External Madam-கிட்டேயும்.,
நான் சுத்தின கலர் கலர் ரீலுக்கு
கிடைச்ச பரிசுங்க அந்த 98 Marks. //

அப்போ விவா ஈஸ் தி சீக்ரெட் ஆப் வெங்கட் எனர்ஜி.

அனு said...

வெங்கட் அவரோட Projectஐ எடுத்துட்டு HOD ரூமுக்கு போறார்..

HOD(மனதுக்குள்): ஆஹா.. இவனா??!!

(FlashBack.. Snippets from போன வருஷம் வைவா..)

HOD: எந்த languageலப்பா project பண்ணியிருக்கே
வெங்: English..
HOD: English-ஆ???
வெங்:ஆமா சார்.. பாருங்க .. ஒரு வார்த்தைக் கூட தமிழ் கலக்கவே இல்ல..

HOD: முதல்ல உனக்கு கம்ப்யூட்டர்ல Programனா என்னன்னு தெரியுமா??
வெங்: என்ன சார்.. தினமும் Chat Program use பண்ணிட்டு இருக்கேன்..என்னைப் பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்களே...

HOD: இது என்னப்பா codeக்கு நடுவுல 'ஒன்னுமே புரியல உலகத்துல'ன்னு எழுதி வச்சிருக்கே??
வெங்: code நடுவுல அதை பற்றிய என்னோட comments போடனும்னு நீங்க தானே சார் சொன்னீங்க..

HOD (பாதி மயக்கத்துடன்): இதோ பாரு.. இது தான் உனக்கு last Warning!! இனிமேல் கம்ப்யூட்டர் Projectனு சொல்லிக்கிட்டு என் முன்னாடி வரக் கூடாது!!!

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

//எங்க தலைவர்க்கு தைரியம் ஜாஸ்தி//

புதுசா ஒரு ஆடுதானா வந்து தலைய காட்டுது, உடனே வெட்டாதீங்க. பொருமையா ஓடவிட்டு வெட்டினாதான் ருசியா இருக்கும்

அருண் பிரசாத் said...

///எங்களுக்கு Project-ஐ Demo
காட்ட வேண்டியதில்ல..
Project Report-ஐ வெச்சி
Explain பண்ணினா போதும்..//

Project Report-ஐயாவது சொந்தமா எழுதுனீங்களா? இல்லை அதையும் 3000 ரூபாய் கடைலியே டைப் பண்ணி கொடுத்துடாங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

PSV
//எங்க TERROR PANDIAN (VAS)?
நம்ம தல இப்படி ஒரு வழியில போய் ப்ராஜெக்ட் முடிச்சிட்டாறேன்னு வருத்தப் பட்டு வரலையோ?//

ஹெல்ல்ல்ல்லே.... இது தலைவனோட தனி திறமை.. இது பெரும பட வேண்ட்ய விஷயம்...இன்னும் ஒரு விஷயம் Java VAS கட்சி.... சூரியன் ஜவா (Sun Java) கேட்டு இருப்பிங்கலே......

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//சட்டம் நல்லா தெரிஞ்சவன்
வக்கீல்..

ஜட்ஜை நல்லா தெரிஞ்சவன்
நல்ல வக்கீல்..//

வெங்கட்ஐ நல்ல தெரிஞ்சவன் நல்ல் நீதிபதி....

வெங்கட் : நடமாடும் இந்திய அரசியல் சட்டம்

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா என்னங்க இது உண்மையதான் சொல்றீங்களா . எங்களை ரொம்ப பீல் பண்ண வச்சுட்டிங்க போங்க .

அனு said...

இந்த வருஷ வைவா..

HOD: உனக்கு போன தடவையே warning குடுத்தேனே... திரும்பவும் வந்திருக்கே??
வெங் (ஸ்டைலாக): சார்ர்.. நான் ஒரு Java++ Programmer.. I only care about Errors , not Warnings...
HOD (மனதுக்குள்): ஆரம்பிச்சுட்டான்ய்யா.. ஆரம்பிச்சிடான்..

வெங்: சார், நான் எப்படியாவது இந்த தடவை centum வாங்கிடனும்னு எங்க வீட்ல சொல்லியிருக்காங்க..
HOD: பரவாயில்லயே.. அட்லீஸ்ட் centumன்றதாவது என்னன்னு தெரிஞ்சிருக்கே..
வெங்: ஏக்கர்ல 100ல ஒரு பகுதி ஒரு சென்ட்.. அதே மாதிரி நூறுல ஒரு மார்க் centum.. கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியா வருதில்ல!!!

இதைக் கேட்ட உடனே வெங்கட் projectக்கு HOD போட்ட மார்க் centumக்கு ரெண்டு நம்பர் தான் கம்மி.. 100ல வர்ற '10' நம்பர்ஸ் மட்டும் தான் மிஸ்ஸிங்... கிடைத்தது முட்டை மட்டுமே...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//புதுசா ஒரு ஆடுதானா வந்து தலைய காட்டுது, உடனே வெட்டாதீங்க. பொருமையா ஓடவிட்டு வெட்டினாதான் ருசியா இருக்கும்//

யெலேய் நல்லா பாரு அவரு VAS சப்போர்ட்... VKS இல்ல... VASல சிங்கம் மட்டும்தன்...எட்ட நின்னு வேடிக்க பாரு.. கிட்ட வந்தா மக்கள் உன்ன வேடிக்கை பாக்க வேண்டி வரும்.

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நானும் வெங்கட்டும் ஒரு விஷயத்தில்
ஒரே மாதிரிதான். ரெண்டு பேருக்கும்
JAVA தெரியாது, //

என்ன இப்படி சொல்லிட்டீங்க..
JAVA பத்தி சொல்றேன் Note
பண்ணிக்கோங்க..

1.JAVA இந்தோனேஷியால இருக்குற
ஒரு தீவு.,

2. JAVA தீவு தான் உலகத்திலேயே
13வது பெரிய தீவு.,

3. உலகத்திலேயே அதிக மக்கள் தொகை
கொண்ட தீவும் JAVA தான்..

4. இந்தோனேஷியாவோட மக்கள் தொகைல
62% JAVA தீவுல தான் இருக்காங்க..

5. JAVA தீவுல ஏராளமான எரிமலைகள்
இருக்கு..

இப்ப சொல்லுங்க.. எனக்கா JAVA பத்தி
தெரியாது..??!!

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// எங்க தலைவர்க்கு தைரியம் ஜாஸ்தி.
தெரிஞ்சிகோங்க. //

ம்ம்.. Correct..

அது சரி.,
நீங்க எப்போ VAS-ல சேர்ந்தீங்க..?

VATE ( Venkatai Aatharippor Talent Exam )
எழுதி பாஸ் பண்ணிட்டீங்களா..??

வெங்கட் said...

@ அனு.,

Computer Lab-ல் அனுவும்.,
அவங்க HOD-யும்..

அனு : எனக்கு சன் Tv வரலை சார்..

HOD : என்ன சன் Tv-யா..?

அனு : நீங்க தானே சார் Program
எல்லாம் கரெக்டா வருதான்னு
பாருங்கன்னு சொன்னீங்க..!!!

HOD : ஐயோ..!! அது சன் Tv Program
இல்லம்மா... " C " Program..

அனு : அந்த Program கூட
என் Tv-ல வரலை சார்..

HOD : என்னாது இது உனக்கு Tv-யா..?
இதுக்கு பேரு Monitor-ம்மா..

அனு : ஓ.. இங்கே அப்படிதான்
சொல்லுவீங்களா சார்..
எங்க வீட்ல நாங்க Tv-ன்னு
தான் சொல்லுவோம்..

HOD : கஷ்டம்டா சாமி..

அனு : சார்., சார்.. அப்புறம் இந்த
Type Writing Machine-ல பாருங்களேன்..

HOD : ஏம்மா படுத்தற..
அது பேரு Key Board-மா..

அனு : சரி சார் அப்படியே வெச்சுக்கோங்க
இதுல பாருங்க A, B, C எல்லாம்
வரிசையாவே இல்ல.. தாறுமாறா இருக்கு..

HOD : நீ இப்படியே பேசிட்டு இருந்தே..
நான் தாறுமாறு ஆயிடுவேன்..

HOD வெறியாகிறார்....

" டேய்.. யாருடா இந்த பொண்ணுக்கு
காலேஜ்ல Admission குடுத்தது..??!! "

என்னது நானு யாரா? said...

என்ன தல! அதற்குள்ள மறந்திட்டீங்க!

Last Night உங்க கிட்ட போன் பண்ணி, உங்க கட்சியில சேரணும்னு இருக்கேன்னு சொன்னேன். அதுக்கு VATE ( Venkatai Aatharippor Talent Exam )
எழுதி பாஸ் பண்ணனும்னு சொன்னீங்க.

"ஐயா! துரை! நான் ஆறாம் கிலாஸ் பெயிலுங்க. என்ன போய் பரிட்சை எல்லாம் எழுத சொல்றீங்களேன்னு" கேட்டேன்.

அதுக்கு, "சரி அப்படின்னா ஒரு வழி இருக்கு. ஒரு 300 ரூபாய் செலவு ஆகுமுன்னு" சொன்னீங்க

"தல! இப்போ என் கிட்ட 150 ரூபா தான் இருக்குன்னு" சொன்னப்ப

"சரி! அந்த exam எழுதி பாஸ் பண்ணதா certificate தர்றேன். மீதி பணத்த கூடிய சீக்கிரம் தந்திடனும்னு சொன்னீங்களே, மறந்திட்டீங்களா?"

நான் இத பெரிசு பண்ணல. தலைக்கு Selective Amnetia ன்னு வெளியில தெரிஞ்ச நம்ம கட்சிக்கு தானே அசிங்கம். நீங்களும் இத சமாளிச்சி ஒரு மறுப்பு அறிக்கை விடுங்க. இல்லன்னா VKS ஆளூங்க நம்பளை காலி செய்ஞ்சிடுவாங்க

ரசிகன் said...

ம்ம்ம்.. இந்த பதிவுல‌
நிறைய கத்துகிட்டேன்..

1. HOD க்கு தெரியாத languageல‌
project பண்ணணும்..
2.நமக்கு ஜாவா தெரியுதோ இல்லயோ
HOD க்கு நம்மை நல்லா தெரியணும்
3.Java ++ மாதிரி on the spot சொல்லி சமாளிக்க தெரியணும்...

இந்த‌ ப‌திவை கொஞ்ச‌ வ‌ருஷ‌ம்
முன்னாடி ப‌டிச்சிருக்க‌ணும்..
இப்பொ கண் கெட்ட பிறகு சூர்ய
நமஸ்காரம் பண்ணி என்ன பண்ண...

வெங்கட் said...

@ அனு.,

நான் என் Projectஐ எடுத்துட்டு
HOD ரூமுக்கு போறேன்...

HOD : நீ இந்த Project-ஐ காப்பி
அடிச்சி தானே எழுதினே..??

நான் : அது வந்து..

HOD : அதுவும் நீ Anu-வை பார்த்து
காப்பி அடிச்சி இருக்கே..

நான் : சார்.... எப்படி சார்.....?

HOD : அதான் Project Report-ஐ
பார்த்தாலே தெரியுதே...
எல்லா இடத்துலயும்
Sun Microsystem's JAVA-ன்னு
எழுதறதுக்கு பதிலா
Sun Tv Network JAVA-ன்னு எழுதி இருக்கே..

வெங்கட் said...

@ அருண்..,

// Project Report-ஐயாவது சொந்தமா எழுதுனீங்களா..?
இல்லை அதையும் 3000 ரூபாய் கடைலியே
டைப் பண்ணி கொடுத்துடாங்களா..? //

சே.. சே.. சொந்தமா தான் எழுதினேன்..

இப்படி எல்லாம் ரீல் விட
எங்க மனசாட்சி இடம்
கொடுக்காதுன்னு சொல்லிட்டாங்க..

ஆமா மனசாட்சின்னா என்ன..??

வெங்கட் said...

@ டெரர்..,

// இன்னும் ஒரு விஷயம் Java VAS கட்சி....
சூரியன் ஜாவா (Sun Java) கேட்டு இருப்பிங்கலே.. //

ஆஹா.., Super..
நீங்க கலக்குங்க டெரர்..!!
உங்களை நினைச்சி VAS பெருமை படுது..

ப.செல்வக்குமார் said...

//இப்ப சொல்லுங்க.. எனக்கா JAVA பத்தி
தெரியாது..??!!

///
இதுக்கு மேலயும் VAS காரங்களுக்கு JAVA தெரியாதுன்னு சொன்னா
நாங்க "VASம் JAVAவும் அப்படின்னு புத்தகம் எழுதவேண்டி இருக்கும் ..!!

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

இதுக்கு தான் VATE Exam-ல பேப்பர் Chase
பண்ணி Pass பண்ண கூடாதுங்கறது...

பாருங்க முதல் ரெண்டு Rules-ஐயே
நீங்க Follow பண்ணலை..

Rule No 1: தலைவரை கலாய்க்க கூடாது..

// தலைக்கு Selective Amnetia ன்னு வெளியில
தெரிஞ்சா நம்ம கட்சிக்கு தானே அசிங்கம். //

Rule No 2: VKS-ஐ பார்த்து பயப்படக்கூடாது..
இல்ல Atleast பயப்படாத மாதிரியாவது நடிக்கணும்..

// VKS ஆளூங்க நம்பளை காலி செய்ஞ்சிடுவாங்க //

ஏம்பா.. கட்சியில இருக்கிற மத்த சீனியர்ஸ்
இவருக்கு கொஞ்சம் நம்ம Rules &
கொள்கைகளை Explain பண்ணுங்கப்பா..

ப.செல்வக்குமார் said...

//ஏம்பா.. கட்சியில இருக்கிற மத்த சீனியர்ஸ்
இவருக்கு கொஞ்சம் நம்ம Rules &
கொள்கைகளை Explain பண்ணுங்கப்பா..///
இதோ .. நான் சொல்லலாம்னு இருந்தேன் ..

@என்னது நானு யாரா.,
//"சரி அப்படின்னா ஒரு வழி இருக்கு. ஒரு 300 ரூபாய் செலவு ஆகுமுன்னு"///
இப்படியெல்லாம் பொய் சொல்லக்கூடாது .. ஏன்னா நம்ம VAS ல தகுதியுல்லோருக்கு மட்டுமே இடம். பணம் கொடுத்தா கலெக்டர் சீட் கூட வாங்கிடலாம். ஆனா திறமை இருந்தா மட்டுமே VAS ல சீட் கெடைக்கும்.
அப்புறம் VKS காரங்க ஏதாவது நல்ல விஷயம் சொன்னா பாராட்டலாம். ஆனா அந்த மாதிரி எதுவும் நடக்காது .. அப்புறம் இன்னும் இருக்கு .. இருங்க வரேன் ..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat
இப்ப சொல்லுங்க.. எனக்கா JAVA பத்தி
தெரியாது..??!!

//

அடக் கொடுமையே! அப்ப, இந்த JAVA பத்திதான் ப்ராஜெக்ட் செஞ்சீங்களா? இதுக்குத் தான் 98 மார்க் கொடுத்தாங்களா? அப்டீன்னா, நம்ம டீம்ல, நீங்க, நான்,HOD & External Madam மொத்தம் நாலு பேரு இருக்கோம், ஓகே.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//HOD : அதுவும் நீ Anu-வை பார்த்து
காப்பி அடிச்சி இருக்கே.. //

இப்போ புரியுது, எங்க சங்கத் தலைவியைப் பாத்து காப்பி அடிச்சதுனாலதான் நீங்க 98 மார்க் வாங்கினீங்கன்னு

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ம்ம்ம்.. இந்த பதிவுல‌
நிறைய கத்துகிட்டேன்.. //

// இந்த‌ ப‌திவை கொஞ்ச‌ வ‌ருஷ‌ம்
முன்னாடி ப‌டிச்சிருக்க‌ணும்..
இப்பொ கண் கெட்ட பிறகு சூர்ய
நமஸ்காரம் பண்ணி என்ன பண்ண... //

நான் ஒரு கணக்கு சொல்றேன்..
யாருக்காவது புரியுதா பாருங்க..

5 - 1 = 4

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

நானும் ஜாவா கத்துக்கப் போறேன் - ஆமா

நீ எழுதுனது ஃபுல்லா படிச்சேன் - மறுமொழிகள் அனைத்தும் ரசிச்சுப் படிச்சேன் - ஆஹா ஆஹா - வி.வி.சி

ம்ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

Anonymous said...

post-a vida ANU akka-va kalaaichathu nallarukku

john goodman said...

//அனு : எனக்கு சன் Tv வரலை சார்..

HOD : என்ன சன் Tv-யா..?//

//அனு : அந்த Program கூட
என் Tv-ல வரலை சார்..//

அனு : சார்., சார்.. அப்புறம் இந்த
Type Writing Machine-ல பாருங்களேன்..

HOD : ஏம்மா படுத்தற..
அது பேரு Key Board-மா..

//அனு : சரி சார் அப்படியே வெச்சுக்கோங்க
இதுல பாருங்க A, B, C எல்லாம்
வரிசையாவே இல்ல.. தாறுமாறா இருக்கு..

HOD : நீ இப்படியே பேசிட்டு இருந்தே..
நான் தாறுமாறு ஆயிடுவேன்..//

LMAO :))))))))))))))))))
thaaru-maaru semma

அனு said...

//post-a vida ANU akka-va kalaaichathu nallarukku//

Anony-க்கு சந்தோஷத்த பாரு!!

@john goodman

//LMAO :))))))))))))))))))
thaaru-maaru semma//

ஏன் இப்படி??
ஒரு அப்பாவி கலாய்க்கப் படுவதைப் பார்த்து இவ்வளவு ஆனந்தமா?
கடவுளே!! இதை தட்டிக் கேட்க யாருமே இல்லயா???

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//@john goodman

//LMAO :))))))))))))))))))
thaaru-maaru semma//

ஏன் இப்படி??
ஒரு அப்பாவி கலாய்க்கப் படுவதைப் பார்த்து இவ்வளவு ஆனந்தமா?
கடவுளே!! இதை தட்டிக் கேட்க யாருமே இல்லயா??? //

அதான? Goodman-ன்னு பேர் வச்சுகிட்டு bad words சொல்றாரே?

அதைவிட அனோனி பண்றது கொடுமை. அதெப்படி அனுவை அக்கான்னு சொல்லலாம்?

Anonymous said...

appa aun aunty-nu sollalaama