சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 July 2010

குற்றம்... நடந்தது என்ன..??July 11th 2010 முதல்..

என் Blog, என் Gmail
இதெல்லாம் திடீர்ன்னு
என் System-ல Open ஆகலை...

( வேற Websites எல்லாம்
Open ஆச்சு.. )

இதுல எதாவது சதி
இருக்குமோன்னு ஒரு
சின்ன Doubt..

சரின்னு CBI-க்கு ஒரு
போன் போட்டு..,

" இந்த Matter-ஐ கொஞ்சம் பாருங்கன்னு "
சொல்லி வெச்சேன்...

நேத்து Evening CBI-ல
இருந்து போன்..

CBI : வெங்கட்.., உங்க Doubt உண்மைதான்..

நான் : அப்ப அது சதி வேலை தானா..??

CBI : 100% சதிவேலை..

நான் : யாரு..??

CBI : சொல்றேன்... நீங்க Use பண்ற
Browser எது..?

நான் : Google Chrome..

CBI : உங்க Blog எதுல இருக்கு..?

நான் : Blogger-ல

CBI : நீங்க Use பண்ற Mail..?

நான் : G-Mail..

CBI : நீங்க Use பண்றது
Orkut-ஆ..? Facebook-ஆ..?

நான் : Orkut..

CBI : ம்ம்.. சந்தேகமேயில்லாம
இது Google வளர்ச்சியை தடுக்க
நடந்த சதி..

நான் : அப்படியா..? அப்ப எதுக்கு
என்னை Target பண்ணனும்..??

CBI : ஏன்னா... நீங்க Google Use
பண்றதால இந்த 6 மாசத்துல
கிட்டதட்ட 6.5 கோடி பேர் Google
Use பண்றதா ஒரு சர்வே
சொல்லுது...

நான் : ( தப்பான சர்வேயா இருக்கும் போல..,
ரொம்ப கம்மியா சொல்லுது..!! )
சரி அதனால..??

CBI : உங்க வளர்ச்சியை தடுத்தா.,
அது Google வளர்ச்சியை தடுத்த மாதிரி..

நான் : ஓ.. இப்ப புரியுது..!
சரி இதையெல்லாம்
பண்ணினது யாரு..??

CBI : பில் கேட்ஸ் ( Microsoft )

நான் : இந்த பில் கேட்ஸ்க்கு கட்டம்
சரியில்லைன்னு நினைக்கிறேன்..
நம்ம கூட விளையாடறதே
வேலையா போச்சு..!!

CBI : சரி இந்த பில் கேட்ஸ்-ஐ
என்ன பண்ண போறீங்க..?

நான் : பஞ்ச் டயலாக் சொல்லி
Warning குடுக்க வேண்டியது தான்..

@ பில் கேட்ஸ்.,

" எங்க கப்பல் மூழ்கினா கூட
நாங்க Feel பண்ண மாட்டோம்லே..
ஏன்னா..., எங்களுது எல்லாமே
நீர் மூழ்கி கப்பல்..!! "ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( டெரர் பாண்டியன் )
இந்த சதி வேலையில VKS-ம்
உடந்தையா இருப்பாங்களோ..??

ஹி., ஹி., ஹி...
காமெடி பண்ணாதீங்க..!!

System Hang ஆயிட்டாலே
என்ன பண்ணனும்னு கூட
அவங்களுக்கு தெரியாது..
.
.

54 Comments:

கலாநேசன் said...

நான்: பில் கேட்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பில் கேட்ஸ்: மன்சுகொங்க Mr வெங்கட்


சரி சரி அவர் மாப்பு கேட்டாரு. இனிமே அப்படி பண்ண மாட்டாராம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//System Hang ஆயிட்டாலே என்ன பண்ணனும்னு கூட அவங்களுக்கு தெரியாது..//

ஆமாங்க அதனாலதான் பாவம்னு எங்க கட்சிகாரங்க உங்களுக்காக tamilsh ல submit பண்றாங்கலோ.

அதென்னப்பா உங்க கட்சிகாரன்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிகிடுவீன்களா. இது எந்த ஊர் நியாயம்...

மங்குனி அமைசர் said...

யாருப்பா அது சண்டெல கூட பதிவு போடுறது . ஏம்பா சண்டே கூட பிரீயா இருக்க மாட்டிகளா (மங்கு நீ மட்டும் இப்ப ஏன்னா பன்னுரியாம் ?)

ஆமா இந்த பில்கேட்ஸ் வந்து நம்ம கோல்டன் பீசுல அசையாம நிப்பாரே அவருதானே ?

Jey said...

//System Hang ஆயிட்டாலே
என்ன பண்ணனும்னு கூட
அவங்களுக்கு தெரியாது..//

அடடா, இதுனாள் வரையிலும் இது தெரியாம போச்சே...., அப்போ விகேஎஸ் , டம்மி பீசுங்களா???.( இனி அடிச்சி ஆட வேண்டியதுதான்)

Madhavan said...

try out the alternate OS linux or Mac.. if windows Os has an y problem..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//System Hang ஆயிட்டாலே
என்ன பண்ணனும்னு கூட
அவங்களுக்கு தெரியாது..//

அதென்னவோ உண்மைதான். கூடவே, உங்க hang-over-ஐயும் எப்படி தீக்கறதுன்னு தெரிய மாட்டேங்குதே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Jey said...
இனி அடிச்சி ஆட வேண்டியதுதான்//

நாங்கல்லாம் தெளிய வச்சுதான் அடிப்போம்!

TERROR-PANDIYAN(VAS) said...

மைக்ரோசாப்ட் அலுவலகம். பில் கேட்ஸ் பரபரப்புடன் வருகிறார்...

பில் : எப்பவும் போல நம்ப பண்ண சாதிய வெங்கட் கண்டுபிடிச்சி முரியடிசிட்டாறு.

பி.எ. : அப்போ மறுபடியும் அவரு கம்ப்யூட்டர் டௌன் ஆக்க முயற்சி செய்யவா?

பில் : யோ!! எரிமலைல எட்டி பாத்ததே தப்பு நான் பீல் பண்ணிட்டு இருக்கேன். நீ எச்சி வேற துப்பறேன் சொல்ற. பேசாம வெங்கட் ஐயா கிட்ட மன்னிப்பு கேட்டு VAS ல சேர்ந்துட வேண்டியதுதான்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கலாநேசன் said...
பில் கேட்ஸ்..... மாப்பு கேட்டாரு. இனிமே அப்படி பண்ண மாட்டாராம்.//

மாப்பா? அவருக்கு மட்டும் தமிழ் தெரிஞ்சு இதைப் படிச்சார்னா, வப்பாரு பெரிய ஆப்பா!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அதென்னப்பா உங்க கட்சிகாரன்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிகிடுவீன்களா. இது எந்த ஊர் நியாயம்..//

அட இது கூட பரவாயில்லப்பா.... சமயத்துல தன்னோட கேள்விக்கே பதில் சொல்லிக்குவார் இவரு, அதுதான் தமாஷ்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//CBI : சொல்றேன்... நீங்க Use பண்ற
Browser எது..?

நான் : Google Chrome..

CBI : உங்க Blog எதுல இருக்கு..?

நான் : Blogger-ல

CBI : நீங்க Use பண்ற Mail..?

நான் : G-Mail..//

இதெல்லாமே உங்ககிட்டதான் கேக்குறாங்க, அவங்களாவே கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா அது Central Bureau of Investigation இல்ல Cracked Brain Imagination.

Faaique Najeeb said...

உங்கள அடிக்க ஆளே இல்ல தல .. (தினமும் மனைவியிடம் வாங்குறது சேர்த்துக்கொள்ள பட மாட்டாது...)

ஜெய்லானி said...

இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன் ஆமா..

ரசிகன் said...

மொத்த‌ த‌மிழ‌ர்க‌ள் எண்ணிக்கையே
7 கோடி பேர்தான் இருக்கும்னு
wiki சொல்லுது..
ந‌ண்டு சிண்டு குஞ்சு குளுவான்,
ப‌டிக்க‌த் தெரியாத‌வ‌ன், த‌மிழ் ப‌டிக்கத்
தெரியாதவன், கம்ப்யூட்டரையே
கண்ணுல பார்க்காதவன்னு
கொஞ்ச‌ம் consider ப‌ண்ணியாவ‌து பொய் சொல்லி இருக்க‌லாம் இந்த CBI..
உதார் விட்டாலும் உருப்ப‌டியா விட‌ணும்..
(அதுக்குதான் 6.5ன்னு பெரிய மனசு
பண்ணி சொல்லியிருப்பாய்ங்களோ!! :-( )

ரசிகன் said...

அப்புற‌ம்..
GChrome ல‌ posting போட்டா
GChrome ல‌ ம‌ட்டும்தான் ப‌டிக்க‌
முடியும்னும்,
Gmailக்கு gmailல இருந்துதான்
mail ப‌ண்ண‌ முடியும்னும்
நினைக்க‌ற‌ பாம‌ர‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கு,
ந‌ம்ம‌ VKS சார்பில‌,ஒரு training
programme ந‌ட‌த்தினா என்ன‌...?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

message from bill gates :

எங்கள் சதி வேலையை இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை

இந்த தவறை செய்ததால் நாம் கூனிக் குறுகி விட்டேன்

இதனால் என்னோட மைக்ரோசாப்டு நிறுவனத்துக்கு ரமேஷ்(சிரிப்பு போலீசு) அவர்களை ஓனராக்குகிறேன்,அவர் ஏற்கனவே ஒரு பெரிய கம்பெனிக்கு ஓனராக இருந்தாலும் இந்த பொறுப்பை திறம்பட செய்வார் என நம்புகிறேன்

இப்படிக்கு
பில் கேட்சு
(Ex.Owner - Microsoft corporatiom)

Jey said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//Jey said...
இனி அடிச்சி ஆட வேண்டியதுதான்//

நாங்கல்லாம் தெளிய வச்சுதான் அடிப்போம்!|||

நாங்க ஆட்டய ஆரம்பிச்சா, தெளியவே விடமட்டோம்...

வெங்கட் said...

@ கலாநேசன்

// பில் கேட்ஸ்: மன்சுகொங்க Mr வெங்கட் //

ஓ.கே.., ஓ.கே..,மன்னிச்சாச்சு..

ஆனா இதுதான் உங்களுக்கு
2nd & Last மன்னிப்பு..

வெங்கட் said...

@ ரமேஷ்.,

//System Hang ஆயிட்டாலே என்ன பண்ணனும்னு
கூட அவங்களுக்கு தெரியாது..//

// ஆமாங்க //

ஹி., ஹி., ஹி..!!
இப்படி பொசுகுன்னு
உண்மைய ஒத்துகிட்டீங்களே...

வெங்கட் said...

@ மங்குனி.,

// ஆமா இந்த பில்கேட்ஸ் வந்து நம்ம
கோல்டன் பீசுல அசையாம நிப்பாரே
அவருதானே ? //

அது இவரு இல்லங்க..

இவரு Ex.அமெரிக்க ஜனாதிபதி
பில் கிளிண்டனோட அண்ணன்..
( ரெண்டு பேரு பெயர்லயும்
" பில் " இருக்கு கவனிங்க.. )

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//அதென்னப்பா உங்க கட்சிகாரன்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிகிடுவீன்களா. இது எந்த ஊர் நியாயம்...//

என்பா VKSல இருந்து எங்க தலை கிட்ட போன் செஞ்சி டவுட் கேக்கறிங்க.... நன் கேட்ட தப்ப?? பதில் தெரிஞ்சவங்க கிட்டதான கேள்வி கேக்க முடியும்...

Riyas said...

ஆஹா.. ஓஹோ....

ஹா...ஹா...

அருண் பிரசாத் said...

//System Hang ஆயிட்டாலே என்ன பண்ணனும்னு கூட அவங்களுக்கு தெரியாது.//
//ஆமாங்க அதனாலதான் பாவம்னு எங்க கட்சிகாரங்க உங்களுக்காக tamilsh ல submit பண்றாங்கலோ.//

ரமெஷ், விடுங்க நாம எப்படி என் பிளாக் சூனியத்தை எடுத்தோம் அவங்களுக்கு தெரியாது போல...

@ ஜெய்

//அடடா, இதுனாள் வரையிலும் இது தெரியாம போச்சே...., அப்போ விகேஎஸ் , டம்மி பீசுங்களா???.//

வெங்கட், கம்பியூட்டருக்கு வைரஸ் அனுப்பி வெச்சத்தே VKS தான். உங்களுக்கும் ஒரு பார்சல் வேணுமா?

அருண் பிரசாத் said...

@ mahadevan

//try out the alternate OS linux or Mac.. if windows Os has an y problem..//

நீங்க வேற காமெடி பண்ணிட்டு, அவங்களுக்கு இதை கண்டுபிடிக்கவே CBI தேவைபடுது. இன்னும் Linux, MAC னு போன FBI ய கூப்பிடுவாங்க

வெங்கட் said...

@ Jey.,

// அப்போ வி.கே.எஸ் , டம்மி பீசுங்களா???.
( இனி அடிச்சி ஆட வேண்டியதுதான் ) //

பாத்து., மெதுவா ஆடுங்க..
அப்புறம் ( VKS கலைச்சுட்டா )
நமக்கு விளையாட பொம்மை
கிடைக்காம போயிடும்..!!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அட இது கூட பரவாயில்லப்பா....
சமயத்துல தன்னோட கேள்விக்கே பதில்
சொல்லிக்குவார் இவரு, அதுதான் தமாஷ்! //

என்னங்க பண்றது..?
கேள்வி கேட்கறதுக்கும்
ஒரு திறமை வேணுமே..!!

அதான்
நானே கேள்வி - நானே பதில்

வெங்கட் said...

@ ஜெய்லானி..,

// இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன் ஆமா.. //

இதைத்தாங்க நானும் பில் கேட்ஸ்-கிட்ட
சொல்லியிருக்கேன்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// மொத்த‌ த‌மிழ‌ர்க‌ள் எண்ணிக்கையே
7 கோடி பேர்தான் இருக்கும்னு wiki சொல்லுது.. //

ஓ.. உங்களுக்கு விஷயமே தெரியாதா..??!!
என் Blog தினமும் சைனீஸ்ல
Translate பண்ணி போடறாங்களே..

( உஸ்ஸப்பா... நல்லவேளை
சைனா பாஷை தெரிஞ்சவங்க
120 கோடி பேர் இருக்காங்க..! )

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஓ.. உங்களுக்கு விஷயமே தெரியாதா..??!!
என் Blog தினமும் சைனீஸ்ல
Translate பண்ணி போடறாங்களே..//

இப்போதான் புரியுது, சீனா ஏன் நம்ம நாட்டு மேல ரொம்ப கோபமா இருக்காங்கன்னு....அப்புறம், இந்த சீன பிரதமர் அமேரிக்கா போயிட்டு பில் கேட்ஸ பாத்ததுக்கும் வெங்கட் கம்ப்யூட்டர் டவுன் ஆனதுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதனால் என்னோட மைக்ரோசாப்டு நிறுவனத்துக்கு ரமேஷ்(சிரிப்பு போலீசு) அவர்களை ஓனராக்குகிறேன்,அவர் ஏற்கனவே ஒரு பெரிய கம்பெனிக்கு ஓனராக இருந்தாலும் இந்த பொறுப்பை திறம்பட செய்வார் என நம்புகிறேன் //

@ ஜில்தண்ணி - யோகேஷ் உனக்காவது இந்த அண்ணனோட பெருமை தெரிஞ்சிருக்கே.

//வெங்கட், கம்பியூட்டருக்கு வைரஸ் அனுப்பி வெச்சத்தே VKS தான். உங்களுக்கும் ஒரு பார்சல் வேணுமா?//

@ அருண் அவசரப்பட்டு Jey-க்கு வைரஸ் அனுப்பிடாதீங்க. பின்ன சாமிக்குத்தம் ஆயிடுச்சுன்னு அரசமரத்துக்கடியில நாலாப்பு பெயிலானவன்களை எல்லாம் கூப்பிட்டுகிட்டு பூக்குழி இறங்கிடுவாரு...

//இப்போதான் புரியுது, சீனா ஏன் நம்ம நாட்டு மேல ரொம்ப கோபமா இருக்காங்கன்னு....//

@ பெயர் சொல்ல விருப்பமில்லை நானும் சிங்கபூர்ல இருக்கும்போது சைனீஸ் பொண்ணுங்ககிட்ட பேசும்போது "வுன்கீட் பிலாக்க் டமில்ல கிருந்து சைநீசுக்கு translate ஆகி வர்த்தூ. றீம்ப டார்ச்சராக்குது" அப்படின்னு சொல்லுச்சு. இப்பதான் அதுக்கு அர்த்தம் புரியுது "வெங்கட் ப்ளாக் தமிழ்ல இருந்து சைனீசுக்கு tanslate ஆகி வருது. ரொம்ப டார்ச்சேர் ஆக இருக்குது "

அனு said...

போன வாரம் bill gatesஇடம் இருந்து அனுவுக்கு கால்..

BG: என்ன நீங்க இப்பல்லாம் அவ்வளவா என் கிட்ட பேசுறதே இல்ல.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது..

அனு: பின்ன?? போன வாரம் எங்க கட்சிக்காரர் அருண் ப்ளாக்-ல யாரோ(VAS) சூனியம் வச்சுட்டாங்க.. அந்த அளவுக்கு வீக்-காவா ஒரு OS / Browser தயாரிப்பீங்க?? உங்களை என் சிஷ்யன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு..

BG (தலை குனிந்தபடியே): சேச்சே.. அப்படியெல்லாம் விட்டுருவோமா.. VASக்கு திருப்பி குடுப்போம்ல!!

அனு: அனா, வெங்கட் account எல்லாம் google-ல்ல இல்ல வச்சிருக்காரு.. Larry Page நம்ம பய தான்.. சொன்னா கேட்டுக்குவான்.. இருந்தாலும், உங்களுக்கும் LPக்கும் தான் ஆகாதே.. அதான், யோசிக்குறேன்..

BG: கவலையே படாதீங்க.. வெங்கட் வச்சிருக்க OS நம்மளது தானே.. அதுலயும் pirated copy.. தூக்கிருவோம்!!

அனு (மிதப்பலாக): ம்ம்.. அப்படியே உங்க OSஅ improve பண்ணுற வழிய பாருங்க.. இல்ல, linux முந்திடும்..

அனு said...

அதன் பின், எதிர்பார்த்த படியே வெங்கட் அனுவுக்கு கால் பண்ணுகிறார் (வழக்கமான பாதி அழுகையுடன் தான்)..

வெங்: யாரோ என் கம்ப்யூட்டருக்கு சூனியம் வச்சுட்டாங்க.. என்ன பண்ணுறதுன்னே தெரியல..

அனு: VAS அருண் ப்ளாக்-க்கு சூனியம் வச்சதால தான் அப்படி செய்தோம்.. இப்போ புரியுதா எங்க பவர்??

வெங்: அய்யோ.. உங்க கிட்ட மோதுற அளவுக்கு எங்களுக்கு தைரியமோ திறமையோ கிடையாதுன்னு உங்களுக்கு தெரியாதா??

அனு: நீங்க தான் காரணம்னு கேள்வி பட்டேனே..

வெங்: இல்லைங்க.. உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன.. எனக்கு கம்ப்யூட்டருல டைப் அடிக்கக் கூட தெரியாது.. இந்த உலகத்திலயே கம்ப்யூட்டர்ல டைப் அடிச்சு குடுக்க காசு குடுத்து ஆள் வச்சிருக்கறது நான் மட்டும் தான்.. என்னை நம்புங்க..

அனு: ஓ.. அப்படியா.. சரி. நம்ம கட்சிக்காரங்களும் கலாய்க்க ஆள் இல்லாம கஷ்டபடுறாங்க.. அதனால, BG கிட்ட சொல்லி கரெக்ட் பண்ண சொல்லுறேன்..

வெங்: ரொம்ப நன்றிங்க.. நீங்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க... VKS வாழ்க!!! வாழ்க!!!

வெங்கட் said...

@ டெரர்..,

// பில் : யோ!! எரிமலைல எட்டி பாத்ததே
தப்பு நான் பீல் பண்ணிட்டு இருக்கேன்.
நீ எச்சி வேற துப்பறேன் சொல்ற.
பேசாம வெங்கட் கிட்ட மன்னிப்பு கேட்டு
VAS ல சேர்ந்துட வேண்டியதுதான். //

Microsoft Head Quarters-ல இப்ப
என்ன நடந்துட்டு இருக்குதுன்னு
உடனுக்குடன் நியூஸ் தரும்
நம்ம டெரருக்கு நன்றிகள் பல..

அனு said...

இதனிடையில் Larry page அனு வீட்டுக்கே வந்துட்டார்..

LP: என்ன அனு, இப்படி பண்ணிட்டீங்க? என் கிட்ட சொல்லியிருந்தா ஒரு நிமிஷத்துல வெங்கட் அக்கவுண்ட் எல்லாத்தையும் தூக்கி இருப்பேனே.. நீங்க bill gates கிட்ட போனதுல எனக்கு ஒரே வருத்தம்..

(LP நிஜமாவே ரொம்ப பாசக்கார பய-ங்க.. இதை சொல்லும் போது அப்படியே அவர் கண்ணுல தண்ணி கட்டிருச்சு!!)

அனு: இதுக்கெல்லாமா வருத்தப் படுறது.. சின்ன லெவல்ல தானே மிரட்டப் போறோம்னு தான் BG கிட்ட பேசினேன்.. இன்னும் பிரச்சனை பண்ணினா நீங்க சொன்ன மாதிரி வெங்கட் அக்கவுண்ட்ஸ் எல்லாத்தையும் தூக்கிறலாம்..

LP: சரிங்க.. அடுத்த தடவை கட்டாயம் எங்க கிட்ட தான் வரணும்.. வெங்கட்டை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்.. கிளம்புறேன்..

அனு (Mind Voice):
(Google accountsஸ தூக்கிட்டாலும் yahoo + wordpress use பண்ணி வெங்கட் torture கொடுப்பார்னு கூட யோசிக்க முடியலயே இந்த LPயால.. நான் குடுத்த training பத்தல போல.. சரி... சின்ன பையன் தானே.. போக போக pickup பண்ணிப்பார்!!)

வெங்கட் said...

@ யோகேஷ்..,

// அவர் ஏற்கனவே ஒரு பெரிய
கம்பெனிக்கு ஓனராக இருந்தாலும் //

எனக்கு தெரியும்.,
எனக்கு தெரியும்..,
அந்த கம்பெனி பேரு...

மன்னார் & கம்பெனி..

Prabu said...

@அனு
எந்திரிங்க.. எந்திரிங்க.. விடிஞ்சிருச்சு..

அக்பர் said...

இதெல்லாம உங்களுக்கே ஓவரா தெரியலை :)

வெங்கட் said...

@ பிரபு.,

ஹா., ஹா., ஹா...!!!
ஒரு வாரத்துக்கு
நினைச்சி நினைச்சி சிரிப்பேன்..

அனு said...

@Prabu

//எந்திரிங்க.. எந்திரிங்க.. விடிஞ்சிருச்சு.//

யப்பா.. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல.. BGயும் LPயும் எனக்கு தெரிஞ்சவங்கன்னு சொன்னாலும் சொன்னேன்.. காலைல எழுந்திருக்கறதுக்குள்ள உதவி-ன்னு வாசல்ல க்யூ கட்டிர்றாங்க.. பிரபலமா இருந்தாலே இது ஒரு தொல்லை!!

யப்பா Prabu, உங்களுக்கு என்ன வேணும்?? கொஞ்சம் நேரம் பொறுத்து வரக் கூடாதா??

வெங்கட் said...

@ அருண்..,

// ரமெஷ், விடுங்க நாம எப்படி
என் பிளாக் சூனியத்தை எடுத்தோம்
அவங்களுக்கு தெரியாது போல...//

உலக மக்களே...!

Blog Open ஆகலைன்னா
அதுக்கு Technical காரணம்
என்னான்னு பார்க்காம..,

Blog-க்கு யாரோ சூனியம்
வெச்சிட்டாங்கன்னு மந்திரவாதியை
தேடி ஓடறவங்க தான் இந்த அறிவாளிங்க....

// System Hang ஆயிட்டாலே
என்ன பண்ணனும்னு கூட
அவங்களுக்கு தெரியாது.. //

என் இந்த கருத்தை நிலை நிறுத்திய
அருணுக்கு ஒரு " ஓ.. போடுங்க..!! "

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// நானும் சிங்கபூர்ல இருக்கும்போது
சைனீஸ் பொண்ணுங்ககிட்ட பேசும்போது
"வெங்கட் ப்ளாக் தமிழ்ல இருந்து
சைனீசுக்கு tanslate ஆகி வருது.
ரொம்ப டார்ச்சேர் ஆக இருக்குது " //

Yes., Yes.., இதே Complaint
எங்கிட்டேயும் சொன்னாங்க..
அதனால தான் உங்க Comment-ஐ
எல்லாம் இப்ப Translate பண்ண
வேணாம்னு சொல்லிட்டேன்..

இப்ப அவங்க சந்தோஷமா
இருக்கறதா தகவல்..

Prabu said...

//பிரபலமா இருந்தாலே இது ஒரு தொல்லை!!//

அதான், உங்களுக்கென்ன பிரச்சனை-னு கேக்கிறோம்..

வெங்கட் said...

@ அனு.,

To Bill Gates.,
// உங்களை என் சிஷ்யன்னு சொல்லிக்கவே
வெக்கமா இருக்கு.. //

To Larry Page.,
// நான் குடுத்த training பத்தல போல..
சரி...சின்ன பையன் தானே..
போக போக pickup பண்ணிப்பார்!! //

வெங்கட், BG & LP on Conference Call..

Ven : அனு சொல்றது கொஞ்சம்
Too Much-ஆ இருக்கே..!!! அவங்க
தான் உங்க குருவா..??

BG & LP கோரஸாக.. " ஆமாம்..! "

Ven : அட நிஜமாவா..? நம்பவே முடியல..?!

BG : உண்மை தான் வெங்கட்.,
அனு என் Classmate 1st Std-ல..

Ven : ஓ.. அப்ப எப்படி குரு..??

BG : ஒரு தடவை எங்க Teacher
என்னை கூப்பிட்டு..,

" Bill.., முதல்ல பேச்சை குறை.,
நல்லா படிக்கற வழியை பாரு..
இல்லைன்னா இந்த அனு மாதிரி
நீயும் ஆயிடுவேன்னு சொன்னாங்க.. "

அதை கேட்ட உடனே எனக்கு
பக்-னு ஆயிடுச்சு..

அப்புறம் அதை மனசுல
வெச்சிகிட்டு தான் இந்த
லெவலுக்கு முன்னேறி இருக்கேன்..

Ven : ஓ.. Larry உங்களுக்கு..?

LP : நான் சின்ன பையனா இருக்கும்
போது.., BG இந்த Matter-ஐ என்கிட்ட
சொன்னாரு..

அதை கேட்டு நான் பதறிட்டேன்..
அப்ப இருந்து ஒழுங்கா படிக்க
ஆரம்பிச்சுட்டேன்..
So.., அனு எனக்கும் குரு தான்..

Ven : ஓ.., அப்படியா Matter..!!
அப்புறம் Bill.., ஒரு சின்ன Info-க்கு
கேக்கறேன்.. உங்க Date of Birth என்ன..?

BG : October 28, 1955

Prabu said...

//காலைல எழுந்திருக்கறதுக்குள்ள உதவி-ன்னு வாசல்ல க்யூ கட்டிர்றாங்க..//

நீங்களே இதுவும் ஒரு கனவு என ஒத்துக் கொண்டதற்கு நன்றி...
(After sleep, before awake)ல தானே நடக்குது!

//BGயும் LPயும் எனக்கு தெரிஞ்சவங்க//

அவங்களுக்கு நீங்க தெரிஞ்சவங்களா??

//கொஞ்சம் நேரம் பொறுத்து வரக் கூடாதா??//

இல்ல கனவுல ரொம்ப மேலே போய்கிட்டிருந்தீங்க..
கீழ விழுந்துடுவீங்கன்னுதான்...

அடிச்சா நொறுங்குறதுக்கு நான் Mirror இல்ல..
தேனி Terror.. Terror..

வெங்கட் said...

@ அக்பர்.,

// இதெல்லாம உங்களுக்கே ஓவரா தெரியலை //

நான் ஒரு ஓவர் தாங்க போட்டேன்..,

எனக்கு பின்னாடி இன்னொருத்தர்
ரெண்டு ஓவர் போட்டாங்களே
அதை நீங்க கவனிக்கலையா..??!!

வெங்கட் said...

@ To All..,

இந்த 2 நாள்ல மட்டும்
மூணு சங்கம் ஆரம்பிக்க
அனுமதி கேட்டு Applications
வந்திருக்கு..

1. AKS - அப்பாவிகளை காக்கும் சங்கம்.

2. KTKS - கலாய்ப்போரை திருப்பி
கலாய்க்கும் சங்கம்.

3.VKAS - வெங்கட்டை கலாய்ப்போரை
ஆதரிப்போர் சங்கம்.

But.. இந்த சங்கங்களுக்கு அனுமதி
வழங்க இயலாது என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

ஒரு சங்கம் ( VKS ) இருக்கும்
போதே இப்படி..!!
இன்னும் நாலஞ்சு சங்கங்கள் வேறயா..??

Mind Voice -- >
" வெங்கட் இனிமேலாவது
நீ உஷாரா இருக்கணும்டா.. "

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//But.. இந்த சங்கங்களுக்கு அனுமதி
வழங்க இயலாது என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..//

வெங்கட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. எத்தனை பேர் வந்தாலும் VKS-கிட்டத்தான் அடி வாங்கணும் அப்படிங்கிற உங்க கொள்கைய நாங்க மதிக்கிறோம்.
(வெங்கட் கைப்புள்ள மாதிரி. ஹேய் VKS போனா வாரம் என்ன வந்து கலாய்க்கிரோம்னு சொன்னீங்க வரவே இல்ல அப்டின்னு கேக்குற உங்க நேர்மைக்கு மறுபடியும் நன்றி)

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

//எத்தனை பேர் வந்தாலும் VKS-கிட்டத்தான் அடி வாங்கணும் அப்படிங்கிற உங்க கொள்கைய நாங்க மதிக்கிறோம்.//

அவரால நம்ம ஒரு சங்கத்தையே சமாளிக்க முடியலை, இதுல 9 சங்கம் வேற. ஏங்க நீங்க வேற?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//But.. இந்த சங்கங்களுக்கு அனுமதி
வழங்க இயலாது என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்..//

vks கிட்ட மட்டும்தான் திட்டு வாங்கணும், அதுவும் தான் மட்டும்தான் வாங்கணும் என்கிற உயர்ந்த எண்ணத்துலதான் வெங்கட் அப்படி சொல்லிட்டாரு, பட் இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

me the 50!

TERROR-PANDIYAN(VAS) said...

மைக்ரோசாப்ட் அலுவலகம்.. பில்கேட்ஸ் கோவமா இருக்கிறார்..

(VKS உருபினர்களுக்கு ஆங்கிலம் புரியாது என்பதால் மொழி மாற்றம் செய்த உரையாடல்..)

பில் : யாருய அந்த அணு, ரமேஷ், பெ.சொ.வி., ரசிகன், அருண்? என் பெயர் அடிக்கடி use பண்றத உளவு துறை சொல்லுது.

பி.எ : (சலிப்புடன்) அவங்களா..... VKS அப்படின்னு பெயர் வச்சிட்டு நம்ப வெங்கட் சார் கலாய்க்கரவங்க.

பில் : யாரு? நம்ப windows எதிர doors OS உருவாக்க போறேன் சொன்னாரே... நன் ரொம்ப கெஞ்சி கேட்டேன் சொல்லி அந்த முயற்சி கைவிட்டரே... அவர?

பி.எ : ஆமா சார். அவரேதான்.

பில் : பாவம். சின்ன பசங்க சொல்லி சிங்கம் சிரிச்சிட்டு இருக்கு இது தெரியாம அதோட தலை சீப்பால சீவி விளையாடறாங்க போல. அது சரி நன் VASல சேர application வாங்க சொன்னது என்ன அச்சி?

பி.எ. : ஏற்கனவே நம்ப ஆளு வருசைல 124578 ஆளா நிக்கறாரு சார்...

பில் : எவ்வளோ நாள் ஆனாலும் பரவாஇல்ல நின்னு வாங்கி வர சொல்லு. நன் தமிழ் கத்துகிட்டதே அவர் ப்ளாக் படிக்கதனே....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Terror Pandian

எங்களுக்கு ஆங்கிலம் தெரியாதுதான்.........ஆனா பாருங்க, உங்க கமெண்ட்டுல வரிக்கு ரெண்டு தப்பு இருக்கு, முதல்ல தமிழ் முழுசா கத்துக்கிட்டு ஆங்கிலம் பேசுங்கப்பா.....!
(சரிதான், தொடங்க வச்சுடுவாங்க போலிருக்கே!)

வெங்கட் said...

@ டெரர் & பெ.சொ.வி..,

என்னாப்பா இது...

இந்த ஆட்டம் தான்
முடிஞ்சி போச்சே..
இன்னுமா " கோல் "
போட்டுட்டு இருக்கீங்க...??!!

புது Post போட்டாச்சு...
வாங்க அங்கே வந்து
ஆடுங்க உங்க ஆட்டத்தை..!!

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

பாவம் நீ - பில்கேட்ஸின் சதி - முறியடிக்க வீஏஎஸ் படை - வாழ்க

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா