சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 April 2012

ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்..!

என் Birthday அன்னிக்கு பிள்ளையாரை
இம்சை பண்ணியே ஆகணும்கற
கொள்கையில உறுதியா இருக்கறதால
இந்த வருஷம் நான் அவரை மீட்
பண்ணினது பிள்ளையார்பட்டில.

அப்படியே வழக்கம் போல சின்னதா
ஒரு லிஸ்ட் ஒப்பிச்சிட்டு லஞ்ச்க்கு
தஞ்சாவூர் போயிட்டோம்..

அங்கே ஹோட்டல்ல ஆர்டர்
சொல்லிட்டு உக்காந்துட்டு இருக்கோம்...
அப்ப என் Wife மாலா என்கிட்ட...

" என்னங்க என்னங்க... அங்கே
பாருங்க.. காயத்ரி ப்ரியா..! "

" எந்த காயத்ரி..? " ( ஹி., ஹி., ஹி..
எனக்கு நாலு காயத்ரி தெரியும்ல..! )

" அட நடிகை காயத்ரி ப்ரியாங்க..! "

" நடிகையா...!!? " ( நான் லைட்டா திரும்பி
பார்த்தேன்.. ரெண்டு டேபிள் தள்ளி
காயத்ரி ப்ரியா அவங்க குடும்பத்தோட
உக்காந்து இருந்தாங்க.. )


" ஓ.. மெகா சீரியல்ல வந்து நல்லா 
அழுவாங்களே அவங்க தானே..?! " 

" இந்த ஜோக்குக்கு நான் வீட்டுக்கு போயி 
சிரிக்கிறேங்க.. இங்கே சிரிச்சா அடிபட்டுடும்.." 
( விழுந்து விழுந்து சிரிப்பாங்களாமாம்..! )

" சரி., சரி.. இப்ப என்ன பண்ணனும்கற..? " 

" அவங்ககிட்ட போயி ஆட்டோகிராப் 
வாங்கிட்டு வர்றேங்க..! "

" நோ., நோ.. அதெல்லாம் ஒண்ணும் 
வேணாம்..! " 

" அவங்க ஒரு செலிபிரிட்டீங்க., இப்படி  
அடிக்கடியா பார்க்க முடியும்..?! " 

" செலிபிரிட்டின்னாலும் அவங்களும் 
ஒரு சாதாரண மனுஷி தான்..! அவங்க 
Privacy-ஐ கெடுக்க கூடாது.. " - இப்படி 
நான் Strict-ஆ சொல்லிட்டேன்.. 

அதனால என் Wife-க்கு கொஞ்சம் 
வருத்தம்.. உம்முன்னு இருந்தாங்க..

கொஞ்ச நேரம் கழிச்சி.. 

Van-ல இருக்குற Water Bottle எடுக்க 
என் Wife போனாங்க.. அவங்க திரும்பி 
வரும்போது...

Reception-ல நானும் ., காயத்ரி ப்ரியாவும் 
பேசிட்டு இருந்தோம்.. 

இதை பாத்த என் Wife கண்ணுல 
கொலவெறி தெரிஞ்சது. வேகமா 
பக்கத்துல வந்தாங்க.. 

அப்ப காயத்ரி ப்ரியா என்கிட்ட...

" நீங்க ' கோகுலத்தில் சூரியன் ' வெங்கட் 
தானே..? நான் உங்க ரசிகை சார்.. 
ஒரு ஆட்டோகிராப்.. ப்ளீஸ்..! " 

" பொத்...!! " 

மாலா..! மாலா..! என்னாச்சி..! 


டிஸ்கி : காயத்ரி ப்ரியா என்கூட நின்னு 
ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ரொம்ப 
ஆசைப்பட்டாங்க.. ஆனா " தமன்னா " 
பீல் பண்ணுவாங்களேன்னு " No " சொல்லிட்டேன்..

ஹி., ஹி., ஹி... சென்னை போனப்ப 
தமன்னாவும் என்கூட நின்னு போட்டோ 
எடுத்துக்க ஆசை பட்டாங்கல்ல.. 
அவுங்களுக்கும் " No " சொன்னோம்ல..!
.
.

20 Comments:

கோவை நேரம் said...

ஹி.. ஹி ஹி ...பொத்...நான் விழுந்துட்டேன் ...இது தமனா வுக்கு தெரியுமா?

வெங்கட் said...

@ கோவை நேரம்.,

// இது தமனா வுக்கு தெரியுமா? //

உஷ்.. சத்தம் போட்டு பேசக்கூடாது..
தமன்னாவை மீட் பண்ணினது தெரிஞ்சா
அனுஷ்கா வேற பீல் பண்ணுவாங்க..

:)

சேலம் தேவா said...

நம்ம வேகம் யாருக்கும் வராத தல...வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வரதுக்குள்ள காயத்ரிப்ரியாவ கெஞ்சி இப்டி பேசச்சொல்லி கன்வின்ஸ் பண்ணிட்டிங்க. :)

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// நம்ம வேகம் யாருக்கும் வராத தல...
வாட்டர் பாட்டில் எடுத்துட்டு வரதுக்குள்ள
காயத்ரிப்ரியாவ கெஞ்சி இப்டி பேசச்சொல்லி
கன்வின்ஸ் பண்ணிட்டிங்க. :) //

நமக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ..?!
( பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே
சொல்றாங்களே.. அவ்வ்வ்...! )

வெளங்காதவன்™ said...

//வெங்கட் said...
@ கோவை நேரம்.,

// இது தமனா வுக்கு தெரியுமா? //

உஷ்.. சத்தம் போட்டு பேசக்கூடாது..
தமன்னாவை மீட் பண்ணினது தெரிஞ்சா
அனுஷ்கா வேற பீல் பண்ணுவாங்க..

:)
////

அப்போ திரிஷாவோட வாழ்க்க?

:-)

மனசாட்சி™ said...

//வெங்கட் said...
@ கோவை நேரம்.,

// இது தமனா வுக்கு தெரியுமா? //

உஷ்.. சத்தம் போட்டு பேசக்கூடாது..
தமன்னாவை மீட் பண்ணினது தெரிஞ்சா
அனுஷ்கா வேற பீல் பண்ணுவாங்க//.


இன்னும் வேறு ஆரெல்லாம் இருக்காக உங்க லிஸ்ட்ல

மனசாட்சி™ said...

ஆக மொத்தம்.. ஆட்டோகிராப்.....ஐ,, போட்டீங்களா? இல்லையா?

Lakshmi said...

ஆமா காயத்ரி இந்த பதிவைப்பாத்தாங்களா?

விஸ்வநாத் said...

// என்னங்க என்னங்க... அங்கே
பாருங்க.. காயத்ரி ப்ரியா..! "//

காயத்திரி இங்கே போட்டோல, பிரியா எங்கே ?

விஸ்வநாத் said...

// நான் லைட்டா திரும்பி
பார்த்தேன். //

இன்னு அந்த கழுத்து வலி இருக்கா ? செம அடில்லே;

விஸ்வநாத் said...

// " நோ., நோ.. அதெல்லாம் ஒண்ணும்
வேணாம்..! " //

'கொஞ்சம் ஓவராதா போயிட்டிருக்கு, வாங்குனது பத்தாது' அப்டின்னு அக்கா காது கடிச்சாங்கல்ல, அத்த விட்டுட்டீங்க மாமா

NAAI-NAKKS said...

ஓஹோ....இப்படி எல்லாம் கனவு காணுவீன்களா ...????

பெசொவி said...

//" இந்த ஜோக்குக்கு நான் வீட்டுக்கு போயி
சிரிக்கிறேங்க.. இங்கே சிரிச்சா அடிபட்டுடும்.." //

யாருக்குன்னு சொல்லவே இல்லையே?

பெசொவி said...

//
" ஓ.. மெகா சீரியல்ல வந்து நல்லா
அழுவாங்களே அவங்க தானே..?! " //

//Reception-ல நானும் ., காயத்ரி ப்ரியாவும்
பேசிட்டு இருந்தோம்.. //

"ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாரு, அமெரிக்காவுல ஆர்னால்ட் கூப்பிட்டாருன்னு ப்ளாக்ல பீலாவா விடுவாருன்னு VKSல சொல்லுவாங்களே, அந்த வெங்கட் நீங்கதானா"ன்னு அவங்க கேட்டதை சொல்லவே இல்லையே?

பெசொவி said...

//என் Birthday அன்னிக்கு பிள்ளையாரை
இம்சை பண்ணியே ஆகணும்கற
கொள்கையில உறுதியா இருக்கறதால//

அதை என் அப்படி சொல்றீங்க? வருஷம் பூரா எங்களை இம்சை பண்றதுக்கு பரிகாரமா தான ஒவ்வொரு Birthday அன்னிக்கும் பிள்ளையாரை பாக்கப் போறீங்க, அதை சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////அப்படியே வழக்கம் போல சின்னதா
ஒரு லிஸ்ட் ஒப்பிச்சிட்டு லஞ்ச்க்கு
தஞ்சாவூர் போயிட்டோம்..////////////

தஞ்சாவூருக்கா? அங்க உங்க பதிவுகள கல்வெட்டுல செதுக்க போனீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////அவங்க திரும்பி வரும்போது...
Reception-ல நானும் ., காயத்ரி ப்ரியாவும் பேசிட்டு இருந்தோம்.. ///////////

அடேடே அதுக்குள்ள கால்ல விழுந்திட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனா " தமன்னா " பீல் பண்ணுவாங்களேன்னு " No " சொல்லிட்டேன்..//////////

இப்போ கஞ்சிக்கா இல்லியா?

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// அப்போ திரிஷாவோட வாழ்க்க? //

அடப்பாவிகளா.. இந்த கமெண்ட்டை
என் Wife பாத்தா அப்புறம் என் வாழ்க்கை..?!!
அவ்வ்வ்வ்...!

வரலாற்று சுவடுகள் said...

குபீர் சிரிப்பை வரவழைத்தது தங்கள் பதிவு ..!