சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 September 2010

கவிதை மழை..!!!
டிஸ்கி : எதுக்கும் ஒரு குடை
ரெடியா வெச்சுக்கோங்க..
நனைஞ்சிடப் போறீங்க..!!

நான், சுரேஷ், சரவணன்
மூணு பேரும் ஜாலியா
பேசிட்டு இருந்தோம்..

அப்ப அங்கே வந்த
எங்க Friend கம்பன்...

" சே.. வர வர என் பையனோட
தமிழ் மிஸ் தொல்லை
தாங்கலைப்பா..!! "

" ஏன்..? என்ன பண்ணினாங்க..? "

" எங்கயாவது படிச்சி / கேட்டு
ஒரு 4 வரி கவிதை எழுதிட்டு
வர சொல்லி இருக்காங்க..!! "

" சரி..!! "

" கவிதை எழுதி குடுப்பான்னு
என் பையன் என்னை டார்ச்சர்
பண்றான்.. "

" இது சப்ப மேட்டரு..,
குமுதம், ஆனந்த விகடனை
பார்த்து எழுதி குடுத்துடு..!! "

" ம்ம்.. Try பண்ணினேன்..
ஒண்ணும் மனசுக்கு பிடிக்கலை.."

" சரி.. இப்ப என்ன பண்ண போற..?! "

நீங்கல்லாம் ஆளுக்கு
ஒரு கவிதை சொல்லுங்க..
எதாவது தேறுதான்னு பார்க்கலாம்..

" கவிதையா..? நாங்களா..?

( ம்ம்.. உன் தலைவிதி அப்படி இருந்தா
நாங்க என்ன பண்ண முடியும்..?!! )

" சுரேஷு.., முதல்ல நீ சொல்லேன்..!! "

" என்னாது நானா..?!!
சரி., சரி நோட் பண்ணிக்கோ... "

" கவிதைக்கும்., கழுதைக்கும்
ரொம்ப தூரம்.. - ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!! "

" போடா வெண்ணை..!! "

" வெங்கட்..!! நீயாவது நல்லதா
படிப்பு., ஸ்கூல் சம்பந்தமா
ஒரு கவிதை சொல்லேன்.. "

( படிப்பு, ஸ்கூல் சம்பந்தமாவா..??!!
ம்ம்... இதோ.... )

" நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! "

( என்னையும் முறைச்சிட்டு.. )

சரவணா.. நீயாவது உருப்படியா
ஒரு கவிதை சொல்லுடா..

சரவணன்., அவனை கேவலமா
ஒரு Look விட்டுட்டு சொன்னான்...

" வைத்த பெயரோ
கம்பன்..,
வக்கில்லை
நாலு வரி கவிதைக்கு..!! "
.
.

47 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரெயின் கோட் மாதிரி கவிதை கோட் கிடைக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! //

இது சூப்பர். என்ன பண்றது அனுபவம் பேசுகிறது. உங்க பையன் homework பார்த்துட்டு மிஸ் உங்களை கூப்பிட்டு கேவலமா திட்டினத ஒரு கவிதையா சொல்லுங்க பாஸ்....

ரசிகன் said...

//" நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! "//

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க...
பேசாம நீங்க படிக்கும் போதே
ஒழுங்கா படிச்சிருக்கலாம்ல..
பாருங்க இந்த வயசுல‌
எத்தனை தடவ படிச்சாலும்
க‌,ங,ச தப்பு தப்பா எழுதறீங்கன்னு
சூர்யா ரொம்ப feel பண்ணறான்..

(To be honest ,இந்த கவிதை நச்ச்...!!
சொந்த சரக்கா.. இல்ல குமுதம், விகடன் mail உபயமா...?)

Jawahar said...

விளையாட்டா சொன்னாலும் கவிதைகள் ரசனையாத்தான் இருக்கு. அதைப் பிரசண்ட் பண்ணியிருக்கிற உரையாடலில் இருக்கிற மெல்லிய நகைச்சுவையும் நல்லா இருக்கு.

http://kgjawarlal.wordpress.com

என்னது நானு யாரா? said...

//" கவிதைக்கும்., கழுதைக்கும்
ரொம்ப தூரம்.. - ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!! "//

அந்த நண்பர் ஏன் அப்படி கவிதை படிச்சாரு! ஒரு வேலை கழுதை மேய்கிற தொழில் செய்றாரா?

ஸ்கூல் கவிதை நல்லா இருக்கு!!

Jey said...

//நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!!//

புதுசு புதுசாவேற படிக்க வேண்டியிருக்குப்பா..., எல்கேஜி படிப்புக்கெல்லாம்..விக்கிபேடியாவ படிக்க வேண்டியதா இருக்கு...

Jey said...

//வைத்த பெயரோ
கம்பன்..,
வக்கில்லை
நாலு வரி கவிதைக்கு..!!//

பேரு பெத்த பேரு தாக நீலு லேதா!! அய்யோ பாவம்....):

Chitra said...

" நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! "


....அப்புறம் அப்பா பாஸ் ஆனாரா?

Anonymous said...

ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!! "//

ந‌ண்ப‌ர் மிகவும் நேர்மையான‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும்...பெரிய‌ ம‌ன‌சுங்க‌..
ஆம்....அனைத்து உயிர்களையும் சமநோக்குடன் பார்க்க எத்தனைப்பேரல் முடியும்..உயர்ந்து விட்டார் மனிதர்....

படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! "//நகைச்சுவையாக எழுதினாலும் எத்த‌னை உண்மை அட‌ங்கி இருக்கிற‌து....பைய‌னின் கேள்விக்கு ப‌தில்தெரியாம‌ல் முழிக்கும்போதுத்தானே தெரிகிற‌து ந‌ம‌தின் அறிவுச்செரிவு....ப‌டிக்க‌ ஆர‌ம்பிக்க‌ வேண்டிய‌துத்தான்...வாத்தியாரை உதாசின‌ப்ப‌டுத்திய‌த‌ற்க்கு கைமேல் ப‌ல‌ன்..

கம்பன் வீட்டு தரியும் கவிப்பாடும் என்பது கூற்று...
க‌ம்ப‌ன்....பெய‌ர‌ல்ல‌வே...அத‌னால் ந‌ண்பர் க‌வ‌லைப்ப‌ட‌ தேவையில்லை..பொன்.

jana said...

என் இனிய வெங்கட்,

நல்ல பதிவு...
அருமையான,
கருத்தாழம் மிக்க,
நகைச்சுவை கலந்த
கவிதைகள்...

ரொம்ப நாள் ஆச்சிப்பா
கமெண்டு போட்டு...
நம்ம நண்பர்கள்
தல ரமெஷ், அருண், ரசிகன் &
one and only, uncomparable
இணையில்லா அனு
எல்லாம்
எப்படி இருக்காங்க...

இனிமே தொடர்ந்து வருவேன்...
உனக்கு எதாவது ப்ராப்ளம்னா
சொல்லு பேசி தீக்கலாம்
இல்ல தீத்துட்டு பேசிக்கலாம்...

Anonymous said...

// - ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!!//
வெங்கட் !! இப்படி உங்களைப்பார்த்து கழுதையென்று சொன்னபிறகும் சுரேஷ்ஜ சும்மாவா விட்டிருப்பீங்க?உங்களிற்கே முன் பகுதி முற்றாக அழிந்திருப்பதால்(பார்க்க படம்1) சுரேஷ் ஏதாவது வைத்தியசாலை தீவிர சிகிற்சைபிரிவில் உயிரோடு இருப்பார் என்று நினைக்கிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா..!! //

உமது கவிதையில் பொருட்குற்றம் இருக்கிறது. இப்பல்லாம் அட்மிஷனுக்கே பெற்றோருக்கு இன்டர்வியூ இருப்பதால், அப்போலேயிருந்தே அப்பா படிச்சுட்டுத் தான் போகணும்

//" கவிதைக்கும்., கழுதைக்கும்
ரொம்ப தூரம்.. - ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!! "//

ஒரு வேளை, பக்கத்திலேயே வெங்கட் நின்னுகிட்டிருந்தாரோ!

Anonymous said...

நான், சுரேஷ், சரவணன்
மூணு பேரும் ஜாலியா
பேசிட்டு இருந்தோம்..

ஒரு வேளை, பக்கத்திலேயே வெங்கட் நின்னுகிட்டிருந்தாரோ....

ந‌ல்லா மேலே ப‌டிங்க‌...பேசிக்கிட்டு இருந்தோம் என்றுத்தான் வெங்கட் எழுதி இருக்கிறார்... அப்புற‌ம் எங்கு வ‌ந்த‌து "பக்கத்திலேயே வெங்கட் நின்னுகிட்டிருந்தாரோ" என்று...

அருண் பிரசாத் said...

//உனக்கு எதாவது ப்ராப்ளம்னா
சொல்லு பேசி தீக்கலாம்
இல்ல தீத்துட்டு பேசிக்கலாம்...//

யாரு ஜனாவா... வாங்க அப்பு, ரொம்ப நாளாச்சு.

சரி விடுங்க VKS ல சேர்ந்ததை இப்படியா காட்டிகுவீங்க. வெங்கடை பேசி தீத்துக்கலாம். நமக்கு வன்முறை பிடிக்காது

(சொல்ல மறந்துடேனே @ வெங்கட், உங்க post Super - follow up காக தான்)

TERROR-PANDIYAN(VAS) said...

@Jana
//one and only, uncomparable
இணையில்லா//

யாரது யாரது? காணம போன VKS தலைவியா

(இது நானே சொந்தமா சிந்திச்சி போட்ட கமெண்ட். ஜனாவும் நானும் பிளன் பண்ணி செய்தது இல்லை.)

Gouthaman said...

கவிதையில் உள்ள நகைச்சுவையை மிகவும் ரசித்தேன்

ப.செல்வக்குமார் said...

@ ரமேஷ்

கவிதை எழுதறது எல்லாமே அனுபவம்னா, உலகத்துல நாம நல்ல கவிதை அப்படின்னு சொல்லுற எதுவுமே வந்திருக்காது. அதே மாத்ரி அனுபவப்படுரவுங்க எல்லோருமே கவிதை எழுதின இந்த உலகம் தாங்காது .. ( ஒண்ணும் புரியலைல )

ப.செல்வக்குமார் said...

///பேரு பெத்த பேரு தாக நீலு லேதா!! அய்யோ பாவம்....):///
இது என்ன ..? ஒண்ணுமே புரியல உலகத்திலே ..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இது சூப்பர். என்ன பண்றது
அனுபவம் பேசுகிறது. //

அதே உங்க பையனா
இருந்தா இப்படி சொல்லுவான்..

" நான் ஸ்கூலுக்கு போக
ஆசைப்பட்டேன்.. - ஆனா
ஸ்கூல் இண்டர்வியூவில் பெயில்
ஆகிவிட்டார் என் அப்பா..!! "

GSV said...

// - ஆனா
எனக்கும்., கழுதைக்கும்
ரொம்ப பக்கம்..!!//
வெங்கட் !! இப்படி உங்களைப்பார்த்து கழுதையென்று சொன்னபிறகும் //

Repetuuu ....

//நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா//

இது அழகு.

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இந்த கவிதை நச்ச்...!!
சொந்த சரக்கா.. இல்ல
குமுதம், விகடன் mail உபயமா...? //

யாரை., யாரை., யாரை பாத்து
சொந்த சரக்கான்னு கேட்டீங்க..??

நாங்கல்லாம்
வாய் திறந்தால கவிதை.,

வாய் மூடியிருந்தால்.......
Silent கவிதை..!!

மாலா said...

@ பாரதி.,

// வெங்கட் !! இப்படி உங்களைப்பார்த்து
கழுதையென்று சொன்ன பிறகும்
சுரேஷ்ஜ சும்மாவா விட்டிருப்பீங்க? //

ஏன் இந்த கொலைவெறி?
கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணாமா?
இப்படியா கேவலப்படுத்தறது - கழுதையை.!

வெங்கட் said...

@ ஜவஹர்.,

Thanks..!!

உங்க Blog-ம் போயி பார்த்தேன்..
ஒரே காமெடி கலாட்டாவா இருக்கே..
இத்தனை நாள் நான் எப்படி
உங்கள மிஸ் பண்ணினேன்..?!!

வெங்கட் said...

@ என்னது நானு யாரா.,

// அந்த நண்பர் ஏன் அப்படி கவிதை படிச்சாரு..!
ஒரு வேலை கழுதை மேய்கிற தொழில் செய்றாரா? //

உங்களுக்கு கவிதையோட
அர்த்தம் புரியலைன்னு நினைக்கிறேன்..

For Eg..

சென்னை to சிம்லா ரொம்ப தூரம்.,
ஆனா சிம்லா to காஷ்மீர் ரொம்ப பக்கம்..
அப்ப.,
சென்னை to காஷ்மீர்..??
ரொம்ப ரொம்ப தூரம்..

ரசிகன் said...

//நாங்கல்லாம்
வாய் திறந்தால கவிதை.,

வாய் மூடியிருந்தால்.......
Silent கவிதை..!!//

ஹூம்.. ஜுனூன் தமிழ்
பேசி இருந்தாலும்..
கருத்து நல்லா இருந்ததேன்னு
கவிதைன்னு ஒத்துக்ட்டேன்ல..
எனக்கு இதுவும் வேணும்..
இன்னமும் வேணும்..

சரி சரி.. உங்க Silent கவிதை
SUPER..
(கமல் முன்னாடியே கேட்டிருந்தா,
கவிஞர் வைரமுத்துக்கு பதிலா
தசாவதாரத்தில பாட்டெழுத
வச்சிருப்பார்... )

இனி எல்லா பதிவுலயும்..
அந்த கவிதைகளை மட்டும்
போடுங்க..

எஸ்.கே said...

உங்கள் கவிதைகளும் அதை நீங்கள் நகைச்சுவையாக சொன்ன விதமும் ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.

வெங்கட் said...

@ ஜெய்.,

// பேரு பெத்த பேரு தாக நீலு லேதா!! //

" சந்திரமுகி " படத்துல
ஜோதிகா சந்திரமுகியா மாறி
பேசுற டயலாக் மாதிரியே இருக்கு..!!!!

வெங்கட் said...

@ சித்ரா.,

// அப்புறம் அப்பா பாஸ் ஆனாரா? //

நாம Already " பாஸ் " ( Boss )
தானே.. VAS -க்கு..

ஹி., ஹி., ஹி...

வெங்கட் said...

@ ஜனா.,

// ரொம்ப நாள் ஆச்சிப்பா
கமெண்டு போட்டு... //

ரொம்ப வருஷமாச்சுன்னு
சொல்லு...

@ VAS Members..,

" இவர் தான் ஜனா.,
என் தோஸ்த்., College mate.,

நம்ம Blog ஆரம்ப காலங்கள்ல
VKS -ன் அராஜகங்களை
துணிச்சலாக எதிர்த்தவர்..

கொஞ்ச நாள் Busy-ஆ இருந்ததால
Comment போடலை..
இப்ப மறுபடியும் வந்திருக்கற
இவருக்கு நம்ம Welcome-ஐ
சொல்லுவோம்.. "

Welcome Jana..!!

// உனக்கு எதாவது ப்ராப்ளம்னா
சொல்லு பேசி தீக்கலாம்
இல்ல தீத்துட்டு பேசிக்கலாம்... //

வேணாம்., வேணாம்..

நீ வரபோறேன்னு ரகசிய தகவல்
கிடைச்சதுமே VAS தலைவி
தலைமறைவு ஆயிட்டாங்களாம்..

வெங்கட் said...

@ பாரதி..,

// வெங்கட் !! இப்படி உங்களைப் பார்த்து
கழுதையென்று சொன்னபிறகும் //

நம்ம ஆளு தானே நீங்க..?!!

நடுவில Spot Fixing எதாவது
நடந்ததா..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உமது கவிதையில் பொருட்குற்றம் இருக்கிறது. //

என்ன..?
எனது கவிதையில்
பொருட்குற்றமா..?

நல்லவேளை
இதை கவிதைன்னு
ஒத்துக்கிட்டீங்களே..!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ அருண்.,

// வெங்கடை பேசி தீத்துக்கலாம். //

ஆஹா.,
வர வர உங்க தமிழ் புலமை
என்னை புல்லரிக்க வெக்குது..

ஓளவையாரையே மிஞ்சிட்டீங்க..!!

ஜனா Comment-ஐ மறுபடியும்
நல்லா படிங்க...

// உனக்கு எதாவது ப்ராப்ளம்னா
சொல்லு பேசி தீக்கலாம்
இல்ல தீத்துட்டு பேசிக்கலாம்... //

ஜனா தீத்துக்கலாம்னு சொன்னது
என் ப்ராப்ளத்தை..

எனக்கு இருக்கிற ஒரே ப்ராப்ளம்
- VKS தான்..

அனு said...

இது அநியாயம்!! அக்கிரமம்!!

ஒரு குழந்தைக்கு மிட்டாய் வாங்கி சாப்பிட கொடுத்துட்டு, அதை ஆசையா சாப்பிடும் போது, அது கிட்ட இருந்து மிட்டாயா பிடுங்கினா எப்படி இருக்கும்..

அதே மாதிரி தான் இருக்கு நீங்க பண்ணுறதும்.. பத்து நாள் லீவ் கேட்டுட்டு மூணு நாள்லயே பதிவு போட்டா எப்படி? இது செல்லாது செல்லாது!!!

ஆமா, உங்க Africa Trip என்ன ஆச்சு? அங்க நீங்க போட்ட மொக்கைக்கு பயந்து உடனே உங்களை இந்தியாவுக்கு pack பண்ணிட்டாங்களாமே? அப்படியா??

அனு said...

@jana
//one and only, uncomparable
இணையில்லா அனு//

நீங்க எங்க கட்சியோட மறைமுக ஆதரவாளர்-னு வெங்கட்-க்கு இன்னும் தெரியாது.. அதனால அப்படியே manitain பண்ணுங்க..

எனக்கு இப்படி பப்ளிக்-ல புகழ்றது எல்லாம் பிடிக்காது.. நான் அவ்ளோ சிம்பிள்.. வேணும்னா, துபாய்ல எனக்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணுங்க.. நான் வந்து விழாவை சிறப்பிக்கிறேன்(உங்க செலவுல தான்)..

அனு said...

@Terror

//யாரது யாரது? காணம போன VKS தலைவியா//

ஹாஹாஹா.. கண்ணா.. நான் சூப்பர் ஸ்டார் மாதிரி..

எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துடுவேன்...

அனு said...

@வெங்கட்

இவ்வளவு நாளா தலைமறைவா இருந்த பொன், ஜனா, மாலா எல்லோரும் திடீர்னு இன்னைக்கு கமெண்ட் போட்டிருக்காங்களே? என்ன விஷயம்? எதாவது சதிவேலை உருவாகிட்டு இருக்கா??

//நீ வரபோறேன்னு ரகசிய தகவல்
கிடைச்சதுமே VAS தலைவி
தலைமறைவு ஆயிட்டாங்களாம்..//

Same Side Goal சூப்பரா இருக்கே..
பின்ன, எங்க கட்சி ஆதரவாளர் முன்னாடி VAS தலைவி நிக்க முடியுமா? எங்க அடுத்த டார்கட் VAS தலைவர தலைமறைவு ஆக்குறது தான்..

btw, VAS தலைவி யாரு? Shalini-ன்ற பேருல நீங்களே ஒரு ID create பண்ணி கமெண்ட் போட்டீங்களே. அது தானே??

வெங்கட் said...

@ மாலா.,

// கொஞ்சமாவது மனிதாபிமானம் வேணாமா?
இப்படியா கேவலப்படுத்தறது - கழுதையை.! //

ஏன் இந்த கொலைவெறி..?

ஒரு அப்பாவி சிக்கிட்டான்னு
இப்படி கூடவா..??!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// கமல் முன்னாடியே கேட்டிருந்தா,
கவிஞர் வைரமுத்துக்கு பதிலா
தசாவதாரத்தில பாட்டெழுத வச்சிருப்பார்... //

ஓ.. உங்களுக்கு விஷயமே
தெரியாதில்ல..??!!

சரி.. சரி., அதை பத்தி ஒரு பதிவு
அப்புறமா போடறேன்..

வெங்கட் said...

@ அனு.,

// பத்து நாள் லீவ் கேட்டுட்டு
மூணு நாள்லயே பதிவு போட்டா எப்படி?
இது செல்லாது செல்லாது!!!

ஆமா, உங்க Africa Trip என்ன ஆச்சு? //

இப்ப கூட நான் Africa-ல தான் இருக்கேன்..
இந்த பதிவை கூட ஜோஹானஸ்பர்க்
கிரிக்கெட் ஸ்டேடியம் பக்கத்தில இருக்கிற
5 Star Hotel-ல இருந்து தான் எழுதினேன்..

Actualy இங்கே Africa-ல
Internet வசதி அவ்வளவா இல்ல..
அதான் மக்கள் நம்ம Blog-ஐ
பார்க்காம ( பார்க்க முடியாம )
இருந்திருக்காங்க..

நான் வந்ததுக்கு அப்புறம் இங்கே
நிறைய மாற்றம்.. ஒரே நாள்ல
7 கோடி வீட்டுக்கு Internet Connection
குடுத்திருக்கு Government..

அவங்கல்லாம் என்கிட்ட

" நாங்க முதல்ல உங்க Blog தான்
படிக்கணும்னு ஆசைப்படறோம்..
So., புது பதிவு போடுங்கன்னு "
ஆசையா கேட்டதால தான்
3 நாள்ல இந்த பதிவு..

வெங்கட் said...

@ அனு.,

// நீ வரபோறேன்னு ரகசிய தகவல்
கிடைச்சதுமே VAS தலைவி
தலைமறைவு ஆயிட்டாங்களாம்.. //

அது VAS தலைவி இல்ல.,
VKS தலைவி..

போன Post Comment Section-ல
தூங்கப்போறேன்னு Comment
போட்டீங்கல்ல.. அதான்
முழிச்சிக்கிட்டீங்களான்னு
Check பண்ண இப்படி போட்டேன்..

பரவாயில்ல Alert-ஆ தான் இருக்கீங்க..
இப்படிதான் இருக்கோணும்..
எங்களுக்கும் அது தான் வேணும்..

ஏன்னா மயக்கமா இருக்கும் போது
அடிச்சா வலி தெரியாது..
நாங்க எப்பவும் தெளிய வெச்சு.,
தெளிய வெச்சு தான் அடிப்போம்..

ப.செல்வக்குமார் said...

///" நாங்க முதல்ல உங்க Blog தான்
படிக்கணும்னு ஆசைப்படறோம்..
So., புது பதிவு போடுங்கன்னு "
ஆசையா கேட்டதால தான்
3 நாள்ல இந்த பதிவு..

///
இந்த பதிவு எழுதும்போது VKS காரங்க யாருன்னு மட்டும் சொல்லுங்க, நாங்க பார்த்துக்கறோம் அப்படின்னு ஆப்ரிக்கா காரங்க சொன்னத மறந்துட்டீங்க. பயந்துடு வாங்கனு சொல்லலையா ..? ஏன்னா எங்களுக்கு உங்க பதிவுதான் சந்தோசத்த கொடுக்க முடியும். நீங்க சூரியனுக்கே டார்ச் அடிச்சு ஒளி தர்றவர் அப்படின்னு தெரிஞ்சுதான் எங்க கண்டம் இருண்ட கண்டத்துல இருந்து வெளிச்சம் உள்ள கண்டமா மாறணும்னு கூப்பிட்டோம்.!

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஹாஹாஹா.. கண்ணா.. நான் சூப்பர் ஸ்டார் மாதிரி..//

மாதிரினா? Sample piecea? an errored form of original piece அதுவா?

//எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது..//

எப்படி தெரியும்!! அதான் உங்களுக்கே தெரியாதே...

//ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்துடுவேன்..//

இப்போ நியாயமா பேசறிங்க!! தல பல்பு கொடுக்கர அப்போ கரெக்ட்டா வந்து வாங்கிட்டு போவிங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//எனக்கு இப்படி பப்ளிக்-ல புகழ்றது எல்லாம் பிடிக்காது.. நான் அவ்ளோ சிம்பிள்.//

இதுக்கு பெயர்தான் ஆட்டுக்கு தழைய காட்டி.. வெளிய வரவச்சி வெட்டரது...

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

மூவர் சொல்லிய கவிதைகளூமே அருமை - ஏன் பிரபல்மாகவில்லை.

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

Mohamed Faaique said...

///நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
ஒழுங்காய் படிக்க
ஆரம்பித்தார் என் அப்பா////

அதே உங்க பையனா
இருந்தா இப்படி சொல்லுவான்..

நான் ஸ்கூலுக்கு போக
ஆரம்பித்தேன்..
புரிந்தது அப்பா
கணக்கில் புலி'என்று
(புலிக்கு கணக்கு தெரியாது என்பது உலகுக்கே தெரியும்..)

அருண் பிரசாத் said...

//அது VAS தலைவி இல்ல.,
VKS தலைவி.. //

@ வெங்கட்
உங்க மீசைல மண்ணு ஒட்டல. (மீசையே இல்லை).

சரி, ஷாலினி... ஷாலினினு ஒருவரை வைத்து மகளிர் சங்கத்தை உருவாக்குனீங்களே எங்க அவங்களையும் காணோம்... சங்கத்தையும் காணோம்?

VAS - போலவே மகளீர் சங்கமும் டம்மி பீசோ!

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண் பிரசாத்
//VAS - போலவே மகளீர் சங்கமும் டம்மி பீசோ!//

இந்த டம்மி பீஸ் எல்லாம்தான் உங்கள பீஸ் பீஸ் ஆக்குது. உங்க பீஸ் அப் மைன்டு போக்குது

கண்ணா!! நாங்க...
அண்பா சொன்னா அடங்கி போவொம்
அதிகாரம சொன்னா அடக்கிட்டு போவொம்!

எட்டி நின்னா கொட்டி கொடுப்போம்
தடுக்க பாத்தா தட்டிட்டு போய்டுவொம்!

On ஆகதவரை Atom Bomb கூட அமைதியா, அழகாதான் இருக்கும்... On பண்ணிடாத... அலறாத!!

ரொம்ப நாள் என்கூட சண்டை போடற எதிரின்ற பாசத்துல சொல்றேன் போய்டு....