சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 August 2012

என் ப்ளாக்கும் , என் விகடனும்..!!!
இந்த " என் விகடன் " இருக்குல்ல..
அட அதாங்க ஆனந்த விகடனோட
இணைப்பு...

அதுல வாரம் ஒரு ப்ளாக்கை
" வலையோசை " பகுதியில Intro
பண்ணிட்டு வர்றாங்க..

ஆனா அதுல இதுவரை என் ப்ளாக்
வரவே இல்ல..

இது என் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாவும்,
எனக்கு ஆச்சரியமாவும் இருக்கு..

பின்ன.., கொங்கு மண்டலத்துல
விரல் விட்டு எண்ணக்கூடிய
பிரபல பதிவர்கள்ல நானும் ஒருத்தன்ல...

அட.. இப்ப எதுக்கு மொறைக்கிறீங்க..?!

அவ்ளோ டவுட்டா இருந்தா
என் ப்ளாக்ல இருக்காங்களே
420 Followers அவங்ககிட்ட கேளுங்க...
அப்ப தெரியும்...

என்னாது கேட்டுடீங்களா...?!!

Follower-ஆ சேர சொல்லி நான்
கெஞ்சி , கதறினதை பத்தி யாரும்
எதுவும் உளறலையே..!! ( ஹப்பா..! )

சரி.. மேட்டர்க்கு வருவோம்..

ரெண்டு நாள் முன்னாடி தான்
என் Friend தம்பி ஆனந்த விகடன்ல
வேலையில இருக்காங்கிற மேட்டர்
எனக்கு தெரிஞ்சது.

உடனே அவனுக்கு போன் பண்ணி...

என் ப்ளாக் Details குடுத்து,
அதை பத்தி ஆஹா., ஓஹோன்னு
எடுத்து சொல்லி ' என் விகடன் 'ல
போட சொல்லி கேட்டோம்..

அவனும்..

" அவ்ளோ தானே.. அடுத்த வாரம்
போட்டுட்டா போச்சு..! "

" நிசமாவா..?! "

" ம்ம்.. இருங்க எதுக்கும் எடிட்டர்கிட்ட
ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்னு "
சொல்லிட்டு போனை வெச்சிட்டான்..

அப்பவே நான் " வலையோசை "ல
நம்ம ப்ளாக் வந்ததும், அதை பத்தி
எப்படி பதிவு போடறதுன்னு யோசிக்க
ஆரம்பிச்சிட்டேன்..

10 நிமிஷம் கழிச்சி அவனே கூப்பிட்டான்..

" ஹலோ வெங்கட் அண்ணா... "

" சொல்லு தம்பி... "

" எடிட்டர்கிட்ட பேசிட்டேன்.. "

( ஐ.. வொர்க் அவுட் ஆகிடுச்சி போல..)

" வர்ற வாரத்துல... "

" என் ப்ளாக்கை போட்டுடலாம்னு
சொல்லிட்டாரா..? "

" இல்ல..., வர்ற வாரத்துல இருந்து
' என் விகடன் ' புக்கை நிறுத்திடலாம்னு
சொல்லிட்டாரு.. "

அடப்பாவிகளா...?!!

( என்ன வாழ்க்கைடா இது..?!! )
.

.

30 Comments:

கோவை நேரம் said...

என் விகடன் ல வந்தத போடுவாங்க..நீங்க வாராமலே போடறீங்க..

வெங்கட் said...

// என் விகடன் ல வந்தத போடுவாங்க..நீங்க வாராமலே போடறீங்க.. //

ஹி., ஹி., ஹி....!!!

வந்தா போடறது சுயநலம்..
வரலைனாலும் போடறது பொதுநலம்
( ஆனந்த விகடனுக்கு ஒரு பப்ளிசிட்டி )

அது சரி., வர்ற வாரத்துல இருந்து
" என் விகடன் " வருதான்னு பாருங்க.

Lakshmi said...

ஆஹா உங்க பொது நலம் வாழ்க/

ஆதி தாமிரா said...

கலக்குறீங்க வெங்கட்.. இன்னும் சிரிச்சிகிட்டிருக்கேன்.

வரலாற்று சுவடுகள் said...

எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க! :D

NAAI-NAKKS said...

Thappichithe....
ANANTHA VIKATAN....

கலாகுமரன் said...

அப்ப நாங்க மாட்டிகிட்டமா ?
நல்ல நகைச்சுவை.

Madhavan Srinivasagopalan said...

பன்னிங்கதான் கூட்டங்கூட்டமா வரும்..
சிங்கம் எப்பவுமே சிங்கிளாத்தான் வரும்..
# சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்.

இராஜராஜேஸ்வரி said...

வலையோசை

கவலையோசையாக ஒலிக்கிறதே !!

சேலம் தேவா said...

தல...ஜீனியர் விகடன்,சுட்டி விகடன்,சக்தி விகடன்,அவள் விகடன் இது மாதிரி எல்லா புக்லயும் வர்ற தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு எங்களுக்கு தெரியுது.ஆனா,விகடனுக்கு தெரியலயேஏஏஏஏஏஏஏ..?! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விகடன் போனா என்ன, சிறுவர்மலர், தங்கமலர்னு இன்னும் ஏகப்பட்ட ஐட்டம்ஸ் இருக்கு, மனச தளரவிடாம ட்ரை பண்ணுங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவ்ளோ டவுட்டா இருந்தா
என் ப்ளாக்ல இருக்காங்களே
420 Followers அவங்ககிட்ட கேளுங்க...////

அது எப்படி கரெக்டா 420.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சேலம் தேவா said...
தல...ஜீனியர் விகடன்,சுட்டி விகடன்,சக்தி விகடன்,அவள் விகடன் இது மாதிரி எல்லா புக்லயும் வர்ற தகுதி உங்களுக்கு மட்டும்தான் இருக்குன்னு எங்களுக்கு தெரியுது.ஆனா,விகடனுக்கு தெரியலயேஏஏஏஏஏஏஏ..?! :)////////

நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன் இதெல்லாம் விட்டுட்டீங்கங்கோ........

Jey said...

ஃபாலோவர்ஸ 420-னு சொல்லிட்டியேப்பா....மானஸ்தன் நான்...இனி எப்படி தூங்குவேன்.....

Jagan said...

//அது சரி., வர்ற வாரத்துல இருந்து
" என் விகடன் " வருதான்னு பாருங்க.//


அதெல்லாம் வரும் வரும்.. அதுவும் டெய்லி! உங்க இம்சை தாங்காம தான் அப்படி சொல்லி இருக்காங்க.

வெங்கட் said...

@ ஆதி.,

// கலக்குறீங்க வெங்கட்.. இன்னும்
சிரிச்சிகிட்டிருக்கேன். //

மனசு விட்டு பாராட்டினதுக்கு ரொம்ப
நன்றி ஆதி...!

வெங்கட் said...

@ வரலாற்று சுவடுகள்..!

// எப்பிடியெல்லாம் டெவலப்பாகி
போய்க்கிட்டு இருக்காய்ங்க! :D //

இனிமே " என் விகடன் " நெட்ல
மட்டும் தான் வருமாம்..!

ஆனா இதுக்கு நான் எந்த விதத்துலயும்
காரணம் இல்ல சாமி..!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// தல...ஜீனியர் விகடன்,சுட்டி விகடன்,
சக்தி விகடன்,அவள் விகடன் இது மாதிரி
எல்லா புக்லயும் வர்ற தகுதி உங்களுக்கு
மட்டும்தான் இருக்குன்னு எங்களுக்கு தெரியுது.
ஆனா,விகடனுக்கு தெரியலயேஏஏஏஏஏஏஏ..?! :) //

ம்ம்.. கரெக்ட்..!!

பேசாம ஒரு ஈமு பார்ம்ஸ் ஆரம்பிச்சி.,
அனுஷ்காவை கூப்பிட்டு வந்து ரிப்பன் கட்
பண்ண வெச்சி, பக்கத்துல நின்னு போட்டோ
எடுத்து எல்லா புக்லயும் Full Page விளம்ரம்
குடுத்துட வேண்டியது தான்

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// விகடன் போனா என்ன, சிறுவர்மலர்,
தங்கமலர்னு இன்னும் ஏகப்பட்ட ஐட்டம்ஸ்
இருக்கு, மனச தளரவிடாம ட்ரை பண்ணுங்க..... //

மைண்ட் வாய்ஸ் :

" அங்கேயும் நாம ட்ரை பண்ணிட்டு தான்
இருக்கோம்கிற மேட்டர் இவருக்கு எப்படி
தெரிஞ்சது..??!! "

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// அது எப்படி கரெக்டா 420.....? //

ஆஹா.. எதையாவது சொல்லி.,
என் Followers-ஐ இங்கிட்டு இருந்து
கெளப்பி விட்டுடுவாங்க போல இருக்கே..

அவ்வ்வ்.......

திண்டுக்கல் தனபாலன் said...

கவலைப்படாதீங்க... வெகு விரைவில் விகடனில் வர வாழ்த்துக்கள்...

தொடருங்கள்... நன்றி...

வெங்கட் said...

@ ஜெய்.,

// ஃபாலோவர்ஸ 420-னு சொல்லிட்டியேப்பா....
மானஸ்தன் நான்... இனி எப்படி தூங்குவேன்..... //

நிஜமான 420 சிரிப்பு போலீஸ் ரமேஷே
அதை பத்தி கண்டுக்காம வேளா வேளைக்கு
நல்லா சாப்பிட்டு , தூங்கிட்டு இருக்காப்ல..
நீங்க போயி இதுக்கெல்லாம் பீல் பண்ணிட்டு..

( 419வது Followerக்கு அப்புறம் ஒரு Follower
சேர ஒரு மாசம் ஆச்சு.. இதான் மேட்டரா..? )

வெங்கட் said...

@ ஜெகன்..,

// அதெல்லாம் வரும் வரும்.. அதுவும் டெய்லி! //

நெட்ல தானே வரும்.. புக்கா வருமா..?

நெட்ல தான் நாம அல்ரெடி பிரபலம் (!?)
ஆச்சே..

ஹேமா said...

அவங்க நிறுத்திட்டா என்ன! நாம ஒரு விகடன் ஆரம்பிச்சுடுவோம்!

ஹேமா said...

உங்க போட்டோவ பார்த்ததும் எங்க அரவிந்த் சாமி மாதிரி பிரபலமா ஆயிடப்போறீங்கன்னு பொறாமையில செஞ்சிருப்பாங்களோ!

வெங்கட் said...

@ ஹேமா.,

// உங்க போட்டோவ பார்த்ததும் எங்க அரவிந்த் சாமி மாதிரி பிரபலமா ஆயிடப்போறீங்கன்னு பொறாமையில செஞ்சிருப்பாங்களோ! //

ம்ம்.. எனக்கும் அதே டவுட் தான்..!!!

:)

காப்பிகாரன் said...

வடை போச்சே

Hari Haran said...

ஒரு கொசுறு மாதிரி சின்ன புத்தகத்தை போட்டுக்கிட்டு இருந்தாங்க அது உங்களுக்கு பொறுக்கவில்லையா வெங்கட்..

Troo Picture said...

இல்ல என் இப்புடி எனக்கு கெடச்ச ரெண்டு கடலையையும் கெடுத்தீங்க?

Easy (EZ) Editorial Calendar said...

சரி உடுங்க பாஸ் போடுவாங்க


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)