சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 July 2010

நாராயணா..! அல்வா ரெடி..!!


டிஸ்கி : இது போன பதிவோட
Comment Section-ல வர வேண்டியது..
நான் பதிவு போட 3 - 4 நாள்
ஆகுதுன்னு மக்கள் ரொம்ப
Feel பண்றதால.,
இதை பதிவா போடுறேன்..

--------------------------------------

2012-ல உலகம் அழிஞ்சிடும்னு
சொல்றாங்க.

எனக்கென்னவோ அதுக்கான
அறிகுறி இப்பவே தெரிய
ஆரம்பிச்சுடுச்சு..

OK.. Matter-க்கு வருவோம்..

இடம் : பிரம்மலோகம்..
நரதர் வருகை...

நாரதர் : நாராயணா.,நாராயணா..!!

பிரம்மா: வாருங்கள் நாரதரே..!
என்ன இவ்வளவு தூரம்..?

நாரதர் : எனக்கு ஆறு மாதம் லீவ்
வேணும் பிரம்மதேவா..!!

பிரம்மா: என்ன விளையாடுகிறீரா..?
நீங்கள் லீவில் போய்விட்டால்
பூலோகத்தில் கலகமே இருக்காது.,
மானிடன் சந்தோஷமாக இருந்தால்.,
எங்களை நினைக்ககூட மாட்டானே.?!

நாரதர் : கவலை வேண்டாம் பிரம்மதேவா..,
நான் பூலோகத்தில் எனக்கு Substitute-ஆக
ஒருவரை நியமித்து உள்ளேன்..
அவர் பெயர் - ' அனு '

பிரம்மா: என்ன ஒரு சாதாரண மானிடப் பெண்
உங்களுக்கு Substitute-ஆ..?

நாரதர் : அப்படியெல்லாம் அவர் திறமையை
குறைத்து மதிப்பிடாதீர்கள்..
அவர் ஒரு " நா.போ.நா. "

பிரம்மா: அப்படியென்றால்..??

நாரதர் : " நாரதர் போற்றும் நாரதர்.."
அவர் திறமையை கொஞ்சம்
இங்கே பாருங்கள்..

( "கோகுலத்தில் சூரியன் " Blog-ல்
Comment Section-ஐ பிரம்மா பார்க்கிறார்.. )

பிரம்மா: ஆஹா.., பிரமாதம்., அற்புதம்..!!
4 வரியில் 40 கலகம் பண்ணுகிறாரே..!!

நாரதர் : நான் தான் சொன்னேனே..

பிரம்மா: மிகவும் திறமைசாலியான
பெண்ணாய் இருக்கிறாரே..
Fees அதிகமோ..??

நாரதர் : இல்லவே இல்லை..
இதை அவர் தன் ஆத்மதிருப்திக்காக.,
ஒரு பொதுசேவையாக செய்து வருகிறார்..

பிரம்மா: அப்படியா..!! பேஷ்.., பேஷ்..!!
சரி நாரதரே.., நீங்கள் எத்தனை
நாள் லீவ் கேட்டீர்..??

நாரதர் : ஆறு மாசம்..

பிரம்மா: ஒரு வருடம்...
வேண்டாம்., வேண்டாம்
VRS வாங்கிக்கொள்கிறீரா..??

"ஆஹா.. இந்த அனு நம்ம வேலைய
நம்மகிட்டயே ஆரம்பிச்சுட்டாங்களே.."

-------------------------------------------

டிஸ்கி: ஹி.,ஹி..ஹி..!
அனுவின் பரம்பரையே என்னை
மன்னிப்பார்களாக..
.
.

40 Comments:

அனு said...

என்ன ஒரு வில்லத்தனம்!!!

இருங்க.. ஆணிய புடுங்கிட்டு வந்து ஒரு கை பாக்குறேன்...

கே.ஆர்.பி.செந்தில் said...

உண்மையான கலகக் காரர்கள் வாலும், ராஜனும்தான்.. நீங்க என்ன சொல்றீங்க அனு...

கலாநேசன் said...

நாராயணனுக்கு அல்வா
நாரதருக்கு .......

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//டிஸ்கி : இது போன பதிவோட
Comment Section-ல வர வேண்டியது..
பதிவு போட 3 - 4 நாள் ஆகுதுன்னு
மக்கள் ரொம்ப Feel பண்றதால
இதை பதிவா போடுறேன்..
//

உங்களோட கமெண்ட்டுக்கும் பதிவுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும். சின்னதா இருந்த பதிவு, பெரிசா இருந்தா கமென்ட். அவ்வளவுதான? இதுக்குப் போய் feel பண்றீங்களே!

ப.செல்வக்குமார் said...

நானும் நல்லா கலகம் பண்ணுவேன் .. என்னைய அந்த வேலைக்கு சிபாரிசு பண்ணுங்களேன் ..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

உங்களுக்கு அ.போ.நா.(அனு போட்டுவாட்டும் நாரதர்) என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பிக்கிறேன். டிஸ்கி : உங்களோட பின் டிஸ்கியே என் டிஸ்கி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்களோட கமெண்ட்டுக்கும் பதிவுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும். சின்னதா இருந்த பதிவு, பெரிசா இருந்தா கமென்ட். அவ்வளவுதான? இதுக்குப் போய் feel பண்றீங்களே!//

ஹாஹா பெயர் சொல்ல விருப்பமில்லை சூப்பர். கலகிட்டீங்க.

@ வெங்கட்

எங்க சங்க தலைவிய நாரதரோட கம்பேர் பண்ணின வெங்கட்டை வன்மையாக கண்டிக்கிறோம். இனிமே வெங்கட்டோட யாரும் அன்னம் தண்ணி புழங்க கூடாது. மீறினா ப்ளாக்-ல இருந்து தள்ளி வக்கிறேன்(வெங்கட்டோட ப்ளாக்-ல இருந்து தள்ளி வச்சா ஓகே. சந்தோசம் அப்டின்னு யாரும் சொல்லக்கூடாது சரியா?)

ரசிகன் said...

@ நல்லவரே...
//எங்க சங்க தலைவிய நாரதரோட கம்பேர் பண்ணின வெங்கட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.//


கடவுளர் பொதுவா, அசுரர்களை
அழிச்சி மக்களை காப்பாத்தனும்னா,
நாரதர அனுப்பி தான்
Game start பண்ணுவாங்க..
( இரண்யன்,ப்ரகலாதன் கதை படிச்சிருப்பீங்களே.. )
அந்த மாதிரி.. இவரு மொக்கைல‌ இருந்து மக்களை காப்பாத்த, அனுவ
அனுப்பி இருக்கார்..
So emotional ஆகாதீங்க...

அருண் பிரசாத் said...

VKS சங்க தலைவியை வெங்கட் கலாய்ச்சதை கண்டித்து நான்.....
.
.
.
.
டீ குடிக்கிறேன்.


பின்னே, இதுக்கெல்லாம் தீ குளிக்க முடியுமா?

அருண் பிரசாத் said...

நாரதர் ஏன் அனுவை recommend பண்ணாரு என்பதற்கு காரணம் இருக்கு.

இந்த உரையாடல் நடப்பதற்கு ஒரு மாதம் முன்,

மறுபடியும் ஒரு கொசுவத்தி,

நாரதர் : எனக்கு ஆறு மாதம் லீவ்
வேணும் பிரம்மதேவா..!!

பிரம்மா: என்ன விளையாடுகிறீரா..?
நீங்கள் லீவில் போய்விட்டால்
பூலோகத்தில் கலகமே இருக்காது.,
மானிடன் சந்தோஷமாக இருந்தால்.,
எங்களை நினைக்ககூட மாட்டானே.?!

நாரதர் : கவலை வேண்டாம் பிரம்மதேவா..,
நான் பூலோகத்தில் எனக்கு Substitute-ஆக
ஒருவரை நியமித்தி உள்ளேன்..
அவர் பெயர் - ' வெங்கட் '

பிரம்மா: யாரு இந்த VKS ஐ உடைக்க முடியாமல் கஷ்டப்படராரே அவரா?

நாரதர் : ஆம்

பிரம்மா: செல்லாது, செல்லாது. VKS ஐயே உடைக்க முடியல. இவர் வேலைக்கு ஆகமாட்டார்

நாரதர்: அவருடைய கமெண்ட்ஸ் பாத்துட்டு சொல்லுங்க

பிரம்மா: (வெங்கட்டின் REPLY களை பார்த்துவிட்டு) நாரதரே! கண்டிப்பாக லீவு கிடையாது.

நாரதர்: ஏன் சுவாமி?

பிரம்மா: நான் நாரதர் பதவிக்கு ஆள் கேட்டால் நீர் 'சகுனி' ஐ காட்டுகிறீரே!

மார்கண்டேயன் said...

ஒரு வழியாக அனு அவர்களை பிரபலமாக்கிவிட்டீர்கள், அனு விரைவில் வலைபதிவு துவங்கும் அறிகுறிகள் தெரிகிறது . . . வெங்கட் தங்கள் வேலை செவ்வனே முடிந்தது . . . நாராயண ! நாராயண !

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நாரதர் கலகம் நன்மையில் முடியும், அனுவின் கலகம் "அல்வா"வில் முடிந்திருக்கிறதோ?

அனு said...

@KRP

நான் பாட்டுக்கு சிவனே(நாராயணனே)ன்னு சும்மா இருக்கேன்.. என்னை எதுக்குங்க இப்படி கோர்த்துவிடுறீங்க.. எனக்கு என்னவோ நீங்க தான் நாரதர் பதவிக்கு கரெக்ட்டா இருப்பீங்களோன்னு தோணுது..

@கலாநேசன்
//நாராயணனுக்கு அல்வா
நாரதருக்கு ??//

Job Security..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரம்மா: நான் நாரதர் பதவிக்கு ஆள் கேட்டால் நீர் 'சகுனி' ஐ காட்டுகிறீரே!//

அருண் நம்ம கட்சி பேர காப்பாத்திட்டீங்க..

அனு said...

@பெ.சொ.வி

//உங்களோட கமெண்ட்டுக்கும் பதிவுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும். சின்னதா இருந்த பதிவு, பெரிசா இருந்தா கமென்ட். //

ஹாஹாஹா. கரெக்ட்டா சொன்னீங்க.. கலக்கல்..

//நாரதர் கலகம் நன்மையில் முடியும், அனுவின் கலகம் "அல்வா"வில் முடிந்திருக்கிறதோ?//

இல்லீங்கோ..கலகம் அல்வாவில் தான் ஆரம்பிக்குது... முடிவு அதிரடியாக இருக்கும் (வெங்கட்-க்கு)..

அனு said...

@ரமேஷ்

//இனிமே வெங்கட்டோட யாரும் அன்னம் தண்ணி புழங்க கூடாது. மீறினா ப்ளாக்-ல இருந்து தள்ளி வக்கிறேன்//

இத மாதிரி யாராவது சொல்ல மாட்டாங்களான்னு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..

வெங்கட், உங்க வீட்ல சாப்பாடு சாப்பிட என்னை எப்போ கூப்பிட போறீங்க??

அனு said...

@ரசிகன்
//இவரு மொக்கைல‌ இருந்து மக்களை காப்பாத்த, அனுவ அனுப்பி இருக்கார்.//

நீங்க தாங்க உண்மையான கட்சிகாரவுக.. நீங்க சொன்னத கேட்டதுல இருந்து எனக்கு கண்ணெல்லாம் கலங்க ஆரம்பிச்சுடுச்சு..

(ஆனா, உங்களை தன் கட்சி பக்கம் இழுத்துட்டதா வெங்கட் ஒரு பதிவுல கிசுகிசு போட்டிருந்தாரே? ஒரு வேளை போட்டு வாங்குறாரோ??)

அனு said...

//டீ குடிக்கிறேன்.

பின்னே, இதுக்கெல்லாம் தீ குளிக்க முடியுமா?//

அப்போ இவ்வளவு நாளா, கட்சிக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொன்னதெல்லாம் பில்ட் அப் தானா?? நான் தான் ஏமாந்துட்டேனா? கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும் போல..

அனு said...

@மார்கண்டேயன்

//ஒரு வழியாக அனு அவர்களை பிரபலமாக்கிவிட்டீர்கள், அனு விரைவில் வலைபதிவு துவங்கும் அறிகுறிகள் தெரிகிறது //

ஏன் சார்? ஏன் என் மேல் உங்களுக்கு இந்த கொலை வெறி??

வலைப்பதிவு ஆரம்பிக்காமலே இவ்வளவு அடி வாங்குறேன்.. . ஆரம்பிச்சா அதோ கதி தான்.. அப்புறம், ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகி விடுவேன்.. எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, சொல்லுங்க..

Madhavan said...

ஆஹா.. பதிவுலகத்துல இப்படியெல்லாம் ஆளுங்க இருக்காங்களா.... சரி.. நா வாரேன்.. மத்த வலைப்பூக்களையும் பாக்கனோம்.. அப்பத்தான் யாராரார் நம்மள (ஒரு பதிவர மதிச்சு) தொடர் பதிவெழுத கூப்புட்டாங்கன்னு தெரியும்...

வெங்கட் said...

@ அனு..,

இந்த பதிவுக்கு Votes கவனிச்சீங்களா..?

இப்ப புரியுதா....
" அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம்
தர்மம் வந்து தர்ம அடி போடும்..!! "

வெங்கட் said...

@ KRP.,

// எனக்கு என்னவோ நீங்க தான் நாரதர்
பதவிக்கு கரெக்ட்டா இருப்பீங்களோன்னு தோணுது.. //

ஹி., ஹி., ஹி..!!
இதை தான் " நா.ப.நா " -ன்னு
( நாரதர் பரிந்துரைக்கும் நாரதர் )
சொல்லுவாங்க..

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// உங்களோட கமெண்ட்டுக்கும், பதிவுக்கும்
எங்களுக்கு வித்தியாசம் தெரியும்.
சின்னதா இருந்த பதிவு,
பெரிசா இருந்தா கமென்ட். //

நம்ம Blog-ல Comment கூட
Posting Range-க்கு இருக்கும்னு
மக்கள் புரிஞ்சிக்கணும்னு தான்
இந்த Comment-ஐ பதிவா போட்டேன்..

என்னங்க எல்லோரும் புரிஞ்சதா..?
இனிமே புது Posting இல்லாத நாள்ல
Comment Section-ஐ படிங்க..

அனு said...

//இந்த பதிவுக்கு Votes கவனிச்சீங்களா..?//

தமிலிஷ்ல minus ஓட்டு குத்த ஓட்டுப்பட்டைல இடம் இல்லாத்தால எல்லோரும் தங்கள் எதிர்ப்பை plus ஓட்டு போட்டு தெரிவித்திருக்கிறார்கள்..

இது தெரியாம... ஹிஹி.. உங்களை நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது..

வெங்கட் said...

@ செல்வகுமார்..,

// நானும் நல்லா கலகம் பண்ணுவேன்.,
என்னைய அந்த வேலைக்கு சிபாரிசு
பண்ணுங்களேன்..!! //

தம்பி..! நீங்க ஊருக்கு புதுசா..??
அதான் இடம் தெரியாம மோதிறீங்க..

இவிங்க நாரதருக்கே ஆப்பு வெச்ச
ஆளுங்கப்பா....!!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// கடவுள் பொதுவா, அசுரர்களை
அழிச்சி மக்களை காப்பாத்தனும்னா,
நாரதர அனுப்பி தான் Game start பண்ணுவாங்க.. //

என்னடா சத்தமே காணோமேன்னு
பார்த்தேன்..
ஆங்... இப்ப நல்லா கேக்குது
ஜால்ரா சத்தம்..!!

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// எங்க சங்க தலைவிய நாரதரோட கம்பேர்
பண்ணின வெங்கட்டை வன்மையாக கண்டிக்கிறோம். //

அது கண்டிக்கிறோம் இல்ல..
கண்டிக்கிறேன்..

உங்க கட்சிக்காரங்க எல்லோரும்
நான் சொன்னது உண்மைதான்னு
ஒத்துகிட்டு Certificate குடுத்துட்டாங்க..

Pls Check this...

" கடவுளர் பொதுவா, அசுரர்களை
அழிச்சி மக்களை காப்பாத்தனும்னா,
நாரதர அனுப்பி தான் Game start பண்ணுவாங்க..
அந்த மாதிரி.. இவரு மொக்கைல‌ இருந்து
மக்களை காப்பாத்த, அனுவ அனுப்பி இருக்கார்.. "

--- இது ரசிகன்..

" நாரதர் ஏன் அனுவை recommend பண்ணாரு
என்பதற்கு காரணம் இருக்கு. "

--- இது அருண்..

" நாரதர் கலகம் நன்மையில் முடியும்,
அனுவின் கலகம் "அல்வா"வில்
முடிந்திருக்கிறதோ? "

--- பெ.சொ.வி.

இப்ப இவிங்களையும் ப்ளாக்-ல இருந்து
தள்ளி வைங்க..

( நாராயணா.. நாராயணா..!! )

மங்குனி அமைச்சர் said...

அனு said...

@மார்கண்டேயன்

//ஒரு வழியாக அனு அவர்களை பிரபலமாக்கிவிட்டீர்கள், அனு விரைவில் வலைபதிவு துவங்கும் அறிகுறிகள் தெரிகிறது //

ஏன் சார்? ஏன் என் மேல் உங்களுக்கு இந்த கொலை வெறி??

வலைப்பதிவு ஆரம்பிக்காமலே இவ்வளவு அடி வாங்குறேன்.. . ஆரம்பிச்சா அதோ கதி தான்.. அப்புறம், ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகி விடுவேன்.. எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது, சொல்லுங்க../////


எச்சூச்மி , எவ்ளோ துட்டு குடுத்திங்க மேடம்?( நம்ம பிளாக்குல 30 பிரசன்ட் டிஸ்கவுன்ட் இருக்கு மேடம் )

மங்குனி அமைச்சர் said...

யோவ் வெங்கட் நீ கில்லாடியா , பயன்கரம்மா பிசினஸ் டெவலப் பண்ணிட்ட , கொஞ்சம் பேர என் ப்ளாக் அனுப்பு (உனக்கு கமிசன் குடுத்துடுறேன் ) ஆமா இந்த அட்வேர்டைச்மேன்ட்டுக்கு எவ்ளோ சார்ஜ் பண்ண ?

அனு said...

VKS சங்க அவசரக் கூட்டம்...

அனு: வெங்கட் நம்ம சங்கத்தை உடைக்க தீவிரமா முயற்சி செய்துட்டு இருக்குறதா செய்தி வந்திருக்கு.. நாம எல்லோரும் அலெர்ட்டா இருக்கனும்..

ரமெஷ்: ஆமாம் அனு.. இவ்வளவு நாள் மறைமுகமா தான் தாக்கிட்டு இருந்தார்.. ஆனா, இப்போ போட்டிருக்க பதிவ படிச்சுட்டு எல்லோரும் கொதிச்சு போய் இருக்கோம்..

அருண்: எங்க எல்லோரையும் வெங்கட்டோட மொக்கையில் இருந்து காப்பாத்தின உங்களை தாக்கி ஒரு போஸ்ட்-ஆ?? இதை எங்களால் அனுமதிக்க முடியாது..

பெ.சொ.வி: அனு நல்லது தான் பண்ணுவாங்கன்னு ஒரு comparisonக்கு சொன்னா, நீங்க தான் நாரதர்-னு நாங்க சொன்னதா சொல்லி கட்சியில குழப்பம் பண்ண பார்க்கிறார்..

ரசிகன்: ஆமா, வர வர நம்ம கட்சிக்குள்ள பெரிய விரிசல் உண்டாக்குறதுக்காகவே நிறைய உள்குத்து வச்சு போஸ்ட் போடுறார்..

அனு: சரி.. எல்லோரும் வந்தாச்சு.. ஜனா எங்க காணும்??

ரசி: அவர் நம்ம மறைமுக அதரவாளர் இல்லையா.. அதான், அந்த திரைக்கு பின்னால் இருக்கார்..

அனு: அப்போ சரி...
யாரும் டென்ஷன் ஆக வேணாம்.. நம்ம கட்சியோட பலம் தெரியாம சின்ன பிள்ளைத் தனமா இப்படி ஒரு போஸ்ட் போட்டுட்டார்.. பேசாம, எப்போதும் போல மன்னிச்சு விட்டுடலாமா?

to be continued...

அனு said...

contd...

இதை கேட்ட நால்வரும் (ஐவரும், ஜனா உட்பட) இன்னும் டென்ஷன் ஆகிட்டாங்க.. ஒரே கூச்சல், குழப்பம்..

அனுமதிக்கக் கூடாது.. சைக்கிள் செயின்...எங்கள் தலைவியை... PMக்கு phoneஅ போடு.. சோடா பாட்டில்.. சும்மா விட்டிருவோமா.. அனுவுக்கு ரொம்ப நல்ல மனசு.. வெங்கட்க்கு இந்த பொறாமை ஆகாது..கத்தி கடப்பாரை... நம்ம கட்சி ஒற்றுமை.. ஒரு கை பார்க்கனும்.. (ஒண்ணுமில்லைங்க.. கூச்சல், குழப்பத்தில யாரு என்ன பேசுறாங்கன்னு ஒண்ணும் புரிய மாட்டேன்னுது..)

அனு: அமைதி .. அமைதி.. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. எப்பவும் போல, popularityக்காக, பிரபலமான என்னைத் தாக்கி எழுதியிருக்கார்.. சும்மா விட்டுடுவோமே...

ரமேஷ் (ஆவேசத்துடன்): முடியாது.. இந்த முறை நம் பலத்தைக் காட்டியே ஆகனும்..

அனு: சரி.. என்ன பண்ணலாம்??

(எல்லோரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்கிறார்கள்..)
பின் கோரஸாக..

"உங்களைத் தாக்கி எழுதிய வெங்கட்-டை எதிர்த்து நாளை இந்தியா முழுக்க பந்த் அறிவிக்கிறோம்..."

அனு: சரி.. உங்களுக்கு என்ன தோணுதோ செய்யுங்க.. நான் வேணாம்னு சொன்னா விடவா போறிங்க???

அனு said...

ஹிஹி.. பின்குறிப்பு போட மறந்துட்டேன்..

பி.கு: நம்ம கட்சிக்காரவுக எல்லோரும் ரொம்ப பாசக்காரங்க.. அதனால தான், நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம நாளை (05-07-2010) நாடு தழுவிய முழு அடைப்பு-ன்னு அறிவிப்பு குடுத்துட்டாங்க..

பொது மக்கள் அனைவரும் இதற்கு தங்கள் ஆதரவை அள்ளித் தருமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பொது மக்கள் அனைவரும் இதற்கு தங்கள் ஆதரவை அள்ளித் தருமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்///

தலைவிக்கு ஆதரவாக நாளைக்கு பந்த். யாராவது ஆபீஸ் போனீங்க வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதை கேட்டு கொல்கிறோம்

வெங்கட் said...

@ அனு.,

எதிர்கட்சியா போயிட்டீங்க..
உங்களை பாராட்ட எங்க
கட்சி Rules-ல இடம் இல்ல..
இருந்தாலும்..

Very Nice Reply Comment..!!

உலக மக்களே..!!

இப்ப உங்களுக்கு புரியுதா..?!!

இவங்களை
" நாரதர் போற்றும் நாரதர்னு "
நான் ஏன் சொன்னேன்னு...

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// தலைவிக்கு ஆதரவாக நாளைக்கு பந்த்.
யாராவது ஆபீஸ் போனீங்க வீட்டுக்கு
ஆட்டோ வரும் என்பதை கேட்டு கொல்கிறோம் //

இந்த Comment + ரமேஷ் அட்ரஸ்
ரெண்டையும் நமது முதல்வர்
டாக்டர் கலைஞர் அவர்களுக்கு
Forward செய்வது என் கடமை..

வெங்கட் said...

@ மங்குனி.,

// கொஞ்சம் பேர என் ப்ளாக் அனுப்பு
(உனக்கு கமிசன் குடுத்துடுறேன் ) //

கொஞ்சம் பேரை என்ன..?
எல்லாரையும் வேணாலும்
கூப்பிட்டுக்கோங்க்..
நான் வேணா கமிஷன் தர்றேன்..

நானாவது கொஞ்சம் நிம்மதியா
இருப்பேன்..

இவிங்க அங்கே வந்தாலும்
சும்மா இருக்க மாட்டாங்க..
MKS ஆரம்பிச்சுடுவாங்க..

அப்புறம் Feel பண்ணி
பிரயோஜனம் இல்ல..
சொல்லிபுட்டேன்..

Prabu said...

//anu said:
பி.கு: நம்ம கட்சிக்காரவுக எல்லோரும் ரொம்ப பாசக்காரங்க.. அதனால தான், நான் எவ்வளவு சொல்லியும் கேக்காம நாளை (05-07-2010) நாடு தழுவிய முழு அடைப்பு-ன்னு அறிவிப்பு குடுத்துட்டாங்க..

பொது மக்கள் அனைவரும் இதற்கு தங்கள் ஆதரவை அள்ளித் தருமாறு கேட்டுக் கொள்ள படுகின்றனர்...

Ramesh said:
தலைவிக்கு ஆதரவாக நாளைக்கு பந்த். யாராவது ஆபீஸ் போனீங்க வீட்டுக்கு ஆட்டோ வரும் என்பதை கேட்டு கொல்கிறோம்
//

ஹி ஹி VKS-கு DEPOSIT கூட போச்சு போல தெரியுதே..

அட நான் சொல்லலீங்க.. தினமலர் சொல்லுது:
தமிழகம் " நோ ஹிட்"
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32233

பெரிய ஆளுகள் கிட்ட மோதுறதுக்கு முன்னாடி யோசிக்கணும்.. இப்ப ஃஃபீல் பண்ணி என்ன ஆக போகுது..

மக்கள் மனச புரிஞ்சுக்காம ,வழக்கம் போல இது ஆளுங்கட்சி சதி -னு பிரசாரம் பண்ணுங்க...

----------- Parking...
SUN watching...

Senthil velan said...

hi friends
i am senthil velan
if u wants to know abt me
ask venkat

hereafter i too join in this sangam

yena venkat support pothuma

அக்பர் said...

பதிவை விட பின்னூட்டங்கள் பெரிசா இருக்கு :)

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட் - விகேஎஸ் இன்னும் இருக்கா என்ன - சரி சரி - அனு தான் தலைவியா - ம்ம்ம் நாரதர் இன்னும் டூட்டி ஜாயின் பண்ணலயா

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா