சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 August 2012

ரெடி., ஸ்டார்ட், ஆக்சன்..!!நான் ப்ளாக் ஆரம்பிச்சப்ப எனக்கு 
இவ்ளோ பெரிய  ரீச் இருக்கும்னு 
நினைக்கவே இல்ல..

Lions Club-ல பேச கூப்பிட்டாங்க..

Shortfilm எடுக்கலாம் வாங்கன்னு 
ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...

சினிமாவுக்கு Screenplay எழுத 
ரெண்டு பேர் கூப்பிட்டாங்க...

ஆனா.. அவங்க அழைப்பை என்னால 
Use பண்ணிக்க முடியாம போச்சு..

சாரிபா...!!

ஆனா... 

இந்த வாரம் என் விகடன்-ல ( கோவை ) 
என் ப்ளாக் வந்ததை பாத்துட்டு, 
விகடன் ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி...

" உங்க காமெடி நல்லா இருக்கு.., 
விகடனுக்கு ரெகுலரா எழுதி தர 
முடியுமா.? " ன்னு கேட்டாங்க.. 

நானும் " நீங்க நினைக்கிற மாதிரி நான் 
ஒண்ணும் பெரிய ஆள் இல்ல சார்..
நான் ஒரு டம்மி பீஸ்" னு சொன்னேன்..

( வெங்கி., பெரிய எழுத்தாளர் (?!) ஆனதும் 
உனக்கு தன்னடக்கம் தானா வந்துடுச்சிடோய்..! ) 

ஆனா அவங்க விடறதா இல்ல.. 

அப்புறம் நான் " ஓ.கே " சொல்லிட்டேன்..


( விகடன்ல எழுத சொல்லி கேட்டப்ப 
என் ரியாக்சன்..! )

இதுக்கு மட்டும் எப்படி " ஓ.கே "
சொன்னேன்னு பார்க்கறீங்களா..?!

" மாசம் ஒண்ணோ , ரெண்டோ 
எழுதி குடுத்தா கூட போதும் "னு 
அவங்க எனக்கு சுதந்திரம் குடுத்து 
இருக்காங்க...

அதே மாதிரி நானும் அவங்களுக்கு 
சுதந்திரம் குடுத்து இருக்கேன்..

" எழுதி அனுப்பற எல்லாத்தையும் 
போடணும்னு கட்டாயமில்ல.., உங்களுக்கு 
பிடிச்சதை மட்டும் போடுங்கன்னு... "

ஹி., ஹி., ஹி..., எங்கே போனாலும் 
அடங்க மாட்டோம்ல...!!
.
.

19 Comments:

நாய் நக்ஸ் -இலையையும் தின்பவன் said...

Mmmmm
appadiththaan....
Adakkama.....

Oorama....
Amaranum....

Inga
annan
naan
irukkenla...?????

Vinodhini said...

vaazhthukkal Venkat sir.. Kalakkunga..

முஹம்மது யாஸிர் அரபாத் said...

வாழ்த்துக்கள் தோழா. உங்ககிட்ட இருந்து இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம்.

வெளங்காதவன்™ said...

வாழ்த்துக்கள் தலைவா!

வெளங்காதவன்™ said...

ஆனா, உன்னையெல்லாம் நம்பி எழுத சொல்லுராங்கலேன்னு மிசஸ்.வெங்கட் சொன்னத யாருகிட்டயும் சொல்லிடாதீங்க!!!

ரசிகன் said...

ஆண்டவா இதுக்காக விகடனையும் ebook ஆக்கிடாத .. இவரை தாண்டியும் நிலைத்து நிற்கும் சக்தியை விகடன் தாத்தாவுக்கு வழங்குவாயாக. :)
All the Very best, கலக்குங்க :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னடா இது விகடனுக்கு வந்த சோதனை

இந்திரா said...

தாத்தாவுக்கு வந்த சத்தியசோதனை..
என்ன பண்ணித்தொலைக்குறது? விதியை யாராலும் மாத்த முடியாதே!!

இம்சைஅரசன் பாபு.. said...

வாழ்த்துக்கள் ........

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

வரலாற்று சுவடுகள் said...

புத்தகமா இருந்து உங்கள அறிமுகப்படுத்துனதுல விகடன் நட்டு கழண்டு "நெட்" ஆகிப்போச்சு....

நெட்டுல இருந்தும் விகடனை ஒழிச்சு கட்டியிறனும்ங்ற உங்க லட்சியம் போற்றப்பட வேண்டியது! :D :D

பெசொவி said...

Good, All the Best!

Troo Picture said...

ஏங்க விகடன் சந்தாவை cancel எப்படி பண்ணறது? யாரவது வழி சொல்லுங்களேன் ..

Madhavan Srinivasagopalan said...

// " எழுதி அனுப்பற எல்லாத்தையும்
போடணும்னு கட்டாயமில்ல.., உங்களுக்கு
பிடிச்சதை மட்டும் போடுங்கன்னு... " //

Really good one.. LOL..

suthan said...

வாழ்த்துக்கள் தலைவா!
nangal ennum athigam ethir pakkiram ungalidam iruththu.

suthan canada

மங்குனி அமைச்சர் said...

அண்ணன் ஆ.வி.வெங்கட் வாழ்க

அண்ணன் ஆ.வி.வெங்கட் வாழ்க, வாழ்க

அண்ணன் ஆ.வி.வெங்கட் வாழ்க, வாழ்க , வாழ்க

Manish said...

வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..

Manish said...

வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் தல......