சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 April 2012

சகலை vs ரகளை..!!


" ஒரு மனுஷனுக்கு எந்த கஷ்டம்
வேணாலும் வரலாம்.. - ஆனா...

பொங்கி வர்ற சந்தோஷத்தை
Control பண்ணிட்டு சோகமா
இருக்குற மாதிரி ஆக்ட் குடுக்குற
நிலைமை மட்டும் வரவே கூடாது...! "

சரி., நாம மேட்டர்க்கு போவோம்..

எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா...
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..

( அது மேலயே நடந்து போவாங்க..
அது வேற விஷயம்..)

போன வாரம் என் மச்சானுக்கு
பொண்ணு பார்க்க போயிருந்தோம்..

பொண்ணை பாத்துட்டு.. எல்லோரும்
டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க..

ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. நாங்களும்
என்ன தான் பண்றாங்கன்னு வேடிக்கை
பாத்துட்டு இருந்தோம்.. ( வேற வழி..?! )

கொஞ்ச நேரம் கழிச்சி., என் மச்சான்,
என் சகலை Wife,  என் Wife மூணு பேரும்
எங்க கிட்ட வந்து..

" ஏங்க பொண்ணு ஓ.கேவா..? "

" மாப்ள பக்கத்துல தானே இருக்கான்..
அவனை கேளுங்க...! "

" இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! "

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )

இதை கேட்டதும் நான்...

" இப்படி டக்னு கேட்டால்லாம் எங்களால
பதில் சொல்ல முடியாது.. ஒரு வாரம்
டைம் வேணும்..! இல்லியா சகலை.."

" என்னாது ஒரு வாரமா..? " எங்க மச்சான்
டென்ஷன் ஆகிட்டான்..

இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

" ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை...?! "

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )
ஹும்ம்.., இப்ப பதிவோட
முதல் ரெண்டு வரியை
மறுபடியும் படிச்சிக்கோங்க..
.
.

22 Comments:

NAAI-NAKKS said...

Athaye thaan antha...
Ledies-m....
Solli iruppaanga...
Illa.....

NAAI-NAKKS said...

Unga maamanaar...
Veet-la....
Kodu...
Podura alavukku......
FREEDOM....
Irukkaa....enna.....???????????????!!!!!!!!!!!!!!!!!!!!!

NAAI-NAKKS said...

Appa 3 losesaaaaaaaaaaaaa....????????????????

Madhavan Srinivasagopalan said...

// எங்க மாமனார் வீட்ல நானும்(1) ,
என் சகலையும்(2) ஒரு(1) கோடு கிழிச்சா
...
அதை யாரும் தாண்ட மாட்டாங்க.. //

ஒரே(1) ஆளாள முழுசா ஒரு(1) கோடு கூட கிழிக்க முடியாதா.. ?
(ரெண்டு ஆளு சேந்து ஒரு கோடு கிழிப்பாங்கலாமில்ல..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எங்க மாமனார் வீட்ல நானும் ,
என் சகலையும் ஒரு கோடு கிழிச்சா...
அதை யாரும் தாண்ட மாட்டாங்க..//////

இன்னுமா கோடு போட்டு வெள்ளாண்டுக்கிட்டு இருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆனா எங்க ரெண்டு பேரையும்
கண்டுக்கவே ஆள் இல்ல.. .//////

போனதுல இருந்து கேப்பே விடாம பஜ்ஜி சொஜ்ஜிய அமுக்கிட்டு இருந்தா அப்புறம் என்ன பண்ணுவாங்க? டிஸ்டர்ப் பண்ண வேணாமே, இன்னிக்கு ஒருநாளாவது நல்லா தின்னுக்கட்டுமேன்னு கண்டுக்காம விட்டிருப்பாங்க........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////" இந்த லூசு.. நீங்க ரெண்டு பேரும்
ஓ.கே சொன்னாதான் ஓ.கேன்னு
சொல்லிடுச்சு..! "

( ஆஹா.. தெய்வ மச்சான்..! )/////////

தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்க..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

" ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை...?! "

( ஆஹா.. கோத்து விட்டுட்டான்யா..! )////////

இப்ப சோத்துக்கு என்ன பண்றீங்க?

மனசாட்சி™ said...

ஒ... இப்பூடீதான் மாட்னீங்களா

பெசொவி said...

//இப்ப என் சகலை திருவாய் மலர்ந்தாரு..

" ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல..
அதுக்குதான் ஒரு வாரம் டைம் கேக்கறோம்..
அப்படித்தானே சகலை...?! "
//

உங்க சொந்தத்திலேயே VKS ஆளுங்க நிறைய பேர் இருப்பாங்க, போல?

வெளங்காதவன்™ said...

Hi hi hi hi....

:-)


#Template comment mattum poduvor sangam.

middleclassmadhavi said...

:-)))

ரசிகன் said...

//ஒரே நாள்ல முடிவு பண்ணி., எங்களை
மாதிரி நீயும் மாட்டிக்க கூடாதுல்ல//
என்னாது ஒரே நாள்ல முடிவு பண்ணீங்களா !!!
அப்ப.. இந்த
கம்ப்யூட்டர் கிளாஸ்ல் கிடந்த கடும் தவம்
பஸ் ஸ்டான்ட்ல் புரிந்த பகீரத தவம்
எல்லாம் கற்பனையோ !! காவியமோ !!
காலேஜ் வாசல்,கோவில் வாசல்
அண்ணி வீட்டு வாசல் ,
அவங்க friendu வீட்டு வாசல்னு
வாசல் இருக்கும் இடம் எல்லாம்
வெங்கட் இருக்கும் இடமாகி
போனதால்ல கேள்வி ..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// இந்த கம்ப்யூட்டர் கிளாஸ்ல் கிடந்த
கடும் தவம் பஸ் ஸ்டான்ட்ல் புரிந்த பகீரத தவம் எல்லாம் கற்பனையோ !! காவியமோ !! //

ஹி., ஹி., ஹி.... ஒரு நாள்ல முடிவெடுத்து அதுக்கப்புறம்
செஞ்சதுதான் இதெல்லாம்..

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// Athaye thaan antha...
Ledies-m.... Solli iruppaanga... //

நோ.. நோ.. அவங்க வேற மாதிரி
சொல்லியிருப்பாங்க...

" சிக்கிட்டான்யா..! "

வெங்கட் said...

@ நாய் நக்ஸ்.,

// Appa 3 losesaaaaaaaaaaaaa....? //

உஷ்.... பதிவை படிக்க சொன்னா..
ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீரு..?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// போனதுல இருந்து கேப்பே விடாம
பஜ்ஜி சொஜ்ஜிய அமுக்கிட்டு இருந்தா
அப்புறம் என்ன பண்ணுவாங்க? //

ஹி., ஹி., ஹி... வந்த வேலையை
பார்க்க வேணாமா..?!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// இப்ப சோத்துக்கு என்ன பண்றீங்க? //

அதுக்கெல்லாம் ஒண்ணும் பிரச்னை
இல்ல.. இந்த மாதிரி சிக்கலான சிசுவேஷ்ன்
வந்தா போட்டோல ( செந்தில் ) இருக்குற
மாதிரி மூஞ்சியை வெச்சிக்கணும்..
அம்புட்டு தான்

சிவகுமாரன் said...

கொடுத்து வச்ச மாப்பிளைங்க . ஜமாயுங்க

Anonymous said...

Very funny one.. Like it :-)

Power system Engineer said...

வெங்கட் மாமா ....... எங்கயோ போய்டீங்க...என்ன இருந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல...

vasan said...

எழுத்துந‌டை காமெடியாய், ர‌சனையாய் பிராக்டிக்க‌லாய்,ரிய‌லிஸ்டிக்காய், க‌ல‌க்க‌லாய் இருக்கிறது, நீங்க‌ள் ஒரு சக‌ல'கலா'ர‌சிக‌ர், பிர‌ப‌ல‌மான‌ ப‌திவாள‌ராவீர்க‌ள் என்று சொன்னால், எப்ப‌டி சிரிப்பீர்க‌ள்?