சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 August 2012

தேங்காய் எடு.. திண்டாடு..!!

ராத்திரி 9 மணிக்கு கூட ரோட்ல தேங்காவை 
டமார், டமார்னு போட்டு உடைக்கறாங்க.. 
( பாவம் அவங்களுக்கு இப்பதான் மெசேஜ் 
வந்ததுச்சி போல..! )

என்ன புரியாம பார்க்கறீங்க...? 
ஓ..! உங்களுக்கு மேட்டரே தெரியாதா..?  

அட., கிருஷ்ணகிரில ஒரு குழந்தை பிறந்த 
அரைமணி நேரத்துல பேசிச்சாம்.. 

அதுவும் " 4000 குழந்தைகளை காவு 
வாங்குவேன்னு " சபதம் வேற போட்டுச்சாம்.. 
( பெரிய ரவுடி குழந்தையா இருக்குமோ..! )

அதுக்கு " வீட்ல இருக்குற குழந்தைளுக்கு 
திருஷ்டி கழிச்சி தேங்கா வெச்சி உடைக்கணும்..! " 
இதான் பரிகாரம்.
ஏன் சிரிக்கறீங்க..? நம்ப முடியலையா..? 

என்னா பாஸ் நீங்க.. 
" பிள்ளையார் சிலை பால் குடிக்குதுன்னு " 
சொன்னப்ப பால் டம்பளரை எடுத்துட்டு 
ஓடினோம்.. 

அப்ப உங்களுக்கு சிரிப்பு வரலை.. 

" அக்கா , தங்கச்சிகளுக்கு பச்சை கலர்ல 
சேலை எடுத்து தரணும்னு " சொன்னப்ப.. 
எடுத்து தந்தோமே.. 

அப்ப சிரிப்பு வரலை..

இப்ப மட்டும் உங்களுக்கு சிரிப்பு வருதாக்கும்..?!

ஆனா ஒண்ணு பாஸு.. 

நல்லவேளையா பரிகாரம் சொன்னவன் 
தேங்காயை உடைங்கன்னு மட்டும் சொன்னான்.. 

தப்பி தவறி அவங்க அவங்க புருஷன் 
தலையில உடைங்கன்னு சொல்லி இருந்தா 
என்ன ஆவறது..?!! 

அவ்வ்வ்..!!

டிஸ்கி 1 : இது நம்ம ப்ளாக் வெர்சன்.. 

டிஸ்கி 2 : கொஞ்சம் டெவலப் செய்து 
விகடனுக்கு எழுதியது படிக்க க்ளிக்.... 

நான் தான் அப்பவே சொன்னேன்ல.. 
.
.

13 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி எழுதி என் பேரை காப்பத்திட்டீங்க

பட்டிகாட்டான் Jey said...

சூப்பர்.

// அக்கா , தங்கச்சிகளுக்கு பச்சை கலர்ல சேலை எடுத்து தரணும்னு " சொன்னப்ப.. எடுத்து தந்தோமே..
அப்ப சிரிப்பு வரலை.. //

நாலு அக்கா எடுத்து தந்துட்டு சிரிக்கவேறயா?... பர்ஸ் காலி... :(

வரலாற்று சுவடுகள் said...

தலைப்பு செம :D

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// வெங்கட் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி
எழுதி என் பேரை காப்பத்திட்டீங்க //

நீங்க சொல்லி குடுத்த மாதிரியா..?!

நான் என்ன சமையல் குறிப்பா எழுதி
இருக்கேன்..? இது விழிப்புணர்வு பதிவுப்பா..

வெங்கட் said...

@ ஜெய்.,

// நாலு அக்கா எடுத்து தந்துட்டு சிரிக்கவேறயா?...
பர்ஸ் காலி... :( //

திருப்பி கலெக்ட் பண்ணிட்டா போச்சு..!

சகோதரிகள் எல்லாம் சகோதரர்களுக்கு
அரைபவுன்ல மோதிரம் போடணும்னு
புதுசா ஒன்னை கெளப்பி வுடுவோமா..?!!

ஆமா.. உங்க வூட்டுக்கார அம்மாவுக்கு
எத்தனை அண்ணன் தம்பி..?

வெங்கட் said...

@ வரலாற்றி சுவடுகள்..!

// தலைப்பு செம :D //

தலைப்பு விகடன்ல வெச்சிக்கிட்டாங்க..
அதையே நானும் Use பண்ணிகிட்டேன்.

ராஜி said...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// வெங்கட் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி
எழுதி என் பேரை காப்பத்திட்டீங்க //

நீங்க சொல்லி குடுத்த மாதிரியா..?!

நான் என்ன சமையல் குறிப்பா எழுதி
இருக்கேன்..? இது விழிப்புணர்வு பதிவுப்பா..
>>
அப்படியா! சொல்லவே இல்லை

பட்டிகாட்டான் Jey said...

// ஆமா.. உங்க வூட்டுக்கார அம்மாவுக்கு
எத்தனை அண்ணன் தம்பி..? //

ஒரே ஒரு தம்பி , அவனையும் சீதனமா கூட அனுப்பிச்சிட்டாங்க...

மனசாட்சி™ said...

திாுப்புரில்
24/08/2012
நடந்த
சம்பவம்
இப்ப
கிாுஷ்னகிரியா

பெசொவி said...

//தலைப்பு விகடன்ல வெச்சிக்கிட்டாங்க..
அதையே நானும் Use பண்ணிகிட்டேன்.//

பெரிய எழுத்தாளரா மாறின பிறகு உண்மையை ஒத்துக்க ஆரம்பிச்சுட்டீங்க
(இதுக்கு முன்னாடிலாம் இவரு பண்ணின் அலும்பு இருக்கே, அப்பப்பா.........!)
:))

However I enjoyed the post as usual!

TERROR-PANDIYAN(VAS) said...

ராஜி

//அப்படியா! சொல்லவே இல்லை//

அது எல்லாம் விழிச்சிட்டு இருந்தா தான் தெரியும்.

Easy (EZ) Editorial Calendar said...

அப்படியா சொல்லவே இல்ல...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பால.சரவணன் said...

நல்ல இருக்கு வாழ்த்துக்கள்