சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 March 2012

சச்சின் 100-வது சதம் ( Behind the Scene )

சச்சின் 100வது செஞ்சுரி
அடிக்காத வரை " இப்ப அடிப்பாரா.? " ,
"அப்ப அடிப்பாரான்னு.? "
அதை பத்தியே பேசிட்டு இருந்தாங்க..

ஆனா அடிச்சப்புறம்..

" ப்பூ.., போயும் போயும்
பங்களாதேஷ்கிட்ட தானே அடிச்சார்னு "
இளக்காராம பேசறாங்க..

என்ன பண்றது.. அந்த மேட்ச்க்கு
முன்னாடி தானே அவரு எனக்கு
போன் பண்ணி Tips கேட்டாரு..
நானும் குடுத்தேன்..!

அந்த Tips-ஐ ஏன் அதை ஆஸ்திரேலியாவுல
இருக்கும் போது குடுக்கலைன்னு
நீங்க குறுக்கால பூந்து கேக்க வர்றது
எனக்கு புரியுது..

என்ன பண்றது.. அப்ப என் போன்ல
Balance இல்லயே..

" Incoming Attend பண்றதுக்கு எதுக்கு
Balance-னு.? " அடுத்த கேள்வி
கேப்பீங்களே.. தெரியும்..!!

சச்சின் எப்பவும் எனக்கு
மிஸ்டு கால் தான் குடுப்பாரு..
நான் தான் திருப்பி கூப்பிடுவேன்..
போதுமா.. உஸ்ஸப்பா....

ம்ம்.. அப்புறம் சச்சினுக்கு நான் குடுத்த
Tips ரொம்ப ரகசியமானது. வெளில
சொல்லக்கூடாது.. அதனால இங்கே
Bracket-ல போடறேன்..

( " உங்க ஹெல்மெட்ல BCCI Logo
முக்கால் இஞ்ச் தள்ளி இருக்கு.. அதை
ஒரு இஞ்ச் தள்ளி ஒட்டிக்கோங்க..! " )

ஏன் எல்லோரும் என்னை முறைக்கற
மாதிரியே பார்க்கறீங்க..?

ஓ... சந்தேகமா இருக்கா...?

அப்ப சச்சின் செஞ்சுரி அடிச்சப்புறம்
என்ன பண்ணார்னு நீங்களே பாருங்க...


அப்புறம் முந்தா நேத்து நம்ம
கோலி கூட போன் பண்ணியிந்தாப்ல..
( ஹி., ஹி., ஹி..!)
.
.

15 Comments:

R.CHINNAMALAI said...

நண்பா முடியலை...நம்ம பதிவுலக நண்பர்களுக்கும் 100 பதிவு போடா டிப்ஸ் கொடு நண்பா ரொம்ப helpfulலா இருக்கும்...

ராஜி said...

ஸ் அபா முடியலை

Madhavan Srinivasagopalan said...

யப்பா இந்த கொசுதொல்ல தாங்கல...
சீக்கிரம் மருந்தடி நாராயணா

வெங்கட் said...

@ சின்னமலை.,

// நம்ம பதிவுலக நண்பர்களுக்கும் 100 பதிவு
போடா டிப்ஸ் கொடு நண்பா ரொம்ப
helpfulலா இருக்கும்... //

அதெல்லாம் முன்னாடியே கொடுத்தாச்சே...
என்னோட100-வது பதிவை போயி பாருங்க..
வெளங்கிரும்.. :-)

http://gokulathilsuriyan.blogspot.in/2010/06/century.html

NAAI-NAKKS said...

உங்களுக்கு சச்சினை INTRO பண்ணது நான்தான் என்பதை சொல்லாம விட்டுடீங்க பார்த்தீங்களா....???

நன்றி மறப்பது......?????

விடுங்க...சொல்லி காட்டக்கூடாது....
:))))))))))

Jayadev Das said...

இந்த போட்டோவெல்லாம் பார்த்தா நீங்க சொல்வதை யாரும் டுபாக்கூர்னே சொல்ல முடியாது... ரொம்ப பொருத்தம்....ஹா..ஹா..ஹா...

விஸ்வநாத் said...

சச்சினுக்கு டிப்ஸ் தரீங்க,
கோழிக்கு டிப்ஸ் தரீங்க,
அதெல்லா சரி,
இந்த டிப்ஸ் எல்லா சேத்து வச்சிருந்தா, எனக்கு குடுக்க வேண்டிய பணத்த குடுத்திருக்கலாம்லே;

விஸ்வநாத் said...

// என் போன்ல Balance இல்லயே.//

அந்த போனே உங்களோடது இல்லேன்னு பேசிக்கறாங்க ?

வெங்கட் said...

@ மாதவன்.,

// யப்பா இந்த கொசுதொல்ல தாங்கல...
சீக்கிரம் மருந்தடி நாராயணா //

" ப்ளாக் எழுதற பையனுக்கு இவ்ளோ
அறிவான்னு..?! " உங்களுக்கு எல்லாம்
என் மேல பொறாமைன்னு நினைக்கிறேன்.

ஹி., ஹி., ஹி..!

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// உங்களுக்கு சச்சினை INTRO பண்ணது
நான்தான் என்பதை சொல்லாம
விட்டுடீங்க பார்த்தீங்களா....???

இதை நான் மறப்பேனா சார்..

அது 1989-னு நினைக்கிறேன்..
பாகிஸ்தான் டூர்.. நாம டிவில மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது சொன்னீங்களே...

" இவர் தான் சச்சின்..! "

marimuthu said...

ஸ்ஸ்ஸ்...கடவுளே...தாங்கமுடியலே...

வெங்கட் said...

@ ஜெயதேவ தாஸ்.,

// இந்த போட்டோவெல்லாம் பார்த்தா
நீங்க சொல்வதை யாரும் டுபாக்கூர்னே
சொல்ல முடியாது... ரொம்ப பொருத்தம்... //

நன்றி.. நன்றி...

அடுத்த தடவை சச்சினுக்கு போன்
பண்ணும்போது உங்களுக்கு
கான்ப்ரென்ஸ் கால் போடறேன்..

:)

வெங்கட் said...

@ விஸ்வநாத்,

// சச்சினுக்கு டிப்ஸ் தரீங்க,
கோழிக்கு டிப்ஸ் தரீங்க,
அதெல்லா சரி, இந்த டிப்ஸ் எல்லா
சேத்து வச்சிருந்தா, எனக்கு குடுக்க
வேண்டிய பணத்த குடுத்திருக்கலாம்லே //

சச்சின், கோலி எல்லாம் சரவண பவன்
சர்வர்னு நினைச்சீங்களா..?

சரி முதல்ல உங்களுக்கு எந்த பேங்க்ல
அக்கவுண்ட் இருக்குன்னு சொல்லுங்க...
ஒரு Blank Cheque தர்றேன்.. இஷ்டப்பட்ட
Amount-ஐ Fill பண்ணிட்டு போங்க...

குடுப்பாங்க... வாங்கிக்கோங்க...

அன்புச்செல்வன் said...

உங்க போன் நம்பர குடுங்க
நான் ரீ சார்ஜ் பண்ணி விடுறன்
http://anpuchchelvan.blogspot.com/

Zero to Infinity said...

அப்புறம் முந்தா நேத்து நம்ம
கோலி கூட போன் பண்ணியிந்தாப்ல..

மிஸ்ட்டு கால்னு சொலுங்க.......