சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

28 July 2010

தில்லாலங்கடி ( ஒரிஜினல் )


டிஸ்கி : இது " தில்லாலங்கடி "
பட விமர்சனம் அல்ல..

இந்த போட்டோல இருக்கறது
யார்னு தெரியுதா பாருங்க..

தெரியலயா..??
பரவாயில்ல..
Feel பண்ணாதீங்க...

எப்பவும் தெரியாம இருக்கறது
தப்பில்ல..
தெரிஞ்சிக்காம இருக்கறது
தான் தப்பு..

சரி வாங்க இவரை பத்தி
தெரிஞ்சிக்கலாம்..

முதல்ல இவரு போட்டோவை
நல்லா ஒரு தடவை தொட்டு
கும்பிட்டுக்கோங்க..

இவர் பெயர் : Victor Lustig.

மிகப்பெரிய Genius..

Simple-ஆ ஒரு வரியில
சொல்லணும்னா...
இவரு No.1 ஒரிஜினல்
தில்லாலங்கடி..

ஆனா பொறாமை பிடிச்ச
இந்த உலகம்
சதி பண்ணி இவர் புகழை
மறைச்சிடுச்சு..

பின்ன..
இவ்ளோ புத்திசாலியான
உங்களுக்கே கூட
இவர் யார்னு தெரியலயே..!??

ஆனா..
" ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.. "
Correct தானே..!!

ஆமா.., இவரு அப்படி
என்ன தான் பண்ணினாரு...??!!


ஒரு Property-ஐ
அதோட Owner-க்கே
தெரியாம வித்துட்டாரு..

( இதென்ன பெரிய விஷயம்..?? )

அது ஒரு Govt. Property..

( இருக்கட்டுமே..! )

ஒரு சின்ன துண்டு பேப்பரை
கூட கண்ணுல காட்டாம
அதை வித்துட்டாரு..

( அட.., இது ஊர்ல., உலகத்தில
நடக்காமயா இருக்கு..!!
வாங்குறவன் லூசுப்பயலா இருந்தா
எல்லாம் தான் பண்ணலாம்..!! )

அட.., வாங்கினவரும்
லேசுப்பட்ட ஆளில்ல..,

City-லயே மிக பெரிய
இரும்பு வியாபாரி..
பல Business Techniques
கரைச்சி குடிச்சவரு.,

( ஓ...., அப்படியா..??
சரிப்பா வித்தாரு.,
வித்தாருன்னு சொல்றியே..
அப்படி என்னதாம்பா வித்தாரு..?? )

அதாங்க France-ல இருக்குமே..
ஓசரமா..

" Eiffel Tower "

பின் குறிப்பு :

தாஜ்மகாலையும் விற்க
போறதா ஒரு நியூஸ் இருக்கு..

வாங்க ஆசைபடறவங்க
என்னை Contact பண்ணுங்க..
-------------------------------------

பின் டிஸ்கி :

எப்படி வித்தார்னு தெரியணுமா..?
Comment-ஐ பாருங்க..

இந்த கதையை நம்பலையா..?
இங்கே பாருங்க..
.
.

29 Comments:

வெங்கட் said...

இப்படிதான் வித்தாரு...

ஒரு நாள் News Paper-ல
Eiffel Tower-ஐ பராமரிக்க Govt-க்கு
அதிக செலவாகறதால
அதை சமாளிக்க முடியாம
Govt. திணறுதுன்னு News வந்திருந்தது..

அதை படிச்சதும் Victor-க்கு
தலைக்கு மேல பல்ப் எரிய
ஆரம்பிச்சிடுச்சு..

" Deputy-General of the
Ministry of Posts and Telegraphs "

இப்படி தனக்கு தானே ஒரு
பதவியை உருவாக்கிட்டு

City-ல இருக்கிற 6 இரும்பு
வியாபாரிகளை Select பண்ணி
ஒரு லெட்டர் அனுப்பினான்..

குறிப்பிட்ட அந்த ஹோட்டல்க்கு
அவங்களும் வந்தாங்க...

அவங்ககிட்ட Victor சுத்தின
ரீல் இருக்கே.. யப்பா...
அது உலக மகா ரீல்ரா சாமி..

அது...

" நண்பர்களே.. Eiffel Tower-ஐ
Maintain பண்ண Govt-லா முடியல..,
So., அதை பிரிச்சி ஏலம் விட
Govt முடிவு பண்ணி இருக்கு..

இந்த ஏலத்துக்கு உங்க 6 பேரை
மட்டும் தான் நாங்க Select
பண்ணி இருக்கோம்..

உங்களுக்கும் இதுல Interest
இருந்தா உங்க டெண்டரை
நாளைக்குள்ள குடுங்க..

ஆனா இது ரொம்ப Secret.
மக்களுக்கு தெரிஞ்சா பெரிய
பிரச்சினை ஆயிடும்..

Govt Announcement வர்றதுக்கு
முன்னாடி நீங்களா எதையும்
வெளியே சொல்லகூடாது..! "

இதை கேட்டதும் வந்தவங்களுக்கு
வாயடைச்சி போச்சு...
ஆனா யோசிக்க டைம் இல்ல..

Late பண்ணினா.,
மத்தவங்க முந்திக்குவாங்களே..!!

அந்த 6 பேரும் அடுத்த நாளே
டெண்டரை குடுத்திட்டாங்க..

4 நாள் கழிச்சி..

அதுல ஒருத்தரை ( Andre Poisson )
மட்டும் Victor வந்து பார்க்க
சொன்னார்.

"சார்.., நீங்க ரொம்ப Lucky..,
உங்க டெண்டரை தான்
Govt. Accept பண்ணியிருக்கு..

இப்போ இருந்து நீங்கதான்
அந்த Eiffel Tower-க்கு Owner "
சொல்லவும்..,

அவருக்கு சந்தோஷத்தில
தலை கால் புரியலை..

" உங்க டெண்டரை நான்தான்
Govt.கிட்ட Recommend பண்ணினேன்.. "
Victor இப்படி ஒரு பிட் போட

ஓ.. இவர் கமிஷன் கேட்கறார்னு
அவருக்கு புரிஞ்சி போச்சு..

அவரும் சந்தோஷத்தில
ஒரு பெரிய Amount-ஐ
கமிஷனா குடுக்க..

அதை தூக்கிட்டு ஆள்
Austria-க்கு எஸ்கேப் ஆகிட்டாரு..

இது நடந்தது : 1925

அருண் பிரசாத் said...

உங்களுக்கு மேல தில்லாலங்கடியா இருக்காரு!

கேக்குறவன் கேணையா இருந்தா,
எருமாடு கூட ஏரோபிளேன் ஓட்டுமாம்

எப்படி நம்ம டயலாக்

அருண் பிரசாத் said...

//தாஜ்மகாலையும் விற்க
போறதா ஒரு நியூஸ் இருக்கு..//

என்கிட்ட மெரினா பீச் இருக்கு வாங்க எக்ஸ்சேன்ஞ் பண்ணிக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட்டை விட பெரிய கேடியா இருப்பான் போலிருக்கே?

Madhavan said...

விக்கிபெடியாலேருந்து மேட்டற 'சுட்டு', உங்க பாணில பதிவு போட்டீங்க பாருங்க.... உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...

ப.செல்வக்குமார் said...

நல்லவேள நீங்க அப்ப இல்ல ..! இல்லனா உங்ககிட்ட வித்திருப்பார் ...!!
(உங்களை கலாய்க்கிறேன்னு நினைச்சிடாதீங்க .. இன்னும் முடிவு தெரியல ..?)

VELU.G said...

ஹ ஹ ஹஹ

நல்லா சொன்னீங்க

Riyas said...

அடடா என்னா ரீலு.. எகிப்து பிரமிட்டும் விலைக்கு வருதாம் வாங்க போரிங்களா..ஹி..ஹி..

சூப்பர்..

Thenral said...

Ithukkum oru terama venumla........!:)

Balaji saravana said...

// வெங்கட்டை விட பெரிய கேடியா இருப்பான் போலிருக்கே? //
ரிப்பீட்டு!!!

நட்புடன்,
பாலாஜி.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

தாஜ்மஹால் என்ன ரேட்டுக்கு முடிக்கலாம்னு கேட்டு சொல்லுங்க ஜீ

அடி மாட்டு விலைக்கே பேசுங்க,கமிஷன் கரிகிட்டா கொடுத்துடுறேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தாஜ்மகாலையும் விற்க
போறதா ஒரு நியூஸ் இருக்கு..

வாங்க ஆசைபடறவங்க
என்னை Contact பண்ணுங்க..//
சாரி, நான் அதை விக்கறதா இல்லை, வெங்கட் சொல்றதை யாரும் நம்பாதீங்க!

Prabu said...

//தாஜ்மகாலையும் விற்க
போறதா ஒரு நியூஸ் இருக்கு..//

ஹி ஹி .. அந்த நியூஸ் கொடுத்தது நான் தான். அத வேறொருத்தருக்கு வித்துட்டேன். சாரி.. நியூஸ் வாபஸ்..

வேணும் னா இந்தியா கேட் விற்பனைக்கு இருக்கு..
பராமரிப்பு வேலை நடந்துக்கிட்டிருக்கு முடிஞ்சதும் வாங்கிக்கோங்க..
அப்புறம் இதுக்கு ஏஜன்ட் யாருமில்ல.. போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம். நேரடியா என்னை மட்டும் தொடர்பு கொள்ளவும்..

உரிமை ஆதாரம்:
(இது உங்கள் சொத்து -பாகம்: 454/32)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எப்பவும் தெரியாம இருக்கறது
தப்பில்ல..
தெரிஞ்சிக்காம இருக்கறது
தான் தப்பு..//

சரியா சொன்னீங்க.....
ஆமா, உங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு தெரியுமா, தெரியாதா, தெரிஞ்சும் தெரியாதா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வெங்கட்ட கேடின்னு சொன்னதை ஆட்சேபிக்கிறேன்

வெங்கட் said...

@ அருண்..,

// என்கிட்ட மெரினா பீச் இருக்கு
வாங்க எக்ஸ்சேன்ஞ் பண்ணிக்கலாம் //

No.., No.., நமக்கு அது வேணாம்பா..
நம்மகிட்ட தான் ஏற்கனவே
Hawai Beach இருக்கே...!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// வெங்கட்டை விட பெரிய
கேடியா இருப்பான் போலிருக்கே? //

யாருங்க அது...,
எங்க குருநாதரை
அவன், இவன்னு மரியாதை
இல்லாம பேசுறது..??!!

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

//No.., No.., நமக்கு அது வேணாம்பா..
நம்மகிட்ட தான் ஏற்கனவே
Hawai Beach இருக்கே...!!//

இந்தியனா இருப்போம்.

Be Indian! Buy Indian!!

வேணும்னா, திருவள்ளுவர் சிலையும் சேர்த்து கொடுக்குறேன்

Chitra said...

தாஜ்மகாலையும் விற்க
போறதா ஒரு நியூஸ் இருக்கு..

...who buying? you bidding????
me sirichching....

வெங்கட் said...

@ மாதவன்.,

// விக்கிபெடியாலேருந்து மேட்டற 'சுட்டு',
உங்க பாணில பதிவு போட்டீங்க //

நான் இந்த மேட்டரை ஒரு புக்ல
படிச்சேன்.. அப்புறம் விக்கிபிடியால
பார்த்து Confirm பண்ணினேன்..

இந்த மேட்டர் தெரியாதவங்க
எல்லாம் தெரிஞ்சிகிட்டு.,
அவங்க General Knowledge-ஐ
வளர்த்துக்கிட்டுமேன்னு
ஒரு நல்ல எண்ணம் தான்..

ஹி., ஹி., ஹி..

வெங்கட் said...

@ செல்வா.,

// நல்லவேள நீங்க அப்ப இல்ல..!
இல்லனா உங்ககிட்ட வித்திருப்பார்...!! //

நம்மகிட்ட வித்திருப்பாரா..??
சான்ஸே இல்ல...,

ஒருவேளை அப்ப நான்
இருந்திருந்தா....

இந்த பதிவுல
நீங்க Victor Lustig-க்கு
பதிலா Venkat-ன்னு பெயரை
மாத்தி படிச்சிட்டு இருப்பீங்க..

வெங்கட் said...

@ To All..,

ஆஹா நாம பேசாம
ஒரு Real Estate கம்பெனி
ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..

மெரினா பீச் ( அருண் )
எகிப்த் பிரமிடு ( Riyas )
தாஜ்மகால் ( பெ.சொ.வி )
இந்தியா கேட் ( பிரபு )

நம்ம ஆளுங்ககிட்டயே
இவ்ளோ இடம் விற்க
ரெடியா இருக்கே..

இதையெல்லாம் வாங்க,
விற்க அணுக வேண்டிய முகவரி

V & V ரீல் Estate Company..
( Victor & Venkat )
Salem..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

லேட்டஸ்ட் தகவல் :
என்கிட்டே சென்ட்ரல் ஸ்டேஷன் ரெடியா இருக்கு. ரொம்ப பெரிசு, இது வாங்கினா நாலு கடிகாரம் வேற ப்ரீ. வேணும்னா கொசுறா ரிப்பன் பில்டிங் கொடுத்துடலாம். யாராவது வாங்கறதுக்கு முன்னாடி முந்திக்குங்க, கமான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இதையெல்லாம் வாங்க,
விற்க அணுக வேண்டிய முகவரி

V & V ரீல் Estate Company..
( Victor & Venkat )
Salem..//

இந்த எலக்ட்ரானிக் யுகத்துல முகவரி எல்லாம் எதுக்கு, வாங்க விரும்பறவங்க என்னோட இந்த சுவிஸ் அக்கவுன்ட்டுல பணத்தை டெபிட் பண்ணிடலாம்

Name : Peyar innaathukku
Account No. 0-00-000-420

பணத்தை எனக்கு அனுப்பிட்டு வெங்கட்கிட்ட things-ஐ வாங்கிக்குங்க.

அருண் பிரசாத் said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை

கூட 2 எக்ஸ்பிரஸ் ரயில், 4 லோக்கல் ரயில், 10 கூட்ஸ், 15 பேசன்ஞர் ரயில் Free யா குடுத்தா பேச்சு வார்த்தை நடத்தலாம்

அருண் பிரசாத் said...

அய்யய்யோ....

நம்ம வெங்கடை கலாய்க்காம மொக்கை போட்டுட்டு இருக்கோமே!

இது வெங்கடின் திட்டமிட்ட சதி. விரைவில் அடுத்த பதிவு போட்டு நம் குறையை தீர்ப்பாராக

வெங்கட் said...

@ பெ.சொ.வி & அருண்.,

// என்கிட்டே சென்ட்ரல் ஸ்டேஷன்
ரெடியா இருக்கு. இது வாங்கினா
நாலு கடிகாரம் வேற ப்ரீ. //

// கூட 2 எக்ஸ்பிரஸ் ரயில்,
4 லோக்கல் ரயில், 10 கூட்ஸ்,
15 பேசன்ஞர் ரயில் Free யா
குடுத்தா பேச்சு வார்த்தை நடத்தலாம் //

இதை நான் மம்தா பானர்ஜிக்கு
Forward பண்றேன்..

அவங்க வந்து Dealing முடிச்சி
தருவாங்க.. கமிஷனை
அவங்ககிட்டயே குடுத்துடுங்க..

basheer said...

பெங்களுரு சிட்டி ரயில்வே ஸ்டேசனை வித்த கதை கேள்விப்பட்டதுண்டா?
டீ குடித்து விட்டு வந்து பார்க்கும்போது நிறுத்தியிருந்த ரோடு ரோலரை காணவில்லை.
மேற்சொன்ன இரண்டும் நீங்கள் எழுதியிருப்பதோடு சேர்த்து படித்த நினைவு.எப்போதோ.

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

தில்லாலங்கடி சூப்பர்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா