
அது ஒரு Pet Shop..
Pet வாங்க வந்த
ஒரு Customer 3 கிளி
அங்கே இருக்கறதை
பார்க்கிறார்..
மூணுமே பார்க்கிறதுக்கு
ஒரே மாதிரி இருந்தாலும்
Rate மட்டும் வேற வேற..,
கஸ்டமர் : இந்த முதல் கிளி எவ்ளோ..?
கடைக்காரர் : 1000 ரூபாங்க..,
இது நல்லா பேசும்.,
நல்லா பாடும்...
கஸ்டமர் : இந்த ரெண்டாவது கிளி..?
கடைக்காரர் : 3000 ரூபாங்க..,
இதுவும் பேசும், பாடும்.,
கம்பியூட்டர் கூட Work பண்ணும்..
கஸ்டமர் : இந்த மூணாவது கிளி..?
கடைக்காரர் : 5000 ரூபாங்க..,
ஆனா., இந்த கிளி என்ன
பண்ணும்னு எனக்கு தெரியாது.
கஸ்டமர் : அப்புறம் எதுக்கு 5000 ரூபா..?
கடைக்காரர் : அந்த ரெண்டு கிளியும்
இதை " பாஸ்" -னு கூப்பிடுதே..
கஸ்டமர் அந்த கிளியவே வாங்கிட்டு
போயிடறார்..
இதை பார்த்திட்டு இருந்த ஒரு மைனா
அந்த ரெண்டு கிளிகளை பார்த்து..
மைனா : அவர் தான் உங்க பாஸா..?
2 கிளிகள் : இல்ல..,
மைனா : பின்ன..?
2 கிளிகள் : அவன் பேரு பாஸ்கர்.
நாங்க செல்லமா " பாஸ்னு "
கூப்பிடுவோம்..
ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------
( அருண், திருச்சி )
IPL - சசி தரூர்..?
இப்பல்லாம்
விளையாட்டு அரசியலா போச்சு.,
அரசியல் விளையாட்டா போச்சு..!!
இன்று ஒரு தகவல் :
---------------------
எல்லா Boss-ம் அறிவாளியாதான்
இருப்பாங்கன்னு தப்பு கணக்கு
போடக்கூடாது..!!
.
. Tweet















