சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 March 2010

என் திருமணத்தில் சில சுவையான நிகழ்ச்சிகள்..


















இன்னிக்கு என் திருமண நாள்.,
இதுவரை வாழ்த்திய.,
இனிமேல் வாழ்த்தப்போகும்
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி..

என் திருமணத்தில் நடந்த
சில சுவையான நிகழ்ச்சிகள்..

No : 1

எங்க அப்பா ஒரு
அரசியல் பிரமுகர்..

என் கல்யாணத்துக்கு
நாலு வட்ட., மாவட்ட
செயலாளர்கள் வந்ததிருந்தாங்க..

அடுத்த ரெண்டு மாசத்தில
வந்த தேர்தல்ல நின்னு
MLA ஆயிட்டாங்க..

என் பையன் கல்யாணத்துக்கு
வந்த நேரம்..,
அவங்க இப்ப MLA ஆயிட்டாங்கன்னு
எங்கப்பா பல பேருகிட்ட
Election முடிஞ்சதுக்கு பிறகு
சொன்னது உச்சபட்ச காமெடி..


No : 2

ஆர்கெஸ்ட்ராவுல மணமக்கள்
பாடுவாங்கன்னு அறிவிச்சாங்க..

ஏற்கனவே
உன்னி கிருஷ்ணன்., ஹரிஹரன்
இவங்களுக்கெல்லாம் Competition
குடுக்ககூடாதுன்னு தான்
நான் பாடுறது இல்லை.

" வேண்டாம்னு " சொல்லி
பார்த்தேன்..

" உன்கிட்ட Dummy Mike
தான் இருக்கும்..,
அவங்க ஆளுங்க பின்னாடி
இருந்து பாடுவாங்க..,
நீ சும்மா வாயசைச்சா
போதும்னாங்க..! "

ஓ.. அப்படியான்னு
Mike-ஐ கையில வாங்கி
" Mike மோகன் " Range-க்கு
கலக்கிட்டேன்..

No: 3

மணமகன் அறை
சூப்பரா இருந்தது..,
Split A.C.,
குஷன் Bed..,
ஆஹா..,

Photo Session முடிஞ்சி
Room-க்கு போனா..,
என் சகோதரிகள் படை
ஆக்கிரமிப்பு நடத்தியிருந்தது..

வேற வழி இல்லாம
Guest Room-ல நானும்.,
என் நண்பர்களும் தங்கினோம்..

மணமகன் அறையில தங்காத
ஒரே மணமகன்
நானாத்தான் இருப்பேன்.

No : 4

தாலி கட்டும்போது மாப்பிள்ளை
கை நடுங்குதே ஏன்..?
கூட இருக்கிற அக்கா., தங்கச்சிங்க
சும்மா இருந்தா தானே..!

பார்த்துடா..,
கரெக்டா மூணு முடிச்சி போடணும்..!
கை நடுங்கும் ஜாக்ரதை..,
இப்படி Running Commentry குடுத்தே
ஒரு வழி பண்ணிடுவாங்க..

ம்ம்.. எனக்கும் கை நடுங்கிச்சி.

No : 5

எங்களுக்கு கல்யாண Gift-ஆ
12 Wall Clocks.,
9 Night Lamps. வந்தது..,
அதை என்ன பண்ணுறது..?!?
.
.

9 Comments:

ரசிகன் said...

No 1: Timing miss ஆகுதே தலைவரே.. உங்க marriage நடந்து, election நடந்து counting நடந்து, result சொன்னதுக்கு அப்புறம் உங்க அப்பா சொன்ன comment.எப்படி திருமணத்தில் நடந்த
சில சுவையான நிகழ்ச்சிகள்ல ஒண்ணாச்சு?

No3: ஒரே மணமகன்னெல்லாம் அவசரபட்டு அறிவிக்கப்படாது... 4 பேர் கிட்ட கருத்துக்கணிப்பு நடத்தி பாருங்க‌

No5: அடுத்து வந்த 12+9கல்யாணங்களுக்கு என்ன Gift வாங்கலாம்ன்ற confusion இல்லயே..

வெங்கட் said...

ரசிகன்..,
ஆமா..,
Timing Miss ஆயிடுச்சி..
அந்த நிகழ்ச்சி என்
திருமணத்தில் நடக்கவில்லை.
அதற்கு பிறகு ரெண்டு மாதம்
கழித்து நடந்தது..

அந்த நிகழ்ச்சி என் திருமணத்தோடு
சம்பந்தப்பட்டது என்பதற்காக..
அதை எழுதினேன்..

Anonymous said...

there is no special gifts?

வெங்கட் said...

பெயரில்லா..
நிறைய இருந்ததே..
நண்பர்கள் பரிசளித்தார்கள்.
1. Panasonic 3 in 1 ( Imported )
2. Samsung DVD Player
3. Titan Watch from my Sister
4. Gold Braselet from Appa's Friend
5. ரொமான்ஸ் ரகசியங்கள் ( Vikadan Publications )
etc..

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் - ஆஸ்திக்கு இரண்டெனில் ஆசைக்கு ??? - 2011 ல் ஒரு அருமை மகள் பிறக்க நல்வாழ்த்துகள் -

ஆமா மணநாள்னா சேலத்துக்குக் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வைக்கக் கூடாதா - வந்திருப்போம்ல

வெங்கட் said...

சீனா சார்..,
வாழ்த்துக்கு நன்றி..,
மகள் இல்லையே என்ற
குறை எனக்கு எப்போதும்
உண்டு..,
அதுக்கு இப்போ வாய்ப்பில்லை..
புரிஞ்சிக்கிடீங்களா..?

OK.. அடுத்த திருமண நாளை
Grand-ஆ கொண்டாடிடலாம்..

தக்குடு said...

hahahaha...:) LOL . nice post venkat

வெங்கட் said...

நன்றி தக்குடுபாண்டி..
அதென்ன உங்க Profile-ல
ஒட்டகம் மேய்க்கிற வேலைன்னு
போட்டு இருக்கீங்க..
பெரிய ரவுசு பார்டியா இருப்பீங்க
போல..

Madhavan Srinivasagopalan said...

//9 Night Lamps. வந்தது..,//

பல்புடோய்.. பல்பு..