சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 July 2010

To ---> கவிஞர் வைரமுத்து...,





















" அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்
அறையப்படுகிறது...!! "

இது நம்ம குழந்தைகளின்
Education System-ஐ பத்தி
18 வருஷத்துக்கு முன்னாடி
நீங்க எழுதினது தான்..

ஒருவேளை அப்ப வேணா
அப்படி இருந்திருக்கலாம்..

இப்பல்லாம் அப்படி இல்லையே..!

நம்ம Education System-ல
இன்னிக்கு எவ்ளவோ மாற்றம்..!

Computer., Abacus-ன்னு
நிறைய Improvement..!!

இதையெல்லாம் யோசிக்காம
சும்மா பழைய பல்லவியே
பாடிட்டு இருந்தா எப்படி..??

அதனால நான் என்ன
சொல்ல வர்றேன்னா....

காலத்துக்கு தகுந்த மாதிரி
மாற்றம் வேணும் எங்களுக்கு..

அந்த மாற்றம் உங்க
கவிதையிலையும்
வேணும்னு தான்
ஆசைப்படறோம்..

So.., உங்க அனுமதியோட

அந்த கவிதையில
" ஆணிக்கு "
பதிலா
" கடப்பாரை "
போட்டுக்கறோமே..!!


இன்று ஒரு தகவல் :
---------------------

" ஓடி விளையாடு பாப்பா..!! " - அது
அந்தக் காலம்...

" ஓடு.., ஓடு.., ஓடு பாப்பா...!! " - இது
இந்தக் காலம்...

பாவம் நம்ம குழந்தைகள்..
.
.

34 Comments:

அருண் பிரசாத் said...

First?!

ஓடி ஓடி படி பாப்பா - இந்தக்காலம்

பெசொவி said...

இப்பதான் நான் சுத்தியை ஓரமா எடுத்து வச்சேன், நீங்க கடப்பாரையைத் தூக்கிட்டீங்களா?
(VKS மெம்பர்களுக்கு : யாரோ இப்ப வெங்கட்டுக்கே சூனியம் வச்சுட்டாங்க போலிருக்கு, அறிவுபூர்வமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாரே, ஒரு வேளை 2012க்கு முன்னாடியே உலகம் அழிஞ்சுடுமோ?)

Mohamed Faaique said...

" அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்
அறையப்படுகிறது...!! "
கல்வெட்டுக்கள் என்ற நுலில் எழுதயிருந்தார்.. நான் மிகவும் ரசித்த வரிகள் . முழுக்கவிதையையும் எழுதி இருக்கலாம்.

Mohamed Faaique said...

“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க குருஜி.. ....

VELU.G said...

நல்லாயிருக்குங்க

Anonymous said...

nalla criticise panreenga...

with good example...

yosikkavendiyathu...

poonaikku yaar manikattuvathu...

palikida kuzhanthainga...ilanthalai muraiyinarai ippadiyaa samattikondu adippathu...ilanthalir ennaavathu...

வெங்கட் said...

@ Faaique.,

// கல்வெட்டுக்கள் என்ற நுலில் எழுதயிருந்தார்..//

இது " இன்னொரு தேசிய கீதம் "
கவிதை தொகுப்பில் இருக்கிற
கவிதையாச்சே....

//முழுக்கவிதையையும் எழுதி இருக்கலாம். //

அது ரொம்ப பெரிய கவிதைங்க..
இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக
Select பண்ணி சில வரிகள் மட்டும்..

தலைப்பு: அவனுக்கே அவன் அந்நியமானான்



வகுப்பறைகளின்
புழுக்கத்தில் புழுங்கிப் புழுங்கி
மாணவர்களின் நுரையீரல்
வெந்துவிட்டது..

பல இளம்பெண்கள்
புத்தகச் சுமை பொறுக்காமலேயே
பூப்பெய்திவிட்டார்கள்..

பாலகர்கள்
சிலேட்டின் ஒரு பக்கத்தை
எச்சிலாலும்.,
மறுபக்கத்தை கண்ணீராலும்
துடைத்தழிக்கிறார்கள்..

எழுத்துகளின் ஊர்வலத்தில்
அவர்கள் காணாமல்
போனார்கள்..

அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்
அறையப்படுகிறது...!!

இந்த மூங்கில்களை
ஐந்திலேயே வளைக்க
ஆசைப்பட்டார்கள்..!!

பல மூங்கில்கள்
வளைக்கும் அவசரத்தில்
முறிக்கப்பட்டதால்
விறகுக்கடைகளில்
விற்பனையாயின..

இந்த பட்டரைகளில்
கூர் செய்ய கடப்பாரைகளை
கொடுத்தோம்..!
அவை
குண்டூசிகளாய் திரும்பின..

அவனது மாணவப்பருவம்
ஒரு கடன் வாங்கிய
வசந்தம்

அவன் பாதங்களுக்குக்
கீழேயே பாதைகள்
முடிந்துவிட்டனவா..?

மண்வெட்டி பிடிக்கும்
திராணியை கூட
மனப்பாட கரையான்
தின்று விட்டது..

முதுகுக்கு பின்னால் அஸ்தமனம்..!
முகத்துக்கு முன்னால் இருள்..!

மூளையின்
பயன்படுத்தாத பரப்புகளை
கத்தரித்து எடுத்துவிட்டது
இந்தக் கல்வி..!!

படை வீரர்களை
படைக்க வேண்டிய கல்வி.,
நடை நோயாளிகளைத்
தயாரித்தது..

ஆடம்பர அவசரத்தில்
புல்லாங்குழலை பொன்னில்
செய்துவிடாதீர்கள்..!
அது மூங்கிலாகவே இருக்கட்டும்..!!

pinkyrose said...

//“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க குருஜி.. ...//

எல்லா இடத்திலும் இப்படி தானா?

செல்வா said...

//அந்த கவிதையில
" ஆணிக்கு "
பதிலா
" கடப்பாரை "
போட்டுக்கறோமே..!!///
என்ன ஒரு நக்கல் ..!!
அப்புறம் என்னோட அடுத்த பதிவு என்னன்னா
"நான் VKS இல் சேர்வதா இல்லை VAS இல் சேர்வதா ...?"

Anonymous said...

//அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு
ஆணியை போல்
அறையப்படுகிறது...!! "//

அதனால தான் படிச்ச பிறகு வேலை செய்றத ஆணி புடுங்குறதுன்னு சொல்றாங்களோ?!

//அந்த கவிதையில
" ஆணிக்கு "
பதிலா
" கடப்பாரை "
போட்டுக்கறோமே..!!//

அப்ப இனிமே கடப்பாரை புடுங்குறதுன்னு சொல்வோம் :)

நட்புடன்,
பாலாஜி

Jey said...

கவிஞரின் கவிதை சூப்பர்...,

உங்களின் இடைசொறுகள் சூப்பரோ சூபர்.

dheva said...

தாங்க முடியலலலல்லல்லலல்லலலல் சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

யோசிப்பு திலகத்துக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஓடி போலாமா பாப்பா.. இது எதிர் காலம்????????

Mohamed Faaique said...

முழுகவிதைக்கும் நன்றி.. கல்வெட்டுக்கள் எனும் புத்தகத்திலும் சில வரிகளை எழுத்யிருந்தார்..

கருடன் said...

@வெங்கட்
//அந்த கவிதையில
" ஆணிக்கு "
பதிலா
" கடப்பாரை "
போட்டுக்கறோமே..!!//

ஒன்னு மட்டும் புரியுது... இப்போ எல்லாம் schoola உங்க பசங்களுக்கு நிறைய விட்டு வேலை கொடுக்கறாங்க. அதை எல்லாம் செய்யறதுக்கு கஷ்டபட்டுட்டு உங்க எதிர்ப்ப இப்படி தெரிவிச்சி இருக்கீங்க.

Unknown said...

'பாடத்திட்டம் படைப்பவர்கள்
சுட்டுவிரல்கலால் தொட்டு நுகர்வது
மகரந்தமாம்
அது
போன நூற்றாண்டின் புழுதி'

இதுவும் வைரமுத்து தான்.

Chitra said...

வைரமுத்து சார் கவிதைகளை ஆராய்ச்சி பண்ணி Ph.D. வாங்கிட்டீங்களே..... வாழ்க Dr . வெங்கட்.

நேசமித்ரன் said...

அன்று இரு விரலால் எழுதியதை இன்று பத்து விரல்களாலும் தட்டச்சுபவனே

சீருடை தந்து சத்துணவிட்டு முட்டையும் ஈந்து பல் பொடியும்
சீர் கல்வி கொடுத்து சீந்தும் மூக்கோடு
பயின்று வென்றது வொரு காலம்

விந்து வங்கியில் நெளிந்து
குடுவையில் பிறந்து
குலவை போல் தகப்பனைத்தேடி அழுது வளர்ந்து போகும்
கல்விச்சாலை கூட்டுமருந்தில்
விளைந்த சத்துணவுக்கு கூட்டுக் கலவியில் பிறந்த சீவன்

லேசர் அறுவை நிகழ்த்த
பாஸ்பரஸ் பாட முறை
ஏவு கணை நுழைத்து
ஈவு மீதி அறிவியல்

நாளை உன் நரை திரை
வயதில் நிலவில் விவசாயம்
உன் தாத்தனுக்கும் உனக்கும் நூற்றாண்டு தூரம்
நமக்கும் இருக்கும் ஒரு ஒளியாண்டு பேதம்

நசையறு நன்மையே விளையும்

Karthick Chidambaram said...

உங்களுக்கு Dr பட்டம் தர முடிவு செஞ்சு இருக்காங்க Oxford -ல. சீக்கிரம் கிளம்ப தயாராகுங்க ... ஏற்கனவே துண்டு போட்டாச்சுங்க
பதிவு அருமைங்க :-)

பெசொவி said...

முதல்ல இந்த பெற்றோர் திருந்தனும்.........................எல்லாத்துலயும் தன் பையனே முத ஆளா வரணும்னு நினைச்சுகிட்டு சின்ன வயசிலேயே, யோகா, பரதம், பாட்டு, கராத்தே, இன்னும் என்ன எல்லாம் உண்டோ அதுலயெல்லாம் சேத்து விடறது, அதை எல்லாம் நிறுத்தனும்.

ரசிகன் said...

என்னதான் உங்க Punchசோட,
கடைசில சின்ன சிரிப்போட‌
இந்த பதிவ படிச்சி முடிச்சாலும்,
இது அனுபவத்தின், ஆதங்கத்தின்
வெளிப்பாடு.
நீயா நானால பகிரப்பட்ட மாதிரி,
Tamil teacherக்கு Maths பத்தியும்,
Science missக்கு englishபத்தியும் கவலை இல்ல..
Everybody wants the student to be best in their subject, together Making the little ones, a studying machine.

அதனால, சங்கத்தில சொல்லி
C.L வாங்கிட்டு,
நிதர்சனமான உண்மைக்கு
என் ஆதரவை தெரிவிக்கிறேன்..

வெங்கட் said...

@ Pinky Rose.,

// எல்லா இடத்திலும் இப்படி தானா? //

ம்ம்...

ஒரு தடவை ஒரு மில்லுக்கு
Child Labours இருக்காங்களான்னு
Officers செக்கிங் வந்தாங்களாம்..
அப்போ...

Officer : உங்க மில்லுல
குழந்தை தொழிலாளர்கள் இருக்காங்களா..??

Owner : இங்கெல்லாம் அப்படி யாரும்
இல்லீங்க சார்.. பக்கத்துல ஒரு
இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் இருக்குங்க..
அங்கே வேணா 1000 குழந்தை தொழிலாளர்கள்
இருக்காங்க..

வெங்கட் said...

@ டெரர்.,

// இப்போ எல்லாம் schoola உங்க பசங்களுக்கு
நிறைய வீட்டு வேலை கொடுக்கறாங்க.
அதை எல்லாம் செய்யறதுக்கு கஷ்டபட்டுட்டு
உங்க எதிர்ப்ப இப்படி தெரிவிச்சி இருக்கீங்க. //

உண்மை தான்..
நேத்து என் மகனுக்கு ( 3rd Std )
தமிழ் Exam-க்கு சொல்லி
குடுத்திட்டு இருந்தேன்..

கிட்ட தட்ட 6 மணி - 9 மணி வரை..

திருப்பி பார்த்தா.. பாதி தான்
முடிஞ்சி இருக்கு... Tension ஆயிட்டேன்..

அதுல ஒரு கேள்வி வேற,,

" நீ விளையாடும் விளையாட்டுக்களின்
பெயர்களை எழுது.. "

என் பையன் கேட்டான்..

" என்னப்பா பெயர் எழுதறது..? "

" நீ விளையாடுற விளையாட்டு பெயரை
எல்லாம் எழுது.. "

" நான் எங்கேப்பா விளையாடுறேன்..?? "

" ??!!!!.......... "

pinkyrose said...

வெங்கட் சார்!

உண்மைதான் !
எங்க ஜெனரேசன் பட்ட கஸ்டத்த நிச்சயமா இனி வர்ர ஜெனரேசனுக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன் பார்க்கலாம்!

சேலம் தேவா said...

செயல்வழி கல்வி ,அது இதுன்னு ஏதேதோ சொல்றாங்க .இன்னும் என்னென்ன கஷ்டம் இருக்கோ?பாக்கலாம்.உங்ககிட்ட எதிர்பாராத பதிவு.

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// முதல்ல இந்த பெற்றோர் திருந்தனும் //

Yes... வாஸ்தவம் தான்..

School-ல இருந்து பசங்க
Tired-ஆ வந்தா
நாம என்ன பண்றோம்...

" Face Wash பண்ணு., "

" Tution-க்கு லேட் ஆகுது..
சீக்கிரம் கிளம்பு., கிளம்பு.. "

( or )

" Home Work எழுது..!! "

" அதை படிச்சி வை..,
வந்து கேட்பேன்..
சரியா சொல்லலை பிச்சிபுடுவேன்.. "


இப்படி பசங்கள விரட்டுறோமே
தவிர..என்னிக்காவது பக்கத்தில
உக்கார வெச்சி...

மத்தியானம் Lunch சாப்பிட்டியா..?

ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கே..?
உடம்புக்கு என்ன பண்ணுது..?

இப்படியெல்லாம் கேட்கறோமா..??

வெங்கட் said...

@ ரசிகன்.,

// Tamil Teacherக்கு Maths பத்தியும்,
Science Missக்கு English பத்தியும்
கவலை இல்ல..

Everybody wants the student to be best
in their subject, together Making the little ones,
a studying machine. //

சரியா சொன்னீங்க...

இன்றைய குழந்தைகள்
பாட சுமையினால ரொம்ப
கஷ்டபடறாங்க...

Parents அதை உணரலை.,
Schools-க்கு அது பத்தி அக்கறையில்ல..,
Govt-க்கு இதெல்லாம் தேவையில்ல..

வெங்கட் said...

@ தேவா.,

// செயல்வழி கல்வி ,அது இதுன்னு
ஏதேதோ சொல்றாங்க .
இன்னும் என்னென்ன கஷ்டம் இருக்கோ? //

சமச்சீர் கல்வின்னு Govt
ஒரு திட்டம் கொண்டு வந்தது..
அந்த திட்டம் இப்போ எப்படி
செயல்படுது தெரியுமா..??

பல இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல
மெட்ரிக் பாடதிட்டத்தை தான்
சொல்லி தர்றாங்க..
சமச்சீர் கல்வி புத்தகத்தை
தொடறதே கிடையாது..

இன்னும் சில ஸ்கூல்ல
மெட்ரிக் பாடதிட்டத்தோட
சம்ச்சீர் கல்வி பாடத்தையும்
சொல்லிதர்றாங்க..

So.., அந்த குழந்தைகளுக்கு
இரட்டை சுமை..

ஒரு சட்டம் போட்டுட்டா
மட்டும் போதுமா..?
அது எப்படி செயல்படுதுன்னு
கண்காணிக்க வேணாமா..??

இல்ல

இந்த சமச்சீர் கல்வியும்
ஒரு கண்துடைப்பா..??!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். என்ன நடக்குது இங்க. ஏரியா மாறி வந்துட்டனா?

அனு said...

//கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். என்ன நடக்குது இங்க. ஏரியா மாறி வந்துட்டனா?//

ஹிஹி.. same pinch

அருண் பிரசாத் said...

@ அனு, ரமெஷ்

இங்க ஒரே அனல் பறக்குது அதான் அமைதியா ஒதுங்கிட்டேன்

கருடன் said...

@ரமேஷ்
//கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். என்ன நடக்குது இங்க. ஏரியா மாறி வந்துட்டனா?//
@அணு
// ஹிஹி.. same pinch //
@அருண்
//இங்க ஒரே அனல் பறக்குது அதான் அமைதியா ஒதுங்கிட்டேன் //

தல VKS மெம்பெர் எல்லாம் ஒதுங்கி நிக்கரத பாத்த மனசு கேக்கல.... சிக்கிரம் ஒரு மொக்க போஸ்ட் போடுங்க....

பரிசல்காரன் said...

ச்சின்னதாக இருந்தாலும் நச்’ சென்று இருக்கிறது வெங்கட்!

-பரிசல்காரன்
நியூ மெம்பர்
VAS

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட

புதுப்புது மறுமொழியாளரகள் - வி ஏ எஸ் சில் கூடுகிறது கூட்டம் - அடுத்த தலைவர் நீ தான் வெங்கட்

ஆணிக்குப் பதிலாக கடப்பாறையா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா