Foreign Coins Collect பண்றது என் Hobby..
கொஞ்சம் கஷ்டமான Hobby-யும் கூட..,
என் நண்பர்கள் யாராவது வெளிநாட்ல
இருந்து வந்தா முதல் வேலையா
ஒரு Coin கேட்டு வாங்கி வெச்சிப்பேன்...
இப்படி 15 வருஷமா கஷ்டப்பட்டு
28 Countries Coins தான் சேர்க்க முடிஞ்சது.
என்ன பண்ண...?
என் நண்பர்கள் துபாய்., அமெரிக்கா.,
சிங்கப்பூர்., மலேசியான்னு சுத்தி சுத்தி.,
ஒரே ஏரியாவுல இருக்காங்களே...!!
சீக்கிரம் Transfer வாங்கிட்டு என் Collection-ல
இல்லாத Country-க்கு போற வழிய
பாருங்கப்பா...!!
நேத்து எனக்கு ஒரு Surprise..,
எங்கிட்ட இல்லாத 10 Countries Coins
பார்சல்ல வந்தது.., Kuwait-ல இருந்து...
அந்த பார்சலை அனுப்பிய அன்பு உள்ளங்கள்..,
சித்ரா அக்காவும்., அவங்க கணவரும்..
" கும்பிட போன தெய்வம்..,
வீட்டுக்கே வந்து பிரசாதம் தந்த
மாதிரி சந்தோஷமா இருந்தது...!! "
என் Blog மூலமா தான் சித்ரா அக்கா
எனக்கு அறிமுகமானாங்க்..
என் " பாட்டு ஆராய்ச்சி " பதிவை
படிச்சிட்டு என்னை பாராட்டி
Mail பண்ணினாங்க.. இப்பவும்
பண்ணிட்டு இருக்காங்க..,
நானும் Reply பண்ணினேன்.. அப்படியே
" ஒரு Kuwait Coin அனுப்புங்கன்னு " கேட்டேன்.,
ஆனா சித்ரா அக்காவும்., அவங்க கணவரும்.,
கூட வேலை பார்க்கிற மற்ற நண்பர்கள்கிட்ட
இருந்தும் Coins Collect பண்ணி அனுப்பி
இருக்காங்க..
Coins அனுப்பிய அவங்களுக்கும்.,
அதை என்னிடம் பத்திரமாக
சேர்த்த ஆறுமுகம் சாருக்கும்
என் நன்றிகள்..
இப்பதான் எனக்கு தெரியுது..,
Coins சேர்க்கிறதை விட.,
மனுஷங்களோட அன்பை சேர்க்கிறது
எவ்ளோ சந்தோஷமான விஷயம்னு...!!
அந்த Coins-ஐ என் ப்ரெண்ட்கிட்ட
பெருமையாக காட்டினேன்...
" ஹேய்... நான் கூட Currency Collect
பண்ணிட்டு இருக்கேன்டா.. "
" அப்படியா..! சொல்லவேயில்ல..?? "
" காந்தி தாத்தா படம் போட்டு.., 500.,
1000-ன்னு நம்பர் போட்டு இருக்குமே
அந்த Currency.. உங்கிட்ட இருந்தா
ஒன்னு., ரெண்டு குடேன்...!! "
.
.