சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

21 January 2011

அரவிந்த்சாமியுடன் நான்..!!!?கிச்சா என் காலேஜ் Friend..

காஜேல் Days-ல கிச்சா பாக்கறதுக்கு
அசப்புல " ரோஜா " பட அரவிந்த்சாமி
மாதிரியே இருப்பான்..

நாங்களும் அவனை செல்லமா
" அரவிந்த்சாமின்னு " கூப்பிடுவோம்..
அவனும் சந்தோஷமா சிரிப்பான்..

இதுல என்ன ஆச்சரியம்னா..
இப்பவும் அவன் பாக்கறதுக்கு
" அரவிந்த்சாமி " மாதிரியே தான்
இருக்கான்..

ஆனா இப்படி...இப்ப என் பையனும்., கிச்சா பையனும்
ஒரே ஸ்கூல்ல தான் படிக்கறாங்க..

நேத்து ஸ்கூல்ல Parents Meeting-க்கு
போயிருந்தப்ப ஆபீஸ் ரூம்ல இருந்து
கிச்சாவும் அவன் Wife-ம் வர்றது தெரிஞ்சது..

உடனே எனக்கு ஒரு யோசனை...!

அவன் Wife முன்னாடி அவனை
கலாய்ச்சா எப்படி இருக்கும்..?!!

கிச்சா செம டென்ஷன் ஆயிடுவான்..

ஆஹா..!! அது கண்கொள்ளாக் காட்சியா
இருக்குமே.. சரி கலாய்க்கறதுன்னு
முடிவு பண்ணிட்டேன்..

அவன் பக்கத்துல வந்ததும்..

நான் : ஹாய் Mr.அரவிந்தசாமி..!!
எப்படிடா இருக்க...?

அவன் Wife சிரிச்சாங்க..
கிச்சா என்னை முறைச்சான்..

நான் : சாரிடா மாப்ள.. உன்னை
கேவலப்படுத்த இதை விட்டா
எனக்கு வேற வழி தெரியல..!!

உடனே கிச்சா...

கிச்சா : Its OK-டா.. இளைய தளபதி விஜய்..!!

இப்ப நான் முறைச்சேன்..

கிச்சா : சாரிடா மாப்ள.. விஜயை
கேவலப்படுத்த இதை விட்டா
எனக்கும் வேற வழி தெரியல..!!

நான் : ( நற.. நற )

இதை கேட்டுட்டு என் Wife எப்படி
சிரிச்சிருப்பாங்கன்னு நான் சொல்ல
தேவையில்ல..
.
.

113 Comments:

Shalini(Me The First) said...

Me the first!

எஸ்.கே said...

ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க விஜய் மாதிரி ஹேண்டசம்மாதான் இருக்கீங்க!

Speed Master said...

இதுக்கு பேர்தான் வாயகுடுத்து வாங்கிக்கட்டிக்கரது

எஸ்.கே said...

உங்க புரொஃபசர் யார் மாதிரி இருப்பார்?

karthikkumar said...

எஸ்.கே said...
ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க விஜய் மாதிரி ஹேண்டசம்மாதான் இருக்கீங்க////

[im]http://i46.tinypic.com/estiqx.jpg[/im]ஆமாங்க இத பாருங்க... எவ்ளோ ஹேண்ட்சமா இருக்காரு......:)

எஸ்.கே said...

//
ஆமாங்க இத பாருங்க... எவ்ளோ ஹேண்ட்சமா இருக்காரு......:)/

ஏங்க அது பண்டோரா கிரகத்தில் வில்லனை அழிக்க போட்ட மாறுவேசங்க!

சேலம் தேவா said...

ROFL.. :) அதாங்க இந்த தரையில உருண்டு உருண்டு சிரிப்பாங்களே.. அது..!! :-))))

karthikkumar said...

/// எஸ்.கே said...
//
ஆமாங்க இத பாருங்க... எவ்ளோ ஹேண்ட்சமா இருக்காரு......:)/

ஏங்க அது பண்டோரா கிரகத்தில் வில்லனை அழிக்க போட்ட மாறுவேசங்க///எதுக்கு மாறுவேசத்துல போனாரு real ஆவே போயிருந்தா, அங்க ஒரு புழு பூச்சி கூட மிஞ்சி இருக்காதே.. ஏம்பா VAS பங்காளிகளா இதெல்லாம் நீங்க சொல்லமாட்டீங்களா...

Madhavan Srinivasagopalan said...

நல்ல ஐடியா..
உங்கள நீங்களே கலாய்ச்சிகிட்டா..
VAS ஆளுங்க எப்படி உங்களை கலாய்ப்பாங்க.. ?

சி.பி.செந்தில்குமார் said...

8 உங்க ராசியான நெமபர்னு எனக்கு தெரியும் பாருங்க தமிழ்மனம் , இண்ட்லி 8வது ஓட்டு நான் தான்.. ஆனா கமெண்ட் 8வது தாண்டிடுச்சே.. சரி பரவால்ல

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் எனக்கு ஒரு டவுட்.. என் பிளாக்ல விஜய் பற்றி ஜோக் போட்டா ஆளாளுக்கு மைனஸ் ஓட்டும் கண்டபடி திட்டியும் கமெண்ட் போடறாங்க.. ஆனா நீங்க எவ்வளவு கேவலமா திட்டுனாலும் யாரும் கண்டுக்கறதில்லை.. நான் வேணா உங்க பிளாக்கிற்கு லிங்க் குடுக்கட்டுமா?

ஹி ஹி ( யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம்) ஹி ஹி

வெங்கட் said...

@ ஷாலினி.,

// Me the First //

அடிக்கடி இங்கே 1st வந்ததால தான்
இந்த தடவை காலேஜ் செமஸ்டர்
Exam-லயும் Department 1st வந்துட்டீங்க
போல..

:-)

Gayathri said...

aaha enakku purialaye bro

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க
விஜய் மாதிரி ஹேண்டசம்மாதான்
இருக்கீங்க! //

எப்படியோ நான் ஹேண்ட்சம்மா
இருக்கேங்கற உண்மையை
சொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க..

அப்ப இந்த ஜெயம் ரவி, பரத், சூர்யா,
ஆர்யா இவங்கல்லாம் உங்க கண்ணுக்கு
சிக்கலையா..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ ஷாலினி.,

// Me the First //

அடிக்கடி இங்கே 1st வந்ததால தான்
இந்த தடவை காலேஜ் செமஸ்டர்
Exam-லயும் Department 1st வந்துட்டீங்க
போல..///

ஓ எக்ஸாம் க்கு காலைல ஆறுமணிக்கே போய் எக்ஸாம் ஹால்ல உக்காந்துட்டாங்களா?

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// ஆமாங்க இத பாருங்க... எவ்ளோ
ஹேண்ட்சமா இருக்காரு......:) //

ஐ.. இது நம்ம சிரிப்பு போலிஸ்
ரமேஷ் போட்டோ தானே..?!

@ ரமேஷூ..,

சூப்பர்..!! இந்த போட்டோ தான்
பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட
குடுத்து இருக்கீங்களா..?!!

ஐ.. ஜாலி., ஜாலி பொண்ணு தப்பிச்சிக்கும்..!!

middleclassmadhavi said...

விஜய் இது மாதிரியெல்லாம் படிச்சுப் படிச்சு ஒரு இரும்பு மனிதரா மாறி, கட்சியை ஆரம்பிச்சுடப் போறாரேன்னு பயமா இருக்கு!!

Radha said...

பாஸ், உங்க காமடி வடிவேலு காமடிய விட நல்லா இருக்கு. இப்படி ஒரு self-damage-ஆ???

அனு said...

@எஸ்.கே
//ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க விஜய் மாதிரி ஹேண்டசம்மாதான் இருக்கீங்க!//

ஹிஹி.. உங்க காமெடி எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா பாருங்க, எதுவும் ஒரு அளவோட இருக்கனும்.. அநியாயமா விஜயோட தற்கொலைக்கு நீங்க காரணமாகிடாதீங்க..

பாரத்... பாரதி... said...

சொந்த செலவில் சூன்யம்...

பாரத்... பாரதி... said...

இந்த பதிவுக்கான ஓட்டு விஜய் படம் அளித்த எஸ்.கே. அவர்களுக்கு போகிறது..

ராஜி said...

என்னவோ போங்க. உங்களோட ஃபிரென்ட் எல்லார்கிட்டயும் நீங்களே வலிய போய் பல்ப் வாங்கிட்டு வற்ரீங்க. உங்க பிரெண்ட் ங்க மத்தில உங்களுக்கு ரொம்ப நல்லவன் னு பேராமே (எவ்வளவு அடிச்சாலும் தான்குறாண்டா இவ ரொம்ப நல்லவன்ற மாதிரி) அப்படியா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-)))))

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாத்தான் சிரிக்குராங்கப்பூ....

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// ஏங்க அது பண்டோரா கிரகத்தில்
வில்லனை அழிக்க போட்ட
மாறுவேசங்க! //

இப்படியெல்லாம் எதாவது சொல்லி
என்னை பயமுறுத்தினீங்க..
அப்புறம் நான் விஜய் படம்
பாக்கறதை நிறுத்தின மாதிரி..
ஜேம்ஸ் கேமரூன் படம் பாக்கறதையும்
நிறுத்த வேண்டி இருக்கும்..

வெங்கட் said...

@ மாதவன்.,

// VAS ஆளுங்க எப்படி உங்களை
கலாய்ப்பாங்க.. ?//

நீங்களும் உளர்ற லிஸ்ட்ல
சேர்ந்துட்டீங்களா..?

அது VAS இல்ல VKS..

வெங்கட் said...

@ சி.பி.,

// என் பிளாக்ல விஜய் பற்றி ஜோக்
போட்டா ஆளாளுக்கு மைனஸ்
ஓட்டும் கண்டபடி திட்டியும் கமெண்ட்
போடறாங்க.. ஆனா நீங்க எவ்வளவு
கேவலமா திட்டுனாலும் யாரும்
கண்டுக்கறதில்லை.. //

ஆச்சரியமா இருக்கே..!!??

உங்க பிளாக்கை S.A.சந்திரசேகர்,
ஷோபா சந்திரசேகர், சங்கீதா விஜய்
எல்லாமா படிக்கிறாங்க...??!

வெங்கட் said...

@ காயத்ரி.,

// aaha enakku purialaye bro //

:-(

சரி நான் மெயில்ல Explain
பண்றேன்..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஓ எக்ஸாம்க்கு காலைல ஆறுமணிக்கே
போய் எக்ஸாம் ஹால்ல உக்காந்துட்டாங்களா?//

ஓ.. Department 1st-ன்னா இது தான்னு
நினைச்சிட்டு இருக்கீங்களா..?!!

நீங்க இன்னும் வளரணும் ரமேஷூ..!!

Chitra said...

:-))

எஸ்.கே said...

//அப்ப இந்த ஜெயம் ரவி, பரத், சூர்யா,
ஆர்யா இவங்கல்லாம் உங்க கண்ணுக்கு
சிக்கலையா..?//

அதென்னமோ தெரியலை! இவங்க எல்லோர்கிட்டேயும் இல்லாத ஏதோ ஒன்னு உங்க கிட்ட இருக்கு! அதான்!

எஸ்.கே said...

//எதுக்கு மாறுவேசத்துல போனாரு real ஆவே போயிருந்தா, அங்க ஒரு புழு பூச்சி கூட மிஞ்சி இருக்காதே.. ஏம்பா VAS பங்காளிகளா இதெல்லாம் நீங்க சொல்லமாட்டீங்களா...//

அவரு புழு பூச்சிக்கு கூட தீங்கு நினைக்காதவருங்க்! அதான்!

(இதுக்கு எதுக்கு ஆளுங்களை கூப்பிடுறீங்க VAS, VKSனு, நானே யார் எந்த சங்கம், எதுக்கு சங்கம்னே தெரியாம சுத்திக்கிட்டு இருக்கேன். யார் யாரோ யார் யாரையோ கலாய்ச்சிக்கிறீங்க. நானும் புரியாம சிரிச்சிட்டு போய்கிட்டே இருக்கேன்!!!!)

ஆமா நீங்க எந்த சங்கம்? இடைச்சங்கம்? கடைச்சங்கம்? வடைச்சங்கம்?

எஸ்.கே said...

//ஹிஹி.. உங்க காமெடி எனக்கு பிடிச்சிருக்கு.. ஆனா பாருங்க, எதுவும் ஒரு அளவோட இருக்கனும்.. அநியாயமா விஜயோட தற்கொலைக்கு நீங்க காரணமாகிடாதீங்க..//

இல்லீங்க! விஜய் பெருமைப்படுவார்! தன்னை இவருடன் ஒப்பிடும் அளவுக்கு உள்ளோமா என்று ஆனந்த கண்ணனீர் விடுவார்!

எஸ்.கே said...

//இப்படியெல்லாம் எதாவது சொல்லி
என்னை பயமுறுத்தினீங்க..
அப்புறம் நான் விஜய் படம்
பாக்கறதை நிறுத்தின மாதிரி..
ஜேம்ஸ் கேமரூன் படம் பாக்கறதையும்
நிறுத்த வேண்டி இருக்கும்..//

அவங்க ஃபோட்டோக்களை நீங்க பார்த்தா என்ன? பார்க்கவிட்டால் என்ன?

HVL said...

good joke:)

LEKHA said...

hii venkat
அரவிந்த் சாமீ தான் இப்டி இருக்காரு
விஜய் எப்போவும் ஒரே மாதிரி தான் இருக்காரு

சோ டோன்ட் வொர்ரி
நான் எப்போவும் காலேஜ்ல பையன் மாதிரி தான் இருப்பேன் னு சொல்லிடுங்க ;)

டக்கால்டி said...

நண்பேன் டா!!!

அனு said...

நேற்று எனக்கு வெங்கட் போன் பண்ணியிருந்தார்.

வெங்கட்: நான் VKSல சேர போறேங்க..
நான்: (ஆஹா, திரும்பவுமா??) ஏன் என்ன ஆச்சு?
வெ: உலகத்தில அவனவன் நூத்து கணக்குல தொண்டர்களை வச்சி சந்தோசமா இருக்கான்.. ஆனா இந்த மூணு பேர வச்சிகிட்டு நான் படுற பாடு இருக்கே.. யப்பா..
நா: எல்லாம் தெரிஞ்சதுதானே.. ஷாலினி எப்படி??
வெ: me the firstஅ தவிர அவங்க போடுற கமெண்ட் எல்லாம் அவங்களுக்கே புரியுதான்னு அவங்க கிட்ட தான் கேக்கனும்..
நா: செல்வா?
வெ: கட்சிகாரங்க மொக்கையா இருக்கலாம்.. ஆனா, மொக்கையையே ஒரு கட்சி உறுப்பினரா வைக்க முடியுமா?.. என்னால முடியல..
நா: ஹிஹி.. டெரரை பத்தி நான் கேக்கல..
வெ: ஹூம்.. டெரரை எங்க கட்சியில சேர்த்தது என்னோட error-ங்க.. அவரால தான் நான் VASஅ விட்டே வெளியில வரேன்..
நா: சரி சரி... முதல் கட்டமா உங்களை கலாய்ச்சு ஒரு போஸ்ட் போடுங்க.. அதோட ரெஸ்பான்ஸ பாத்துட்டு செயற்குழு கூட்டி முடிவெடுக்கிறோம்..
வெ: அதுக்கென்ன.. இப்பவே போட்டுடுறேன்.. என்னை வேணாம்னு மட்டும் சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்
நா: ம்ம்ம்... பாக்கலாம்..

ரசிகன் said...

எவ்வளவு கலாய்ச்சாலும் தாக்கு பிடிச்சிகிட்டு வலிக்காத மாதிரியே நடிக்கறதுல விஜயக்கு சமமா உங்களை விட்டா வேற யார் இருக்கா? இப்ப விஜய Overtake பண்ண புது ட்ரிக். மத்தவங்க தான் அவர கலாய்ச்சி போஸ்ட் போடறாங்க... நீங்க...
@Anu
போனா போகுது அனு.. இவருக்கு VKSல ஒரு சதுர செயலாளர் பதவி போட்டு குடுத்துடலாம்.

கோமாளி செல்வா said...

தல அவர் சொன்னது உங்களுக்குப் புரிஞ்சும் இந்த VKS ஆளுங்க என்ன சொல்லுறாங்க அப்படின்னு பாக்குறதுக்காக நீங்க இப்படி எழுதிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். ஆமா நீங்க விஜய் மாதிரி இருக்கீங்க அப்படின்னு உங்க நண்பர் சொன்னது விஜய் கேவலப்படுவர்னு இல்ல , நம்ம விட அழக இருக்குற வெங்கட் கூட நடிக்க வரலியே , நாம நடிக்கவது இப்படி ஆகிட்டோமே அப்படிங்கிற அர்த்ததுல..!

கோமாளி செல்வா said...

மேலே கண்ட உரையாடலுக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் :

ரசிகன் : ஐயோ , பட்டப்பகல்லையே இப்படி கட்சி ஆபீசுக்குள்ள தூங்குறீங்களே , அப்புறம் எப்படி கட்சி வெளங்கும் ?

அனு : ஓ , அப்படின்னா இப்ப நான் கண்டது கனவா ?

ரசிகன் : அப்படி என்ன கனவு கண்டீங்க ?

அனு : இல்ல ,வெங்கட் நம்ம கட்சில சேருறது மாதிரி ஒரு கனவு வந்துச்சு , அதான் .

ரசிகன் : ஓ , அப்படின்னா நீங்க தூங்கி கனவ தொடருங்க , கனவுலயாவது அவர் நம்ம கட்சில சேர்ந்ததா நினைச்சு சந்தோசப்படலாம்.

அனு : அவர் போஸ்ட் போட்டிருப்பார் போலேயே , சரி சரி நான் கண்டது கனவு அப்படின்னு உங்களுக்கு மட்டும்தானே தெரியும் , யார் கிட்டவும் சொல்லிடாதீங்க , நான் போய் இதவே கம்மேன்ட்டா போட்டுடறேன்.

karthikkumar said...

வெங்கட் said...
@ எஸ்.கே.,

// ஆயிரம்தான் இருந்தாலும் நீங்க
விஜய் மாதிரி ஹேண்டசம்மாதான்
இருக்கீங்க! //

எப்படியோ நான் ஹேண்ட்சம்மா
இருக்கேங்கற உண்மையை
சொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க..

அப்ப இந்த ஜெயம் ரவி, பரத், சூர்யா,
ஆர்யா இவங்கல்லாம் உங்க கண்ணுக்கு
சிக்கலையா..////
உங்கள ஹேண்ட்சம் அப்டின்னு சொல்றாருன்னா கண்டிப்பா எஸ் கே இந்த ஜெயம் ரவி, பரத், சூர்யா, ஆர்யா, திருப்பூர் கார்த்திக்குமார் இவங்களையெல்லாம் பாத்திருக்கமாட்டார்....

vinu said...

இதை கேட்டுட்டு என் Wife எப்படி
சிரிச்சிருப்பாங்கன்னு நான் சொல்ல
தேவையில்ல..
.


unga wife mattumillea naangalumthaan he he he he

வெங்கட் said...

@ மிடில்கிளாஸ் மாதவி.,

// விஜய் இது மாதிரியெல்லாம் படிச்சுப்
படிச்சு ஒரு இரும்பு மனிதரா மாறி,
கட்சியை ஆரம்பிச்சுடப் போறாரேன்னு
பயமா இருக்கு..!! //

விஜய் கட்சியை ஆரம்பிச்சா
என் வோட்டு விஜய்க்கு தான்..

ஆமா.. கட்சி பணியில பிஸி
ஆயிட்டா அப்புறம் சினிமால
எல்லாம் நடிக்க மாட்டாருல்ல..

ஹி.,ஹி., ஹி...

வெங்கட் said...

@ ராதா.,

// பாஸ், உங்க காமடி வடிவேலு
காமடிய விட நல்லா இருக்கு. //

நன்றிங்கோ..!!

வெங்கட் said...

@ அனு.,

// ஆனா பாருங்க, எதுவும்
ஒரு அளவோட இருக்கனும்.. //

இது.. நாங்க உங்களை
துரத்தி துரத்து அடிக்கும் போது
நீங்க அழுதுகிட்டே எங்ககிட்ட
சொல்ற டயலாகில்ல..?!!

:)

வெங்கட் said...

@ ராஜி.,

// உங்க பிரெண்ட்ங்க மத்தில உங்களுக்கு
ரொம்ப நல்லவன்னு பேராமே //

இதெல்லாம் வெளியே
சொல்லாதீங்கடான்னு சொன்னா
எவன் கேக்கறான்..?!!

ஆமா அவ்ளோ தான்
சொன்னாங்களா..?
இல்ல இன்னும்...

அண்ணன் வல்லவரு.,
ரொம்ப தங்கமானவரு.,
இப்படி எதாச்சும்..

OK..,OK.., ஒண்ணும் அவசரமில்ல..
பொறுமையா யோசிச்சி சொல்லுங்க..

வெங்கட் said...

@ எஸ்.கே..,

// அதென்னமோ தெரியலை! இவங்க
எல்லோர்கிட்டேயும் இல்லாத ஏதோ
ஒன்னு உங்க கிட்ட இருக்கு! அதான்! //

ஹி., ஹி., ஹி.. எனக்கு
புரிஞ்சி போச்சு..

venKat..

வெங்கட் said...

@ லேகா.,

// அரவிந்த் சாமீ தான் இப்டி இருக்காரு
விஜய் எப்போவும் ஒரே மாதிரி
தான் இருக்காரு

சோ டோன்ட் வொர்ரி நான் எப்போவும்
காலேஜ்ல பையன் மாதிரி தான் இருப்பேன்னு
சொல்லிடுங்க ;) //

ஆஹா.. இது கூட நல்ல ஐடியாவா
இருக்கே.. Next Meeting-ல போட்டு
தாக்கிடறேன்..

வெங்கட் said...

@அனு.,

நேத்து அனு எனக்கு போன்
பண்ணியிருந்தாங்க.. அப்ப
நடந்த உண்மையான உரையாடல்கள்..

அனு : என்ன உங்களை கலாய்ச்சி
நீங்களே போஸ்ட் போட்டுகிட்டீங்க..?

நான் : " VAS-ஐ கலாய்ப்பது எப்படின்னு..? "
VKS ஆளுங்களுக்கு ஒரு கோச்சிங் கிளாஸ்
நடத்த போறேன்னு சொன்னேன்ல..
அதான் இது..

அனு : ம்க்கும்.. நீங்க நடத்திட்டாலும்..
எங்க ஆளுங்களுக்கு விளங்கிடுமாக்கும்..

நான் : ஏங்க அப்படி சொல்றீங்க..?

அனு : பின்ன என்னங்க.. நான் இங்கே
தனியா அடி வாங்கிட்டு இருக்கேனே
என்னை காப்பாத்த யாராவது வந்தாங்களா..?

நான் : அதான் ரசிகன் இருக்கருல்ல..

அனு : அட நீங்க வேற.. போன வருஷ
Birthday-ல " நன்றி., நன்றின்னு " கமேண்ட்
போட ஆரம்பிச்சாரு.. இன்னும் நிறுத்தின
மாதிரி தெரியல.. இன்னும் 2 மாசத்துல
அடுத்த Birthday-வே வரபோகுது..

நான் : அப்ப நம்ம ரமேஷு...?

அனு : ரமேஷா.?! சுத்தம்.. எங்க பக்கத்து
வீட்ல ஒரு UKG படிக்கிற பையன் இருக்கான்..
அவன் நல்லா கமெண்ட் போடுவான்..

நான் : அப்ப அருண்..? பெ.சொ.வி..?

அனு : அட ஆமால்ல.. இப்படி ரெண்டு
பேர் எங்க கட்சியில இருக்காங்கல்ல..!!!

நான் : சரி இப்ப நான் என்ன பண்ணனும்..?

அனு : நீங்க எங்க கட்சிக்கு வந்துடுங்க..
அப்ப தான் உங்க ஆளுங்க எங்களை
கலாய்க்க மாட்டாங்க.. ப்ளீஸ். ப்ளீஸ்...

நான் : ம்ம்ம்.. நோ சான்ஸ்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// போனா போகுது அனு.. இவருக்கு VKSல
ஒரு சதுர செயலாளர் பதவி போட்டு
குடுத்துடலாம். //

எனக்கு பதவி குடுக்கறது இருக்கட்டும்..
முதல்ல உங்க கட்சி ஆளுங்க எல்லாம்
கட்சியில இருக்காங்களா..? இல்ல
ஊரைவிட்டு ஓடி போயிட்டாங்களான்னு
1., 2., 3.-ன்னு எண்ணி பாருங்க..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

விஜயைக் கலாய்ச்ச உங்களைத் திட்டி ஒரு லெட்டர் வந்திருக்கு, இங்க பாருங்க

ரசிகன் said...

//எனக்கு பதவி குடுக்கறது இருக்கட்டும்..
முதல்ல உங்க கட்சி ஆளுங்க எல்லாம்
கட்சியில இருக்காங்களா..? இல்ல
ஊரைவிட்டு ஓடி போயிட்டாங்களான்னு
1., 2., 3.-ன்னு எண்ணி பாருங்க..//

நான் நல்லா எண்ணி எண்ணி பாத்துட்டேன்..
அருண் தவிர VKS all present..
ஆனா பாவம் நீங்க..
இந்த பதிவ பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்லன்னு ஷாலினி சொல்லாம சொல்லிட்டாங்க.. (Me the firstடோட ஆள் அப்ஸ்கான்ட்)
செல்வா கொஞ்சம் போராடிட்டு பக்கத்து ப்ளாக்கு வடை வாங்க போய்ட்டார்...
யாருமே இல்லாத சங்கத்துல தனியா போராடறீங்க‌.. அதான் பாவம் நாம ஆதரவு குடுப்போமேன்னு கூப்டா.. ஹ்ம்ம்ம்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ லேகா.,

//
சோ டோன்ட் வொர்ரி நான் எப்போவும்
காலேஜ்ல பையன் மாதிரி தான் இருப்பேன்னு
சொல்லிடுங்க//

என்னதான் வெங்கட் டிகிரி அரியர் வச்சிருந்தாலும் அதை இப்படியெல்லாம் போட்டுக் கொடுக்கக் கூடாது, லேகா!

அனு said...

@செல்வா

//மேலே கண்ட உரையாடலுக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் ://

இதெல்லாம் நீங்க தூங்கிட்டு இருக்கும் போது நடந்ததா??

செல்வா, நீங்க போட்ட எதிர் கமெண்ட் சூப்பர்னு சொல்லல.. நல்லா எழுதுறீங்கன்னு சொல்லல.. ஆனா, இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு... :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//உடனே எனக்கு ஒரு யோசனை...!

அவன் Wife முன்னாடி அவனை
கலாய்ச்சா எப்படி இருக்கும்..?!!//

நினைச்சதெல்லாம் சரிதான், ஆனா, பக்கத்தில உங்க wife இருக்கும்போது செயல்படுதினது தவறு

LEKHA said...

//என்னதான் வெங்கட் டிகிரி அரியர் வச்சிருந்தாலும் அதை இப்படியெல்லாம் போட்டுக் கொடுக்கக் கூடாது, லேகா!
//
நேத்து ஒரு பெரிய பொய் ஒன்னு சொல்ல போறேன்னு சொன்னீங்களே
இதானா அது ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@karthi

//ஏம்பா VAS பங்காளிகளா இதெல்லாம் நீங்க சொல்லமாட்டீங்களா...//

அட சொன்னேன் மச்சி! எதுக்கு இன்ஸால்மெண்ட்ல அழிச்சிகிட்டு நீங்க Realஅ போனா கெட்டவங்க எல்லாம் மொத்தம அழிஞ்சி போய்டுவாங்களேனு. அப்புறம் அடிச்சி விள்ளாட ஆள் இருக்காது பீல் பண்றாரு. ஏற்கனவே இந்த VKS அடிக்கிறதுக்கு முன்னாடியே செத்துகிட்டு இருக்கு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஓ எக்ஸாம் க்கு காலைல ஆறுமணிக்கே போய் எக்ஸாம் ஹால்ல உக்காந்துட்டாங்களா?//

ஏன் மச்சி எப்பவும் நீ கோயில்ல சுண்டல் வாங்க ஆறு மணிக்கு போற ஞாபகத்துலே இருக்க... :)

அனு said...

@LEKHA

//நேத்து ஒரு பெரிய பொய் ஒன்னு சொல்ல போறேன்னு சொன்னீங்களே
இதானா அது //

ஆமா, வெங்கட் காலேஜ்ல படிச்சருன்னு சொன்னது ஒரு பெரிய பொய்... வெங்கட் அரியர் வச்சது டிகிரியில இல்ல.. 12thல...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

/அநியாயமா விஜயோட தற்கொலைக்கு நீங்க காரணமாகிடாதீங்க..//

இவ்வளவு அழகான வெங்கட் கூட நம்மல கம்பர் பண்றாங்களே ஒரு வேளை வஞ்சபுகழ்ச்சியா இருக்குமோ நினைச்சி தற்கொலை பண்ணிபாரு சொல்றிங்களா.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ராஜி

/என்னவோ போங்க. உங்களோட ஃபிரென்ட் எல்லார்கிட்டயும் நீங்களே வலிய போய் பல்ப் வாங்கிட்டு வற்ரீங்க. //

சின்ன பசங்களை சிரிக்க வச்சி பாக்கறதுல அவ்வளவு ஆனந்தம். ப்ளாக் மெஸேஜ் பாருங்க.. “சந்தோஷத்துல உண்மையான சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷபடுத்தி பாக்கறது” :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//நேற்று எனக்கு வெங்கட் போன் பண்ணியிருந்தார்.

வெங்கட்: நான் VKSல சேர போறேங்க..//

இந்த சின்ன பசங்க எல்லாம் சொப்பு ஜாமான் வாங்கி வச்சிகிட்டு தனியா உக்காந்து. கற்பனை பண்ணி அதுவா பொலம்பிட்டு இருக்கும். அது மாதிரி நீங்க இப்போ ப்ளாக்ல... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

//மத்தவங்க தான் அவர கலாய்ச்சி போஸ்ட் போடறாங்க... நீங்க... //

நெருப்புல குதிச்சி விள்ளாடறது எங்களுக்கு ஹாபி.. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்னு எங்களுக்கு தெரியும். அதுவும் இல்லாம உயர்ந்தவர் எப்பவும் தங்களை தாழ்த்திதான் பேசுவாங்கனு உங்களுக்கு தெரியாதா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//திருப்பூர் கார்த்திக்குமார் இவங்களையெல்லாம் பாத்திருக்கமாட்டார்....//

மச்சி!! இப்படி கொஞ்சம் திரும்பு.. மூஞ்சிய ஆட்டாம வை மச்சி! க்க்க்க்ர்ர்ர்....


(தல! கவலைபடமா கமெண்ட் பப்ளிஷ் பண்ணுங்க கார்த்தி கோச்சிக மாட்டாரு. பன்னிகுட்டி ப்ளாக்ல இதைவிட கேவலம திட்டிபோம்.. :) )

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//என்னதான் வெங்கட் டிகிரி அரியர் வச்சிருந்தாலும் அதை இப்படியெல்லாம் போட்டுக் கொடுக்கக் கூடாது, லேகா!//

எக்ஸாமினர பார்த்து அரியர் எழுத போறாரு சொன்ன மொதல் ஆள் நீங்க தான்.. :))


மொதல் & கடைசி ஆள் நீங்க தான் சொல்லலாம் தான் நினைச்சேன். அப்புறம் தான் VKSல இன்னும் 4 பேரு இருக்கது ஞாபகம் வந்துச்சி. அதான் மொதல் ஆள் போட்டேன்.. :)

karthikkumar said...

// TERROR-PANDIYAN(VAS) said...
@கார்த்தி

//திருப்பூர் கார்த்திக்குமார் இவங்களையெல்லாம் பாத்திருக்கமாட்டார்....//

மச்சி!! இப்படி கொஞ்சம் திரும்பு.. மூஞ்சிய ஆட்டாம வை மச்சி! க்க்க்க்ர்ர்ர்....///ஏன் மச்சி என் மூஞ்சிய திருப்பி வெச்சிட்டு பாக்குறதுக்கு பதிலா உங்க மூஞ்சிய கண்ணாடில பாத்துட்டீங்களா?.... :)
///(தல! கவலைபடமா கமெண்ட் பப்ளிஷ் பண்ணுங்க கார்த்தி கோச்சிக மாட்டாரு. பன்னிகுட்டி ப்ளாக்ல இதைவிட கேவலம திட்டிபோம்.. :) )///ஆமாங்க அங்க டெரர் ரொம்ப அடிபட்ருக்காறு... வரவங்க போறவங்க எல்லாம் டெரர தான் அடிச்சி பழகிக்குவாங்க...(இங்க மட்டும் என்ன வாழுதாம்) அப்டிதானே மச்சி... :)

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
@karthi

//ஏம்பா VAS பங்காளிகளா இதெல்லாம் நீங்க சொல்லமாட்டீங்களா...//

அட சொன்னேன் மச்சி! எதுக்கு இன்ஸால்மெண்ட்ல அழிச்சிகிட்டு நீங்க Realஅ போனா கெட்டவங்க எல்லாம் மொத்தம அழிஞ்சி போய்டுவாங்களேனு. அப்புறம் அடிச்சி விள்ளாட ஆள் இருக்காது பீல் பண்றாரு. ஏற்கனவே இந்த VKS அடிக்கிறதுக்கு முன்னாடியே செத்துகிட்டு இருக்கு.. :)////


அதெல்லாம் இருக்கட்டும் எல்லாம் அடிச்சு தொவச்சி காயபோட்டதுக்கு அப்புறம் வர்றீங்க.... நீங்க பரவாயில்ல me the first போட்டுட்டு ஒருத்தங்க போனாங்க இன்னும் ஆள காணோம். :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Terror Pandian

//@பெ.சொ.வி

//என்னதான் வெங்கட் டிகிரி அரியர் வச்சிருந்தாலும் அதை இப்படியெல்லாம் போட்டுக் கொடுக்கக் கூடாது, லேகா!//

எக்ஸாமினர பார்த்து அரியர் எழுத போறாரு சொன்ன மொதல் ஆள் நீங்க தான்.. :))//

நிறைய முறை பரீட்சை எழுதினாலே எக்சாமினர் ஆயிடலாம்னு சொல்றீங்களா? உங்க அகராதியில பத்து தடவை டாக்டர் கிட்ட போனாலே ஒரு பேஷன்ட் டாக்டர் ஆகிடுவாரா?

Shalini(Me The First) said...

@அனு
// me the firstஅ தவிர அவங்க போடுற கமெண்ட் எல்லாம் அவங்களுக்கே புரியுதான்னு
அவங்க கிட்ட தான் கேக்கனும்.. //

இதே மாதிரி தான் " திருக்குறளை" படிச்சிட்டு, இது திருவள்ளுவர்க்கு
புரியுதான்னு கேக்கணும்

Newton's Law படிச்சிட்டு இது
Newton-க்கு புரியுதான்னு கேக்கணும்னு
சொல்லிட்டு இருந்தீங்க

இப்ப இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களா?

Shalini(Me The First) said...

//@ரமேஷ்

//ஓ எக்ஸாம் க்கு காலைல ஆறுமணிக்கே போய் எக்ஸாம் ஹால்ல உக்காந்துட்டாங்களா?//

ஏன் மச்சி எப்பவும் நீ கோயில்ல சுண்டல் வாங்க ஆறு மணிக்கு போற ஞாபகத்துலே இருக்க... :)//

ஹா ஹா ஹா போலீஸ் ! தொப்பி தொப்பி ;))))

Shalini(Me The First) said...

@கார்த்திக்
// நீங்க பரவாயில்ல me the first
போட்டுட்டு ஒருத்தங்க போனாங்க
இன்னும் ஆள காணோம். //

என்ன பண்றது கார்த்தி,உங்க மேனேஜர் மாதிரி ஒரு இளிச்சவாய் மேடம் எனக்கு கிடைக்கலையே :(

கார்த்தி! கார்த்தி! சீக்கிரம் பின்னாடி பாருங்க உங்க மேனேஜர் வர்றாரு
அவர் வர்றப்ப எல்லாம் வேலை பாக்குற மாதிரியே ஒரு பாவ்லா குடுப்பீங்களே அதை குடுங்க சீக்கிரம்.. ம்ம்.. Start Permorfing..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// நான் நல்லா எண்ணி எண்ணி
பாத்துட்டேன்.. //

ஹி., ஹி., ஹி...

நீங்க எத்தனை தடவை எண்ணி,
எண்ணி பாத்தாலும் உசுரை
பணயம் வெச்சவங்க நாலே பேர் தான்..

ரொம்ப எண்ணி எண்ணி பாக்காதீங்க..
அப்புறம் அது 3 ஆயிட போகுது..

வெங்கட் said...

@ அனு.,

// செல்வா, நீங்க போட்ட எதிர் கமெண்ட்
சூப்பர்னு சொல்லல.. நல்லா எழுதுறீங்கன்னு
சொல்லல.. ஆனா, இதெல்லாம்
நடந்திருமோன்னு பயமாயிருக்கு... :) //

ம்ம்.. விளங்கிடுச்சு..!!

கட்சியை கலைச்சிட்டு.,
எங்க கட்சியில சேரப்போறீங்க
அதானே..?!!!

எவ்ளோ சிம்பாளிக்க சொல்றீங்க.

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நினைச்சதெல்லாம் சரிதான், ஆனா,
பக்கத்தில உங்க wife இருக்கும்போது
செயல்படுதினது தவறு //

அப்ப என் Wife சந்தோஷமா
சிரிச்சாங்க..

நீங்க படிச்சதில்லயா..,
" மனைவியை சந்தோஷமா வெச்சிக்கிறது
தான் ஒரு கணவனுக்கு அழகு..! "

:)

வெங்கட் said...

@ அனு.,

// ஆமா, வெங்கட் காலேஜ்ல படிச்சருன்னு
சொன்னது ஒரு பெரிய பொய்... வெங்கட்
அரியர் வச்சது டிகிரியில இல்ல.. 12thல... //

அட உங்களுக்கு 12 வரை எண்ண
தெரியுமா..?!! தலைவிங்கறதை
Prove பண்ணிட்டீங்க..!!

உங்க கட்சில ஒருத்தரு நாலுங்கறதை
எண்ணி., எண்ணி பாத்துட்டே இருக்காரு.
அவருக்கு போயி கொஞ்சம் சொல்லி குடுங்க..

வெங்கட் said...

@ டெரர்.,

// கார்த்தி கோச்சிக மாட்டாரு.
பன்னிகுட்டி ப்ளாக்ல இதைவிட
கேவலம திட்டிபோம்.. :) ) //

இந்த கிரிக்கெட் மேட்ச்ல
புது Players-ஐ தான் Silly Point.,
Short leg-ல ( Batsman-க்கு பக்கத்துல )
பீல்டிங் பண்ண சொல்லுவாங்க..
அவனுக்கு அடி பட்டா பரவாயில்லைன்னு.

அவனும் வேற வழியில்லாம
அங்கே பீல்டிங் பண்ணி முட்டியை.,
பேத்துப்பான்.. அது மாதிரி

இந்த VKS -காரங்க இந்த கார்த்திக்கை
முன்னாடி நிறுத்திட்டு., அவங்க எல்லாம்
பின்னாடி போயி ஒளிஞ்சிக்கறாங்க..

கொஞ்சம் யோசிங்க கார்த்தி..!!

ரசிகன் said...

@Terror

//நெருப்புல குதிச்சி விள்ளாடறது எங்களுக்கு ஹாபி..சங்கு சுட்டாலும் வெண்மை தரும்னு எங்களுக்கு தெரியும்//

சுடப்பட்டது சங்கா இருந்தா யாரு கேக்க போறா..
சைக்கிள் ட்யூப்பா இருந்து தானும் கருகி ஊரையும் நாறடிச்சா நாலு பேரு கேக்க தான் செய்வாங்க..

//அதுவும் இல்லாம உயர்ந்தவர் எப்பவும் தங்களை தாழ்த்திதான் பேசுவாங்கனு உங்களுக்கு தெரியாதா? //

அது எங்களுக்கு தெரியும்.. சம்மந்தமே இல்லாம, உங்க தலைவர் ஏன் தன்னை தாழ்த்தி பேசறார்.. ?

அனு said...

@shalini

//இதே மாதிரி தான் " திருக்குறளை" படிச்சிட்டு, இது திருவள்ளுவர்க்கு
புரியுதான்னு கேக்கணும்//

திருவள்ளுவர், நியூட்டனை எல்லாம் உங்க கூட கம்பேர் பண்ணுற காலம் வரும்னு தெரிஞ்சுதானோ என்னவோ. அவங்கல்லாம் அப்பவே போய் சேர்ந்துட்டாங்க..

திருக்குறள புரிஞ்சுக்கவாது கோனார் இருக்கு. நீங்க சொல்றத புரிய வைக்க யாரு இருக்கா?

அனு said...

@வெங்கட்
//அட உங்களுக்கு 12 வரை எண்ண
தெரியுமா..?!! தலைவிங்கறதை
Prove பண்ணிட்டீங்க..!!//

ஓ.. உங்க கட்சியில தலைவரா ஆகனும்னா 12 வரை எண்ண தெரிஞ்சா போதுமா? நீங்க(ல்லாம்) எப்படி தலைவரானீங்கன்னு எனக்கு ரொம்ப நாளா இருந்த டவுட் இப்போ தான் க்ளியர் ஆச்சு.

//உங்க கட்சில ஒருத்தரு நாலுங்கறதை
எண்ணி., எண்ணி பாத்துட்டே இருக்காரு. //

அவரு நாலும் தெரிஞ்சவரு.. இந்த மாதிரி நாலு பேரு நாலு விதமா பெசுறதை எல்லாம் கண்டுக்க மாட்டாரு..

சாமக்கோடங்கி said...

ஹி ஹி... நீங்க இப்ப எப்படி இருக்கீங்க..? அந்த போட்டோவ போடுங்க. எத்தன நாளுக்கு தான் உங்க ஸ்கூல் போட்டவையே வெச்சு இருப்பீங்க..? போடுங்க பாப்போம், விஜய் ரேஞ்சுக்கு இருக்கான்னு...

அனு said...

//இந்த VKS -காரங்க இந்த கார்த்திக்கை
முன்னாடி நிறுத்திட்டு., அவங்க எல்லாம்
பின்னாடி போயி ஒளிஞ்சிக்கறாங்க..//

எங்க கட்சியில சேர்றதுக்காக கார்த்திக்கு நாங்க குடுக்குற ட்ரையினிங் இது.. அவர் எங்க முட்டிய பேத்துக்கறார்? நாங்க சொல்லி குடுக்காமலே உங்களை எல்லாம் சொல்லி சொல்லி அடிக்கிறார்.. அவர் அடிக்குறது எல்லாம் சிக்ஸ்.. பிடிக்குறது எல்லாம் காட்ச்-சால்ல இருக்கு..

VKSக்கு ஒரு இளைய தளபதி உருவாகியாச்சு.. பீ கேர்ஃபுல் (நான் உங்களை சொன்னேன்.)

அனு said...

@ரசிகன்

//சைக்கிள் ட்யூப்பா இருந்து தானும் கருகி ஊரையும் நாறடிச்சா நாலு பேரு கேக்க தான் செய்வாங்க..//

இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது.. :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Welcome, இளைய தளபதி, கார்த்தி!

நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, இதைப் புரிஞ்சுக்குவாங்க)

Radha said...

சும்மா சொல்ல கூடாது. பதிவை விட கமென்ட்ஸ் நல்லா இருக்கு. :-)
//நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, இதைப் புரிஞ்சுக்குவாங்க)
//
:-)
@பெ.சொ.வி,
same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒரு குரங்கு" என்று சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-)

அனு said...

@Radha
//"ஆறாவது ஒரு குரங்கு" என்று சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! //

நீங்க நல்லவரா? கெட்டவரா??

Radha said...

@அனு
யாரும் காசு கொடுக்கல. எந்தக் கட்சியிலும் இன்னும் சேரல. வெறும் witness தான். :-)

karthikkumar said...

@ வெங்கட்
இந்த VKS -காரங்க இந்த கார்த்திக்கை
முன்னாடி நிறுத்திட்டு., அவங்க எல்லாம்
பின்னாடி போயி ஒளிஞ்சிக்கறாங்க.

கொஞ்சம் யோசிங்க கார்த்தி..!! //


ஹா ஹா ஹா செம காமெடி. உங்க டீம்ல HEAD நீங்கதானே.. உங்கள மட்டும் தனியா அடி வாங்க வெச்சிட்டு உங்க டீம் மெம்பர்ஸ் ஒளிஞ்சுக்கிறாங்க. அது ஏன்?

கொஞ்சம் யோசிங்க வெங்கட் ஐயா..!!

karthikkumar said...

@ அனு
VKSக்கு ஒரு இளைய தளபதி உருவாகியாச்சு.. பீ கேர்ஃபுல் (நான் உங்களை சொன்னேன்.)///

நன்றி....:) என்ன சொன்னாலும் அவங்க வழிய வந்து VKS- ஐ கலாய்ச்சு (கலாய்க்கறதா நெனச்சு) செமத்தியா மொக்கையாயிட்டுதான் போவாங்க பாருங்க...:)

karthikkumar said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Welcome, இளைய தளபதி, கார்த்தி!

நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, இதைப் புரிஞ்சுக்குவாங்க)//

அப்போ VAS ஆளுங்களுக்கு புரியாதுன்னு சொல்றீங்களா:)

Shalini(Me The First) said...

@ராதா
//same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒரு குரங்கு" என்று சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-)//

நீங்க வேற நிஜத்தையெல்லாம் யாரும் கலாய்க்க மாட்டோம் ;))

@கார்த்தி
வேணும் நல்லா வேணும் உங்களுக்கு!

karthikkumar said...

@ ராதா
same side goal ஆயிட போகுது. "ஆறாவது ஒரு குரங்கு" என்று சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-)////
நீங்க இந்த மாதிரி சொல்லி சொல்லி கொடுத்தாதான் அவங்களுக்கு இந்த மாதிரி யோசிக்க தெரியும்... :)

கோமாளி செல்வா said...

@ ரசிகன்

//சுடப்பட்டது சங்கா இருந்தா யாரு கேக்க போறா..
சைக்கிள் ட்யூப்பா இருந்து தானும் கருகி ஊரையும் நாறடிச்சா நாலு பேரு கேக்க தான் செய்வாங்க..//

அத ட்யூப் வாசத்துக்கும் சங்கு வாசத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சவங்க சொல்லணும் ., உங்களுக்குத்தான் கற்பூர வாசனையே தெரியாதே ..

கோமாளி செல்வா said...

//திருவள்ளுவர், நியூட்டனை எல்லாம் உங்க கூட கம்பேர் பண்ணுற காலம் வரும்னு தெரிஞ்சுதானோ என்னவோ. அவங்கல்லாம் அப்பவே போய் சேர்ந்துட்டாங்க..
//

அப்படிப் போகலை , நமக்குப் பிறகு உலகத்தைக் வழிநடத்த வெங்கட்னு ஒருத்தர் வருவார். அதனால நம்ம இங்க இருக்க வேண்டிய தேவை இல்லை அப்படின்கிரதால்தான் போய்ட்டாங்க .. இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது. நேத்திக்கு வந்த கண்டக்டர் கிட்ட கொஞ்சம் சத்தமா பேசிட்டதால இன்னிக்கு நம்மல கண்டு பயந்துதான் வரலைன்னு நினைக்கிறவங்க நீங்க !

கோமாளி செல்வா said...

//நின்னோடு அறுவரானோம்!
(கம்ப ராமாயணம் படிச்சவங்க, இதைப் புரிஞ்சுக்குவாங்க)

//

இதுக்கு எதுக்கு கம்ப ராமாயணம் படிச்சிட்டு ,
எப்படியாவது கட்சிய வளர்க்கலாம்னு பாக்குறீங்க ஆனா வரவங்க எல்லாம் அடி வாங்கி அடிவாங்கி பயந்துதராங்க ..

கோமாளி செல்வா said...

@ கார்த்திக்
//நன்றி....:) என்ன சொன்னாலும் அவங்க வழிய வந்து VKS- ஐ கலாய்ச்சு (கலாய்க்கறதா நெனச்சு) செமத்தியா மொக்கையாயிட்டுதான் போவாங்க பாருங்க...:///

எல்லாம் பேசி வச்சதுமாதிரி சரியா சொல்லிட்டீங்க போல !!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Shalini

//@கார்த்தி
வேணும் நல்லா வேணும் உங்களுக்கு!
//

நீங்களா அப்படி கற்பனை பண்ணிகிட்டா நான் என்ன சொல்ல!
எங்கள் குழாமில் விபீஷணனும் . (VAS-லிருந்து வரும் ஒரு புத்திசாலியான, நல்லவரான-உங்களை மாதிரி -ஒருத்தர் தான் விபீஷனன்னு நான் சொல்லவும் வேண்டுமோ?) சேர உள்ளார் என்பதை சூசகமா சொன்னேன்.

நாராயண, நாராயண!

வெங்கட் said...

@ அனு.,

// திருக்குறள புரிஞ்சுக்கவாது கோனார்
இருக்கு. //

கோனார் நோட்ஸ்சை படிச்சிட்டு
இது கோனாருக்கு புரியுதான்னு
கேக்கணும் சொல்லாம இருந்தா சரி..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ அனு.,

// அவரு நாலும் தெரிஞ்சவரு.. //

நாலு வரைக்கும் ( எண்ண )
தெரிஞ்சவர்னு சொல்லுங்க..

// இந்த மாதிரி நாலு பேரு நாலு விதமா
பேசுறதை எல்லாம் கண்டுக்க மாட்டாரு.. //

ம்ம்.. இப்படிதான்.. இப்படியே தான்
நல்லா உசுப்பி விடணும்..

அப்பதான் அவங்க VAS கிட்ட நல்லா
செமத்தியா அடி வாங்கிட்டு வருவாங்க..
அப்புறம் நீங்க ஒளிஞ்சிட்டு இருந்து
பஞ்ச் டயலாக் பேசலாம்..!!

ஒரு தலைவிக்கு உண்டாண
அனைத்து தகுதிகளும் உங்ககிட்ட
இருக்கு..!!

:)

வெங்கட் said...

@ சாமகோடாங்கி.,

// நீங்க இப்ப எப்படி இருக்கீங்க..?
அந்த போட்டோவ போடுங்க. //

நேயர் விருப்பம்.. போட்டுட்டா
போச்சு..!! கூடிய விரைவில்..

அனு said...

@செல்வா?

சோடா வேணுமா தம்பி??

வெங்கட் said...

@ அனு.,

// எங்க கட்சியில சேர்றதுக்காக கார்த்திக்கு
நாங்க குடுக்குற ட்ரையினிங் இது..
அவர் அடிக்குறது எல்லாம் சிக்ஸ்..
பிடிக்குறது எல்லாம் காட்ச்-சால்ல இருக்கு.. //

ஹி., ஹி., ஹி..!!

ட்ரையினிங்கு..!! அப்ப சரி..

நெட் பிராக்டீஸ்ல அடிக்கறதுக்கு
பேரு எல்லாம் சிக்ஸ் இல்ல..
பிடிக்கறது பேரு எல்லாம் கேட்ச் இல்ல..

மேட்சுக்கு வரட்டும் " பவுன்ஸர்னா " என்ன..?
" டக்னா " என்னான்னு காட்டுறோம்..

// VKSக்கு ஒரு இளைய தளபதி உருவாகியாச்சு..
பீ கேர்ஃபுல் (நான் உங்களை சொன்னேன்.) //

உங்க மைண்ட் வாய்ஸ் வேற மாதிரி
கேக்குதே..

அனு'ஸ் Mind Voice..

" ஆஹா ஒரு அடிமை சிக்கி...... "

அனு said...

@வெங்கட்

//அப்பதான் அவங்க VAS கிட்ட நல்லா
செமத்தியா அடி வாங்கிட்டு வருவாங்க..
அப்புறம் நீங்க ஒளிஞ்சிட்டு இருந்து
பஞ்ச் டயலாக் பேசலாம்..!!

ஒரு தலைவிக்கு உண்டாண
அனைத்து தகுதிகளும் உங்ககிட்ட
இருக்கு..!! //

நீங்க எப்படியெல்லாம் தலைவரானீங்கன்ற சீக்ரெட் எல்லாம் உங்களையறியாமலே இந்த பதிவுல வெளிய வந்துட்டு இருக்கு.. பீ கேர்ஃபுல்... :)

வெங்கட் said...

@ ராதா.,

// "ஆறாவது ஒரு குரங்கு" என்று
சொல்லி கலாய்ச்சிட போறாங்க ! :-) //

ஆறாவது மட்டுமா..?

Btw. அது அவங்க Family Matter நாங்க
ஏங்க கலாய்க்க போறோம்..!!

வெங்கட் said...

@ அனு.,

// நீங்க நல்லவரா? கெட்டவரா?? //

போச்சுடா.. கட்சிக்கு ஆள் பிடிக்கிற
வேலையை ஆரம்பிச்சுட்டாங்க..

வெங்கட் said...

@ கார்த்திக்..,

// அப்போ VAS ஆளுங்களுக்கு புரியாதுன்னு
சொல்றீங்களா:) //

எங்களுக்கு புரியுது தம்பி..!!

அவங்க உங்களை ராக்கிங் பண்றாங்க
அது உங்களுக்கு புரியுதா..?

எதுக்கும் பக்கத்துல யாராவது பெரியவங்க
இருந்தா " பெ.சொ.வி & ராதா" கமெண்டை
படிச்சி அர்த்தம் சொல்ல சொல்லுங்க..

அப்பயாச்சும் உங்களுக்கு விளங்குதான்னு
பாப்போம்..!!!

ரசிகன் said...

@கோமாளி செல்வா
//அத ட்யூப் வாசத்துக்கும் சங்கு வாசத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சவங்க சொல்லணும் //

சே சே.. என்னதான் உங்க அளவுக்கு மோப்ப சக்தி எங்களுக்கு இல்லன்னாலும் ரப்பர் கருகும் வாசம் எல்லாம் நல்லாவே தெரியும்..

Radha said...

அடடா வெங்கட், என்னை ஏன் ராகிங் கேஸ்ல மாட்டி விடறீங்க?
"இளைய தளபதி" அப்படின்னு சொல்லி VKS தான் கார்த்திக்கை ராகிங் பண்றாங்க. :-) இவங்க விஜயை இன்சல்ட் பண்றாங்களா? கார்த்திக்கை இன்சல்ட் பண்றாங்களான்னு ஒன்னும் புரியலே. உங்க பதிவு தெளிவா இருக்கு. :-)

அனு said...

@ரசிகன்

//சே சே.. என்னதான் உங்க அளவுக்கு மோப்ப சக்தி எங்களுக்கு இல்லன்னாலும் ரப்பர் கருகும் வாசம் எல்லாம் நல்லாவே தெரியும்..//

சும்மா சொல்ல கூடாது.. பொங்கலுக்கு ஊருக்கு போய்ட்டு வந்ததுல இருந்து உங்க கமெண்ட்ஸ் எல்லாம் எக்ஸ்ட்ரா கலக்கல்ஸ்..கமெண்ட் அடிக்கிற கைக்கு தங்க காப்பு வாங்கி மாட்டிருவோம்!!! :) :)

வெங்கட் said...

@ அனு.,

// நீங்க எப்படியெல்லாம் தலைவரானீங்கன்ற
சீக்ரெட் எல்லாம் உங்களையறியாமலே
இந்த பதிவுல வெளிய வந்துட்டு இருக்கு..
பீ கேர்ஃபுல்... :) //

ரொம்ப பேசுனீங்க.. அப்புறம்
VKS தலைவி பதவிக்கு ஆபத்து
வந்துடும்.. பீ கேர்ஃபுல்... :)

எனக்கு என்னமோ VKS தலைவருக்கு
உண்டான எல்லா தகுதிகளும்
கார்த்திகிட்ட இருக்குற மாதிரி படுது..

:)

வெங்கட் said...

@ கார்த்திக்.,

எதுக்கு நீங்க கொஞ்சம் Try
பண்ணி பாருங்களேன்..

1. அருண் Absent.

2. ரமேஷ்க்கு ஒரு பிரியாணி போதும்.

3. ரசிகனுக்கு துணை தலைவர் பதவி
தர்றேன்னு ஆசை காட்டினா போதும்..
அவரும் போல்ட் ஆயிடுவார்..

4. பெ.சொ.வி தான் கொஞ்சம் மக்கர்
பண்ணுவார்..

Its Ok 3 / 5 ஆதரவு இருக்கே..
VAS-ன் முழு ஆதரவு வேற இருக்கு..!!

யோசிங்க கார்த்தி., யோசிங்க..!!

karthikkumar said...

@ வெங்கட்
Its Ok 3 / 5 ஆதரவு இருக்கே..
VAS-ன் முழு ஆதரவு வேற இருக்கு..!!

யோசிங்க கார்த்தி., யோசிங்க..///

ஹா ஹா. ஏன் அனு அவங்களோட சண்ட போட்டு உங்களால மாள முடியலையா?.... VKS- ஐ விடுங்க. இந்த கட்சி மோடி கவர்மென்ட் மாதிரி நல்ல ஸ்ட்ராங்... உங்க கட்சிய பாருங்க டெபாசிட்டே வாங்குறதுக்கு தெனறிக்கிட்டு இருக்கு.

சாதாரணமானவள் said...

super!