சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 May 2010

" சுறா " அசலா..?














டிஸ்கி 1 :
இது சுறா பட விமர்சனம் அல்ல.,

டிஸ்கி 2 :
நான் விஜய் ரசிகனும் இல்ல.,
அஜித் ரசிகனும் இல்ல..
Jackie Chan ரசிகன்.

விஜய் படம் ரிலீஸானாலும் சரி.,
அஜித் படம் ரிலீஸானாலும் சரி.,
கட்டாயம் அந்த படத்தை
நக்கல் பண்ணி நிறைய SMS
நமக்கு வரும்..

இந்த SMS எல்லாம்
அனுப்பறது யாரு..?

வேற யாரு...,
அவர் படம்னா., இவிங்க அனுப்புவாங்க.,
இவர் படம்னா., அவிங்க அனுப்புவாங்க.,

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி
உண்மைய தான் சொல்லுறாங்க..
இல்லைன்னு சொல்லல..

அதுக்காக படம் பார்க்கமலே
ஒரு முடிவுக்கு வந்திடறதா..?

"சுறா" ஹிட்டு இல்ல மச்சி - " அட்டு "

இப்படி ஒரு SMS
படம் ரிலீஸ் ஆகறதுக்கு
முன்னாடியே வந்தது..

என்னமோ " அசல் " ஆஸ்காருக்கு
Nominate ஆயிருக்கிற மாதிரியும்..,
" சுறா " மட்டும்தான் Waste-ங்கிற
மாதிரியும்.,

எதுக்கு இந்த
மானங்கெட்ட பொழைப்பு..?

கையில காசை வாங்கிட்டு.,
அவங்க நடிச்சிட்டு போயிடறாங்க..
நீங்க ஏன் கைகாசை செலவு
பண்ணி SMS அனுப்பி
எங்களை Tension பண்றீங்க..?

சண்டை கோழி மாதிரி இருந்த
இளய தளபதியும் - தலயுமே
இப்ப சமாதானமா
போயிட்டாங்கல்ல..

நீங்க எப்ப அடங்க போறீங்க..?


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கீர்த்தி, லண்டன்ல இருந்து 60 மைல் தள்ளி )
நான் தோற்கறதுக்காக முயற்சி
பண்ணி., அது நடந்தா..,
நான் தோத்துட்டேனா..?
ஜெயிச்சிட்டேனா..?

சபாஷ்.,
சரியான Time-ல
சரியான கேள்வி..,
இதை தான் English-ல
Match Fixing-ன்னு சொல்லுவாங்க..

( உங்க கேள்விக்கு நான் பதில்
சொல்லிட்டேனா..? இல்லையா..? )

இன்று ஒரு தகவல் :
---------------------

உங்க எதிரிகளுக்கு Respect குடுங்க.,
அவங்க தான் உங்க தப்பை
முதல்ல கண்டுபிடிக்கறாங்க..!
.
.

29 Comments:

priyamudanprabu said...

உங்க எதிரிகளுக்கு Respect குடுங்க.,
அவங்க தான் உங்க தப்பை
முதல்ல கண்டுபிடிக்கறாங்க..!
////////

நல்லாயிருக்கு
இதுக்காக ஒரு ஓட்டு

ரசிகன் said...

தோற்கறதுக்காக முயற்சி பண்ணி தோத்தா அது Match Fixingன்னா...
ஜெயிக்கறதுக்காக முயற்சி பண்ணி அது நடந்தா ...??
அதுவும் Match fixing தானா...

Jackie பேரை ஜாக்கி ஜான் ன்னு எழுதறத விட jackie chan ன்னே எழுதி இருக்கலாம்..
(குறிப்பு: நான் உங்கள் எதிரி அல்ல.. நானும் jackie chan ரசிகன்)

Chitra said...

"மேல போட்டோல யாரு யாருலே?"
" அதுலே, ஜாக்கி சான் சாரும் வெங்கட் சாரும்."
" அப்படியாலே, அசல் சாரும் சுறா சாரும்னு நினைச்சோம்லே."

வெங்கட் said...

@ பிரபு.,

நன்றி..,
அதுக்குதாங்க இப்படி
மூணு பிட்டா போடறது..
ஹும்..,
அப்படி போட்டலும்
மக்கள் 6 Votes தானே போடறாங்க..!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// தோற்கறதுக்காக முயற்சி பண்ணி
தோத்தா அது Match Fixingன்னா...
ஜெயிக்கறதுக்காக முயற்சி பண்ணி
அது நடந்தா ...?? //

அதுக்கு பேருதான் Match..

Jackie Chan-ன்னு மாத்திட்டேன்..
நீங்க சொல்லி கேட்காம இருப்பேனா..!!

Anonymous said...

//நான் தோற்கறதுக்காக முயற்சி
பண்ணி., அது நடந்தா..,
நான் தோத்துட்டேனா..?
ஜெயிச்சிட்டேனா..?//

சூப்பரப்பு!!! ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ???

வெங்கட் said...

@ சித்ரா.,

// " மேல போட்டோல யாரு யாருலே?"
" அதுலே, ஜாக்கி சான் சாரும், வெங்கட் சாரும். " //

ஏங்க இப்படி..?
என்னாலயே இதை தாங்க
முடியலையே..!
இதை Jackie Chan கேள்வி பட்டா
எவ்ளோ Feel பண்ணுவாரு..!!

வெங்கட் said...

@ Annony..,

// ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ??? //

அது என்னமோ தெரியலைங்க..
நம்மகிட்ட கேள்வி கேட்கறவங்க
எல்லாமே இப்படி தான்
யோசிக்கறாங்க..

என்னை ஒரு வழி பண்ணனும்னே
கேள்வி கேட்கிற மாதிரியில்ல
இருக்கு..

மாலா said...

இப்படி எழுதிட்டீங்களே?
அப்புறம் ரெண்டு பேரும்
சமாதானம் ஆகி ஒரே படத்துல
சேர்ந்து நடிச்சா???

எங்க நிலைமைய கொஞ்சம்
யோசிச்சி பார்த்தீங்களா?

அனு said...

//Jackie Chan ரசிகன்.//
இப்படி சொன்னா விட்ருவோமா??

Jackie Chanனோட Computer keyboardல Ctrl கீ இருக்காது..
ஏன் தெரியுமா?
ஏன்னா, அவர் கம்ப்யூட்டர செஞ்சது Bruce Lee இல்லயே (Jackie Chanன control பண்ண Bruce Leeயால மட்டுமே முடியும்)

Jackie Chan ஒரு தடவை வாள் சண்டை போட்டு ஜெயிச்சாராம்..
தோத்தது யாரு தெரியுமா?
வாள்..

ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்..
ஆடிப்போன Jackie பின்னால் எங்க Bruce Lee..

இந்த மாதிரி நிறைய இருக்குதுங்க... மொபைல் நம்பர் குடுங்க.. என் காசு போனாலும் பரவாயில்லை.. எங்க தலைவர் புகழ பரப்பியாகனும்..

டிஸ்கி: நாங்க Bruce Lee FAN

-------------------

//இதை தான் English-ல
Match Fixing-ன்னு சொல்லுவாங்க..//

"இதை தான் தமிழ்ல
கல்யாணம்-ன்னு சொல்லுவாங்க.." அப்படின்னு எழுதிட்டு கடைசி நிமிஷத்துல மாத்துனதா கேள்விப்பட்டேனே. அப்படியா??

ஏதோ நம்மால ஆனது..
நாரயண, நாரயண...

-------------
//உங்க எதிரிகளுக்கு Respect குடுங்க.,//

என் சார்பா வெங்கட்-க்கு ஒரு ப்ளேட் Respect பார்ஸல்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அனு இதுக்கு வெங்கட் எவ்ளவோ தேவலை. அசல் அசல்தான்....

அனு said...

@ரமேஷ்

அட கடவுளே!! நீங்களும் கட்சி மாறிட்டீங்களா?? நான் இப்போ என்ன செய்வேன்?

(இப்படி கமெண்ட் போடுறதுக்கு உங்களுக்கு வெங்கட் எவ்வளவு குடுத்தார்??)

Ahamed irshad said...

//நான் விஜய் ரசிகனும் இல்ல.,
அஜித் ரசிகனும் இல்ல.///

இப்படி சொல்லிப்புட்டு

//என்னமோ " அசல் " ஆஸ்காருக்கு
Nominate ஆயிருக்கிற மாதிரியும்..,
" சுறா " மட்டும்தான் Waste-ங்கிற
மாதிரியும்.,///

இப்படி சொல்றத பார்த்தா.....

எதுவும் நம்புறமாதிரி இல்லையே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அனு இதுக்கு வெங்கட் எவ்ளவோ தேவலை. அசல் அசல்தான்....//

அனு நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க. அசல் அசல்தான் அப்டின்னா , வெங்கட் தான் மொக்கை நீங்க அவரமாதிரி ட்ரை பண்ணாதீங்கன்னு சொன்னேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை

வெங்கட் said...

@ மாலா..,
// ரெண்டு பேரும் சமாதானம் ஆகி ஒரே படத்துல சேர்ந்து நடிச்சா??? //

அப்படி நடந்தா நல்லதுதாங்க..
இப்ப ரெண்டு படம்.,
அப்ப ஒரே படம்..
டார்ச்சர் பாதியா
குறைஞ்சிடுதில்ல..!

வெங்கட் said...

@ அனு.,

// டிஸ்கி: நாங்க Bruce Lee FAN //

இதை கேட்க Bruce Lee
இப்ப இல்ல..
நல்ல வேளை தப்பிச்சீங்க..

இல்லைன்னா கொலை பழி
உங்க மேலலா விழுந்திருக்கும்..??!!

// நீங்களும் கட்சி மாறிட்டீங்களா??
இப்படி கமெண்ட் போடுறதுக்கு
உங்களுக்கு வெங்கட் எவ்வளவு குடுத்தார்? //

( ரஜினி ஸ்டைலில் படிக்கவும்...)
ஹா.. ஹா. ஹா.
இது காசு குடுத்து சேர்த்த்
கூட்டம் இல்லம்மா..,
தானா சேர்ந்த கூட்டம்..

Keerthi Kumar said...

@Venkat - எந்த match ஆனாலும் ஒரு தேதிய fix பன்னிதானே விளையாடுவாங்க..... அதுக்காக எல்லாத்தையும் Match-Fixing ன்னு சொல்லிட முடியுமா?

@Anonymous: யோசிக்கருதுக்கு எல்லாரும் மக்கள் room போட்டுதான் யோசிக்கராங்கன்னா சொல்லுங்க... நான் ஒரு hotel கட்டிடறேன்! இது ஆனா Company போட்டு குடுத்த room ல உக்கர்ந்துதான் எழுதினேன். ஹி ஹி.

Keerthi Kumar said...

// ரெண்டு பேரும் சமாதானம் ஆகி ஒரே படத்துல சேர்ந்து நடிச்சா???

அப்படி நடந்தா நல்லதுதாங்க..
இப்ப ரெண்டு படம்.,
அப்ப ஒரே படம்..
டார்ச்சர் பாதியா
குறைஞ்சிடுதில்ல..! //

இப்படி தமிழ் மொக்கை பட ஹீரோக்கள் எல்லாரும் சேர்ந்து நடிக்க ஆரம்பிச்ச அது சுயம்வரம் Guinness record -அ மிஞ்சிராது?

வெங்கட் said...

@ அஹமத்.,

// எதுவும் நம்புறமாதிரி இல்லையே..! //

நம்புங்க பாஸ்.,
Actually ரெண்டு பேரையும்
சமமாதான் எழுதி இருக்கேன்..
ஒரு நூல் விஐய்க்கு அதிகமா
போன மாதிரி தோணுது..

இங்கே போயி பார்த்தீங்கன்னா
உங்க சந்தேகம் தீர்ந்திடும்..
http://gokulathilsuriyan.blogspot.com/2010/01/t.html

வெங்கட் said...

@ அனு.,
// இதை தான் English-ல
Match Fixing-ன்னு சொல்லுவாங்க..//

// "இதை தான் தமிழ்ல கல்யாணம்-ன்னு
சொல்லுவாங்க.."
அப்படின்னு எழுதிட்டு கடைசி
நிமிஷத்துல மாத்துனதா
கேள்விப்பட்டேனே. அப்படியா??//

உண்மை..,
நானும் உங்க Husband-ம்
பேசிட்டு இருக்கும் போது
அவர் தான் இந்த ஐடியா குடுத்தார்..
நான் சோக கதையெல்லாம்
என் Blog-ல எழுதறதில்லன்னு
கடைசி நிமிஷத்துல மாத்திட்டேன்..
ஹி., ஹி., ஹி..,

வெங்கட் said...

@ கீர்த்தி.,

// எந்த Match ஆனாலும் ஒரு தேதிய
Fix பன்னிதானே விளையாடுவாங்க.....
அதுக்காக எல்லாத்தையும்
Match-Fixing ன்னு சொல்லிட முடியுமா? //

ஹா., ஹா., ஹா.

எப்படிப்பா இப்படி..!!
லண்டன்ல இருந்து 60 மைல்
தள்ளி இருக்கும்போதே இப்படியா..?
நல்லவேளை லண்டன் தப்பிச்சது..

ஆமா.., உங்க ரவுசு தாங்காம
ஓபாமா Spl Order போட்டு உங்களை
அமெரிக்கவுல இருந்து துரத்திட்டாராமே..!!
உண்மையா..??

வெங்கட் said...

@ ஸ்டார்ஜன்..,

ரொம்ப நன்றிங்க..,

Anonymous said...

எதுக்கு இந்த
மானங்கெட்ட பொழைப்பு..?

கையில காசை வாங்கிட்டு.,
அவங்க நடிச்சிட்டு போயிடறாங்க..
நீங்க ஏன் கைகாசை செலவு
பண்ணி SMS அனுப்பி
எங்களை Tension பண்றீங்க..?

...வெங்கட் சார் இதை எழுதிய உங்களை பாராட்டுகிறேன். பெருமைப்படுகிறேன். உலகில் மனிதன் சிந்திப்பதற்க்கும் செயல்படுவதற்க்கும் நிறைய இருகின்றன...அதவிட்டுவிட்டு இதுதான உலகமகா பிரச்சனையாக் ஏந்தான் இப்படி கூத்தாடுறாங்களோ.....நீங்கள் கூறியமாதிரி காசுக்கு அவர்கள் நடிக்கிறார்கள்.எதோ பொழுது போகலைனா ஏதோபார்த்தோமா அத்தோடு மறந்தோமா என்றில்லாமல்...ஏன் இப்படி முட்டாளாகனும் நாம்..நல்ல எழுதுங்கப்பா...இதுக்கு யோசிக்க ரும்மெல்லாம் தேவையில்லை..தேவை நல்சிந்தனை.பொ.........

Anonymous said...

//
/ "இதை தான் தமிழ்ல கல்யாணம்-ன்னு
சொல்லுவாங்க.."
அப்படின்னு எழுதிட்டு கடைசி
நிமிஷத்துல மாத்துனதா
கேள்விப்பட்டேனே. அப்படியா??//

உண்மை..,
நானும் உங்க Husband-ம்
பேசிட்டு இருக்கும் போது
அவர் தான் இந்த ஐடியா குடுத்தார்..
நான் சோக கதையெல்லாம்
என் Blog-ல எழுதறதில்லன்னு
கடைசி நிமிஷத்துல மாத்திட்டேன்..
ஹி., ஹி., ஹி..,//

சுனாமிகா கடியே தாங்க முடியாது. இதில அவங்க ஹஸ்பன்டோட கூட பேசுறீங்களா? என்ன கொடுமை.

அனு said...

@அனாமிகா

//சுனாமிகா கடியே தாங்க முடியாது. இதில அவங்க ஹஸ்பன்டோட கூட பேசுறீங்களா? என்ன கொடுமை.//

ஆமாங்க.. வெங்கட் கூட பேசினதுக்கு அப்புறம் தான் என் கணவருக்கு நான் எவ்வளவோ betterனு புரிஞ்சிருக்கு...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பாஸ்... அதுவும் matchfixing பதில் கலக்கல்

Anonymous said...

//
ஆமாங்க.. வெங்கட் கூட பேசினதுக்கு அப்புறம் தான் என் கணவருக்கு நான் எவ்வளவோ betterனு புரிஞ்சிருக்கு... //

ha ha ha ha. I cant stop laughing.

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

எதிரிகளை மதிக்கனூம் - நல்ல தத்துவம்யா

அப்புறம் சுறா பாத்தாச்சா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா