சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 May 2010

Cutting சிக்கன்..!!


Variety-ஆ எழுதுடான்னு
என் Friend சொன்னான்..
அதுக்கு தான்..

இன்னிக்கு ஒரு சிக்கன் Variety..

சமையல் குறிப்பு எழுதற
அளவுக்கு அனுபவம்
இருக்குமான்னு தானே
யோசிக்கறீங்க..?

College படிக்கும் போது
எத்தனை தடவை
Maggi Noodles சமைச்சிருப்பேன்..!!

இன்னிக்கு என் மனைவியின்
டைரி குறிப்புல இருந்து
ஒரு சிக்கன் வெரைட்டி
சொல்ல போறேன்..

அட.., இதுல சிக்கனை பத்தி
மட்டும் 10 வெரைட்டி இருக்கே..
எல்லாமே நல்லாவே இருக்கு..
எதை எழுதறது..?

Confusing...

பேசாம எல்லா வெரைட்டில
இருந்தும் ஒவ்வோரு வரி
Cut பண்ணி எழுதிட்டா..?

" Cutting Chicken..!! " - ரெடி..!!

அட Tension ஆகாதீங்க..
பொறுமை., பொறுமை..

இங்கே எனக்கு பிடிச்ச
ஒரு தத்துவம் சொல்றேன்
கேட்டுக்கோங்க..

" பித்தளை பாத்திரத்தை
திருடி., - அதை வித்து.,
பேரிச்சம்பழம் வாங்கறதுக்கு...

பேசாம பேரிச்சம்பழத்தையே
திருடலாம்கிறேன்.. "

அந்த மாதிரி.,
நான் எதையாவது சொல்லி.,
நீங்க எதாவது பண்ணி.,
எதுக்கு இந்த Risk..?

கடைக்கு போனோமா..,
ஆர்டர் பண்ணுனோமா.,
சாப்பிட்டோமான்னு இருக்கனும்..

என்ன நான் சொல்லுறது..?

இன்னுமா இந்த ஊர்
என்னை நம்புது..??!

ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( முருகன் )
மனைவிகிட்ட நல்ல பேர் வாங்க
ஏதாவது வழி இருக்கா..?

ரெண்டு வழி இருக்கு..
ஆனா.. Unfortunately
ரெண்டுமே Work Out ஆகாது..

இன்று ஒரு தகவல் :
---------------------

நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல
எடுத்த மார்க் 872..
( Afterall என்னை விட
_ _ _ மார்க் தான் அதிகம். )
வெரி Bad-ங்க நீங்க...!!
.
.

36 Comments:

kunthavai said...

ஆகா ரெம்ப நல்லாயிருக்கு.....cutting chicken புகைப்படம்.

ரசிகன் said...

Title & photo பார்த்ததும்.. நம்ம மாதிரி pure veg partiesகெல்லாம், 2 நாள் extra leave போலன்னு சந்தோசப்பட்டேன்.. ம்ஹீம்ம்..

ஏன் இப்படி கஷ்டப்பட்டு ஒண்ணுமே இல்லாம‌ blog போடணும்...
பேசாம ஒண்ணுமே போடாம விட்டுடலாம்ல..
(உங்க பேரிச்சம்பழ logic தான்..)

இன்று தெரிந்துகொண்ட தகவல்..:
நீங்க +1 பாஸ் பண்ணி... +2 பரீட்சையும் எழுதி இருக்கீங்க...

வெங்கட் said...

@ குந்தவை.,

தேடி தேடி போட்டோம்ல..

நிஜமா நான் " மொகல் சிக்கன்னு "
ஒரு வெரைட்டி எழுதி இருந்தேன்.
எங்க ஆளுங்க தான்
Airport- ல Train ஓட்டாதேன்னு
மாத்த சொல்லிட்டாங்க..
ஹி., ஹி., ஹி..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ஏன் இப்படி கஷ்டப்பட்டு ஒண்ணுமே
இல்லாம‌ blog போடணும்...
பேசாம ஒண்ணுமே போடாம
விட்டுடலாம்ல.. //

இன்னிக்கு பதிவுல நான்
எந்த வெரைட்டியும் எழுதலைன்னு
Feel பண்றீங்களே..
அதையும் எழுதியிருந்தா என்ன
ஆகியிருக்கும்..?!

அருண் பிரசாத் said...

˙˙˙˙ıɐןɐʎıɹnd ǝɐunʌıɥʇɐd ɐɥʇuı nʞnʇǝ 'ɯnןɐɐɥɔıpɐd nuıu ɐɐןǝǝʞ ıɐןɐɥʇ

மானிடர் ஐ கவுத்து போட்டு படிக்கவும்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வெரைட்டி சிக்கன் சூப்பர்....போட்டோவை பாக்கும் போதே குமட்டிகிட்டு வருது! (ஹி...ஹி..."நான்" வெஜிடேரியன்; "நான் வெஜிடேரியன்" அல்ல)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// அருண் பிரசாத் said...
˙˙˙˙ıɐןɐʎıɹnd ǝɐunʌıɥʇɐd ɐɥʇuı nʞnʇǝ 'ɯnןɐɐɥɔıpɐd nuıu ɐɐןǝǝʞ ıɐןɐɥʇ

மானிடர் ஐ கவுத்து போட்டு படிக்கவும்
//

தலை கீழே நின்னு கேட்டாலும் பதில் வரப் போவதில்லை, அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி?
(அருணோட பின்னூட்டத்தை நான் நேரே நின்னு படிச்சுட்டுத் தான் இந்த பதில் பின்னூட்டம்! நாங்கல்லாம் பிளஸ் டூவில ஒரே மாதிரி மார்க் வாங்கறவங்க....அவ்வ்வ்வ்வ்..........)

வெங்கட் said...

@ அருண்.,

˙ʇı ǝʞıן I ˙ɐƃuǝǝʞʞnɹı nɥɔıpɐd ɐʌıɥʇɐd ɐɥʇuı ɯɐɐןןǝ nuıu ɐɐןǝǝʞ ıɐןɐɥʇ

வெங்கட் said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை,

// தலை கீழே நின்னு கேட்டாலும் பதில்
வரப் போவதில்லை,
அப்புறம் எதுக்கு இந்தக் கேள்வி.? //

அப்படியெல்லாம் நீங்களே முடிவு
பண்ணிக்க கூடாது..
எப்படி தலைகீழா நின்னு பதில்
போட்டோம்ல..?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல
எடுத்த மார்க் 872..
( Afterall என்னை விட
_ _ _ மார்க் தான் அதிகம். )
வெரி Bad-ங்க நீங்க...!!//

venkattota மார்க் 278

அனு said...

கடைல போய் சிக்கன் வாங்கி சாப்பிட்டேன்னு சொல்றதுக்கு இவ்ளோ build upஆ??

Maggi Noodles-ஸயே சூப் வச்சு குடிச்சா ஆளாச்சே நீங்க.. உங்களை நம்புவோமா?

//மனைவிகிட்ட நல்ல பேர் வாங்க
ஏதாவது வழி இருக்கா..?//
இருக்கே!! உங்க ப்ளாக்க படிக்குறேன்னு சொல்லலாம்.. இந்த torture-ரயே சமாளிக்குறீங்களா? நீங்க ரொம்ப நல்லவருன்னு சொல்லிடுவாங்க..

//நடிகர் சூர்யா பிளஸ் 2 -ல
எடுத்த மார்க் 872..//
உங்களை விட 872 மார்க் தான் அதிகமா? அப்போ, நீங்க ஒரு சூப்பர் டூப்பர் ஹீரோ ஆகுறதுக்கு சான்ஸ் இருக்குன்னு சொல்லுங்க.. (கடவுளே!! இப்படி எல்லாம் என்னை சொல்ல வச்சுட்டியே..)

ராஜ நடராஜன் said...

கோழி வெட்டுவீங்களா:)

ராஜ நடராஜன் said...

//பேசாம பேரிச்சம்பழத்தையே
திருடலாம்கிறேன்.. "//

பேரிச்சம் பழம் திருடறதுக்கு பேச வேண்டிய அவசியேமேயில்லை:)

அனு said...

@அருண் பிரசாத் & வெங்கட்
//˙˙˙ıɐןɐʎıɹnd ǝɐunʌıɥʇɐd ɐɥʇuı nʞnʇǝ 'ɯnןɐɐɥɔıpɐd nuıu ɐɐןǝǝʞ ıɐןɐɥʇ//

//˙ʇı ǝʞıן I ˙ɐƃuǝǝʞʞnɹı nɥɔıpɐd ɐʌıɥʇɐd ɐɥʇuı ɯɐɐןןǝ nuıu ɐɐןǝǝʞ ıɐןɐɥʇ//

என்னாது இது சின்னபுள்ளத்தனமா?? இப்பவே போய் ஏதாவது வௌவால் கிட்ட training எடுத்துட்டு வந்து பின்னூட்டம் போடுறென்..

@அருண் பிரசாத்
இவ்வளவு அறிவாளிய எல்லாம் சங்கத்துல சேர்த்தா என் பதவிக்கு ஆபத்தாச்சே..

ஜெய்லானி said...

படமே போதுமே சாப்பிட்ட திருப்தி வருதே!! எதுக்கு செலவு!!!ஹி..ஹி..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// venkattota மார்க் 278 //

என்னாது 278 மார்கா..?
இது என் மார்க்கை விட
- - மார்க் அதிகம்.

வெங்கட் said...

@ அனு.,

// அப்போ, நீங்க ஒரு சூப்பர் டூப்பர் ஹீரோ
ஆகுறதுக்கு சான்ஸ் இருக்குன்னு சொல்லுங்க..//

ஹி., ஹி.., ஹி..
இதுக்கு நான் எதாவது பதில் சொன்னா
அதை பிடிச்சிகிட்டு என்னை
கலாய்க்கலாம்னு Plan தானே..??

Be Careful..
( நான் என்னை சொன்னேன்..!! )

வெங்கட் said...

@ ராஜ நடராஜன்.,

// பேரிச்சம் பழம் திருடறதுக்கு
பேச வேண்டிய அவசியேமேயில்லை //

ஹி., ஹி., அட ஆமாங்க..!!
இதை நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க..?
ஆராய்ச்சியா..? அனுபவமா..?

( கன்னதுல கை வெச்சிட்டு இருக்கறத
பார்த்தா பெரிய அறிவாளியா
இருப்பீங்க போல இருக்கே.. )

வெங்கட் said...

@ அனு.,

// இவ்வளவு அறிவாளிய எல்லாம் சங்கத்துல
சேர்த்தா என் பதவிக்கு ஆபத்தாச்சே.. //

அப்பாடா., சங்கத்துல சின்ன விரிசல்.,
இதை இப்படியே விடக்கூடாது..
ஊதி ஊதி பெருசாக்கி சங்கத்துல
கலவரம் உண்டு பண்ணி தலைவரை
மாத்திடணும்..

ரசிகன் வேற அந்த தலைவர் Post
எனக்கு வேணும்னு கேட்டு இருக்கார்..

வெங்கட் said...

@ ஜெய்லானி.,

// படமே போதுமே சாப்பிட்ட திருப்தி வருதே.!! //

அப்ப இனிமே உங்க வீட்ல
Daily Non-Veg தான்னு சொல்லுங்க..

வெங்கட் said...

@ ரசிகன் & பெ.சொ.வி.,

// Title & photo பார்த்ததும்.. நம்ம மாதிரி pure veg parties- கெல்லாம், 2 நாள் extra leave போலன்னு சந்தோசப்பட்டேன்.. //

// போட்டோவை பாக்கும் போதே
குமட்டிகிட்டு வருது!
(ஹி...ஹி..."நான்" வெஜிடேரியன்;
"நான் வெஜிடேரியன்" அல்ல) //

சிக்கன், மட்டன் , மீன் எல்லாம்
நாங்க என்ன எங்களுக்காகவா சாப்பிடறோம்..?
அந்த வருமானத்தை நம்பி
எத்தனை குடும்பம் இருக்குது.
( For eg மீனவர்கள்.. )

நாங்கல்லாம் உங்களை மாதிரி
சுயநலவாதிங்க இல்ல
பொதுநலவாதிங்க..

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

//ஹி., ஹி.., ஹி..
இதுக்கு நான் எதாவது பதில் சொன்னா
அதை பிடிச்சிகிட்டு என்னை
கலாய்க்கலாம்னு Plan தானே..??

Be Careful..
( நான் என்னை சொன்னேன்..!! )//

நீங்க பதில் போடாட்டியும் கலாய்போம். எவ்வளவு கலாய்ச்சாலும் வெங்கட் தாங்குவார். ஏன்னா அவர் ரொம்ப நல்லவர்.... அவ்... வ்...வ் ...வ் ...

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

எங்கள் தலைவியின் தத்துவத்தை போன பதிவின் கமென்ட் ல பாக்கலையா?

(இப்பல்லாம் கட்சிக்குள்ளயே சண்டை போட்டுக்குற மாதிரி act விட்டா தான் popularity ஏறுதாம்..)

நாங்கலாம் அம்மாவின், சாரி, அனுவின் தீவிர விசுவாசிகள்...

keyven said...

Mokkaiyo mokkai.. waste of page for blog.. usless blogger

கவிதா said...

உங்க நண்பருக்காக வெரைடியா
எழுதிய நீங்க ,கொஞ்சம் எங்களுக்காக
ஏதாவது எழுதலாமில்லையா?


//பேசாம எல்லா வெரைட்டில
இருந்தும் ஒவ்வோரு வரி
Cut பண்ணி எழுதிட்டா..?

" Cutting Chicken..!! " - ரெடி//

சரி கட்-பண்ணின சிக்கன் எங்கே?
(அதுதான் இதுனு கலாக்க கூடது)

Anonymous said...

போய் பிள்ளைகள படிக்க வையுங்க கப்பிதனமா பேசிக்குட்டு

வெங்கட் said...

@ Keyven.,

// Mokkaiyo mokkai.. waste of page for blog..
usless blogger //

உங்களை எல்லாம் பார்த்தா
எனக்கு பாவமா இருக்கு..
ஹி., ஹி., ஹி..

யாராச்சும் Support-க்கு வாங்களேன்பா..

அனு said...

@அருண் பிரசாத்

//எங்கள் தலைவியின் தத்துவத்தை போன பதிவின் கமென்ட் ல பாக்கலையா?

(இப்பல்லாம் கட்சிக்குள்ளயே சண்டை போட்டுக்குற மாதிரி act விட்டா தான் popularity ஏறுதாம்..)//

க க க போ...

எப்பூடி இப்புடி... உங்க அறிவ பாக்கும்போது எனக்கே resign பண்ணிட்டு பேசாம தலைவர் பதவிய உங்களுக்கு குடுத்துடலாமான்னு தோணுது.. சீக்கிரம் ஒரு இடைத்தேர்தலை எதிர்பார்க்கலாம்..

அனு said...

தம்பி keyven,

என் இந்த கொலைவெறி?? என்ன ஆச்சுன்னு இவ்வளவு டென்ஷன்?? ஒருவேளை, காலை Breakfastல காரம் ஜாஸ்தியாகிடுச்சோ??

On serious notes, have u gone thru this blogger's other posts b4 writing the comment.. முதல்ல போய் பாருப்பா.. எல்லோரும் நல்லா இருக்கனும்னு தான் எழுதுறாங்க. ஒண்ணு ரெண்டு எல்லோருக்கும் பிடிக்குற மாதிரி அமையறதில்ல.. சச்சின் எப்பவுமேவா Century போட்டுட்டு இருக்காரு??

Pls go thru Venkat's other posts. I am damn sure that u'll take back your words..

@வெங்கட்
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

உங்களை கலாய்க்குறதுக்கு எங்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு... மத்தவங்கள விட்டுருவோமா என்ன?

அருண் பிரசாத் said...

ஏஏஏய்ய்ய்..... யாரது எங்க வெங்கட்டை கலாய்ச்சது. பாரு எங்கள் தலைவிக்கு கோவம் வந்திடுச்சு.... ஆணை இடுங்கள் தலைவி, பஸ் அ கொளுத்தவா.... சாலை மறியல் பண்ணலாமா... இல்ல வெங்கட் அ தீக்குளிக்க சொல்லலாமா...

@ வெங்கட்,
டோன்ட் வொர்ரி நாங்க இருகோம், நீங்க என்ன வென்னும் நாளும் எழுதுங்க... நாங்க படிக்கிறோம் ( வேற வழி). சங்கத்தின் கொள்கைப்படி சங்க உறுபினர்கள் மட்டுமே வெங்கட்டை களாய்க அனுமதி உண்டு.

@ அனு, வெங்கட்...
கூல் டவுன்
கூல் டவுன்
கூல் டவுன்

வெங்கட் said...

@ கவிதா.,

// கட்-பண்ணின சிக்கன் எங்கே.? //

// கொஞ்சம் எங்களுக்காக
ஏதாவது எழுதலாமில்லையா.? //

ஆஹா. எதுவா இருந்தாலும்
Plan பண்ணிதான் செய்யணும்..
அதுக்காக
என்னை போலீஸ்ல மாட்டிவிட
இப்படியா Plan பண்றது..?

வெங்கட் said...

@ அனு & அருண்.,

என்னதான் எதிர்கட்சியா இருந்தாலும்.,
மத்தவங்க கலாய்க்கும் போது ஓடி
வந்து Support பண்ணுனீங்க..
Thanks..

புல்லரிக்குதுபா.

ரசிகன் said...

//அந்த வருமானத்தை நம்பி
எத்தனை குடும்பம் இருக்குது.
( For eg மீனவர்கள்.. )//

வாரா வாரம் மீனவர்கள் குடும்பத்தை
மட்டும் தான் வாழ வைப்பீங்களா..
ஒரு நெசவாளியின் குடும்பத்தையோ,
நகை தொழிலாளியின் குடும்பத்தையோ..
வாழ வைக்க கூடாதா..
(உங்க wife சார்புல‌ இந்த வாதத்தை முன் வைக்கிறேன்.. )

//ரசிகன் வேற அந்த தலைவர் Post
எனக்கு வேணும்னு கேட்டு இருக்கார்..//

(எங்க சங்கத்துல நீங்க கலகம் செய்ய
முயற்சி பண்ணுறத விட்டுங்க...
எனக்கு ஒரு சதுர செயலாளர் பதவி
இருந்தாலே போதும்..)

@keyven

ஒரே ஒரு blog பார்த்துட்டு நீங்க இப்படி tension ஆகறது அனியாயம்..
பதிவர் பாட்டுக்கு confuse ஆகி blog போடுறத விட்டுட்டா
நாங்க யார கலாய்க்கறது..?

(Jokes apart.. அப்பப்போ குபீர் சிரிப்போட,அட min guarentee, சின்னதா ஒரு smileலோட‌
ஒரு நாளை அழகா தொடங்க விரும்பறீங்களா..?

Regularly visit this site..

வெங்கட் said...

@ சுதா.,

// போய் பிள்ளைகள படிக்க
வையுங்க கப்பிதனமா பேசிக்குட்டு //

என்னா ஒரு வில்லத்தனம்..!!

நாங்கெல்லாம் கருணையோட
பார்த்தா கற்பூரம் எரியும்

கோவமா பார்த்தா குடிசையே
பத்தி எரியும்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// பதிவர் பாட்டுக்கு confuse ஆகி
Blog போடுறத விட்டுட்டா
நாங்க யார கலாய்க்கறது..? //

கவலைபடாதீங்க..,
இதுக்கெல்லாமா நான் Tension ஆவேன்..?

ஊதி அணைக்கிறதுக்கு
நான் ஒண்ணும் தீக்குச்சியில்ல -
" எரிமலை "

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

கட்டிங்க் சிக்கன் - இடுகை அருமை - அழகான படம் - குறிப்புகள் பிரமாதம் - அச்சில் நகல் எடுத்து வீட்டில் கொடுத்திருக்கிறேன் - இன்று சமைக்கச் சொல்லி - நாளை சொல்கிறேன் விளைவுகளை.

நீ சமையலிலும் கெட்டிக்காரான் என்பது இப்பொழுதுதான் தெரிந்தது.

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா