சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

26 March 2012

இது எந்த ஊரு Dictionary..?? Part - 3


* மூட நம்பிக்கை : " Allout " போட்டால் கொசு
வராது என்று நம்புவது.


* Beauty Parlour : அழகான பெண்களை.,
சுமாரானவர்களாக மாற்றும் இடம்..!


* பிளாக்கர் : பதிவு போடும் அன்னிக்கு ( மட்டும் )
மற்றவர் பிளாக்குக்கும் போயி கமெண்ட் ,
ஓட்டு போடுபவர்.!


* கூட்டணி கட்சி : தேர்தலுக்கு பிறகு முதல் எதிரி


* இடைதேர்தல் : கம்மியா கரண்ட் போகும்
தொகுதியில் நடப்பது.


* சிகப்பழகு க்ரீம் : சிகப்பான பொண்ணுக்கு
கருப்பான மேக்கப் போட்டு விளம்பர படம்
எடுக்கும் கம்பெனி.பின் டிஸ்கி :  நம்ம ப்ளாக்ல 400வது பாலோயராத்தான்
சேரணும்னு 6 மாசம் வெயிட் பண்ணி இன்னிக்கு
கரெக்ட்டா 400வது Follower-ஆ Join பண்ணின
கஸ்தூரி அவர்களின் கடமை உணர்ச்சியை
பாராட்ட வார்த்தைகளே இல்லை..

.
.

21 Comments:

NAAI-NAKKS said...

"இது எந்த ஊரு Dictionary..?? Part - 3"/////

நம்ம பாட்டு தான்....

Lakshmi said...

இப்ப்லாம் எல்லா ஊரு டிஷ்னரியுமே இப்படித்தான் இருக்கு. ஹா ஹா

Madhavan Srinivasagopalan said...

// பிளாக்கர் : பதிவு போடும் அன்னிக்கு ( மட்டும் )
மற்றவர் பிளாக்குக்கும் போயி கமெண்ட் ,
ஓட்டு போடுபவர்.! //


நீங்க பிளாகர் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..
பின்ன.. இன்னைக்கு என்னோட பிளாகுல உங்க கமென்ட் / ஓட்டு வரவே இல்லையே !

MANO நாஞ்சில் மனோ said...

நடத்துய்யா ராஜா.....!!!

மனசாட்சி™ said...

அட.... ம்

விஸ்வநாத் said...

//" Allout " போட்டால் கொசு
வராது என்று நம்புவது.//

Allout பெஸ்ட் ப்ராண்டுன்னு செலக்ட் ஆகியிருக்குற சமயத்துல இப்படிஎல்லா திட்டி ஒரு பதிவு போட்டா கமிஷன் கிடைக்கும்னு உங்களுக்கு சொன்னது யாரு ?

விஸ்வநாத் said...

//பிளாக்கர் : பதிவு போடும் அன்னிக்கு ( மட்டும் )
மற்றவர் பிளாக்குக்கும் போயி கமெண்ட் ,
ஓட்டு போடுபவர்.!//

நல்லா பாத்துக்கோங்க, நானு பிளாக்கர், பிளாக்கர், பிளாக்கர்

ஆரூர் மூனா செந்தில் said...

நல்லாப் பார்த்துக்கங்க நான் இன்னைக்கு பதிவு போடல போடல போடல.

Mohamed Faaique said...

//பிளாக்கர் : பதிவு போடும் அன்னிக்கு ( மட்டும் )
மற்றவர் பிளாக்குக்கும் போயி கமெண்ட் ,
ஓட்டு போடுபவர்.!//

ஆஹா நம்ம திட்டம் புரிஞ்சிடுச்சோ.....

வெங்கட் said...

@ Kasthuri.,

நம்ம ப்ளாக்ல 400வது பாலோயராத்தான்
சேரணும்னு 6 மாசம் வெயிட் பண்ணி
இன்னிக்கு கரெக்ட்டா 400வது Follower-ஆ
Join பண்ணின கஸ்தூரி அவர்களின்
கடமை உணர்ச்சியை பாராட்ட வார்த்தைகளே
இல்லை..

:)

Kasthuri said...

@ Venkat

மிக்க நன்றி வெங்கட்.. காத்திருபதிலும் ஒரு சுகம் தான். அந்த சுகம் இங்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. :)

வெங்கட் said...

@ மாதவன்.,

// நீங்க பிளாகர் இல்லை.. இல்லை..
இல்லவே இல்லை.. பின்ன.. இன்னைக்கு
என்னோட பிளாகுல உங்க கமென்ட் /
ஓட்டு வரவே இல்லையே ! //

ஹி., ஹி., ஹி... அவசரப்படறீங்களே..

சாயந்தரம் வரை வெயிட் பண்ணி
பாத்துட்டு.. யார் யாரெல்லாம் வரலையோ
அவங்க ப்ளாக்குல போயி கமெண்ட் போட்டு
இழுத்துட்டு வருவோம்ல..

இதெல்லாம் தொழில் ரகசியம்..
வெளியே சொல்லப்படாது..

வெங்கட் said...

@ விஸ்வநாத்.,

// Allout பெஸ்ட் ப்ராண்டுன்னு செலக்ட்
ஆகியிருக்குற சமயத்துல இப்படி எல்லா
திட்டி ஒரு பதிவு போட்டா கமிஷன்
கிடைக்கும்னு உங்களுக்கு சொன்னது யாரு ?//

பூச்சி மாதிரி இருந்த கொசு எல்லாம்
குருவி சைசுக்கு வளர்ந்துடுச்சில்ல..
அதனால " சிறந்த ஊட்டசத்து மிக்க பானம்னு "
செலக்ட் பண்ணியிருப்பாங்களோ.?! # டவுட்டு

middleclassmadhavi said...

:-))
400 - க்கு வாழ்த்துக்கள்!

வெங்கட் said...

@ ஆரூர் மூனா.,

// நல்லாப் பார்த்துக்கங்க நான் இன்னைக்கு
பதிவு போடல போடல போடல. //

நான் உங்களை சொல்லலையே..!
ஆமா நீங்க நேத்து ஒரு பதிவு
போட்டீங்கல்ல...!

:)

வெங்கட் said...

@ Mohamed Faaquie.,

// ஆஹா நம்ம திட்டம் புரிஞ்சிடுச்சோ... //

ஆமா இவரு அமெரிக்க ஜனாதிபதியாக
திட்டம் தீட்டி வெச்சி இருந்தாரு.. அது
எல்லோருக்கும் புரிஞ்சிடிச்சாக்கும்..
பீல் பண்றாரு..

வெங்கட் said...

@ கஸ்தூரி.,

// காத்திருபதிலும் ஒரு சுகம் தான். //

நல்லவேளை 1000-வது பாலோயராதான்
சேருவேன்னு அடம் பிடிக்காம போனீங்க..!

:)

ஆரூர் மூனா செந்தில் said...

/// வெங்கட் said...


நான் உங்களை சொல்லலையே..!
ஆமா நீங்க நேத்து ஒரு பதிவு
போட்டீங்கல்ல...! ///

அது போன வாரம், இது இந்த வாரம்.

பொன்.செந்தில்குமார் said...

//கூட்டணி கட்சி : தேர்தலுக்கு பிறகு முதல் எதிரி
* இடைதேர்தல் : கம்மியா கரண்ட் போகும்
தொகுதியில் நடப்பது.//

நம்ம நடமாடும் Oxford Dictionary,
சேலத்து சிங்கம், ஐயா DR.வெங்கட் வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!!

DREAMER said...

நீண்ட நாளுக்கு பிறகு உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது... டிக்சனரி அருமை... இனி நானும் உங்கள் டிக்ஷனரியில் மூன்றாவது கேட்டகரியில்...

-
DREAMER

வெங்கட் said...

@ Dreamer.,

நீங்க " அம்புலி 3D " டைரக்டர் தானே..?
வருக வருக...