
( படித்ததில் பிடித்தது... )
No: 1
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
* * * * * * * * * * * * * *
No : 2 ( கட்சி ஆபீஸ்.. )
தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!
தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!
தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!
* * * * * * * * * * * * * *
No : 3
நிருபர் : நடிக்க வரலைன்னா என்ன
பண்ணியிருப்பீங்க..?
நடிகை : Doctor ஆயிருப்பேன்..
நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல.,
போயி Doctor ஆக வேண்டியது தானே..?!
* * * * * * * * * * * * * *
No : 4
( Exam ஆரம்பிக்கும் முன்... )
மாணவன் : டீச்சர் ஒர் Doubt...
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,
இப்ப போயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
* * * * * * * * * * * * * *
No: 5
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..
* * * * * * * * * * * * * *
No : 6
நண்பன் 1 : காலையில உங்க வீட்டுக்கு
வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட
நீ எங்கேன்னு கேட்டதுக்கு.,
" அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு " சொன்னார்டா..!
நண்பன் 2 : என்கிட்ட
" அந்த எருமை வந்துட்டு போச்சுன்னு "
சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!
.
.