சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 June 2012

வி.ஐ.பி வீட்டுக் கல்யாணம்..!


நேத்து என் Wife-வோட
அத்தை பையனுக்கு கல்யாணம்..

7.15 PM :

நானும் , என் Wife-ம் கல்யாண
மண்டபத்துக்குள்ள போனோம்..

7.20 PM :

என் Wife அவங்க சொந்தகாரங்ககிட்ட
எல்லாம் பேசிட்டு இருந்தாங்க..

7.30 PM :

Dinner ரெடி... உடனே ஒட்டுமொத்த
கூட்டமும் Dining Hall-ஐ நோக்கி
படை எடுத்தது..

7.32 PM :

டைனிங் ஹால் Full..!  :(

7.35 PM :

நான் உள்ளே லேசா எட்டி பார்த்தேன்..
ஹூம்...! மெனு எனக்கு திருப்தியா
இருக்குற மாதிரி தெரியல

7.37 PM :

என் மொபைலை எடுத்து....

" ஹலோ...
.
.
.

" ஓ.. அப்படியா...? இதோ வந்துட்டேன்..! "

7.39 PM :

என் Wife-கிட்ட திரும்பி..

" இன்னொரு வி.ஐ.பி கல்யாணத்துக்கு
போகணும்..! சீக்கிரம் கிளம்பு... "

" யார்ங்க அந்த வி.ஐ.பி..? "

" வந்து பாரு தெரியும்...! "

" சரி.., சாப்பிட்டுட்டு போலாம்க..! "

" வேணாம்...வேணாம்.. லேட் ஆகிடும்..
அந்த கல்யாணத்துல சாப்பிட்டுக்கலாம்..! "

7.55 PM :

இடம் : பொன்னா கவுண்டர் மண்டபம்.

வெளியே நின்ன எல்லோருக்கும்
வணக்கம் வெச்சிட்டு உள்ளே போனோம்.
நேரா டின்னர் ஹாலுக்கு போயிட்டோம்...

7.58 PM :

பிஸ்தா ரோல், ரசகுல்லா,
வெஜிடபுள் மஞ்சூரியன்.,
காலிப்ளவர் சில்லி.,
ரோமாலி ரொட்டி - பன்னீர் மசாலா
பொடி இட்லி - 3 வகை சட்னி
மசால் தோசை, ஆனியன் தோசை
குழிப்பணியாரம், காளான் பிரியாணி,
சாம்பார் சாதம், தயிர் சாதம்,

சூப்பர் டின்னர்.. நான் புல் கட்டு
கட்டிட்டி இருந்தேன்..

ஆனா என் Wife மட்டும் என்னை
சந்தேக பார்வை பாத்துகிட்டு
கொஞ்சம் பதட்டமா இருந்தாங்க...

8.15 PM :

ஐஸ்கிரீம் சாப்பிடும் போது.,
என் Wife..

" ஏங்க உண்மையை சொல்லுங்க...
இந்த கல்யாணத்துக்கு உங்களை
யாருமே கூப்பிடலை தானே..? "

" ஏன் கூப்பிடலை.. அதோ மேடையில
இருக்கறவரு கூப்பிட்டாரே..! "

" யாரு..? மாப்பிள்ளையா..? "

" மாப்பிள்ளை இல்ல.. அவருக்கு
பக்கத்துல டார்க் புளூ சட்டை போட்டுட்டு
உசரமா இருக்கறாருல்ல.. அவரு... "

நான் கைகாட்டின இடத்துல

பொண்ணு மாப்பிள்ளையை சிரிக்க சொல்லி
போட்டோ எடுத்துட்டு இருந்தாரு
போட்டோகிராபர் சேலம் தேவா..!

" ??!!??!!!? "

( இவ்ளோ Grand-ஆ கல்யாணம் பண்றார்னா
கண்டிப்பா அவர் ஒரு பெரிய வி.ஐ.பியா 
தானே இருப்பாரு. - லாஜிக் பாயிண்ட். )


டிஸ்கி : இந்த பதிவுக்கு எதுக்கு
சினேகா கல்யாண போட்டோ
போட்டிருக்கேன்னு பார்க்கறீங்களா..?

இந்த கல்யாணத்துக்கும் வர சொல்லி
என்னை கூப்பிட்டாங்களே...

என்னது யாரா...?

அதாங்க... மண்டபத்துல சேர் எல்லாம்
எடுத்து... சரி, சரி.., இப்ப அந்த டீடெய்ல்ஸ்
எதுக்கு..?  லூஸ்ல விடுங்க..
.
.

18 Comments:

NAAI-NAKKS said...

விளம்பரம்.....
கல்யாணத்தில சாப்பிட்டது....ம்ம்ம்ம்

மனசாட்சி™ said...

சரி எப்படியோ எங்கயோ சாப்புடீங்கல்லா

ஹி ஹி ஹி உதை வாங்காம

வெளங்காதவன்™ said...

தங்கள் திறமை கண்டு வியந்தேன்...
தங்களுக்கு உடம்பெல்லாம் மூளை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#தனியா சிக்குனா அம்புட்டுதேன்.

:-)

Azhagesan Jayaseelan said...

வில்லியம் கேட் கல்யாணத்துக்கு லண்டன் போனத யார்கிட்டயும் சொல்லிராதிங்க - ஆடு மேக்கிற பையனுக்கு இம்புட்டு அறிவானு எல்லாருக்கும் பொறமை.

தமிழ்மகன் said...

அனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/shortcut-keys-for-web-browsers.html

விஸ்வநாத் said...

// மெனு எனக்கு திருப்தியா
இருக்குற தெரியல //

பாதாம் கீர் மிஸ்ஸிங், கரக்டா தல ?

விஸ்வநாத் said...

// இன்னொரு வி.ஐ.பி கல்யாணத்துக்கு
போகணும்..! //

தலைவா, நீங்க அந்த கல்யாணத்துக்கு போனாதா அவரு VIP

விஸ்வநாத் said...

// வெளியே நின்ன எல்லோருக்கும்
வணக்கம் வெச்சிட்டு உள்ளே போனோம்

பிரபல பதிவரா நீங்க
இருக்கறதுனாலதான் இந்தப் பிரச்சனை

விஸ்வநாத் said...

// நான் புல் கட்டு
கட்டிட்டி இருந்தேன்..//


பார்சல் கட்ட ஆள் யாரு இல்லியா ? நீங்களே கட்டிக்கிட்டு ...
EGO பாக்காம வேலை செய்றீங்க பாஸ் நீங்க

விஸ்வநாத் said...

// என் Wife மட்டும் என்னை
சந்தேக பார்வை பாத்துகிட்டு //

வீட்ல ஒரு வேலையு செய்றதில்லே, இங்கே பாரு ...

வரலாற்று சுவடுகள் said...

அடி வாங்காம தப்பிட்டா சர்தான் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை அருமை, பட் நடுநடுவே நம்பர் போட்டிருக்கீங்களே அதுதான் எதுக்குன்னு புரியல......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் உள்ளே லேசா எட்டி பார்த்தேன்..
ஹூம்...! மெனு எனக்கு திருப்தியா
இருக்குற மாதிரி தெரியல///////

இடம் மட்டும் கிடைச்சிருந்தா இந்த மெனுவே 3 ரவுண்டு உள்ள போயிருக்குமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆனா என் Wife மட்டும் என்னை
சந்தேக பார்வை பாத்துகிட்டு
கொஞ்சம் பதட்டமா இருந்தாங்க...///////

நீங்க வழக்கத்த விட நாலு ரவுண்டு அதிக சாப்பிட்டத வெச்சி கண்டுபுடிச்சிருப்பாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பொண்ணு மாப்பிள்ளையை சிரிக்க சொல்லி
போட்டோ எடுத்துட்டு இருந்தாரு
போட்டோகிராபர் சேலம் தேவா..!///

பாவம் அந்த அப்பாவி மனுசன்...... உங்களால எங்க அடிவாங்க போறாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி : இந்த பதிவுக்கு எதுக்கு
சினேகா கல்யாண போட்டோ
போட்டிருக்கேன்னு பார்க்கறீங்களா..?

இந்த கல்யாணத்துக்கும் வர சொல்லி
என்னை கூப்பிட்டாங்களே...///////

ஆமா......... ஆமேரிக்காவுல பல் கிளிண்டன் கூப்புட்டாகோ, ஐரோப்பாவுல சார்க்கோசி கூப்புட்டாகோ, ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்புட்டாகோ.............. இவ்வளவு ஏன்....... பக்கத்துல இருக்க கண்ணம்மா பேட்டைல கூட கூப்புட்டாகோன்னா பாத்துக்குங்களேன்.........

இந்திரா said...

எப்படியோ.. ஓசி சாப்பாடு சாப்டாச்சு.. சரி சரி ட்ரீட் குடுங்க..

Rathnavel Natarajan said...

அருமை.