சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

20 July 2010

யார்..?
அமெரிக்கா., துபாய்., ஜெர்மனி...

இப்படி உலகம் முழுக்க இருந்து
நேத்து எனக்கு மக்கள் போன்
பண்ணிட்டே இருக்காங்க...

ஆனா எல்லோரும்
கேக்கறதென்னவோ
ஒரே கேள்வி தான்...

" யார் அந்த அதிர்ஷ்டசாலி...? "

சும்மா சொல்லக்கூடாது..

இன்னிக்கு உலக தமிழர்கள்
எல்லோரும் ஆவலா
எதிர்பார்த்திட்டு இருக்கறது
இந்த விஷயத்தை தான்..

" எந்த விஷயம்..?? "

" என்ன இப்படி கேட்டுபுட்டீங்க..?? "

இந்த ஒரு Diamond Chance-காக
உலகம் முழுக்க எத்தனை எத்தனை
பேர் Wait பண்ணிட்டு இருக்காங்க
தெரியுமா...??

அதுவும் தெரியாதா..??

என்னங்க நீங்க...
எது கேட்டாலும்
தெரியாது.,தெரியாதுன்னு
சொல்றீங்களே..!!

சரி அப்படியே நம்ம Follwers
List-ஐ கொஞ்சம் பாருங்க...

99 Followers இருக்காங்களா..??

ம்ம்... இப்ப புரியுதா...?!

அந்த அதிர்ஷ்டசாலி
100வது Follower யாரு..??

பின்ன கோகுலத்தின் சூரியன்
Blog-ன் 100வது Folower-ன்னா
சும்மாவா..??

அமெரிக்க ஜனாதிபதியோட
Special Guest-ஆ போகணும்,

ஐ.நா.சபையில போயி
சிறப்புரை வேற ஆற்றணும்..

இன்னும் இது மாதிரி
எவ்ளோவோ இருக்கே...!!

OK.. OK. இதோட நிறுத்திக்கறேன்..
கை வேற வலிக்குது.. ( சுத்தி.., சுத்தி..)
.
.

40 Comments:

ஜில்தண்ணி - யோகேஷ் said...

100 ஆவது ஃபாலோயருக்கு 100 தங்கக் காசுகள் தருவதாக வெங்கட் அண்ணே அறிவிப்பு

Madhavan said...

100 வது ஆளா இருக்குறது ஒன்னும் பெரிய விஷயமில்ல, ஏன்னா ஒண்ணுலேர்ந்து 99 வரைக்கு யார் இல்லான்னாலும் 100 இல்லை.. அமா சொல்லிபுட்டேன்....
அப்படியா 100 வது ஆளா ஆகணும்னா, இப்பவே இந்த பிளகுளேர்ந்து வெளியேரிட்டு, அப்புறம் 99 ஆனதுக்கப்புறம் மறுபடி 100 வது ஆளா நோலைன்சுடலாம் எங்களுக்கு இது கூட தெரியாதா..?

Madhavan said...

Above the comment editor, I read,
//பாராட்டு்கள் - பெற்றுக்கொள்ள..!//
---ok

//குட்டுகள் - கற்றுக்கொள்ள..!//
என்னது.. அடுத்தவங்கள (நீங்க) எப்படி குட்டுறதுன்னு கத்துக்குறதுக்கா ?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

100 ஆவது ஃபாலோயர் வந்தாச்சு

யார் அது ? மணி என்பவர் தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சுத்தி.., சுத்தி..)//

மறுபடியும் நீங்க நேர்மையான ஆளுன்னு நிருபிச்சிட்டீங்க. ரீலை சுத்தி.., சுத்தி அப்டித்தான சொல்ல வந்தீங்க..

Madhavan said...

//ஜில்தண்ணி - யோகேஷ் said...
100 ஆவது ஃபாலோயர் வந்தாச்சு
யார் அது ? மணி என்பவர் தான்//

I stopped following.. now it's back to 99. who'l be 100th..?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நான் வெங்கட்டுக்குப் போன் பண்ணினேன்...
நான் : ஹலோ, வெங்கட்!
வெங்கட் : ஹலோ, சொல்லுங்க! (என்ன கலாய்க்கப் போறாரோ தெரியலியே!)
நான் : ஒரு வழியா நூறு பாலோயர்ஸ் வந்துட்டாங்க, வாழ்த்துகள்!
வெங்கட் : எங்க தானா வந்தாங்க, நான் மெனக்கெட்டு ஒரு பதிவு போட்டு கூவி கூவி அழைச்சுதான் வந்தாங்க.
நான் : இருக்கட்டும், இருந்தாலும் உங்க அழைப்பை ஏத்துக்கிட்டு வந்திருக்காரு, அந்த நூறாவது ஆளுக்கு போன் போட்டு நன்றி தெரிவிச்சுடுங்க!
வெங்கட் : ஹலோ, ஹலோ,.........சரியா காதுல விழலை!
நான் : (செல் சரியா ரீச் ஆகலை போலிருக்கு...) அதாவது நூறு, நூறு,.....புரியுதா, நூறுக்கு போன் போட்டு நன்றி தெரிவிச்சுடுங்க!
-----------------------------
கொஞ்ச நேரம் கழித்து வெங்கட்டிடம் இருந்து போன்
நான் : ஹலோ, சொல்லுங்க வெங்கட்!
வெங்கட் : என்னத்த சொல்லுறது? எல்லாம் உங்களால தான், நீங்க சொன்னீங்கன்னு போன் போட்டு நன்றி சொன்னேன், ஆனா இதுக்கு ஏன் எனக்கு நன்றி சொல்றீங்க, உங்களுக்கு என்ன ஆச்சு? அப்படி எல்லாம் கேட்டு என்னை நோக அடிச்சுட்டாங்க, பாஸ்!
நான் : ஆச்சரியமா இருக்கே, நன்றி சொன்னதுக்கு ஏன் அப்படி கலைக்கறாங்க?
வெங்கட் : அவசர உதவிக்கு தான் போன் பண்ணணுமாமே?
நான் : நீங்க யாருக்கு போன் பண்ணினீங்க?
வெங்கட் : நீங்கதான நூறுக்கு போன் பண்ணச் சொன்னீங்க? அதான் பண்ணேன், அது போலீஸ் ஸ்டேஷன் நம்பர்னு சொல்லக் கூடாதா?
நான் : ????!!!!!!!!!!!!

வெங்கட் said...

Athigarapoorva arivippu :

Mani is our Blog's 100th Follower.

அருண் பிரசாத் said...

//Athigarapoorva arivippu :

Mani is our Blog's 100th Follower.//

இது கள்ள ஆட்டம். ஒத்துக்க முடியாது. நீங்களே உங்க Friend ஐ follower ஆ போட்டுட்டு 100 வது Follower னு சொல்லக்கூடாது.

மொதல்ல இருந்து மறுபடியும் ஆரம்பிப்போம். எல்லா Followers ஐயும் Delete பண்ணுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மொதல்ல இருந்து மறுபடியும் ஆரம்பிப்போம். எல்லா Followers ஐயும் Delete பண்ணுங்க.//

Deal or no Deal

வெங்கட் said...

@ Arun.,

en friend Maniyum, 100th follower Maniyum vera vera aalungapa.

அருண் பிரசாத் said...

//en friend Maniyum, 100th follower Maniyum vera vera aalungapa.//

செல்லாது, செல்லாது...

விளையாட்டை முதல்ல இருந்து ஆரம்பிப்போம்.

வேண்டும்னா நம்ம ஒரு Opinion poll வெச்சி முடிவு பண்ணலாம். மக்கள் தீர்ப்பு சொல்லட்டும்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Arun,

விடுப்பா.........ஒண்ணு ரெண்டு பிரெண்டு கூட follow பண்ணலைன்னா நல்லா இருக்காது!

ப.செல்வக்குமார் said...

இதுக்கு பேரு தான் மொக்கையோ ..?

TERROR-PANDIYAN(VAS) said...

தல நன் இந்த போஸ்ட் எதிர்க்க வேண்டிய கட்டயதுல இருக்கேன். திருக்குறள் அடுத்து உலக மொழி எல்லாத்துலயும் மொழிபெயர்ப்பு செய்யப்பட போறே ஒரு தமிழ் நாட்டின் சொத்து உங்க ப்ளாக்தான். பப்ளிக்கா follow பண்ற 100 வது ஆள வாழ்த்தின... invisiblea உங்கள தொடர்ந்து வர லட்ச கணக்கான, கோடிகணக்கான மக்கள் வருத்தப்பட மாட்டங்கள?? இது நியாயமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// invisiblea உங்கள தொடர்ந்து வர லட்ச கணக்கான, கோடிகணக்கான மக்கள் வருத்தப்பட மாட்டங்கள?? இது நியாயமா?//

டெரர் வெங்கட் எவ்ளோஸ் சீரியஸா பதிவு போட்டிருக்கார். நீங்க என்னடான்னா காமெடி பண்ணிக்கிட்டு....

வெங்கட் said...

@ யோகேஷ்.,

// 100 ஆவது ஃபாலோயருக்கு
100 தங்கக் காசுகள் தருவதாக
வெங்கட் அண்ணே அறிவிப்பு //

கோகுலத்தில் சூரியன் Blog-ன்
Follower-ங்கிற பெருமையை விட
100 தங்க காசா முக்கியம்...?!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// 100 வது ஆளா ஆகணும்னா,
இப்பவே இந்த பிளகுளேர்ந்து வெளியேரிட்டு,
அப்புறம் 99 ஆனதுக்கப்புறம் மறுபடி
100 வது ஆளா நோலைன்சுடலாம் //

நம்ம Blog-க்கு நீங்க தான்
100வது Follower-ங்கிற பெருமையை
அடையணும்கிற உங்க ஆர்வம்
என்னை புல்லரிக்க வெக்குது..

வெங்கட் said...

@ ரமேஷ்..,

// ரீலை சுத்தி.., சுத்தி அப்டித்தான
சொல்ல வந்தீங்க..//

இல்ல.., இல்ல..,

உலகத்தை சுத்தி., சுத்தின்னு
சொல்ல வந்தேன்...

ஓ..அதுக்கு
கால் வலிக்குதுன்னு
போட்டிருக்கணுமோ..?!!

அவசரத்துல கை வலிக்குதுன்னு
உண்மையை சொல்லிட்டோமே..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// பெ.சொ.வி: நீங்க யாருக்கு போன் பண்ணினீங்க?

வெங்கட் : நீங்கதான நூறுக்கு போன்
பண்ணச் சொன்னீங்க? அதான் பண்ணேன்,
அது போலீஸ் ஸ்டேஷன் நம்பர்னு சொல்லக் கூடாதா? //

அப்புறம் நடந்தது...

பெ.சொ.வி : அப்புறம்..??

வெங்கட் : நீங்கல்லாம் வேலையே செய்யாம
சும்மா தண்ட சம்பளம் தானே வாங்கறீங்கன்னு
கேட்டேன்..

பெ.சொ.வி : ஐயையோ... உங்களை கண்டுபிடிச்சு
டின்னு கட்டிட போறாங்க.. ஜாக்ரதை..

வெங்கட் : அதே.., அதே..
எதுக்கும் நீங்களும் ஜாக்ரதையா இருங்க..

பெ.சொ.வி : நானா.. எதுக்கு..?

வெங்கட் : நான் உங்க மொபைல்ல இருந்து தான்
100-க்கு போன் பண்ணினேன்..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...

இல்ல.., இல்ல..,

உலகத்தை சுத்தி., சுத்தின்னு
சொல்ல வந்தேன்...

ஓ..அதுக்கு
கால் வலிக்குதுன்னு
போட்டிருக்கணுமோ..?!! //

இல்லவே இல்லை, கை வலிக்குதுன்னு கரெக்டாதான் சொல்லியிருக்கீங்க. உங்க டேபிளில் இருக்கற உலக உருண்டையைத் தான சுத்தியிருப்பீங்க, அப்ப கையைத் தான் வலிக்கும்.

அருண் பிரசாத் said...

VKS சங்க கூட்டம்:

அருண்: பரவில்லையே! 100 Follower கோகுலத்தில் சூரியன் ல சேர்ந்துடாங்களே!

ரமெஷ்: அதுதான், எப்படினு புரியல?

ரசிகன்: இவ்வளோ, கலாய்ச்சும் வெங்கடுக்கு கூட்டம் சேருது

பெ.சொ.வி: ஆமாங்க, வேற எதாவது செய்யனுமோ!

அருண்: இல்லை, இதை உண்மைலயே நாமதான் கொண்டாடனும்

அனு: (கோபமாக) என்ன சொல்லுறீங்க.

ரமெஷ்: அருண், இது சரியில்லை

அருண்:இல்லைங்க நாம இதை கொண்டாடனும்.

ரசிகன்: இதை நான் கண்டிக்கிறேன்

பெ.சொ.வி: எல்லோரும் அமைதி, அருண், ஏன் அப்படி சொன்னீங்க

அருண்: ஒன்னும் இல்லை, வெங்கட் 100 Followers வந்துட்டதா சந்தோஷ படுறார். ஆனா அது இல்லை உண்மை.

அனு: அப்புறம்?

அருண்: அவங்க எல்லோரும், நம்ம கமெண்டோட followers. கமெண்ட் section ல follow option இல்லாததால blog ஐ follow பண்ணி கமெண்ட் பார்கிறாங்க.

ரமெஷ்: ஆகா, இது தெரியாம போச்சே.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ பெ.சொ.வி..,

வெங்கட் : நான் உங்க மொபைல்ல இருந்து தான்
100-க்கு போன் பண்ணினேன்..
//

நூறுக்கு போன் பண்ணா செலவு ஆகாதுங்கற ஜெனரல் நாலெஜ் கூட இல்லாம அடுத்தவங்க செல்லுலேர்ந்து பேசற ஒருத்தரை ஆதரிக்கிற டெர்ரர் பாண்டியனுக்கு என் அனுதாபங்கள்!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//டெரர் வெங்கட் எவ்ளோஸ் சீரியஸா பதிவு போட்டிருக்கார். நீங்க என்னடான்னா காமெடி பண்ணிக்கிட்டு.... //

சிரிங்க சிரிங்க... அன்னைக்கு உலகம் உருண்டை சொன்ன அப்போ இப்படிதான் நம்பாம சிரிச்சிங்க... ஹ்ம்ம்.. உண்மை என்னைக்கு இந்த உலகம் நம்புச்சி....

அருண் பிரசாத் said...

@ Terror

(அதிர்ச்சியுடன்) என்னாது உலகம் உருண்டையா?

Madhavan said...

//(அதிர்ச்சியுடன்) என்னாது உலகம் உருண்டையா?//

அட, மாத்திட்டாங்களா?

வெங்கட் said...

@ டெரர்..,

// திருக்குறள் அடுத்து உலக மொழி
எல்லாத்துலயும் மொழிபெயர்ப்பு
செய்யப்பட போறே ஒரு தமிழ்
நாட்டின் சொத்து உங்க ப்ளாக்தான். //

ஆஹா.. இந்த Matter
ரொம்ப நல்லா இருக்கே..

நாம தஞ்சாவூர் கல்வெட்டுல
இந்த Matter-ஐ செதுக்கி
வெச்சிட்டு வந்துடலாம்....

அப்பதான் வெளிநாட்டுகாரங்க
படிச்சி., தெரிஞ்சிகிட்டு Translate
பண்ண Steps எடுக்க Easy-ஆ
இருக்கும்..

வெங்கட் said...

@ அருண்.,

// (அதிர்ச்சியுடன்) என்னாது உலகம் உருண்டையா? //

ஹி., ஹி.., ஹி..!!
எங்களுக்கு சிரமம் வைக்காமல்
Same Side Goal போட்டுக்கொண்ட
அருணுக்கு வாழ்த்துக்கள்...

நான் போன பதிவுல

System Hang ஆயிட்டாலே
என்ன பண்ணனும்னு கூட
அவங்களுக்கு( VKS Members-க்கு )
தெரியாதுன்னு சொல்லி இருந்தேன்...


அதை அப்ப நம்பாதவங்க எல்லாம்
இப்பவாவது நம்பறீங்களா..??!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஹி., ஹி.., ஹி..!!
எங்களுக்கு சிரமம் வைக்காமல்
Same Side Goal போட்டுக்கொண்ட
அருணுக்கு வாழ்த்துக்கள்...
//

அய்யா VAS புத்திசாலிங்களா, உலகம் உருண்டை இல்லை. கீழ்பக்கம் தட்டையான வடிவம்ன்னு நீங்க படிச்சதில்லியா?

// திருக்குறள் அடுத்து உலக மொழி
எல்லாத்துலயும் மொழிபெயர்ப்பு
செய்யப்பட போறே ஒரு தமிழ்
நாட்டின் சொத்து உங்க ப்ளாக்தான்//

உண்மைதான் டெரர் எப்படி இருக்கனும்கிரதுக்கு திருக்குறளையும் எப்படி இருக்க கூடாதுங்குரதுக்கு இந்த பிளாக்கையும் translate பண்றாங்களாம்...

pinkyrose said...

ஏங்க அந்த எங்கேங்க? 100 தங்க காசுன்னா சும்மாவா?

அக்பர் said...

இவரு அழிச்சாட்டியம் தாங்க முடியலைப்பா :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
நாம தஞ்சாவூர் கல்வெட்டுல
இந்த Matter-ஐ செதுக்கி
வெச்சிட்டு வந்துடலாம்....

//

அப்படியே பக்கத்துல நீங்களும் உக்காந்துக்கங்க. அப்பத்தான் வெள்ளைக்காரனை டபுளா மிரட்ட வசதியா இருக்கும்.

Venkat M said...

Hi Venkat,

Am blog reader and below is not my blog.. But I read the stories in this blog regularly.. like how i visit your blog... Please share this to your friends if you like the postings in this blog.

http://www.minminidesam.blogspot.com/

Again disclaimer am not a friend / relative of this blog owner just a reader. Hope you appreciate.

Venkat M

அருண் பிரசாத் said...

//அப்படியே பக்கத்துல நீங்களும் உக்காந்துக்கங்க. அப்பத்தான் வெள்ளைக்காரனை டபுளா மிரட்ட வசதியா இருக்கும். //

ரிப்பீட்டே...

வெங்கட் said...

@ Pinky Rose..,

// ஏங்க அந்த எங்கேங்க?
100 தங்க காசுன்னா சும்மாவா? //

நீங்க கொஞ்சம் லேட்..
உங்க Follower நம்பர் 105..

அந்த 100 தங்க காசுகளை
தம்பி யோகேஷ் வசம் குடுத்து
100வது Follower MANI-கிட்ட
குடுக்க சொல்லியாச்சு...

( உஸ் ஹப்பா.. நல்லவேளை
நாளைக்கு காசு கைக்கு வரலைன்னு
நம்மள யாரும் அடிக்க முடியாது.. )

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அப்படியே பக்கத்துல நீங்களும்
உக்காந்துக்கங்க. //

ம்ம்.. அப்படி தான் பண்றதா
இருக்கோம்..

பின்ன உங்களை எல்லாம்
நம்ப முடியாது...
நம்ம Blog Famous ஆகறதை
தடுக்க அந்த கல்வெட்டை
தூக்கிட்டு ஓடினாலும் ஓடிடுவீங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Venkat said...
நீங்க கொஞ்சம் லேட்..
உங்க Follower நம்பர் 105..

அந்த 100 தங்க காசுகளை
தம்பி யோகேஷ் வசம் குடுத்து
100வது Follower MANI-கிட்ட
குடுக்க சொல்லியாச்சு...
//

அதெப்படி? நூறுக்கு 100 தங்கக் காசுன்னா 105 க்கு 105 தங்கக் காசுல்ல, ரோஸ், விடாதீங்க, வெங்கட்ட!
(ஏதோ, நம்மால ஆனது, நாராயண, நாராயண!)

அருண் பிரசாத் said...

அப்ப எல்லோருக்கும் தங்க காசு நிச்சயம், நான் 70 தாவது Follower. எனக்கு 70 தங்க காசு அனுப்பிடுங்க.

@ All

எல்லோரும் வரிசையா வந்து அவங்க number ஐ சொல்லி அவ்வளவு தங்ககாசு வாங்கிட்டு போங்க.

ஏதோ, என்னால முடிஞ்சது!

FALE PROFILE கிரியேட் பண்ணியாவது ஒரு 200 தங்க காசையாவது தேத்திடனும்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//அந்த 100 தங்க காசுகளை
தம்பி யோகேஷ் வசம் குடுத்து
100வது Follower MANI-கிட்ட
குடுக்க சொல்லியாச்சு...//

நானும் தங்கக் காசுன்னு வாங்கிபுட்டேன்,பாத்தா அது எல்லாம் மிட்டாய், தங்கக் கலர் முலாம் போட்ட கவர்ல போட்டு ஏமாத்திட்டாங்க :)

யாருக்காவது மிட்டாய் வேணும்னா வரிசைல வாங்க :)

cheena (சீனா) said...

122 பேரு தான் வீ ஏ எஸ் லே இருக்காங்களா - அது சரி - போனாப் போகுதுன்னு நானும் அங்கே சேந்துட்டேன்

அன்பின் வெங்கட்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா