சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 February 2012

சிங்கத்தை சிரிக்க சொல்லி....

நாங்க ஏற்காடு போனப்ப..
அங்கே இருக்குற Forest-ஐ சுத்தி
பார்க்கலாம்னு ஆசையா போனா

அங்கே ஒரு போர்டு வெச்சி இருந்தது..

" அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி "

அதை பாத்ததும் என் Wife..

" வேணாங்க.. ரிஸ்க் எடுக்காதீங்க..! "

" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "

" பாத்துங்க.. அந்த புலிக்கும் உங்களை
பாத்ததும் மீல்ஸ் சாப்பிட ஆசை வந்துட
போகுது..!? "

" இப்படி சொன்னா.. நாங்க பயந்துடுவோமா..?!! "

" இல்லையா பின்ன..?!! "

" நோ சான்ஸ்.! "

" சரி.., திடீர்னு நம்ம முன்னாடி ஒரு
சிங்கம் வந்துட்டா.. அப்ப என்ன
பண்ணுவீங்க..?! "

" சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப்பேன்..! "


" அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேருக்கு நேரா பாத்தா
பயப்பட மாட்டீங்க..?! "

" நமக்கு எப்ப கல்யாணம் ஆச்சோ..
அப்ப இருந்தே அதுக்கெல்லாம்
நான் பயப்படறது இல்ல..! "

" என்னா சொன்னீங்க... கிர்ர்ர்ர்ர்...."
( ஐயோ.. புலி மாதிரியே உறுமறாளே...! )

" கூல்.. கூல்... கல்யாணத்துக்கு அப்புறம்
நீ என்னை மாவீரனா மாத்திட்டேன்னு
சொல்ல வந்தேன்..! "

" ம்ம்.. அந்த பயம் இருக்கணும்..! "

( உஸ்ஸப்பா.. உசுரை காப்பாத்திக்க
எப்படி எல்லாம் டிரிக்ஸ் பண்ண
வேண்டி இருக்கு..!! )

-----------------------------------------------------------------------------

" நன்றி.., நன்றி.. நன்றி..! "

எதுக்கு இப்ப " நன்றி " னு பார்க்கறீங்களா..?!!

எப்படியும் கீழே இருக்குற மேட்டரை
படிச்சிட்டு நீங்கல்லாம் எனக்கு வாழ்த்து
சொல்ல போறீங்க...

அதான் அட்வான்சா இருக்கட்டுமேன்னு....
ஹி., ஹி., ஹி...

இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு...


( கரடியை வீரவேசத்துடன் அடக்க துடிக்கும்
என் குட்டி பையன் கோகுல்.! )
.
.

25 Comments:

NAAI-NAKKS said...

Naam vangara 5,,,,10-kum
intha vilambaram......
THEYVAITHAN.....!!!!!
:)
:)
:)

மனசாட்சி said...

படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு - வாழ்த்துக்கள்

Mohamed Faaique said...

உங்கள பாத்து ஊரே சிரிக்கிரதுங்க்ரதுக்காக சிங்கமும் சிரிக்கும்னு நினைக்கிறது கொஞ்சம் ஓவர் கான்பிடேன்ஸ் போல இருக்கே..

Mohamed Faaique said...

///
" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "
///

சாப்பாட்டை பார்த்த புலி வர்றது கூட தெரியாது'னு சொல்லுங்க...

Mohamed Faaique said...

///" அப்ப நிஜமாவே சிங்கம், புலியை
எல்லாம் நேருக்கு நேரா பாத்தா
பயப்பட மாட்டீங்க..?! "////

கொஞ்சம் கூட பயப்பட மாட்டாரு.. ஆனால் ஒரு கண்டிஷன் "சிங்கமோ புலியோ..அது கூண்டுக்குல இருக்கணும்

Mohamed Faaique said...

///" நன்றி.., நன்றி.. நன்றி..! "

எதுக்கு இப்ப " நன்றி " னு பார்க்கறீங்களா..?!!///

இவ்ளோ நேரம் இத படிச்சோமே.... அதுக்குத்தானே.. உயிரைப் பணயம் வச்சி செஞ்ச வேலையாச்சே...

Mohamed Faaique said...

///இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு...///

ஆனந்த விகடன் முன்னைய மாதிரி இப்போ தரம் இல்லைன்னு சொல்லும் போதே டவுட்டா இருந்தது...இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு..;

ViswanathV said...

// அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி

யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே;

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" ஹேய்...நாங்கல்லாம் புலிக்கு பக்கத்துல
உக்காந்து புல் மீல்ஸ் சாப்பிடறவிங்க..! "/////

நாங்கள்லாம் புளியவே கரைச்சி புல் மீல்ஸ்ல மிக்ஸ் பண்ணி சாப்பிடுறவிங்க தெரியும்ல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///" சிங்கத்தை சிரிக்க சொல்லி ஒரு
போட்டோ எடுப்பேன்..! "/////

அதெல்லாம் நீங்க சொல்லவே வேணாம், அதுவே சிரிச்சிட்டு போய்டும்.... உங்கள கைப்புள்ளைகள எல்லாம் சிங்கம் சீண்டிக்கூட பார்க்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டு ரிஸ்க் எடுக்கிறாராம் ரிஸ்க்கு...... போங்க போய் ரஸ்க் சாப்புடுங்கப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்த வார " என் விகடன் "ல ( 8.2.2012 )
நான் எடுத்த போட்டோ ஒண்ணு
பிரசுரமாகி இருக்கு.../////

இப்ப ஒத்துக்கிறேன், நீங்க பெரிய அப்பாட்டக்கர்தான்......

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்க மகன் உண்மையில் வீரனாக இருப்பன் போல

சாதாரணமானவள் said...

ஹே... அந்த போட்டோவை பார்த்தேன்.. வெங்கடப்பன் நீங்க தானா? இளம்பிள்ளைலயா இருக்கீங்க?

//அங்கே ஒரு போர்டு வெச்சி இருந்தது..

" அபாயம்..! காட்டு விலங்குகள்
நடமாடும் பகுதி "//நீங்க போனதுக்கு அப்பறம் வெச்ச போர்டா? முன்னாடியே இருந்துச்சா?

சிரிப்பு போலீஸ்-ரெம்ப கேவலமானவன் (சத்தியமா) said...

சிங்கத்துக்கு சிரிக்க தெரியாதுன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

Lakshmi said...

வாழ்த்துகள். படங்கள் எல்லாமே நல்லா இருக்கு.

Madhavan Srinivasagopalan said...

பாத்து.. பாத்து..
சொல்லாம கொள்ளாம அந்தக் கரடி சைடுல நகந்துடிச்சின்னா.. உங்க பையன் முன்னாடி விழுந்துடுவான்..

ViswanathV said...

பையன் அழகா அறிவாளியாத் தெரியறானே,
அம்மா மாதிரியோ ?

ஹாலிவுட்ரசிகன் said...

சரி ... உங்க நன்றிக்காக ஒரு வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.

சிவசங்கர். said...

Congrates.

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// Naam vangara 5,,,,10-kum
intha vilambaram......
THEYVAITHAN.....!!!!! //

நமக்கெதுக்குங்க விளம்பரம்..?!!
எல்லாம் விகடனுக்க்காக தான்..

நம்ம போட்டோ ஒன்னு புக்ல வந்தா
சர்குலேஷன் ஜாஸ்தியாகும்ன்னு
கெஞ்சி கேட்டாங்க.. சரின்னு குடுத்தேன்.!

வெங்கட் said...

@ Mohamed.,

// சாப்பாட்டை பார்த்த புலி வர்றது கூட
தெரியாது'னு சொல்லுங்க... //

சாப்பிட உக்காந்தாப்புறம் புலியாவது.,
சிங்கமாவது.. பங்குக்கு யாரும் வர்றதுக்குள்ள
சாப்பிட்டு முடிக்கணும்..!!
# சிரிப்பு போலீஸ் அட்வைஸ்

வெங்கட் said...

@ Mohamed.,

// கொஞ்சம் கூட பயப்பட மாட்டாரு..
ஆனால் ஒரு கண்டிஷன் "சிங்கமோ புலியோ..
அது கூண்டுக்குல இருக்கணும் //

No. No.. சிங்கம் . புலி ரெண்டும்
கூண்டுல இல்லாம., காட்டுல திரிஞ்சிட்டு
இருந்ததை நான் நேர்ல பாத்து இருக்கேன்..

( ஹி., ஹி., Lion Safari.. கம்பி போட்ட Van )

வெங்கட் said...

@ விஸ்வநாதன்.,

// யானை வரும் பின்னே; மணி ஓசை
வரும் முன்னே; //

காட்டில இருக்குற யானைக்கெல்லாமா
மணி கட்டி இருக்காங்க..!?!

samhitha said...

:) cute comedy
aama adhu epdi unmaiyana karadi kuda sandai podura madhiriye pose kudukuraan gokul
nice photos and post

சேலம் தேவா said...

தல..அந்த அமேசான் காட்ல அணகோண்டாவ போட்டோ எடுத்திங்களே..?! அத எப்ப போடுவீங்க..?! :)

விகடனில் புகைப்படம் வந்ததுக்கு வாழ்த்துகள் தல...