இரண்டாம் வகுப்பு படிக்கும்
என் மகன் பள்ளி
ஆண்டுவிழாவில்
பேசியது..
தலைப்பு : தேச ஒற்றுமையில்
குழந்தைகளின் பங்கு..
( இந்த தலைப்பே எனக்கு கொஞ்சம் Confusion.,
Atleast மாணவர்களின் பங்குன்னாவது
கொடுத்து இருக்கலாம்..! )
O.K Speech-க்கு போலாம்...
" எல்லாரும் நல்லவங்கள
பார்க்க தான் ஆசைப்படறாங்க..,
நல்லவங்களா வாழ ஆசைப்படல.. "
அதுதான் இப்ப பிரச்சினையே..!
நம்ம நாடு ஒத்துமையா இருக்கா..?
இருக்குகுகுகு....,
ஆனா இல்ல்ல்ல...
நம்ம நாடு மத்த நாடுங்க மாதிரி
யுத்த பூமியா இல்ல.. - ஆனாலும்
காஷ்மீர்., குஜராத்., காவேரி
இந்த மாதிரி பிரச்சினைங்க
எல்லாம் இருக்கு..!
" மீனுன்னா முள்ளு இருக்கும் - அதையே
பாத்துட்டு இருந்தா மீனை எப்ப சாப்பிடறது..?
நாடுன்ன பிரச்சினை இருக்கும் - அதை பத்தியே
பேசிட்டு இருந்தா எப்ப சரி பண்றது..? "
அதை சரி பண்ண நம்மள மாதிரி
குழந்தைகளால முடியுமா..?
" முடியும்..! "
காந்திஜி கூட குழந்தையாத்தான் இருந்தாரு..,
அப்புறமா தான் மகாத்மாவா ஆனாரு..!
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி-ன்னு
அப்பவே MGR சொல்லிட்டாரு...
நம்ம நாட்ல குழந்தைங்க கொஞ்சம்
பேருதான்..
ஆனா..,
எண்ணிக்கை தான் முக்கியம்னா.,
தேசிய விலங்கா புலி இருக்க முடியாது
எலி தான் இருக்கும்..!
குழந்தைங்க.., நல்ல குழந்தைங்களா
மாறுறது School-ல தான்..
நமக்கு..,
கடவுள் கொடுத்த Gift - நம்ம Parents.,
Gift-ஆ வந்த கடவுள் - நம்ம Teachers..!
" அன்னையும்., பிதாவும் முன்னறி தெய்வம்..! "
" ஒன்றே குலம்., ஒருவனே தேவன்..! "
" சாதிகள் இல்லையடி பாப்பா...! "
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்..! "
இதையெல்லாம் அவங்க தான் நமக்கு
சொல்லி தர்றாங்க..!
நல்ல மாணவன் தான்
நல்ல குடிமகனா வரமுடியும்..!
Teachers மட்டும் இல்லைன்னா
நம்ம நிலைமை என்ன ஆயிருக்கும்...?
" Building Strong.., Basement Weak "
நம்ம நாடு ஒத்துமையா இருக்க
ஒரே வழி..,
படிச்சி முடிச்சிட்டாலும்.,
School-ல கத்துகிட்டதை என்னிக்குமே
மறக்க கூடாது..
" Aeroplane மேல வந்திடுச்சீன்னு
Engine-ஐ OFF பண்ணலாமா..? "
இதை தான் திருவள்ளூவர்..
" கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக " - ன்னு
சொல்லுறாரு..
நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்..
Punch Dialogue எல்லாம் கடைசில
தான் சொல்லணும்..
நாங்க நினைச்சா...
இந்த தேச ஒத்துமைக்கு மட்டுமில்ல..,
உலக ஒத்துமைக்கே பாடுபடுவோம்..
" எவ்வள்வோ பண்ணிட்டோம்..!
இதை பண்ண மாட்டோமா...??!! "
பின் குறிப்பு :
பேசிய பிறகு..,
சீனியர் Students சாக்லேட்
வாங்கி
தர்றாங்க..,
Teachers-லாம் முத்தம் குடுக்கறாங்க
( என் பையனுக்கு ).., - ஆனா..,
Prize மட்டும் 2nd Prize தான்
தர்றாங்க...
டிஸ்கி : மேலும் சில பேச்சு போட்டிகள்..
பேச்சுப்போட்டி - 1
பேச்சுப்போட்டி - 3
பேச்சுப்போட்டி - 4
பேச்சுப்போட்டி - 5
பேச்சுப்போட்டி - 6
.
.