சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 March 2010

" Jackpot " தந்த அதிர்ச்சி..!!




















" பொண்ணுங்கல்லாம் புத்திசாலிங்கப்பா "
என்ற என் நினைப்பில்
மண் அள்ளிபோட்டது
போன வார
Jackpot நிகழ்ச்சி ( ஜெயா Tv )

ரெண்டு Team..,
இந்த Team-ல நாலு பொண்ணுங்க.,
அந்த Team-ல நாலு பொண்ணுங்க..,
எல்லோருமே College படிக்கிறவங்க..

முதல் Team-ஐ பார்த்து
குஷ்பு ஒரு கேள்வி கேட்டாங்க..

" பதவியில் இருக்கும் போதே இறந்த
முதல் இந்திய President யார்..? "

அவங்க சொன்ன பதில்...

" இந்திரா காந்தி..! "

குஷ்புக்கு அதிர்ச்சி..,
( எல்லோருக்கும் தான் )

உங்களுக்காவது தெரியுமான்னு
ரெண்டாவது Team-ஐ கேட்டாங்க..,

அந்த அறிவு ஜீவிங்க சொன்ன பதில்..,

" நேரு..! "

பதில் தெரியலைன்னு சொல்லி
இருந்தாகூட கொஞ்சம் Decent-ஆ
இருந்து இருக்கும்..

( சரியான பதில் " ஜாகீர் ஹுசைன் " )

" இந்த காலத்து பொண்ணுங்களுக்கு
ஜனாதிபதிக்கும்., பிரதமருக்கும் கூட
வித்தியாசம் தெரியல..
அப்படி என்னத்த படிக்கிறாங்களோ..?! "

இது.., என் பாட்டி அடித்த Comment.

பின் குறிப்பு :
அந்த கேள்விக்கான பதிலை
என் பாட்டி சரியாக சொன்னார்..
.
.

18 Comments:

Anonymous said...

height of the comedy:)
Samora

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hi venkat,

innikkuthaan unga blogs fullaa padichen. mikavum arumai. kalakkureenga.

inimel regularaa ennoda comment varum

வெங்கட் said...

Samora..,
இதை பெண்களை
கிண்டல் பண்ணவோ.,
ஜோக் அடிக்கவோ
எழுதவில்லை..,
மனசு பொறுக்கவில்லை..

வெங்கட் said...

ரமேஷ்..,
நன்றி..,
வருக., வருக.,
Regular-ஆ Comment எழுத
போறீங்களா..?
அப்ப நீங்க சத்தியமா ரொம்ப
நல்லவர் தான்..

Tamilan said...

தங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.

ரொம்பவே நல்லா இருக்கு!

வாழ்த்துக்கள்!!

வெங்கட் said...

தமிழன்..,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி..
தொடர்ந்து படியுங்கள்...

அன்புடன் அருணா said...

அட!நானும் பார்த்து ஷாக்!!!

வெங்கட் said...

அருணா மேடம்.,
வாங்க..,
நீங்களாவது Support-க்கு
வந்தீங்களே..,
நீங்களும் பார்த்தீங்கல்ல..
என்ன சொல்லுறது..?

பொன் மாலை பொழுது said...

சேனல்களின் T R P உயர்ந்துள்ளது இவர்கள் போன்றவர்களால்தனே!
அது போதாதா??

Unknown said...

இதை படிக்கும்போது வைரமுத்துவின் வார்த்தை ஒன்று நினைவுக்கு வருகிறது.

"இன்றைய கல்வி முறை கையெழுத்து போட தெரிந்த மரங்களைத்தான் உருவாக்குகிறது. விதைகளை போல் தூவப் படவேண்டிய அறிவு இங்கு ஆனியைப் போல் அறையப்படுகிறது.
பல இளம் பெண்கள் புத்தகச் சுமை பொருக்காமல் பூப்பெய்தி விட்டார்கள்."

வெங்கட் நான் சொன்னது சரியா...?

வெங்கட் said...

கக்கு-மாணிக்கம்..,
T R P உயர்ந்து உள்ளது தான்..,
அது மட்டும் போதுமா சார்..
ஏன் இந்த நிலை..?

வெங்கட் said...

ஜனா..,
ரொம்ப சரி..,

" கையெழுத்து போட தெரிந்த
மரங்கள்..! "
மிக சரியாய்
கவிஞர் வைரமுத்துவின்
வரிகளை நினைவுபடுத்தினாய்..

நல்லதந்தி said...

//( சரியான பதில் " ஜாகீர் ஹுசைன் " )//

ஜாகிர் ஹுசைன் பதவியில் இருக்கும் போதே இறந்தாரான்னு எனக்குத் தெரியாது. ஆனா எனக்குத் தெரிஞ்சு பதவியில் இருக்கும் போதே இறந்த
இந்திய President ”பக்ருதீன் அலி அகமது” :))

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

நானும் நல்லவன் எல்லாத்துக்கும் கமெண்டு போடறேன் இல்ல -

இம்மாதிரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கெல்லாம் வருத்தப் படக் கூடாது - லூஸ்ல வுட்டுடணும் - பாவம் என்ன மன நிலையிலே சொன்னாங்களோ - பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாமல் சொல்லி இருக்க மாட்டார்கள். இம்மாதிரி நேரங்களில் சடாரென தவறான சிந்தனைகள் வரும். ஒரு அணி சிந்தித்த திசையிலேயே மற்ற அணியும் செல்வது தவிர்க்க இயலாது. ம்ம்ம்ம்ம் இருப்பினும் மானத்த வாங்கிட்டாங்க இல்லையா

வெங்கட் said...

நல்லதந்தி..,
" ஜாகிர் ஹுசைன் " என்பது சரியான
பதிலென்று Jackpot நிகழ்ச்சியில்
கூறினார்கள்..

வெங்கட் said...

சீனா சார்..,
நீங்க எப்பவும் நல்லவர்தான்..

அந்த கேள்வி சடாரென
கேட்கப்படவில்லை..
கேள்வி தாள் கொடுத்து
30 வினாடிகள் கேள்விகளை
படிக்க நேரமும் கொடுத்து..
அதன் பிறகு கேட்கப்பட்ட
கேள்வி அது...

நல்லதந்தி said...

//தேர்தலில் இ.காங்கிரஸ் வெற்றி பெறுவது சந்தேகம் என்பதைப் புரிந்து கொண்ட சஞ்சய் காந்தி, "தேர்தலை ரத்து செய்து விடுங்கள்" என்று இந்திரா காந்தியிடம் வற்புறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி அதற்கு சம்மதிக்கவில்லை. "நெருக்கடி நிலையினால் ஏற்கனவே நமக்கு கெட்ட பெயர். அப்படி இருக்க தேர்தலை ரத்து செய்தால், அது நமக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்தலை ரத்து செய்யமாட்டேன்" என்று கூறிவிட்டார். தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும்போது, 11_2_1977_ல் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். (தேர்தலை தள்ளிப்போடும்படி இந்திரா காந்தி வற்புறுத்தியதாகவும், அந்த அதிர்ச்சியால் ஜனாதிபதி மரணம் அடைந்ததாகவும் பின்னர் சிலர் குற்றம் சாட்டினர். ஆனால் அது உண்மை அல்ல என்று இந்திரா மறுத்தார்.) பக்ருதீன் அலி அகமதுவுக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஜாட்டி, தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றார்.//

http://www.maalaimalar.com/2009/08/16132448/indira-9.html
மேலே உள்ள link உங்கள் பார்வைக்கு, தொலைக் காட்சிகளில் குவிஸ் நிகழ்ச்சிகள் எந்த இலட்சணத்தில் தயாரிக்கப் படுகினறன, என்பது இதில் இருந்து தெரிகிறதல்லவா?

வெங்கட் said...

நல்லதந்தி சார்..,
" ஜாகீர் ஹுசைன் " என்பது சரியான
பதில்தான்.. நான் என்னிடம் உள்ள
GK Book-ஐ Refer செய்தேன்..

ஜாகீர் ஹுசைன் இந்தியாவின்
மூன்றாவது ஜனாதிபதி.
அவர் May 13 1967 - May 3 1969
வரை பதவியில் இருந்து இருக்கிறார்.
1969 இறந்துவிட்டார்.

அவருக்கு பிறகு V.V.கிரி தற்காலிக
ஜனாதிபதியாக ( May 3 1969 - July 20 1969 )
இருந்து இருக்கிறார்..
பிறகு M.ஹிதயதுல்லா ( July 20 - Aug 24 1969 )
தற்காலிக ஜனாதிபதியாக இருந்து இருக்கிறார்..

பிறகு V.V.கிரி ஜனாதிபதியாக
Aug 24 1969 முதல் Aug 24 1974 வரை
இருந்து இருக்கிறார்.

பக்ருதீன் அலி அஹமத் அவர்களும்
பதவியில் இருக்கும் போதே இறந்து
இருக்கிறார்..
ஆனால் முதலில் எனும் போது
" ஜாகீர் ஹுசைன் " என்பது சரி..