சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 July 2010

தில்லுதுர..?!!

















Year : 1997..
இடம் : எங்க காலேஜ்..

அன்னிக்கு என் Friend பாலு
ரொம்ப சோகமா இருந்தான்..

Because., அவன் Lover
மூணு நாளா காலேஜ் வரலை..
என்ன காரணம்னு தெரியல..

நான் : அவங்க வீட்டுக்கு
ஒரு போன் பண்ணி பாருடா..

பாலு : 4 தடவை போன் பண்ணிட்டேன்..
4 தடவையும் அவ அண்ணன் Ashok தான்
போனை எடுத்தான்.. கட் பண்ணிட்டேன்..

நான் : தப்பு பண்ணிட்டியே...

பாலு : போன் பண்ணினது தப்பா..?

நான் : அது தப்பில்ல.. ஆனா எதுவும்
பேசாம லைனை கட் பண்ணினது தப்பு..
அப்படி பண்ணினா தான் அவங்க
அண்ணனுக்கு Doubt வரும்..

பாலு : பின்ன என்ன பண்ணனும்..?

நான் : " அவன் இருக்கானா..? "
" இவன் இருக்கானா..? " இப்படி
சம்பந்தம் இல்லாம எதாவது கேட்கணும்..

" இல்லைங்க.. இது Wrong நம்பர்னு "
அவனே சொல்லிடுவான்..
அப்பதான் நாம கட் பண்ணனும்..

( நாங்கல்லாம் எத்தனை லவ்க்கு
Help பண்ணி இருப்போம்..)

பாலு : ஓ.. இதுல இவ்ளோ விஷயம்
இருக்கா..?

நான் : Yes.., Theory Class புரிஞ்சதா..?
வா இப்போ Practicals பார்க்கலாம்..

----------------------------------------

இடம் : Phone Booth..

இந்த தடவை Dial பண்ணினது
The One & Only..,
Uncomparable Mr.Venkat...

But Balu's Bad Luck Continues..
மறுபடியும் லைன்ல Mr.Ashok..

" ஹலோ...! "

" அது முருகன் வீடா..? "

" ஆமா..! "

( என்னாது ஆமாவா..??!! )
ஒரு Second ஆடி போயிட்டேன்..

" முருகன் இருக்கானா..? "

" நான் முருகன் தான் பேசறேன்.."

( ஓ.. நம்மகிட்டயே Game-ஆ..??
நாங்கல்லாம் கேடிங்க.. இப்ப பாரு...)

" டேய் முருகா.. என்னை தியேட்டர்க்கு
வர சொல்லிட்டு.., நீ இன்னும் வீட்ல
என்னடா பண்ணிட்டு இருக்கே..??! "

" ஹலோ.. உங்களுக்கு எந்த
முருகன் வேணும்..?? "

" ம்ம்.. பழனிமலை முருகன்..! "

" நான் யார் தெரியுமா..? "

" நீ ஒரு மாங்கான்னு இங்கே
எலோருக்கும் தெரியும்.., சீக்கிரம்
கிளம்பி வாடா வெண்ணை..! "

டொக்...

நான் பாலுவை பார்த்து..

" எப்புடி..?? "

" கலக்கிட்ட.. "

" ஆமா எதுக்கு உன் மச்சான்
" நான் யார் தெரியுமான்னு..? "
பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசறான்..? "

" விட்றா மச்சி.. எல்லாம் Inspector-ஆ
இருக்கோம்கிற திமிரு.."

" என்னாது Inspector-ஆ..?!! அப்ப
நீ லவ் பண்ணறது Inspector தங்கச்சியா..? "

" ஹி., ஹி., ஹி... ஆமாம்.."

" Excuse Me Gentleman..!! நீங்க யாரு..?
இதுக்கு முன்னாடி உங்களை
நான் பார்த்ததே இல்லையே...!! "

" அடப்பாவி...?!! "
.
.

46 Comments:

கபிலன் said...

ஹா..ஹா..ஹா....
கலக்கல்.....

a said...

பிகர பாத்ததும் Frienda கட் பண்ணுவாங்க. நீங்க இன்ஸ பாத்தவுடனே Frienda கட் பண்ணுரீங்க.

Unknown said...

ha... haa...haaa

இர.கோகுலன் said...

பிரமாதம் நண்பரே!!!

Jey said...

//
நான் : Excuse Me..!! நீங்க யாரு..?
இதுக்கு முன்னாடி உங்களை
நான் பார்த்ததே இல்லையே...!!//

ஓ அவனா நீயி, சொல்லவே இல்ல.

சிரிச்சி முடியல சாமி...., கலக்குங்க.:)

கருடன் said...

@ வெங்கட்

//அது தப்பில்ல.. ஆனா எதுவும்
பேசாம லைனை கட் பண்ணினது தப்பு..அப்படி பண்ணினா தான் அவங்க
அண்ணனுக்கு Doubt வரும்..//

எப்படி பாஸ் இப்படி..?
நீங்க ஒரு ஜீனியஸ்னு மறுபடியும்
Prove பண்ணிட்டீங்க..

// The One & Only..,
Uncomparable Mr.Venkat... //

பாஸ்... இத கொஞ்சம் bold & italic ல போட்ட VKS ல எல்லாரும் நல்ல படிச்சி தெரிஞ்சிபங்க இல்ல ?

கருடன் said...

இந்த பதிவை Tamilish-ல Submit
பண்ணினது நம்ம அருண்..
இதுக்கு மேல நான் ஒண்ணும்
சொல்ல மாட்டேன்.

அருண்.. இன்னுமா உங்களை
VKS நம்புது.?

சேலம் தேவா said...

என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ? ஒரு அதிகாரின்னு மரியாத வேணாம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நான் : என்னாது Inspector-ஆ..?!!
அப்ப நீ லவ் பண்ணறது
Inspector தங்கச்சியா..?

பாலு : ஆமாம்..
//

அதுக்கப்புறம் நடந்தது...

Inspector அந்த Phone Booth-யை தேடி கண்டு பிடிக்கிறார்.

Inspector :ஏம்மா இங்க இப்ப ஒருத்தன் போன் பண்ணிட்டு போனானே அவன பாத்தியா?

பெண்: பாத்தேன் சார்

Inspector : ஆள் எப்படி இருந்தான்?

பெண்: திருட்டு முழி. அப்புறம் இந்த வெயில்லயும் கைல டார்ச் வச்சிருந்தார் சார். கூட இன்னொருத்தரும் இருந்தார்.

Inspector : மொட்ட வெயில்ல டார்ச் use பண்றது இந்த உலகத்துலையே வெங்கட் மட்டும்தான். சரி விடு தூக்கிடலாம்

இது வெங்கட்டுக்கு: அடுத்த பதிவுல அந்த போலீஸ் ஸ்டேஷன்-ல அடி வாங்குனத சொல்லுங்க பாஸ்.

அருண் பிரசாத் said...

//Inspector : மொட்ட வெயில்ல டார்ச் use பண்றது இந்த உலகத்துலையே வெங்கட் மட்டும்தான். சரி விடு தூக்கிடலாம்//

இடம்: போலிஸ் ஸ்டேசன்

நம்ம வெங்கடை விசாரிக்கிறார்கள்,

இன்ஸ்: நீதானே போன் பண்ண
வெங்: இல்ல சார், அது கிரஹம் பெல் பண்ணது
இன்ஸ்: நக்கல் அடிச்சே, நானும் அடிப்பேன்.
வெங்: நக்கல் அடிப்பீங்களா சார்
இன்ஸ்: இல்லை, லத்தியால உன்னை அடிப்பேன். சொல்லு ஏன் போன் பண்ண?
வெங்:சார், தப்பா உங்களுக்கு செய்துட்டேன்
இன்ஸ்: சரி, வேற யார் கூட இருந்தது
வெங்: நம்ம ரமெஷ்
இன்ஸ்: எந்த ரமெஷ்?
வெங்: சிரிப்பு போலிஸ், VKS Member.
இன்ஸ்: அவர் உன் Friend ஆ, (பயத்துடன் மெதுவாக "தப்பான ஆள் மேல கை வெச்சிட்டேனே") அந்த நல்லவனுக்காகவும், அந்த நல்ல சங்கத்துக்காகவும் உன்னை விடுறேன், ஓடி போயுடு.

வெங்கட் Feelings உடன்", எவ்வளவு நல்லவங்கயா இந்த VKS, ஒருத்தர் Tamilish ல submit பண்ணுறார், ஒருவர் போலிஸ் ஸ்டேசன்ல இருந்து வெளிய எடுக்கிறார். சே..."

இங்கு,

அருண் ரமெஷிடம், "இப்படி பண்ணாதான் வெங்கட் மறுபடியும் பதிவு எழுதுவார். நாம கலாய்ச்சா தாங்குற ஒரே நல்லவன் உலகத்துலயே வெங்கட் தான்"

வெங்கட் said...

@ வழிப்போக்கன்.,

// பிகர பாத்ததும் Frienda கட் பண்ணுவாங்க.
நீங்க இன்ஸ பாத்தவுடனே Frienda கட் பண்ணுரீங்க. //


ஒருவேளை போலீஸ் எங்களை
கூண்டோட தூக்கிட்டு போயிட்டா..
ஜானீன்ல எடுக்க ஒரு ஆளாவது
வெளியில இருக்கணும்ல.. அதான்..

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ Jey.,

// ஓ அவனா நீயி, சொல்லவே இல்ல. //

நீங்க கேக்கறதை பார்த்தா
அந்த Inspector கிட்ட போட்டு
குடுக்க போற மாதிரியே இருக்கே....!!

வெங்கட் said...

@ டெரர்.,

// பாஸ்... இத கொஞ்சம் bold & italic ல
போட்ட VKS ல எல்லாரும் நல்லா
படிச்சி தெரிஞ்சிபங்க இல்ல ? //

வேணாம்.. அப்புறம் இவ்ளோ
பெரிய Genius கிட்ட மோதறோமேன்னு
பயம் வந்து VKS கலைச்சிட்டு
ஓடி போயிடுவாங்க..

அப்புறம் நாம யாரை கலாய்க்கறது..??!!

// அருண்.. இன்னுமா உங்களை
VKS நம்புது.? //

நம்ம கட்சி Rules 214.2
Sub. Div 3/4 படி ( Page No. 54 )
அருணை நம்ம ஆளுன்னு
நாமளே போட்டு குடுக்க கூடாது..
ஓ.கே.வா..??!!

வெங்கட் said...

@ ரமேஷ் & அருண்.,

// நான் : என்னாது Inspector-ஆ..?!!
அப்ப நீ லவ் பண்ணறது
Inspector தங்கச்சியா..?

பாலு : ஆமாம்..

அதுக்கப்புறம் நடந்தது... //

1,2,3,4,...... 10,000 / Per Second.

அட.. அது என் Brain போட்ட
அடுத்த திட்டத்தோட எண்ணிக்கப்பா...

நான் : சரி வா.. மறுபடியும்
போன் பூத்துக்கு போலாம்..

பாலு : எதுக்கு..?

நான் : ஷ்..!! கம்னு வரணும்..

அங்கே பூத்ல.. அந்த பொண்ணுகிட்ட..

" மேடம்.., ஒரு சின்ன Request...
யாராவது போலீஸ் வந்து விசாரிச்சா..
என் பேரு ரமேஷ்ங்கற விஷயத்தை
மட்டும் சொல்லிடாதீங்க.. "

பாலுவிடம் திரும்பி..

" என்னடா அருண்.. இப்ப உனக்கு
ஓ.கே தானே..!! "

அதுக்கு அப்புறம் நடந்தது தான்
நமக்கு தெரியுமே..

ரமேஷ் - சிங்கப்பூர்க்கும்
அருண் - மொரிஸீயசுக்கும்
ஓடி போனது..

வெங்கட் said...

@ தேவா.,

// என்ன சின்னபுள்ள தனமா இருக்கு ?
ஒரு அதிகாரின்னு மரியாத வேணாம்? //

போன் பேசறதுக்கு முன்னே
அதிகாரின்னு தெரியாதே..!!
ஆனா தெரிஞ்ச உடனே எவ்ளோ
மரியாதை குடுத்தோம் பார்தீங்கல்ல

பெசொவி said...

//அங்கே பூத்ல.. அந்த பொண்ணுகிட்ட..

" மேடம்.., ஒரு சின்ன Request...
யாராவது போலீஸ் வந்து விசாரிச்சா..
என் பேரு ரமேஷ்ங்கற விஷயத்தை
மட்டும் சொல்லிடாதீங்க.. "

பாலுவிடம் திரும்பி..

" என்னடா அருண்.. இப்ப உனக்கு
ஓ.கே தானே..!! "
//

தலைப்புல இருக்கற தில்லு வெங்கட்டுக்கு இல்ல போலிருக்கே?

பெசொவி said...

//நான் : என்னாது Inspector-ஆ..?!!
அப்ப நீ லவ் பண்ணறது
Inspector தங்கச்சியா..?

பாலு : ஆமாம்..

நான் : Excuse Me..!! நீங்க யாரு..?
இதுக்கு முன்னாடி உங்களை
நான் பார்த்ததே இல்லையே...!!

பாலு : அடப்பாவி...?!!//

அப்புறம் பாலு மனசுக்குள் சொன்னது உங்களுக்குத் தெரியாது இல்ல? நான் சொல்றேன்
பாலு (மனசுக்குள்) :சானிடரி இன்ஸ்பெக்டர்(சுகாதார ஆய்வாளர்)னு சொல்றதுக்குல்லையே இவ்வளவு ஜெர்க் விடறானே, இவனைப் பொய் தில்லு துரன்னு நம்பினேனே, அவ்...............!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தலைப்புல இருக்கற தில்லு வெங்கட்டுக்கு இல்ல போலிருக்கே?//

ஆமாம் பெயர் சொல்ல விருப்பமில்லை . போலீஸ் வந்தா சிரிப்பு போலீஸ் பேர சொல்ல சொல்லிருக்கார் பாருங்களேன்.

@ அருண் கமென்ட் சூப்பர்.

அருண் பிரசாத் said...

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
//பாலு (மனசுக்குள்) :சானிடரி இன்ஸ்பெக்டர்(சுகாதார ஆய்வாளர்)னு சொல்றதுக்குல்லையே இவ்வளவு ஜெர்க் விடறானே, இவனைப் பொய் தில்லு துரன்னு நம்பினேனே, அவ்...............!//

கலக்கல்.

அனு said...

ஆஹா.. வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆச்சு.. அதுக்குள்ள என்னன்னவோ நடந்திருக்கு.. நான் ஜாய்ன் பண்ணலாமா கூடாதான்னே தெரியலயே..

@வெங்கட்
அந்த இன்ஸ்பெக்டர் இன்னும் உங்களை தான் தேடிட்டு இருக்காராம்.. அது நீங்க தான்னு கடைசி வரைக்கும் தெரியாமலே போய்டுமோன்னு தான் எங்க கட்சிகாரர் இன்ஸ்பெக்டருக்கு தெரியுற மாதிரி தமிழிஷ்-ல submit பண்ணியிருக்கார்.. இது தெரியாம.. ஹிஹி..

நீங்க ஒரு mini பதிவு போட்டா கமெண்ட்ல ஒரு மெகா பதிவு ஓடிட்டு இருக்கு?? நடத்துங்க..

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் வெங்கட்.

இந்த பதிவு YOUTHFUL VIKATAN ல குட் பிளாக்ஸ்ல வந்திருக்கு.

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

(ஹி ஹி ஹி என் பிளாக்கும் இன்னும் அதுல இருக்கு. ஒரு விளம்பரம்தான்)

ரசிகன் said...

//இந்த பதிவு YOUTHFUL VIKATAN ல குட் பிளாக்ஸ்ல வந்திருக்கு.

வாழ்த்துக்கள்....

@அனு..

VKS உறுப்பினர் கட்டணத்த உயர்த்திடலாமா....?
எக்கசக்க Demands வர வாய்ப்புகள் தெரியுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் வெங்கட்.

இந்த பதிவு YOUTHFUL VIKATAN ல குட் பிளாக்ஸ்ல வந்திருக்கு.

கருடன் said...

YOUTHFUL VIKATAN ல தேர்வு ஆகியதற்கு வாழ்த்துகள் தல :-))

வெங்கட் said...

vaazhthiya anaivarukkum. ennoda systemla etho problem. Blogger.com open agala. so ennala commentsukku reply panna mudiyala. problem sari agidumnu nambaren. ( oru velai ithu VKS sathiyaa irukkumo ) ;-)

வெங்கட் said...

vazhthiya anaivarukkum nandringa..

அனு said...

//vazhthiya anaivarukkum nandringa.. //

அப்போ, வாழ்த்தாதவங்களுக்கு???

அருண் பிரசாத் said...

உங்க பிளாக்கும் சூனியமா? இதுக்கு ரமெஷும் நானும் சேர்ந்தா செய்வினைய எடுத்துடலாம், ஆனா கொஞ்சம் செலவாகும்

தம்பி, Terror கரெக்டா நாம சொன்னபடி சூனியம் வெச்சிட்ட போல, அமெளண்ட அனுப்பியாச்சு செக் பண்ணிக்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தம்பி, Terror கரெக்டா நாம சொன்னபடி சூனியம் வெச்சிட்ட போல, அமெளண்ட அனுப்பியாச்சு செக் பண்ணிக்கோ//

arun namma thittam ok aayiduchchu....

Anonymous said...

very...very nice...i enjoyed that much both your article and feed backs by your friends/enemies.

அருண் பிரசாத் said...

//அப்போ, வாழ்த்தாதவங்களுக்கு???//

வாழ்த்தாதவங்களுக்கு அல்வா அல்லது Paul ஆக்டோபஸ் பார்சல்

கருடன் said...

@வெங்கட்
//ennoda systemla etho problem. Blogger.com open agala. so ennala commentsukku reply panna mudiyala.//

தலை பதிவு 4 பக்கம் ஆனா கமெண்ட்ஸ் 14 பக்கம் (இத எல்லாம் count பன்ன வேண்டி இருக்கு). சிக்கிரம் வரவும்... சிங்கள இருந்தாலும் சிங்கம் சொல்லி ரொம்ப நேரம் தனிய அடிவாங்க முடியாது...

அனு said...

//வாழ்த்தாதவங்களுக்கு அல்வா அல்லது Paul ஆக்டோபஸ் பார்சல்//

எனக்கு அல்வா வேணாம்.. (நானே அடுத்தவங்களுக்கு கொடுக்க நிறைய வச்சிருக்கேன்)

Paul-அ வேணா அனுப்பி வைங்க.. அதை வச்சே நான் கோடீஸ்வரி ஆகிடுவேன் :) (அவர் பேரு Paoloவாம்!!)

வெங்கட் said...

@ டெரர்..,

// சிக்கிரம் வரவும்... //

ஒரு சிங்கத்தை கூண்டுல அடைச்சி
வெச்சி வேடிக்கை பார்க்கறானங்கலே..

System சரி ஆகட்டும்..
அப்புறம் வந்து வெச்சிக்கறேன் கச்சேரிய..

வெங்கட் said...

@ அனு.,

// எனக்கு அல்வா வேணாம்..
(நானே அடுத்தவங்களுக்கு கொடுக்க
நிறைய வச்சிருக்கேன்) //

ஹி., ஹி., ஹி..
எல்லாம் VAS-ல வாங்கினது..
அதை சொல்லவே இல்லையே..!!

அனு said...

//VKS உறுப்பினர் கட்டணத்த உயர்த்திடலாமா....?
எக்கசக்க Demands வர வாய்ப்புகள் தெரியுது..//

கட்டாயம்..
இன்றிலிருந்து VKS கட்டணம் இரட்டிப்பாகிறது.. அதையும் வெங்கட் அவர்களே Sponsor பண்ணுவார் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது..

அனு said...

//எல்லாம் VAS-ல வாங்கினது..
அதை சொல்லவே இல்லையே..!!//

"தன்னைப் போல் பிறரையும் நினை"-ன்னு சொல்லுவாங்க.. ஆனா, அது எல்லா இடத்திலும் applicable ஆகாது!! :-P

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பரு..கலக்கல் மச்சி...

:)))

R.Gopi said...

பதிவின் பேர் “தில்லுதுர” தான் கலக்கல்னா, இந்த பதிவு எழுதிய விதம் அதைவிட கலக்கல்.......

ஹா...ஹா...ஹா... நல்லா வாய் விட்டு சிரித்தேன்...

வெங்கட் said...

@ To All.,

ennoda system service poyi irukku. innum 2 daysla ( hopefully saturday ) next posting pottuduven. athuvaraikum kindly adjust.

அருண் பிரசாத் said...

ஆண்டவனா பாத்து எங்களுக்கு சனிக்கிழமை வரை விடுதலை கொடுத்திருக்கான். சத்தியமா, கடவுள் இருக்காருயா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆண்டவனா பாத்து எங்களுக்கு சனிக்கிழமை வரை விடுதலை கொடுத்திருக்கான். சத்தியமா, கடவுள் இருக்காருயா!//

200% repeattu.....

அனு said...

//
//ஆண்டவனா பாத்து எங்களுக்கு சனிக்கிழமை வரை விடுதலை கொடுத்திருக்கான். சத்தியமா, கடவுள் இருக்காருயா!//

200% repeattu.....

//

கன்னா பின்னா ரிப்பீட்டு...

பெசொவி said...

//அனு said...
//
//ஆண்டவனா பாத்து எங்களுக்கு சனிக்கிழமை வரை விடுதலை கொடுத்திருக்கான். சத்தியமா, கடவுள் இருக்காருயா!//

200% repeattu.....

//

கன்னா பின்னா ரிப்பீட்டு...
//

கன்னா பின்னா மன்னா தென்னா ரிப்பீட்டு.......(சங்கத்துல இருந்துகிட்டு இது கூட செய்யலன்னா எப்படி?)

Anonymous said...

அருமை நண்பா.லவ்வரை கண்டா நண்பனை கட் செய்யனுமோ,அது போல் போலிஸை கண்டா நண்பனை கட் செய்யனும்

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

இறுதி வரிகள் சூப்பர் -

//நீங்க யாரு..?
இதுக்கு முன்னாடி உங்களை
நான் பார்த்ததே இல்லையே...!!//

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா