சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 July 2010

பிடிச்சிருக்கு..!!நானும், என் Wife-ம்..
துணிகடையில Saree
எடுத்திட்டு இருந்தோம்..

அப்போ Monki என்கிட்ட
சொல்லிச்சி..
( Monki = என் மனசு )

ஹி.,ஹி., ஹி..!
மனம் ஒரு குரங்குன்னு
சொல்லுவாங்கல்ல..

" வெங்கி., இப்படி சும்மா இருந்தா
எப்படி..? உன் ஏழாவது அறிவை
Use பண்ணி சீக்கிரம் ஒரு Saree
Select பண்ண வை...! "

" OK.. பண்ணிடவேண்டியது தான்..!! "

என் Wife-கிட்ட திரும்பி...

" ஏதோ ஒரு Saree சீக்கிரம் எடு..,
எப்படி இருந்தாலும் Exchange பண்ண
வருவோம்ல.., அப்ப நல்லதா
பார்த்து எடுத்துக்கலாம்.. ! "

Wife முறைச்சி-ing..

( சரி எதாவது தமிழ் Sentiment முயற்சி
பண்ணலாம்.. )

" நிர்மலா.. இந்த Blue கலர் Saree எனக்கு
ரொம்ப பிடிச்சிருக்கு..! "

" ஐயே.. நல்லாவே இல்ல.. "

" நம்ம தமிழ் பண்பாடு என்ன சொல்லுது
தெரியுமா..? "

" என்ன சொல்லுது..?? "

" புருஷனுக்கு எது பிடிச்சாலும்.,
அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..! "

" பைத்தியம் பிடிச்சா கூடவா..??!! "

" ????....!!!!!..?!.. "
.
.

48 Comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

கல்யாணம் கட்டிய பின் எல்லா ஆம்பிளைக்கும் பிடிப்பதுதான்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இது என்ன அர்த்தமில்லாத கேள்வி? நல்ல மூளை உள்ள ஒருத்தன் கல்யாணம் செஞ்சுக்குவானா? அப்படியே செஞ்சுக்கிட்டாலும் wife கூட ஷாப்பிங் செய்ய வருவானா? (ஒய் ப்ளட், சேம் ப்ளட்!)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
கல்யாணம் கட்டிய பின் எல்லா ஆம்பிளைக்கும் பிடிப்பதுதான்...
//

மன்னிக்கணும் செந்தில், இப்படி ஆனபின்தான் கல்யாணமே செஞ்சுக்குவாங்க.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

"பெ.சொ.வி. , நீங்க vks சங்கத்துலதான் மெம்பர், pks சங்கத்துல இல்ல. (P = பெண்கள்)"

அனேகமா அனு இப்படி ஒரு கமென்ட் போட்டாலும் போடுவாங்களோ?

Chitra said...

////நான் : புருஷனுக்கு எது பிடிச்சாலும்.,
அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..

Wife : பைத்தியம் பிடிச்சா கூடவா..??!!////


.....உங்கள் wife க்கு ஒரு பூங்கொத்து..... அசத்திட்டாங்க!

அனு said...

//எப்படி இருந்தாலும் Exchange பண்ண வருவோம்ல.., அப்ப நல்லதா
பார்த்து எடுத்துக்கலாம்.. !//

எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி பெண்களை தாக்கியே எழுதுறீங்க?? என்ன ஒரு ஆணாதிக்கம்.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

(வந்த வேலை இனிதே துவங்கியது.. நாராயண..நாராயண...)

Deva said...

அவங்களையும் ஒரு blog ஆரம்பிக்க சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பைத்தியம் பிடிச்சா கூடவா..??!!//
கவலைப் படாதீங்க வெங்கட். உங்களுக்கு இனிமே சத்தியமா பைத்தியம் பிடிக்காது. இதுக்கெல்லாம் பீல் பண்ணாதீங்க. ஏற்கனவே இருக்க ஒன்னு திரும்ப எப்படி வரும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்காம இருக்க, சில வழிகள் இருக்கு:

1. எனக்கு அவ்வளவ்வா சாமர்த்தியம் பத்தாது, நீயே போய் செலக்ட் பண்ணிடேன், ப்ளீஸ் என்று சொல்லி நழுவி விட வேண்டும்.

to be continued....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
//எப்படி இருந்தாலும் Exchange பண்ண வருவோம்ல.., அப்ப நல்லதா
பார்த்து எடுத்துக்கலாம்.. !//

எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி பெண்களை தாக்கியே எழுதுறீங்க?? என்ன ஒரு ஆணாதிக்கம்.. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

(வந்த வேலை இனிதே துவங்கியது.. நாராயண..நாராயண...)
//

இதை நான் வழிமொழிந்தால்...............பெண்ணாதிக்கவாதியாகி விடுவேனோ என்ற பயம் இருப்பதால்.......வழிமொழிய வேண்டாமென்று பார்த்தாலும், .......எதற்கும் மனைவியிடம் ஆலோசித்துவிட்டு சொல்கிறேன்!

Anonymous said...

athukku enna pathil soneenga...

aam........ illai...

anyhow nalla irunthathu...

intha pathil....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தப்பிக்க வழி 2 :
முதலாவதாக அவங்க எடுக்கும் சேலையைப் பார்த்துவிட்டு "எனக்கென்னவோ, இந்த கலர் உனக்கு அவ்வளவா சூட் ஆகாதுன்னு தோணுது, வேற ஏதாவது எடு," என்று சொல்லுங்க, "நீங்களும் உங்க ரசனையும்" என்று மோவாயில் இடித்துக் கொண்டு "இதையே pack பண்ணிடுங்க"ன்னு கடைக்காரரிடம் சொல்லுவாங்க. உங்க நேரமும், கடைக்காரப் பையனின் நேரமும் சேமிக்கப் படும்.

soundr said...

//Wife : பைத்தியம் பிடிச்சா கூடவா..??!!//

நான் : எனக்கு எப்பவுமே உன்மேல பைத்தியம் தானடி
wife:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
மனைவி ஷாக்காகுற அந்த பிகோ செகண்ட்ல (note: the time gap between ! and ?) பில் போட்டுறது தான் புருசன் சாமர்த்தியம்

http://vaarththai.wordpress.com

வழிப்போக்கன் said...

Ending Super...

இராமசாமி கண்ணண் said...

கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னாலே பைத்தியம் பிடிச்சுருன்னுதானே அர்த்தம்.

chithrajust said...

kalakkura venkat!

sorry; tamil font type adikka theriyadu!

chithra

அனு said...

கடைக்கு போறதுக்கு முன்னாடி அனுவுக்கு வெங்கட்-டின் மனைவியிடம் இருந்து கால்..

வெங் மனைவி: அனு, இவரால எங்க வீட்ல ஒரே தொல்லை.. என்ன பண்ணுறதுன்னே தெரியல..

அனு: அது தெரிஞ்ச விஷயம் தானே..

வெ.ம: இவர் போன வாரம் போட்டுட்டு போன பஞ்சுமிட்டாய் கலர் சட்டையும் florescent பச்சை Pantஐயும் பார்த்து நாலு காளை மாடு மிரண்டு போச்சு.. எங்க பக்கத்து வீட்டு நாய்க்கு ஒரே வாந்தி பேதி..

அனு: அடடா..

வெ.ம: அது பத்தாதுன்னு ஒரே ட்ரெஸ்ஸ போட்டுட்டு இவர் பண்ணுற லொள்ளு தாங்க முடியல.. ஜீன்ஸ் பேண்ட் ஒரு மாசம் துவைக்காம போடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.. ஆனா, நார்மல் காட்டன் பேண்ட்-ட கூட ஒரு மாசம் துவைக்க மாட்டேன்றார்..

அனு: அய்யய்யோ.. உங்க பாடு கஷ்டம் தான்..

வெ.ம: இதுவாவது பரவாயில்லை.. கல்யாணம் ஆன நாளில இருந்து இவர் வாங்கி கொடுத்த ட்ரெஸ் எல்லாமே ப்ளூ கலர் தான்.. அப்படி என்ன தான் இருக்கோ அந்த கலர்ல..

அனு: சரி விடுங்க.. என்ன பண்ணலாம்னு அடுத்த கமெண்ட்ல சொல்லுறேன்..

அனு said...

அனு: சரி.. நீங்க உங்களுக்கு ட்ரெஸ் வாங்கனும்னு சொல்லி வெங்கட்-ட கூட்டிட்டு போய் ரெண்டு ட்ரெஸ் வாங்கி குடுங்க.. அப்போ தான் blogக்கு எதாவது topic கிடைக்கும்னு உங்க கூட வருவாரு..

வெ.ம: ஆமாமா.. ஏற்கனவே அதை வச்சு தானே இந்த பதிவு போட்டார்..(அதுலயும் ப்ளூ கலர் தான்)

அனு: ம்ம்ம்.. இப்போ ஓகே தானே..

வெ.ம: எல்லாம் சரி தான்.. ஆனா, இன்னொரு முறை எனக்கு திரும்பவும் blue கலர்லயே saree செலக்ட் பண்ணினார்னா என்ன பண்ணுறது?? அது பத்தாதுன்னு எதாவது sentimental டயலாக் வேற விடுவாரு..

அனு: அப்படி எதாவது சொன்னா நான் சொல்லி குடுத்த punch dialogueஅ சொல்லுங்க.. அப்புறம் reactionஅ பாருங்க..

வெ.ம: ஒகே. அப்படியே பண்றேன். ரொம்ப நன்றி..

----------------------------

இதுக்கப்புறம் நடந்தது தான் போஸ்ட்-ல இருக்கு..

டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னிப்பாராக..

வெங்கட் said...

@ கே.ஆர்.பி.செந்தில் & பெ.சொ.வி.,

// கல்யாணம் கட்டிய பின் எல்லா ஆம்பிளைக்கும்
பிடிப்பதுதான்... //

// மன்னிக்கணும் செந்தில், இப்படி ஆனபின்தான்
கல்யாணமே செஞ்சுக்குவாங்க. //

ஏங்க ரெண்டு பேரும் இப்படி
மாத்தி மாத்தி Same Side Goal போடறீங்க..,

கல்யாணத்துக்கு முன்னாடியோ ( or )
கல்யாணத்துக்கு அப்புறமோ
ஆம்பளைங்க பைத்தியம் தான்னு
இப்படியா பகிரங்கமா ஒத்துக்கறது..??!!

வெங்கட் said...

@ சித்ரா..,

// உங்கள் wife க்கு ஒரு பூங்கொத்து.....
அசத்திட்டாங்க! //

இந்தியாவின் மிகப்பெரிய Genius
கிண்டல் பண்ணபட்டு இருக்கார்..
கொஞ்சம் கூட Feeling இல்லாம
பூங்கொத்து குடுத்து வாழ்த்தறீங்களே...?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்தியாவின் மிகப்பெரிய கேனயுஸ் கிண்டல் பண்ணபட்டு இருக்கார்//

எங்க எங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் telephone ஆபீஸ்-ல உங்களுக்கு விருது கொடுக்குரதுக்காக தேடிட்டு இருக்காங்ககாம். நீங்க ஒவ்வொரு பதிவு போட்டதும் நிறைய போன் கால் பேசப்படுவதாக உளவுத்துறை சொல்லுதாம்...

வெங்கட் said...

@ அனு.,

// எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி பெண்களை
தாக்கியே எழுதுறீங்க??
என்ன ஒரு ஆணாதிக்கம்..
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. //

ஹி., ஹி.., ஹி..!!

பொண்ணுங்ககிட்ட என் இமேஜை
Damage பண்ணனும்னு உங்க
சதி திட்டம் நிறைவேறாது..

ஏன்னா நம்ம பொண்ணுங்க
நல்லவங்க., ரொம்ப புத்திசாலிங்க..

அவங்க இந்த பதிவை படிச்சிருப்பாங்க..!!


என் நல்ல மனசு அவங்களுக்கு
புரிஞ்சிருக்கும்..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// உங்களுக்கு இனிமே சத்தியமா பைத்தியம் பிடிக்காது.
ஏற்கனவே இருக்க ஒன்னு திரும்ப எப்படி வரும். //

என்னமோ நான் பைத்தியமா
இருந்த ஆஸ்பத்திரியில
இவரு டாக்டரா இருந்த மாதிரி..?!

ரெண்டு பேரும்
பக்கத்து பக்கத்து Bed தானே..!!

வெங்கட் said...

@ தேவா.,

// அவங்களையும் ஒரு blog ஆரம்பிக்க சொல்லுங்க.. //

அப்புறம் நான் என் Blog-ஐ
எதை வெச்சு ஓட்றது..??!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்காம இருக்க,
சில வழிகள் இருக்கு //

Trying முதல் வழி..

நான் : எனக்கு அவ்வளவ்வா சாமர்த்தியம்
பத்தாது, நீயே போய் செலக்ட் பண்ணிடேன்,

Wife : Selection பண்றதுக்காகதான்
நீங்க வர்றீங்கன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..??!!

( கேவலமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு...)

அப்ப Purchase பண்ணினதை எல்லாம் யார்
தூக்கிட்டு வர்றதாம்.??!

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

Trying 2வது வழி..

நான்: ( முதலாவதாக அவங்க எடுக்கும்
சேலையைப் பார்த்துவிட்டு..)
எனக்கென்னவோ, இந்த கலர் உனக்கு
அவ்வளவா சூட் ஆகாதுன்னு தோணுது,
வேற ஏதாவது எடு...

Wife : நீங்களும் உங்க ரசனையும்..!!

( என் மோவாயில் இடித்து விட்டு..

கடைக்கார பையனை பார்த்து.. )

சரிப்பா வேற சேலை காட்டு...

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

கவிதா said...

ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன்
அப்படி ப்ளு கலருக்கும் உங்களுக்கும்
என்ன சம்பந்தம்?

அருண் பிரசாத் said...

இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்.....

என் பிளாக்ல யாரோ சூனியம் (note: @venkat - சூனியம், not zero, பில்லிசூனியம்) வெச்சிட்டாங்க. இப்பொ தான் அதை எடுத்து கூவத்துல போட்டுட்டு வரேன்.

அய்யோ... அதுக்குள்ள 27 கமெண்ட்ஸ் போட்டாச்சா. இதுக்கு மேல மொக்கைய புதுசா ஆரம்பிச்சா, சங்கத்துல இருந்து தூக்கிடுவாங்க. சரி விடு, அடுத்த பதிவுல பாத்துக்கலாம்.

(மக்களே, என் பிளாக் வொர்க் ஆகாததுக்கும், எனக்கும் ஜனாவுக்கும் நடந்த வாக்குவாதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. யாரும் அவரை கலாய்க்க கூடாது)

Sudha said...

பேச்சுபுய‌ல் ,செய‌ல் சிங்க‌ம் ,

விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!!
விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!!
விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!!
விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!!

வெங்கட் said...

@ சௌந்தர்.,

// Wife : பைத்தியம் பிடிச்சா கூடவா..??!! //
நான் : எனக்கு எப்பவுமே உன்மேல பைத்தியம் தானடி
wife:!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?
மனைவி ஷாக்காகுற அந்த பிகோ செகண்ட்ல
(note: the time gap between ! and ?)
பில் போட்டுறது தான் புருசன் சாமர்த்தியம் //

ஆஹா.. இது நல்ல ஐடியாவா இருக்கே..
அடுத்த தடவை Workout பண்ணிட
வேண்டியது தான்.. Thanks...

வெங்கட் said...

@ Chithrajust..

// tamil font type adikka theriyadu! //

இது ஜுஜுபி மேட்டர்ங்க..
கத்துக்க ரெடின்னா சொல்லுங்க..
நான் சொல்லி தர்றேன்..

வெங்கட் said...

@ அனு.,

" வெங்கட் சார் அனுவுக்கு ஒரு
அல்வா பார்சல்.. "

அல்வா இன்னும் ரெடி ஆகலையே..
கொஞ்சம் Wait பண்ணுங்க..

வெங்கட் said...

@ கவிதா.,

// ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன்
அப்படி ப்ளு கலருக்கும் உங்களுக்கும்
என்ன சம்பந்தம்? //

என்ன இப்படி Blue கலரை
சாதாரணமா சொல்லிட்டீங்க..
Note பண்ணிக்கோங்க..

ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
நாம Use பண்ற பேனா Blue தான்..,
செல்போன் பல் Blue தான்.., ( Blue Thooth )
Indian கிரிக்கெட் டீம் Dress Blue தான்..,
ஏழைங்க Use பண்ற Kerosine Blue தான்..,
பணக்காரங்க Swimming Pool Blue தான்..,
கிருஷ்ணர் Blue தான்..,
அட அவதார் கூட Blue தாங்க.

வெங்கட் said...

@ அருண்.,

// என் பிளாக்ல யாரோ சூனியம் வெச்சிட்டாங்க.
இப்பொ தான் அதை எடுத்து கூவத்துல போட்டுட்டு வரேன். //

எதை போட்டீங்க..?
சூனியத்தையா..?
உங்க பிளாக்கையா..??

சூனியத்தை போட்டிருந்தீங்கன்னா
கூவம் தப்பிச்சது..!!
பிளாக்கை போட்டிருந்தீங்கன்னா
நாங்க தப்பிச்சோம்..!!

வெங்கட் said...

@ ஜெய்லானி..,

உங்க விருதுக்கு நன்றிங்க..
உங்களுக்காவது என் அருமை,
பெருமை தெரியுதே..!!!

வெங்கட் said...

@ சுதா..,

// பேச்சுபுய‌ல் ,செய‌ல் சிங்க‌ம் ,
விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!!
விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!! //

இதுக்கு பேருதான்
குடுத்த காசுக்கு மேல கூவறதா..??!!

மங்குனி அமைச்சர் said...

ஏம்பா வைபுக்கு எதிரா இவ்வளோ ஆர்குயு பண்ணுவியா நீ ?? பெரியா ஆளுதான்பா

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
நாம Use பண்ற பேனா Blue தான்..,
செல்போன் பல் Blue தான்.., ( Blue Thooth )
Indian கிரிக்கெட் டீம் Dress Blue தான்..,
ஏழைங்க Use பண்ற Kerosine Blue தான்..,
பணக்காரங்க Swimming Pool Blue தான்..,
கிருஷ்ணர் Blue தான்..,
அட அவதார் கூட Blue தாங்க.
//

கலக்கிட்டேள் blueங்கோ!
சாரி, போங்கோ!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னிப்பாராக..//

வெங்கட்டையா, உங்களையா மேடம்!

அனு said...

//ஆழ்கடல் Blue தான்..,
அந்த வானம் Blue தான்..,
blah..blah..blah//

உங்க மனைவி சொல்லும் போது கூட எனக்கு பெருசா தெரியல.. ஆனா, இப்போ தான் அவங்க எவ்வளவு கஷ்ட படுறாங்கன்னு புரியுது..

அனு said...

@ரமேஷ்

அதை ஏன் கேக்குறீங்க.. வெங்கட் பத்தி புகார் வாங்குறதுக்காகவே எனக்காக ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் திறந்திருக்காங்க எங்க வீட்டு பக்கத்தில...

அனு said...

//சூனியத்தை போட்டிருந்தீங்கன்னா
கூவம் தப்பிச்சது..!!
பிளாக்கை போட்டிருந்தீங்கன்னா
நாங்க தப்பிச்சோம்..//

என்ன தான் எங்க கட்சிக்காரரைத் தாக்கி இருந்தாலும்.. கலக்கல்..

அனு said...

@வெங்கட்

//விருது வாங்கிய‌ எங்க‌ள் த‌லைவ‌ன் வாழ்க‌!!! //

இதுக்கு பேருதான்
குடுத்த காசுக்கு மேல கூவறதா..??!//

அவங்க ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டாங்களாம்.. சொல்ல சொன்னாங்க..

அது 'வாங்கிய' கிடையாது, 'வழங்கிய'..

ஜெய்லானிக்கு வந்த பாராட்டுக்கு நீங்க ஆட்டைய போடக் கூடாது..

அனு said...

@பெ.சொ.வி

//
//டிஸ்கி: ஹிஹி.. வெங்கட் மனைவி மன்னிப்பாராக..//

வெங்கட்டையா, உங்களையா மேடம்?//

என்னை தான் சார்..
அவங்க என் கிட்ட இன்னும் நிறைய சொன்னாங்க.. எல்லாத்தையும் சொன்னா வெங்கட்-க்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச இமேஜும் டமேஜ் ஆகிடுமேன்னு நிறைய கட் பண்ணிட்டேன்.. அதுக்கு தான் அந்த மன்னிப்பு..

தெம்மாங்குப் பாட்டு....!! said...

சூப்பரப்பெய்...

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

மனைவிக்குப் புடவை எடுத்துக் கொடுக்க நினைத்தால், பைத்தியம் பிடிப்பது பற்றி பேச்சு வருகிறது .... பாவம்யா நீ

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா