சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

25 March 2011

வாம்மா.. மின்னல்.......!!என் Friend ஜெகன் வீடு..

நானும்., ஜெகனும் பேசிட்டு
இருந்தோம்.

அங்கே டேபிள் மேல
ஒரு Science Magazine இருந்தது..

அதை பாத்ததும் எனக்கு டென்ஷனா
போச்சு.. நான் ஜெகனை பாத்து...

" துரோகி.. இதெல்லாமா நீ படிக்கிற..?
இன்னியோட நம்ம Friendship கட்.. "

" அண்ணா.. அது என்னோடது.. "
- இது ஜெகனின் தங்கை கவிதா..

" வெங்கட்.. இந்த அரை வேக்காட்டு
Book-ஐ படிச்சிட்டு இவ NASA Scientist
Range-க்கு பண்ற பந்தா இருக்கே....
உஸ்ஸப்பா முடியலடா..! "

கவிதாவுக்கு செம கோவம்..

" டேய்.. நானா பந்தா பண்றேன்..?!
உன் மரமண்டைக்கு இந்த Book-ல
இருக்குறது புரியலன்னு சொல்லு.. "

" டேய் ஜெகா.. எனக்கென்னமோ
உன் தங்கச்சி உன்னை விட
புத்திசாலின்னு தோணுது. "

( சண்டை நடக்கும் போது நாம சும்மா
இருக்க கூடாது., இப்படிதான் எதாவது
கோத்து விடணும்.. அப்ப தான் Interesting-ஆ
இருக்கும்.. ஹி.,ஹி.,ஹி..! )

" புரியாம பேசாதடா.. நீயே இந்த Article-ஐ
பாரு.. இந்த Book லட்சணம் என்னான்னு
அப்ப உனக்கு தெரியும்.. "

அந்த Article-ல இருந்து..

மழை பெய்யும் போது., ஒரு பஸ் மேல
கரெண்ட் கம்பி கட் ஆகி விழுந்தா..
பஸ்ஸுக்குள்ள இருக்கறவங்களுக்கு
ஷாக் அடிக்கும்..!!

" கரெக்ட்டுதானே..! ஷாக் அடிக்கும்ல.!! "

" டேய்.. பஸ் டயர் ரப்பர்டா.. அப்புறம்
எப்படிடா ஷாக் அடிக்கும்..? " ( இது சரி..! )

" அண்ணா.. டயர்தான் மழையில் நனைஞ்சி
ஈரமா இருக்குல்ல.. அப்ப ஷாக் அடிக்கும்ல..!
( அட இதுவும் சரி மாதிரி தெரியுது..!?! )

" டேய்.., நம்ம Physics மாஸ்டர்
என்னடா சொன்னாரு..? "

" நம்ம Physics மாஸ்ட்ரா..? அவரு
என்கிட்ட ஒண்ணும் சொல்லலையே..?!! "

' டேய்..Rubber is a Bad Conductor ' -ன்னு
சொல்லி குடுத்து இருக்கார்ல."

( இதெல்லாமா சொல்லி குடுத்தாரு..?!! )

" ஆமா., ஆமா அப்படி தான் சொல்லி
குடுத்தாரு..! "

" என்னண்ணா நீங்க..? அவன் தான்
அறிவில்லாம உளர்றான்னா..,
நீங்களுமா.? "

" ஹி., ஹி., ஹி..!! ரொம்ப Thanks மா.. ! "

" எதுக்குண்ணா Thanks.? "

" இவ்ளோ நாளா எனக்கு அறிவு
இருக்குன்னு நினைச்சிட்டு இருந்த
பாரு அதுக்கு..!! "

" விளையாடாதீங்கண்ணா.. Correct-ஆ
சொல்லுங்க Rubber Semi Conductor-ஆ.?
Bad Conductor-ஆ.? "

" அதெல்லாம் எனக்கு தெரியாதுமா..
எனக்கு தெரிஞ்ச ஒரே Conductor
என் Friend பழனிசாமி தான்..

அவன் ஒரு Good Conductor..!! "

அதுக்கு அப்புறம் கவிதா எங்களை
திட்டிட்டே உள்ளே போனதெல்லாம்
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதவை..

ஹி., ஹி., ஹி..!!
.
.

48 Comments:

Barathy said...

நீர்(/தண்ணீர்) ஒரு Good Conductor..!!

Barathy said...

//" புரியாம பேசாதடா.. நீயே இந்த Article-ஐ
பாரு.. இந்த Book லட்சணம் என்னான்னு
அப்ப உனக்கு தெரியும்.. "
//
நல்ல வேளை அந்த Article-ஐ உங்களை பார்க்கத்தான் சொன்னார். படிக்கச்சொல்லியிருந்தால் உங்களிற்கு தெரியாது என்றது ஜனாவின் தங்கச்சிக்கும் தெரியவந்திருக்கு. #மானம் காப்பான் தோழன்

samhitha said...

// சண்டை நடக்கும் போது நாம சும்மாஇருக்க கூடாது., இப்படிதான் எதாவது கோத்து விடணும்.. அப்ப தான் Interesting-ஆ இருக்கும்//
அது சரி!!அப்போ நீங்க தான் நவீன நாரதரா??

// இவ்ளோ நாளா எனக்கு அறிவு
இருக்குன்னு நினைச்சிட்டு இருந்த
பாரு அதுக்கு..!! " //
இப்டி தான் உண்மைய வெளிய சொல்றதா?
:O அப்போ உங்களுக்கு????????

//இதெல்லாமா சொல்லி குடுத்தாரு..?!!//
இதுக்கு தான் ஸ்கூல் போனா ஒழுங்கா, தூங்காம பாடத்தை கவனிக்கணும்!!

//துரோகி.. இதெல்லாமா நீ படிக்கிற..?
இன்னியோட நம்ம Friendship கட்.. " //
ஜனா ஒரு நல்ல வாய்ப்பை நீங்க இழந்துடீங்க போங்க!! ;)

samhitha said...

oops instead of saying jagan i hav mentioned jana :(
correcta read pannikonga

Madhavan Srinivasagopalan said...

// அவன் ஒரு Good Conductor..!! "//

அவரு இருக்குற பஸ்ல கரண்டு கம்பி விழுந்தா ஷாக் அடிக்குமா ?

Chitra said...

நீங்க நல்லவரா.... கெட்டவரா ....என்பதன் ட்விஸ்ட்???!!! ஹா,ஹா,ஹா,ஹா...

HVL said...

//
" என்னண்ணா நீங்க..? அவன் தான்
அறிவில்லாம உளர்றான்னா..,
நீங்களுமா.? "

" இவ்ளோ நாளா எனக்கு அறிவு
இருக்குன்னு நினைச்சிட்டு இருந்த
பாரு அதுக்கு..!! "

//

அறிவு இருக்கிற மூளை

பேட் கண்டக்டரா (மரம்)?

செமி கண்டக்டரா (சிலிகா(மணல்))?

குட் கண்டக்டரா (கற்பூரம்!!!)?

♔ம.தி.சுதா♔ said...

////அவன் ஒரு Good Conductor..!! "////

அடடா பாவமே கடைசீல இப்புடி சொல்லிப் புட்டிங்களே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

Mohamed Faaique said...

ஆஹா!!! புது பதிவு போட்டிருக்கே!!! போய் கும்மளாம்’னு ஓடி வந்தா, நீங்களே உங்கள இந்த கும்மு கும்மியிருக்கீங்க......

கலாய்க்கிற மூடு போய், உங்க மீது அனுதாபம் வந்துடுச்சு சார்.

யாருங்க அந்த ஜெகன்? வீட்ல நீங்க சமைக்கிர்த உங்களாலேயே சாப்பிட முடியாம, ஓசி சாப்பாட்டுக்காக நன்பன் வீட்டுக்கு போனால், முதியவர் என்றும் பார்க்காம இப்படியா கேவலப் படுத்தி அனுப்புரது?

சேலம் தேவா said...

பதிவுக்கு நடுவில Physics,Chemistry சொல்லித்தர்ற உங்களை எவ்ளோ பாராட்டினாலும் தகும். :))

பட்டாபட்டி.... said...

மூளக்காரங்களா பேசியிருக்கீங்க.. உம்..

ஆமா பாஸ்.. இந்த சயின்ஸ்-னா இன்னா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கண்டக்டரைப் பத்திப் பேசறீங்களே, ரஜினி ரசிகன்கறதால தானே?

(எனக்கு என்ன தெரியுமோ அது பத்தித் தான பேச முடியும்?)

T-Mart India said...

@ vankat

//" அதெல்லாம் எனக்கு தெரியாதுமா..
எனக்கு தெரிஞ்ச ஒரே Conductor
என் Friend பழனிசாமி தான்..

அவன் ஒரு Good Conductor..!! "//

அடடா உங்களுக்கு மூளை கிளை வுட்டு வளருது வெங்கட்

கிளை உட்டு வளருது

vinu said...

appadeeenaa electrical work pannurappo hawaai chappal pottutu velay paakach cholluraangaleay athu eathukkuuuuuuu

#doubtttuu

bussoda bosy steal athula irrunthu olugura mazai thanni tharaiyil padurappo shock adikkum; that is that water flow will act as aconector between earth and bus so shock adiikum!

he he he he he he he he ennoda kandu pidippu epppudiiiiiiiiiii

Lakshmi said...

நல்லாபடிக்கறபெண்களை கல்லாய்க்கதீங்க.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஆமா!!! கண்டக்டருக்கு ஷாக் அடிக்காதா?

வெங்கட் said...

@ பாரதி.,

// நல்ல வேளை அந்த Article-ஐ
உங்களை பார்க்கத்தான் சொன்னார்.
படிக்கச்சொல்லியிருந்தால் உங்களிற்கு
தெரியாது //

இப்ப எனக்கு பெரிய டவுட்டே..
அந்த Article-ஐ ஜெகனுக்கு யார்
படிச்சி சொல்லி இருப்பான்னு தான்..

ஹி., ஹி., ஹி..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அது சரி!! அப்போ நீங்க தான்
நவீன நாரதரா?? //

என்னா இப்படி சொல்லிட்டீங்க..

நீங்க VKS-ஐ படுகேவலமா பல தடவை
திட்டி இருக்கீங்க.. நான் என்னிக்காவது
அதை அவங்ககிட்ட சொல்லி இருக்கேனா..?!!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// இதுக்கு தான் ஸ்கூல் போனா ஒழுங்கா,
தூங்காம பாடத்தை கவனிக்கணும்!! //

ஸ்கூலுக்கு போனா தானே..?!
அப்ப சரி..!

வெங்கட் said...

@ மாதவன்.,

// அவரு இருக்குற பஸ்ல கரண்டு
கம்பி விழுந்தா ஷாக் அடிக்குமா ? //

அடிக்காது..!!

இந்த மாதிரி அசம்பாவிதம் எதுவும்
நடக்க கூடாதுன்னு தான் ஆற்காட்டர்
கரண்டை கட் பண்ணி வெக்கிறதே.

இப்ப புரியுதா அவர் நல்ல மனசு..?!

வெங்கட் said...

HVL said...,

// அறிவு இருக்கிற மூளை
பேட் கண்டக்டரா (மரம்)?
செமி கண்டக்டரா (சிலிகா(மணல்))?
குட் கண்டக்டரா (கற்பூரம்!!!)? //

வாவ்.. " அறிவு இருக்கிற மூளை.. "
என்னே ஒரு சொல்லாடல்..

இதை படிச்சிட்டு VKS காரங்க
" அறிவுன்னா என்னான்னு..? "
குழம்பி போயிடுவாங்களே..

அதுலயும் நம்ம ரமேஷூ..
" மூளைன்னா என்னான்னு..? "
ரொம்ப குழம்பி போயிடுவாரே.?!

வெங்கட் said...

@ Mohamed.,

// போய் கும்மளாம்’னு ஓடி வந்தா,
நீங்களே உங்கள இந்த கும்மு
கும்மியிருக்கீங்க.. கலாய்க்கிற மூடு
போய், உங்க மீது அனுதாபம் வந்துடுச்சு சார். //

( Mind Voice.. )

" வெங்கி.., பல அரசியல் ராஜ தந்திரங்களை
கரைத்து குடித்திருக்கிறாயடா நீ..?! "

// முதியவர் என்றும் பார்க்காம இப்படியா
கேவலப் படுத்தி அனுப்புரது? //

முதியவரா..? ஹா., ஹா., ஹா..

நீங்க படிக்கிற " முதியோர் கல்வி " ஸ்கூல்ல
நானும் இருக்கேங்கறதுக்காக என்னை
உங்க லிஸ்ட்ல சேர்த்துகிறதா..?

" வாத்தியார்கிற " மரியாதை
கொஞ்சமாச்சும் வேணாமா..?

Class-க்கு வெளியே முட்டி போட்டு
நிக்க சொல்லிடுவேன்.. Be Careful..!!

வெங்கட் said...

@ பட்டாபட்டி.,

// ஆமா பாஸ்.. இந்த சயின்ஸ்-னா இன்னா? //

சயின்ஸ்னா தெரியாதா..?
என்ன ஆளு நீங்க..?

சயின்ஸ்னா தமிழ்ல.. " வரலாறு..! "

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// பதிவுக்கு நடுவில Physics, Chemistry
சொல்லித்தர்ற உங்களை எவ்ளோ
பாராட்டினாலும் தகும். //

ஹி., ஹி., ஹி..!!

ரொம்ப புகழாதீங்க..!!

நாங்க தான் இதை ஒரு பொது சேவையா
பண்ணிட்டு இருக்கோமே.. Physics., Chemistry
மட்டுமில்ல இதுக்கு முன்னாடி

1. இங்கிலீஸ்
2. தமிழ்
3. கணக்கு
4. அக்கவுண்ட்ஸ்
5. எக்கனாமிக்ஸ்
எல்லாம் தான் சொல்லி குடுத்து இருக்கோம்.,

இதனால தான் நம்ம பிளாக்கை
" பிளாக் உலகின் என்சைக்ளோ பீடியான்னு "
எல்லோரும் செல்லமா சொல்றாங்க..

Shalini(Me The First) said...

@பெ.சொ.வி
//(எனக்கு என்ன தெரியுமோ அது பத்தித் தான பேச முடியும்?)//
நிச்சயமாக சத்தியமாக உங்களுக்கு என்ன தெரியுமோ அத பத்தி தான் உங்களால பேச முடியும் எது உங்களுக்கு தெரியாதோ அத பத்தி உங்களுக்கு பேசவும் தெரியாது ஆனா இந்த பத்திங்கிறது எத பத்தி இல்ல எந்த பத்தின்னு சொன்ன நல்லாருக்கும்
ஏன்னா பத்திரிக்கைல வர்ர பத்தியா இல்ல இந்த சூடம் சாம்பிரானியோட குச்சி மாதிரி ஒண்னு இருக்குமே அந்த பத்தியான்னு.....

(ஸ்ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஆ.. நான் மட்டும் இந்த மொக்க தியரங்களையும்
தீசீஸ்களையும் படிக்கணும் நீங்க எல்லாரும் ஜாலியா எங்க பாஸ் எழுதுற போஸ்ட் படிச்சுட்டு என்ஜாய் பண்ணனுமா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :X

Mohamed Faaique said...

////இதனால தான் நம்ம பிளாக்கை
" பிளாக் உலகின் என்சைக்ளோ பீடியான்னு "
எல்லோரும் செல்லமா சொல்றாங்க.. ///

"என் சைக்கோ பீடியா”னு நீங்க பேர் வச்சிக்கலாம். தப்பே இல்ல. நாம அப்பிடிதான் நெனச்சிகிட்டு இருக்கோம்....

karthikkumar said...

அதுக்கு அப்புறம் கவிதா எங்களை
திட்டிட்டே உள்ளே போனதெல்லாம்
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதவை.. ////
நீங்க எழுதுறது எதுதான் சம்பந்தமா இருக்கு... ?... :))

karthikkumar said...

நான் மட்டும் இந்த மொக்க தியரங்களையும்
தீசீஸ்களையும் படிக்கணும் நீங்க எல்லாரும் ஜாலியா எங்க பாஸ் எழுதுற போஸ்ட் படிச்சுட்டு என்ஜாய் பண்ணனுமா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :X///
உங்க பாஸ் எழுதுறத படிச்சா எப்படிங்க ஜாலியா இருக்க முடியும்?.... பரிதாபம்தான் படமுடியும்...:))

'அ'னா 'ஆ'வன்னா said...

Good conductor !!!

'அ'னா 'ஆ'வன்னா said...

உங்க Followers 299 ஆகும்போது சொல்லுங்க... நான் வந்து 300-ஆ சேர்ந்து எனக்கு பெருமை தேடிக்கிறேன் Please...

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// எனக்கு என்ன தெரியுமோ அது
பத்தித் தான பேச முடியும்? //

அப்படி பாத்தா நீங்க எதை பத்தியுமே
பேச முடியாதே.. உங்களுக்கு தான்
ஒரு விஷயம் கூட உருப்படியா தெரியாதே..

Krishna said...

Unga pakkathu veetla 6vathu padikira paiyan science book kaanomnu thaedunathu unga kaingaryathunaalayaa sari sari aduthu unga 2vathu paiyan bookla irunthu ethaiyaavathu suttu adutha pathivu podunga

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Krishna said...
Unga pakkathu veetla 6vathu padikira paiyan science book kaanomnu thaedunathu unga kaingaryathunaalayaa sari sari aduthu unga 2vathu paiyan bookla irunthu ethaiyaavathu suttu adutha pathivu podunga//

ஏங்க, எழுதினதுதான் எழுதினீங்க, தமிழ்ல எழுதியிருக்கலாமில்ல? பாருங்க, இது ஏதோ பிரெஞ்சு மொழின்னு நினைச்சுகிட்டு இலத்தீன் டிக்சனரிய எடுத்து வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சிட்டாரு,நம்ம வெங்கட்!

வெங்கட் said...

@ T-Mart.,

// அடடா உங்களுக்கு மூளை
கிளை வுட்டு வளருது வெங்கட்
கிளை உட்டு வளருது //

ஹி., ஹி., ஹி..!!

அது நாளுக்கு நாள் வளர்ந்துட்டே
தான் இருக்கு என்ன பண்றது..?

என் அறிவு வளர்ச்சியை தடுக்க எதாவது
மருந்து இருக்கான்னு டாக்டர்கிட்ட
கேக்கணும்..!!

வெங்கட் said...

@ வினு.,

// he he ennoda kandu pidippu epppudiiiiiiiiiii //

சும்மா வாயால சொன்னா எப்படி..?

மழை பெய்யும் போது., பஸ்ல மேல
கரண்ட் கம்பியை கட் பண்ணி போட்டு.,
அந்த பஸ்ஸுக்குள்ள நீங்க உக்காந்து
பாத்து உங்க கண்டுபிடிப்பை எங்களுக்கு
Demo பண்ணி காட்டுங்க..

வெங்கட் said...

@ லக்ஷ்மி.,

// நல்லா படிக்கற பெண்களை கலாய்க்கதீங்க. //

இதென்ன வம்பா இருக்கு..?
நாங்க இதுல பொண்ணுகளை
கலாய்க்கவே இல்லையே..?!!

வெங்கட் said...

@ மணி,

// ஆமா!!! கண்டக்டருக்கு ஷாக் அடிக்காதா? //

நல்ல கேள்வி..!!

இதை நான் என் Friend பழனிசாமிகிட்ட
கேட்டு பதில் சொல்றேன்..!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// நிச்சயமாக சத்தியமாக உங்களுக்கு என்ன
தெரியுமோ அத பத்தி தான் உங்களால பேச
முடியும் எது உங்களுக்கு தெரியாதோ அத
பத்தி உங்களுக்கு பேசவும் தெரியாது //

வாம்மா.. மின்னல்..!!

ஹாய்..கார்த்திக் எங்கே இருக்கீங்க..?
ஷாலினி வந்தாச்சு.. உதை வாங்க ரெடியா..?

வெங்கட் said...

@ 'அ'னா 'ஆ'வன்னா.,

// உங்க Followers 299 ஆகும்போது சொல்லுங்க...
நான் வந்து 300-ஆ சேர்ந்து எனக்கு பெருமை
தேடிக்கிறேன் Please... //

ஆஹா நம்ம பிளாக்ல 300வது Place-க்கு
செம போட்டி போல.. இதே மாதிரி 257 பேர்
முன்னமே சொல்லி இருக்காங்களே..

ஹி., ஹி..!!

( கண்டீப்பா மெயில் அனுப்பறேன்.. :) )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு கண்டக்டருக்குத்தான் இத்தன அக்கப்போரா? ஒரு கண்டக்டர புடிச்சிட்டு வந்து கரண்டுக் கம்பிய கைல கொடுத்து பாத்தா தெரிஞ்சிட போவுது..... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////புரியாம பேசாதடா.. நீயே இந்த Article-ஐ
பாரு.. இந்த Book லட்சணம் என்னான்னு
அப்ப உனக்கு தெரியும்.. "

அந்த Article-ல இருந்து..////////

கடவுளே அப்போ அந்த ஆர்ட்டிக்கிளை படிச்சீங்களா? என்ன கொடும சார் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//Krishna said...
Unga pakkathu veetla 6vathu padikira paiyan science book kaanomnu thaedunathu unga kaingaryathunaalayaa sari sari aduthu unga 2vathu paiyan bookla irunthu ethaiyaavathu suttu adutha pathivu podunga//

ஏங்க, எழுதினதுதான் எழுதினீங்க, தமிழ்ல எழுதியிருக்கலாமில்ல? பாருங்க, இது ஏதோ பிரெஞ்சு மொழின்னு நினைச்சுகிட்டு இலத்தீன் டிக்சனரிய எடுத்து வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சிட்டாரு,நம்ம வெங்கட்!
/////////

பெசொவி, வெங்கட் இவ்வளவு நேரமா படிச்சிட்டு இருக்கறது டெலிபோன் டைரக்டரி, டிக்சனரி இல்ல.. நல்லா பாருங்க......!

Shalini(Me The First) said...

@கார்த்தி

//உங்க பாஸ் எழுதுறத படிச்சா எப்படிங்க ஜாலியா இருக்க முடியும்?.... பரிதாபம்தான் படமுடியும்...:))//

நிஜம் தான் !
சே நம்மளால இப்டி ஒரு லைன் கூட எழுத முடியலியேன்னு உங்க மேல நீங்களே பரிதாபப்படத்தான் முடியும் என்னா பண்ண?

Shalini(Me The First) said...

@BOSS
//ஹாய்..கார்த்திக் எங்கே இருக்கீங்க..?
ஷாலினி வந்தாச்சு.. உதை வாங்க ரெடியா..?
//

போங்க பாஸ் இப்ப பாருங்க கார்த்தி அழறார் எனக்கு குட்டீஸ் அழுதா கஷ்டமா இருக்கும் :(

Anonymous said...

//மழை பெய்யும் போது., பஸ்ல மேல
கரண்ட் கம்பியை கட் பண்ணி போட்டு.,
அந்த பஸ்ஸுக்குள்ள நீங்க உக்காந்து
பாத்து உங்க கண்டுபிடிப்பை எங்களுக்கு
Demo பண்ணி காட்டுங்க..
//
:) :) :)
unga arive arivu

karthikkumar said...

@ ஷாலினி
///போங்க பாஸ் இப்ப பாருங்க கார்த்தி அழறார் எனக்கு குட்டீஸ் அழுதா கஷ்டமா இருக்கும் :(///

ஆமா பாட்டி என்ன பண்றது... சரி சரி பாத்து போங்க கீழ கீது விழுந்துர போறீங்க... வயசான காலத்துல சும்மா உக்காருங்கன்னா கேக்குறீங்களா....:))

கோமாளி செல்வா said...

//ஆமா பாட்டி என்ன பண்றது... சரி சரி பாத்து போங்க கீழ கீது விழுந்துர போறீங்க... வயசான காலத்துல சும்மா உக்காருங்கன்னா கேக்குறீங்களா....:))
///

அப்படின்னா உனக்கு வயசே ஆகலையா ? அது என்ன வயசான காலம் , வயசாகாத காலம் ? குழப்பமா இருக்கே .. ( VKS காரங்கன்னு சொன்னாவே குழப்பம்னு அர்த்தம் , இதுல கார்த்தி எழுதுறது மட்டும் எப்படி புரியும் ? )

கோமாளி செல்வா said...

//என் அறிவு வளர்ச்சியை தடுக்க எதாவது
மருந்து இருக்கான்னு டாக்டர்கிட்ட
கேக்கணும்..!!

//

தல அத உங்க அறிவு வளர்சிய தடுக்குற அளவு மருந்து கண்டுபிடிக்க இங்க யாருக்கும் அறிவு கிடையாது ..