சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 February 2012

" பவர் கட் " ஸ்பெஷல்..!!

டிஸ்கி : Fan ஓடாத ( UPS Down ) ஒரு ராத்திரி
வேளையில் , மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ,
கொசுவோடு கபடி விளையாடிட்டு
இருக்கும் போது என் சிந்தனையில்
குதிச்சது..

10 மணி நேரம் கரண்ட் இல்லையேன்னு பீல் பண்றதை
விட்டுட்டு.. 14 மணி நேரம் கரண்ட் இருக்கேன்னு
நினைச்சி சந்தோஷப்படணும் # பவர்கட் தத்ஸ்


இலவச கிரைண்டர், மிக்ஸி எல்லாம் வேண்டாம்..
வீட்டுக்கு ஒரு UPS குடுங்கப்பா.. புண்ணியமா போகும்..!


அறிஞர் அண்ணா தெரு விளக்கு வெளிச்சத்தில தான்
படிச்சாராம். கொடுத்து வெச்சவரு. நம்ம புள்ளங்களுக்கு
இப்ப அதுக்கு கூட வழியில்லையே..!


" நாங்கல்லாம் அந்த காலத்துல.. " " அட., கொஞ்சம்
கம்முன்னு இருங்க தாத்தா. நாங்களும் இப்ப
அந்த காலத்துல தான் இருக்கோம் " # 10 மணி நேர பவர்கட்


" பவர் கட் " - முன்னே ஆற்காட்டாரை திட்டினாங்க,
இப்ப ஜெ.வை திட்றாங்க. நல்லவேளை இலவசத்துக்கு
ஆசைப்பட்டு ஓட்டு போட்ட நம்மள யாரும் திட்டலை.!


தினமும் குறிப்பிட்ட டைம்ல கரண்ட் கட் - கலைஞர் ஆட்சி.,
எப்ப வேணாலும் கரண்ட் கட் - அம்மா ஆட்சி # வெளங்கிரும்.!


தமிழ்நாட்ல கரண்ட் பில்லை ஆன்லைன்ல கட்டலாம்.,
ஆனா கம்பியூட்டர் " ON " செய்ய கரண்ட் இல்ல.!
# என்ன கொடுமை சார் இது.?


ஒவ்வொரு தடவையும் ஓட்டை மாத்தி போட்டு
" யாரை விட யார் மோசம்"-னு நாம தெரிஞ்சிக்கிறோம்.!


பின் டிஸ்கி :

Power Cut-னால என்னென்ன
நல்ல விஷயங்கள் இருக்கு..
படிக்க க்ளிக்...
.
.

16 Comments:

மனசாட்சி said...

வணக்கம்

மனசாட்சி said...

//ஒவ்வொரு தடவையும் ஓட்டை மாத்தி போட்டு
" யாரை விட யார் மோசம்"-னு நாம தெரிஞ்சிக்கிறோம்.!//

தமிழ்நாட்டை காப்பாத்தணுமேன்னு அம்மாவுக்கு ஒட்டு போட்டாங்க.

தமிழக மக்களை இப்ப யாரு காப்பாத்துவா???

அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா.

//அறிஞர் அண்ணா தெரு விளக்கு வெளிச்சத்தில தான்
படிச்சாராம். கொடுத்து வெச்சவரு. நம்ம புள்ளங்களுக்கு
இப்ப அதுக்கு கூட வழியில்லையே..!//

நல்லா சொன்னிங்க.....

மனசாட்சி said...

//" பவர் கட் " - முன்னே ஆற்காட்டாரை திட்டினாங்க,
இப்ப ஜெ.வை திட்றாங்க.//

அந்த துறைக்குன்னு மந்திரி யாரும் இல்லயொ?? இருந்தா இப்ப மந்திரி யாருன்கொ

NAAI-NAKKS said...

Power cut-n arumai
perumaigalai....
Eduthu sonna...
Engal thanai thalaivar.....
VENKET-ku......
Candile.....parcel+ 4 idly,,ketti
chatini-um....

விஸ்வநாத் said...

// கொசுவோடு கபடி விளையாடிட்டு
இருக்கும்

ஜெயிச்சது யாரு ?

Thangaraj said...

//கொசுவோடு கபடி விளையாடிட்டு
இருக்கும் போது என் சிந்தனையில்
குதிச்சது..//

எல்லோருக்கும் சிந்தனையில் உதிக்கும் உங்களுக்கு மட்டுமே குதிச்சது...நல்ல ரசனை

Madhavan Srinivasagopalan said...

ok.. right.. polaampaa po.. po..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா பவர் போகாம இருந்தா இவரு ஃபேன்ல உக்காந்து யோசிச்சி அப்படியே இலக்கிய ரசம் சொட்ட சொட்ட காப்பியம் படைச்சிட்டுத்தான் மறுவேல பார்ப்பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ,கொசுவோடு கபடி விளையாடிட்டு இருக்கும் போது ////

பாவம் கொசு.... அதையாவது விட்டு வெச்சிருக்கலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இலவச கிரைண்டர், மிக்ஸி எல்லாம் வேண்டாம்..
வீட்டுக்கு ஒரு UPS குடுங்கப்பா.. புண்ணியமா போகும்..!////

UPS-னா United Parcel Service தானே? அத வெச்சி என்ன பண்ண போறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அறிஞர் அண்ணா தெரு விளக்கு வெளிச்சத்தில தான்
படிச்சாராம். கொடுத்து வெச்சவரு. நம்ம புள்ளங்களுக்கு
இப்ப அதுக்கு கூட வழியில்லையே..!/////

டார்ச் லைட்ட எடுத்துட்டு தெருவுக்கு போங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தினமும் குறிப்பிட்ட டைம்ல கரண்ட் கட் - கலைஞர் ஆட்சி.,
எப்ப வேணாலும் கரண்ட் கட் - அம்மா ஆட்சி # வெளங்கிரும்.!/////

அம்மான்னா சும்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்நாட்ல கரண்ட் பில்லை ஆன்லைன்ல கட்டலாம்.,
ஆனா கம்பியூட்டர் " ON " செய்ய கரண்ட் இல்ல.!
# என்ன கொடுமை சார் இது.?/////

கம்ப்யூட்டரை ஆன் பண்ண கை இருந்தா பத்தாது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Power Cut-னால என்னென்ன
நல்ல விஷயங்கள் இருக்கு..
படிக்க க்ளிக்...////

இருக்குற பவர்கட்ல இந்த பதிவ படிக்கிறதே பெருசு, இதுல இன்னொண்ணு வேறயா? ஏன் இந்த வெளம்பரம்...?

சிவசங்கர். said...

I think you are talking british english. #sema sema.

பெசொவி said...

The Power-cut is nothing but to show that the power to cut the power of the people is always in the hand of the rulers.

When we had the power, we voted them to power.

Now they have the power and we don't have the power.

That is the power of democracy!