சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2012

குறுக்குவழி Vs ஷார்ட் கட்..!

அப்ப என் பையன் 2nd Std
படிச்சிட்டு இருந்தான்..

அவனுக்கு Quarterly Exams
நடந்துட்டு இருந்தது..

அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.

" ஆண்டவா என் பையனை நீதான்
காப்பாத்தணும்னு " வேண்டிகிட்டு
பாடத்தை சொல்லி குடுத்துட்டு
இருந்தேன்..!

அதுல ஒரு கேள்வி..

" Which Animal is called as
Ship of the Desert..? "

Ans : CAMEL

இந்த " CAMEL " ங்குற வார்த்தை
அவனுக்கு தகராறாவே இருந்தது..
" டக்னு " ஞாபகம் வராம தடுமாறினான்..

உடனே எனக்கு ஒரு யோசனை..
இதுக்கு ஒரு ஷார்ட் - கட் சொல்லி
குடுத்தா என்னான்னு..

( Camel-க்கு எல்லாமா ஷார்ட் கட்டானு
தானே யோசிக்கறீங்க..?

ஹி., ஹி., ஹி... நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..!!! )


உடனே அவனை கடைக்கு கூட்டிட்டு
போயி ஒரு Camlin பென்சில் வாங்கி
குடுத்தேன்..

அதுல சின்னதா ஒரு ஒட்டகம் படம்
போட்டு இருக்கும்.. அதை காட்டி...

" ஒரு வேளை அந்த கேள்விக்கு உனக்கு
Answer தெரியலைன்னா.. இந்த பென்சிலை
திருப்பி பாரு.. ஞாபகம் வந்துடும்னு "
சொன்னேன்..!

அவனும் சந்தோஷமா தலையை ஆட்டினான்.

அடுத்த நாள் : காலை 9.30 மணி

டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்..
நான் வாங்கி குடுத்த அந்த Camlin பென்சில்
டேபிள் மேலயே இருந்தது..

எனக்கு " பக்னு " ஆகிடுச்சு

என் Wife-ஐ பாத்து கேட்டேன்..

" அவன் பென்சிலை மறந்துட்டு
போயிட்டானா..? "

" இல்லங்க.. இந்த பென்சில் லைட்டா
எழுதுதுன்னு சொன்னான்... அதான்
Apsara பென்சில் குடுத்து இருக்கேன்..! "

( ஐயையோ அப்ப Ship of Desert கேள்விக்கு
" Apsara "னு எழுதி வைப்பானோ..?! அவ்வ்வ்..! )

நேத்து நடந்த Short-Cut மேட்டரை
என் Wife கிட்ட சொன்னேன்..

" ஏங்க உங்க குறுக்கு புத்தியை
அவனுக்கும் கத்து தர்றீங்க..? "

" நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! "

" ம்ம்ம்..! இன்னிக்கு மட்டும் அவன்
தப்பா பதில் எழுதிட்டு வரட்டும்.. அப்ப
இருக்குது உங்களுக்கு..!! "

Evening ஸ்கூல்ல இருந்து வந்ததும்.,
அவன் Question Paper-ஐ வாங்கி பாத்தா..
அந்த பாழாப்போன கேள்வி இருந்தது..

அவனை கேட்டேன்...

" டேய். அம்மா உனக்கு வேற பென்சில்
குடுத்துட்டாங்களே.. இதுக்கு எப்படிடா
பதில் எழுதின..? "

" அதனால என்னப்பா..? எனக்கு தான்
Answer நல்லா மனப்பாடம் ஆகிடுச்சே..! "

( அப்பாடா.. தப்பிச்சேன்டா..! )

" சரி என்ன பதில் எழுதின..? "

" CAMLIN "

" ?!!?!?? "

----------------------------------------------------------------


டிஸ்கி : என் மகன் ( சூர்யா வெங்கடப்பன் )
ஸ்கூல் சுதந்திர தின விழால ஸ்டேஜ்ல
பேசின " கலக்கல் " வீடியோ பார்க்க.. க்ளிக்.
.

.

34 Comments:

விஸ்வநாத் said...

// டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்.. //

டிபன் முழுசா போட்டாங்களா இல்லியா ?
இல்லை ன்னா மிருக வதை தடுப்பு சட்டத்துல அக்காவ தண்டிக்க வேண்டி இருக்கு.

வெளங்காதவன் said...

//அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.
//

ஒலகம் ஒங்களை இன்னுமா நம்புது?

Azhagesan Jayaseelan said...

இன்னும் பயிற்சி வேண்டுமோ ??????

வெளங்காதவன் said...

// நோ குறுக்கு புத்தி., இது Short-Cut..! "
///

I think u r talking in british English!!!!

வெளங்காதவன் said...

// விஸ்வநாத் said...
// டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்.. //

டிபன் முழுசா போட்டாங்களா இல்லியா ?
இல்லை ன்னா மிருக வதை தடுப்பு சட்டத்துல அக்காவ தண்டிக்க வேண்டி இருக்கு.

////

ROFL

மனசாட்சி said...

பென்சில் மேட்டர்......ம்.

Lakshmi said...

ஹா ஹா நல்ல காமெடிதான்

Madhavan Srinivasagopalan said...

Ha.. Ha..

Madhavan Srinivasagopalan said...

ஐயைய இந்த அங்கிளுக்கு இங்கிலீசே தெரியல..
குறுக்கு வழி = Cross Way (Path / Road)

Short cut = சிறிய வெட்டு

Madhavan Srinivasagopalan said...

camplin கம்பெனிகிட்ட எவ்ளோ காசு வாங்கினீங்க.. ?

விளம்பரம்லாம் செய்யுறீங்க..?

கோகுல் said...

முக்கியமான விஷயம் பேசிட்டு கேப் விடுறார்.டைமிங்கில் கலக்குறார்,வாழ்த்துகள் சூர்யா தொடர்ந்து கலக்குங்கள்.

Uma said...

அடப்பாவமே, அதுக்கப்புறம் மனைவிகிட்ட இருந்து என்ன ட்ரீட்மென்ட் கிடைச்சதுன்னு சொல்லவே இல்ல???

Uma said...

டிபன் முழுசா போட்டாங்களா இல்லியா ?
இல்லை ன்னா மிருக வதை தடுப்பு சட்டத்துல அக்காவ தண்டிக்க வேண்டி இருக்கு//

ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///வெளங்காதவன் said...
//அடுத்த நாள் SOCIAL Exam.
அதுக்கு சொல்லி குடுக்க
சொல்லி என்கிட்ட வந்தான்.
//

ஒலகம் ஒங்களை இன்னுமா நம்புது?/////

சரி விடுங்கப்பா... விடுங்கப்பா.... பதிவர்கள் அப்படி இப்படி எழுதுறது சகஜம்தானே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஹி., ஹி., ஹி... நாங்கல்லாம் படிக்கிற
காலத்துல எலி போட்டுக்குற Pant = Elephant-னு
ஷார்ட் கட்ல படிச்சவங்களாக்கும்..//////

எலி போட்டுக்குற பேண்ட்டு எலிபெண்ட் சரி, ஆனா அதுதான் யானைன்னு எப்படி ஞாபகம் வெச்சுப்பீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விஸ்வநாத் said...
// டிபன் சாப்பிடும் போது தான் பார்த்தேன்.. //

டிபன் முழுசா போட்டாங்களா இல்லியா ?
இல்லை ன்னா மிருக வதை தடுப்பு சட்டத்துல அக்காவ தண்டிக்க வேண்டி இருக்கு./////

பாவம்ணே அவரே கால்வயித்து கஞ்சி குடிச்சிட்டு வீராப்பா பதிவு போட்டிருக்காரு..... அதையும் கெடுத்து விடனுமா?

NAAI-NAKKS said...

பையனுக்கு கஷ்ட காலம்....
:))))))

வெங்கட் said...

@ விஸ்வநாத்.,

// டிபன் முழுசா போட்டாங்களா இல்லியா ?
இல்லை ன்னா மிருக வதை தடுப்பு சட்டத்துல
அக்காவ தண்டிக்க வேண்டி இருக்கு. //

அவங்க என்ன போடறது..?!

நான் மானஸ்த்தன்.. நானே எடுத்து
சாப்பிட்டிக்கிட்டேன்..

சமைச்சவனுக்கு சாப்பிட உரிமையில்லையா.?!

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// ஒலகம் ஒங்களை இன்னுமா நம்புது? //

என்ன இப்புடி கேட்டுபுட்டீங்க..

" எங்க யுனிவர்சிட்டிக்கு புரொபசரா
வாங்கோன்னு..! "

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டில கூப்பிட்டாங்க..
கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டில கூப்பிட்டாங்க..
இவ்ளோ ஏன்..
ஸ்டென்போர்ட் யுனிவர்சிட்டில கூட
கூப்பிட்டாங்க..

ஆனா நான் தான் இந்தியாவோட நன்மை
கருதி... " வரமாட்டேன்னு " சொல்லிட்டேன்..

வெங்கட் said...

@ அழகேசன்.,

// இன்னும் பயிற்சி வேண்டுமோ ?????? //

ஹி., ஹி.,ஹி... அதுக்கு எதாவது
ஷார்ட் கட் இருக்கா..?!

வெங்கட் said...

@ மாதவன்.,

// குறுக்கு வழி = Cross Way (Path / Road)
Short cut = சிறிய வெட்டு? //

வந்துட்டார்யா ஆக்ஸ்போர்ட் டிக்னரியை
எழுதினவரு..!

வெங்கட் said...

@ கோகுல்.,

// முக்கியமான விஷயம் பேசிட்டு
கேப் விடுறார்.டைமிங்கில் கலக்குறார்,
வாழ்த்துகள் சூர்யா தொடர்ந்து கலக்குங்கள்.//

நன்றி., நன்றி..

ஆங்... அந்த Speech எழுதி குடுத்ததுக்காக
என்னைய எதுவும் பாராட்ட வேணாம்.

நமக்கு அந்த விளம்பரம் பிடிக்காது..

வெங்கட் said...

@ உமா.,

// அடப்பாவமே, அதுக்கப்புறம் மனைவிகிட்ட
இருந்து என்ன ட்ரீட்மென்ட் கிடைச்சதுன்னு
சொல்லவே இல்ல??? //

அதெல்லாம் ராணுவ ரகசியம்..
வெளியே சொல்லக் கூடாதது..

நல்லா கேக்கறாங்கய்யா டீடெய்லு..!!
அவ்வ்வ்வ்...!

ARUNMOZHI DEVAN said...

வெங்கடப்பனா?அடே எங்கப்பா!தந்தை எட்டடிபாய்ந்தால் குட்டி எண்பதடி பாய்கின்ற்தே! ஒவ்வொரு இடைவெளியிலும் பார்வையாளர் ரசனை கேட்டுப் பேசும் பாங்கு மிக அருமை.வாழ்க வளமுடன்!

ராஜி said...

அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு

பெசொவி said...

@ venkat
//
ஆனா நான் தான் இந்தியாவோட நன்மை
கருதி... " வரமாட்டேன்னு " சொல்லிட்டேன்..//

பொய், இந்தியாவோட நமையைக் கருதியிருந்தா நீங்க அங்க தான் போயிருக்கனும்
:)

பெசொவி said...

நமையைக் = நன்மையைக்

hihi!

பெசொவி said...

@ venkat

//அதெல்லாம் ராணுவ ரகசியம்..
வெளியே சொல்லக் கூடாதது.//

"ராணுவ" ரகசியம்னு சொல்லும்போதே புரியுது, பனிஷ்மென்ட் கடுமையா இருந்துச்சுன்னு

Abarna said...

நீங்க புத்திசாலின்ன உங்க பையன் அதி புத்திசாலி சார்.
உங்க 2 பேரையும் அடிசிகவே முடியாது.

Abarna said...

ஹாய் வெங்கட் ..
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.
ஏன் VKS group a குரூப் ல பண்ணிட்டிங்க.
பண்ணலன்ன VAS group a விட VKS குரூப் ல நிறைய பேர் join பண்ணிடுவாங்க ன்ற காழ்புணர்ச்சி தான.
நான் VKS group la Join பண்ணனும்...

Abarna said...

ஹாய் வெங்கட் ..
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.
ஏன் VKS group a குரூப் ல பண்ணிட்டிங்க.
பண்ணலன்ன VAS group a விட VKS குரூப் ல நிறைய பேர் join பண்ணிடுவாங்க ன்ற காழ்புணர்ச்சி தான.
நான் VKS group la Join பண்ணனும்...

வெங்கட் said...

@ அபர்ணா.,

// ஏன் VKS group a குரூப் ல பண்ணிட்டிங்க.
பண்ணலன்ன VAS group a விட VKS குரூப் ல
நிறைய பேர் join பண்ணிடுவாங்க ன்ற
காழ்புணர்ச்சி தான. //

நாங்களும் ஒரு நாளைக்கு எத்தனை
பேரைத்தான் அடிக்கறது.. கை வலிக்கும்ல..
அதான்..ஹி., ஹி., ஹி...

// நான் VKS group la Join பண்ணனும்... //

அவிங்க எல்லாம் ஊரைவிட்டே ஓடி
போயிட்டாங்களே.. ஒண்டியா அங்கே
இருந்து என்ன பண்ண போறீங்க..?!

Abarna said...

ஒ அவங்கலாம் ஊர விட்டு ஓடிட்டாங்களா.
நீங்க மட்டும் Admission a open பண்ணுங்க venkat, அப்புறம் பாருங்க VKS குரூப் கு வர எத்தன பேரு Queue ல நிக்கிறாங்கன்னு.

Abarna said...

ohh அவங்க ஊர விட்டு ஓடி போன என்ன.
நீங்க மட்டும் VKS group ல admission open பண்ணி பாருங்க, அந்த குரூப் ல சேர எவ்ளோ பெரிய நிக்கிதுன்னு.