அப்போ நான் 9th Std.
வேற ஒரு School-ல
Drawing Competition...
அதுல கலந்துக்க
எங்க School-ல இருந்து
10 பேரை கூட்டிட்டு போனாங்க..
அதுல
9th Std A - சுதா.,
9th Std B - நான்.,
எங்களுக்கு படம் வரைய
குடுத்த Title..
" Violence and Non- Violence "
எனக்கு பக்னு ஆயிடுச்சு..
" Violence " - இதுக்கு முன்னாடி
இந்த வார்த்தையை நான்
கேள்விபட்டதே இல்லை..
இதுக்கு என்ன Meaning..?
மத்த பசங்க எல்லாம் வரைய
ஆரம்பிச்சுட்டாங்க..
எங்க English மிஸ் மேல
எனக்கு கோபம் கோபமா வந்தது..
பின்ன., நானும் ஒழுங்காதானே
Fees கட்டினேன்..!!?
எனக்கு மட்டும் Violence-ன்னு
ஒரு வார்த்தை English-ல
இருக்குன்னு சொல்லி தரலையே..
ஏன்..? ஏன்..?? ஏன்..???
சரி.., பக்கத்தில யார்கிட்டயாவது
கேட்கலாம்னு பார்த்தா..
பக்கத்தில இந்த சுதா பொண்ணு..
அந்த பொண்ணு சும்மாவே
நம்மள மதிக்காது..
இந்த Doubt வேற கேட்டா
அவ்ளோதான்.
எல்லாம் நம்மள விட
20 மார்க் கூட எடுக்குற திமிர்...
( ஒவ்வொரு பாடத்திலயும்..)
முன்னாடி பெஞ்ச்ல இருந்தவன்கிட்ட
இந்த தலைப்புக்கு என்ன
அர்த்தம்னு கேட்டேன்...
" அஹிம்சையும் , தீவிரவாதமும்னு "
சொல்லிட்டு...
என்னை கேவலமா ஒரு லுக்
வேற விட்டான்...
( இந்த சின்ன விஷயத்துக்கு
ஏன்டா இப்படி தீவிரவாதி
மாதிரியே முறைக்குற..??!! )
அப்புறம் என் கற்பனை குதிரையை
தட்டி விட்டேன் பாருங்க...
காந்தி தாத்தா ஒரு புறாவை
பறக்க விடற மாதிரியும்..,
ஒரு வேடன் ஒரு புறாவை
அம்பு விட குறி பார்க்குற
மாதிரியும் ஒரே பக்கத்தில
ரெண்டு படம் போட்டேன்..
படம் சூப்பரா வந்திருந்தது..
Prize Guarantee-ன்னு மனசுல
நினைச்சுக்கிட்டேன்..
ஆனா Result வந்தப்போ
எனக்கு Prize கிடைக்கலை..
ரொம்பவே Feel ஆயிட்டேன்..
அப்போ என் Friend மணி
சொன்ன ஆறுதல் வார்த்தை
இருக்கே..
துவண்டு போயிருந்த என்னை
தூக்கி நிறுத்தின வார்த்தை அது...
" ரொம்ப Feel பண்ணாதடா...
சுதாவுக்கும் Prize கிடைக்கலை...!! "
" என்னாது.., சுதாவுக்கும் Prize
இல்லையா..?
ஆஹா.. கேட்கவே எவ்ளோ
சந்தோஷமா இருக்கு...!! "
பின் குறிப்பு :
Prize வாங்க நான் வெச்ச குறி
எப்படி சொதப்பிச்சின்னா...
படமெல்லாம் நல்லா தான்
வரைஞ்சிருந்தேன்.. - ஆனா
Title-ஐ தான் மாத்தி எழுதிட்டு
வந்திட்டேன்..
காந்தி தாத்தாவுக்கு - Violence
வேடனுக்கு - Non- Violence
( காந்தி தாத்தா மன்னிக்க.. )
அது என் தப்பில்லைங்க..
Violence and Non- Violence-க்கு
Meaning கேட்டப்ப அந்த லூசுப்பய
" அஹிம்சையும் , தீவிரவாதமும்னு "
தானே சொன்னான்..
நான் என்ன பண்றது..??
.
. Tweet