சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 March 2010

கணவனை பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம்..!


இது நல்ல பழக்கமா..?
கெட்ட பழக்கமா..?

அவங்க புருஷன்.., அவங்க எப்படி
வேணாலும் கூப்பிடலாம்..,
அது அவங்க இஷ்டம்...
அதை பத்தி நாம என்ன கேக்கறது..?!!

அதனால அந்த பழக்கம் எப்ப
ஆரம்பிச்சிருக்கும்னு..?
ஒரு சின்ன ஆராய்ச்சி மட்டும்
பண்ணலாம்..

நீங்கள்லாம்
" கந்தன் கருணை " படம்
பார்த்து இருப்பீங்க..

அந்த படத்துல தான்
நம்ம ஆராய்ச்சி தொடங்குது...

அந்த படத்தில
" திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
முருகான்னு.. " ஒரு பாட்டு வரும்ல..

அந்த பாட்டை பாடுறது யாரு..?

" K.R.விஜயாவும்., ஜெயலலிதாவும் "

அட அது இல்லங்க... படத்துல
அவங்க யாரு..?

" தெய்வானையும்., வள்ளியும்..! "

ம்ம்.. அப்படி வாங்க வழிக்கு..

அப்ப கணவனை பெயர் சொல்லி
அழைக்கும் பழக்கம் முருகன் சாமி
காலத்துல இருந்தே இருக்குன்னு
இப்ப புரியுதா..?!!


வெயிட்., வெயிட்., வெயிட்..

திருவிளையாடல் படத்துல தாட்சாயினி
" ஈசனே... சக்தி இல்லயேல் சிவம்
இல்லை "னு வாதாடுவாங்களே..

அப்ப இந்த பழக்கம்
முருகரோட அப்பா காலத்துல
இருந்தே இருக்கோ..?!!

.
.

10 Comments:

குப்ஸ் said...

கருத்தைவிட கவிதை அருமை.... ;)

ரசிகன் said...

சரிதானுங்க.. திருவிளையாடல்லயே தாட்சாயினி "ஈசனே... சக்தி இல்லயேல் சிவம் இல்லை "னு
வாதாடுவாங்க.. So இந்த பழக்கம் முருகரோட அப்பா காலத்துல இருந்தே இருக்கு.. ஆனா இந்த ஆராய்ச்சிக்காகவெல்லாம் வெங்கட்ராமன் சார் தன்னோட‌ நோபல் பரிச வெங்கட் சாருக்கு விட்டுதர மாட்டாரு. வேணா sachinகு முன்னாடி அண்ணனுக்கு தான் பாரதரத்னா தரணும்னு போராட்டம் பண்ணவா?

வெங்கட் said...

குப்ஸ்..,
என்னது.., கவிதையா..?
குழப்பறங்களே முருகா..!

sarvan said...

இந்த இடுகையை பார்த்தவுடன் ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது!
பேரன்: பாட்டி தாத்தாவோட பேர் என்ன?
பாட்டி: ஐயோ, நான் சொல்ல மாட்டேன்.
பேரன்: ப்ளீஸ்! சொல்லு பாட்டி
பாட்டி: இந்த கோயில்லேலாம் அடிப்பாங்கல்ல
பேரன்: ஓ! மணியா?
பாட்டி: ஆமா அந்த நாய அப்படித்தான் கூப்புடுவாங்க!:)

வெங்கட் said...

ரசிகன்..,
பாரத ரத்னாவெல்லாம்
வேணாம்..
உங்க ஆதரவுதான் எனக்கு
பெரிய விருதே..
தமிழ்மணத்திலயும்.,
தமிலீஷ்லயும் மறக்காம
ஓட்டு போடுங்க..
அது போதும்..

வெங்கட் said...

சரவண்..,
மிக அழகான.,
பொருத்தமான Joke..
ரசித்து சிரித்தேன்..

Anonymous said...

நல்லா யோசிகிறீங்க. வாழ்த்துகள்.. தொடர்ந்து இப்படி கடிங்க...வெளங்கீரும்

Anonymous said...

பாராட்டுக்கள் - பெற்றுக்கொள்ள..!
குட்டுக்கள் - கற்றுக்கொள்ள..!
இங்கே கொஞ்சம் மண்டைய காட்டுங்கள்.

cheena (சீனா) said...

பாராட்டுகள் - குட்டுகள்னு சொல்லனூம் - தேவை இல்லாம க் போட வேண்டாம் - நீக்கிடலாம்.

அப்புறம் பேரெல்லாம் சொல்லலாம் தப்பில்ல -

வெங்கட் said...

சீனா சார்..,
" க் " எடுத்திட்டேன்..,
பேரு சொல்லுறது தப்புன்னு
நாம சொல்லவே இல்லையே..!
இருந்தாலும்.,
தப்பில்லைன்னு நீங்களே
சொல்லிட்டீங்க.., அப்ப சரி..