சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 March 2011

பிரபலமானா.., Problem போல..!?!
எங்க ஊர்ல நாளைல இருந்து
ஒரு வாரத்துக்கு திருவிழா..!
ஊரே களைகட்டும்..!

ஆனா என்னை மட்டும்
ஒரு நிமிஷம் கூட Free-ஆ
இருக்க விட மாட்டாங்க..

மாரியம்மன் கோவில்ல பூர்ண கும்பம்.,
காளியம்மன் கோவில்ல முதல் மரியாதை.,
சௌண்டம்மன் கோவில்ல பரிவட்டம்னு
எல்லாமே உங்களுக்கு தான்னு
3 கோவில்காரங்களும் ஒரே அன்பு தொல்லை..

இது மட்டுமா..

திருவிழால 2வது நாள் தேரோட்டம்
நடக்கும்..

அப்ப நான் தான் தேர்ச் சங்கிலியை
தொட்டு கும்பிட்டு.., தேர் ஓட்டத்தை
துவக்கி வைக்கணும்..!!

இதை வேடிக்கை பார்க்க..,
சுத்து பத்து 18 பட்டியில இருந்தும்
மக்கள் வருவாங்க..

இவ்ளோ ஏன்.. போன வருஷம்
சேலம் கலெக்டரும்.,எம்.எல்.ஏ வுமே
வந்தாங்கன்னா பாருங்களேன்..!!

சரி., இதை விடுங்க..,
இது திருவிழா பிரச்சினை
சிம்பிள் மேட்டரு.. சரி பண்ணிக்கலாம்..

அட அரசியல் மேட்டரெல்லாம்
நம்மகிட்ட வருதுப்பா..

நாம என்ன ஆளுங்கட்சியா.?
எதிர்கட்சியா.? இல்ல
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி தான்
தாவறோமா..?

அரசியல் பத்தியெல்லாம் நாம எதுக்கு
பேசணும்னு ஒதுங்கி இருந்தாலும்
நம்மள விட மாட்டேங்குறாங்க..

" VAS ஆதரவு எங்களுக்கு வேணும்.,
எங்களுக்கு வேணும்னு" போன்ல
டார்ச்சர் பண்றாங்க.,

வீட்டுக்கும் வந்து..
" Atleast எங்களுக்காக வாய்ஸாவது
குடுங்கன்னு " கெஞ்சறாங்க..

( " வாய்ஸ் குடுக்க " நாங்க என்ன
டப்பிங் கம்பெனியா வெச்சு
நடத்திட்டு இருக்கோம்..?! )

ஆங்.. சொல்ல மறந்துட்டேனே..
தலைவர் கார்த்திக் கூட VKS-தலைவியை
சந்திச்சு அவர் கட்சிக்கு ஆதரவு கேட்டதா..
ஒரு ரகசிய தகவல்..

சரி.,சரி., சம பலம் பொருந்திய
ரெண்டு மொக்கை கட்சியும் ஒண்ணு சேருது
இதுல என்ன பெரிய ஆச்சரியம்..?

ம்ம்.. இப்ப நாம மேட்டர்க்கு வருவோம்..

இதன் மூலம் 7 கோடி VAS அன்பர்களுக்கும்
நான் சொல்லிக்கிறது என்னான்னா..

" நம்ம கட்சியில எந்த வித கட்டுப்பாடும்
இல்ல..!! வர்ற Election-ல உங்களுக்கு
பிடிச்ச கட்சிக்கு நீங்க ஓட்டு போடுங்க..
ஓ.கே.வா.?! "

" சிங்கம்.., சிங்கம்.. நீ துரை சிங்கம்.."
( ஒண்ணுமில்ல.., என் மொபைல்
Ring ஆகுது..!! )

" ஹலோ..!! யார் பேசறது..?
ஓ.. ஓபுவா..( ஹி., ஹி., நான் ஓபாமாவ
எப்பவும் அப்படி தான் கூப்பிடுவேன்..)

என்னாது... அடுத்த அமெரிக்க ஜனாதிபதி
Election-ல உங்களுக்கு Support பண்ணி
நான் வாய்ஸ் குடுக்கணுமா..?

உஸ்ஸப்பா.........!! "

டிஸ்கி : ஊர்ல திருவிழா..
So., அடுத்த பதிவு @ 6.4.2011.

.
.

46 Comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

எப்படிப்பா இப்படியெல்லாம் பொருமையா...

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..
அப்படி தானே..

சேலம் தேவா said...

தல... உங்க ஊர்ல இந்த மாடு பிடிக்கறது, வழுக்கு மரம் ஏறுவது மாதிரி வீரவிளையாட்டு எல்லாம் இல்லையா..? அதெல்லாம் கூட நீங்கதான் தொடங்கி வைப்பிங்களா..? :)

karthikkumar said...

நம்ம கட்சியில எந்த வித கட்டுப்பாடும்
இல்ல..!! வர்ற Election-ல உங்களுக்கு
பிடிச்ச கட்சிக்கு நீங்க ஓட்டு போடுங்க..
ஓ.கே.வா.?! "////

நீங்க இந்த கட்சிக்குதான் வோட்டு போடுங்கன்னு சொன்னாலும் யாரும் கேக்க போரதில்ல... அப்புறம் எதுக்கு இவ்ளோ வெட்டி பில்டப்...:))

karthikkumar said...

டிஸ்கி : அடுத்த பதிவு 6.4.2011.
ஊர்ல திருவிழா.. ஹி., ஹி..///

ஒன்னும் அவசரம் இல்ல.... பொறுமையாவே வாங்க...(அப்பாடா மக்கள் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க)... :))

Speed Master said...

ஹி ஹி பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்னு சொல்லுவாங்க

அரசியல் வாதிகளை மிஞ்சிட்டீங்க

karthikkumar said...

" VAS ஆதரவு எங்களுக்கு வேணும்.,
எங்களுக்கு வேணும்னு" போன்ல
டார்ச்சர் பண்றாங்க.,////

இவுங்க கட்சியவே ஒழுங்கா நடத்த முடியல... இதுல மத்த கட்சிக்கு வாய்ஸ் கொடுக்குறாங்களாம்.. சாமீ....:))

சேலம் தேவா said...

//" நம்ம கட்சியில எந்த வித கட்டுப்பாடும்
இல்ல..!! வர்ற Election-ல உங்களுக்கு
பிடிச்ச கட்சிக்கு நீங்க ஓட்டு போடுங்க..
ஓ.கே.வா.?! "//

என்ன இருந்தாலும் ரஜினி சாரும் நீங்களும் இப்டி பேசி வச்சிகிட்டு ஒரே மாதிரி சொன்னா எப்டி..?!நாங்க குழம்பறோம்ல...

HVL said...

விஜய்யே சாரி வெங்கட்டே சொல்லியாச்சு! அப்புறம் என்ன?

நீங்க சொன்னா நாங்க
ஒபாமாவுக்கு கூட ஓட்டு போட தயாரா இருக்கோம். ஆனா அவரு இங்க வந்து போட்டி போடப்போறதா சொல்லவேயில்ல. அது தான் கொஞ்சம் வருத்தம். உங்க மேல இல்ல, அவரு மேல!

கோமாளி செல்வா said...

//இதன் மூலம் 7 கோடி VAS அன்பர்களுக்கும்
நான் சொல்லிக்கிறது என்னான்னா..//

எப்பவுமே நம்ம பலத்த நீங்க குறைவாவே நீங்க வெளிய சொல்லுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. ஏன்னா உலகத்துல இருக்குற எல்லோருமே VAS தான.

(இது நம்ம VAS காரங்களுக்கு மட்டும் . ஒபாமா அமெரிக்க அதிபர் பதவிய துரந்திட்டு நம்ம கட்சில செர்ந்திக்கிறேன்னு இப்ப BBC ல நியூஸ் போயிட்டு இருக்கு )

கோமாளி செல்வா said...

//நீங்க இந்த கட்சிக்குதான் வோட்டு போடுங்கன்னு சொன்னாலும் யாரும் கேக்க போரதில்ல... அப்புறம் எதுக்கு இவ்ளோ வெட்டி பில்டப்...:))
//

ரொம்ப சரியா சொன்ன .. நாங்க இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கனு சொன்னா யாரும் போட மாட்டாங்க .. ஏன்னா நாங்க VAS காரங்க சொல்லி செய்யுறவங்க இல்ல . மனசால நினைச்சாவே போதும் .. இந்த தடவையும் ஒருத்தவங்கள நினைச்சிருக்கோம் .. கண்டிப்பா அவுங்கதான் வருவாங்க ...

samhitha said...

venkat :)
நல்லா காமெடியா இருக்கு

//அரசியல் பத்தியெல்லாம் நாம எதுக்கு
பேசணும்னு ஒதுங்கி இருந்தாலும்
நம்மள விட மாட்டேங்குறாங்க..
//
நீங்க இப்டி இருந்தா இந்தியா & அமெரிக்காவை யார் காப்பாத்துறது :(

//எங்க ஊர்ல நாளைல இருந்து
ஒரு வாரத்துக்கு திருவிழா..!
ஊரே களைகட்டும்..!
//
எல்லாம் சரி எங்களை கூப்பிடவே இல்ல :(

சரி உடனே வீட்டை பூட்டிட்டு கிளம்பாதீங்க :| :|

Lakshmi said...

ஓ, தேர்தல் நெருங்கிட்டுதோ. அடான் ஆளாளுக்கு தலையைபிச்சுண்டு பதிவு போடரீங்களோ.

Madhavan Srinivasagopalan said...

// டிஸ்கி : ஊர்ல திருவிழா..
So., அடுத்த பதிவு @ 6.4.2011. //

அப்ப கிரிக்கெட் பாயின்ட் டேபிள் அப்டேட் பண்ண மாட்டீங்களா..
பிளாகுக்கு லீவா ?

nvnkmr said...

//டிஸ்கி : ஊர்ல திருவிழா..
So., அடுத்த பதிவு @ 6.4.2011..//

apa parisu poti mudivukal yarunka solu vanka

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

" VAS ஆதரவு எங்களுக்கு வேணும்.,
எங்களுக்கு வேணும்னு" போன்ல
டார்ச்சர் பண்றாங்க.,//

நீங்க வாய்ஸ் கொடுத்தா தோத்துடும்னு எதிர்க்கட்சி காரங்கதான் உங்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவா பேச சொல்லி கூப்பிடுரான்க. இது தெரியாம

samhitha said...

//ஒன்னும் அவசரம் இல்ல.... பொறுமையாவே வாங்க...(அப்பாடா மக்கள் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க)... :))
//
aama karthik
நீங்க கமென்ட்னு போடுற மொக்கைல இருந்து மக்கள் தப்பிச்சி கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க :)

சே உண்மைய எப்டி ஒத்துகறீங்க நீங்க கிரேட் கார்த்திக் ;)

Mohamed Faaique said...

///ஊர்ல திருவிழா..
So., அடுத்த பதிவு @ 6.4.2011. ////

ஐ!!!! நமக்க்கும் திருவிழா.....

//ஆனா என்னை மட்டும்
ஒரு நிமிஷம் கூட Free-ஆ
இருக்க விட மாட்டாங்க.. ///

நகர சபை ஊளியர்’னா அப்பிடித்தாங்க.... குப்பை சேரும் போதெல்லாம் அப்ப அப்பவே சுத்தம் பண்ணிரனும்...

///மாரியம்மன் கோவில்ல பூர்ண கும்பம்.,
காளியம்மன் கோவில்ல முதல் மரியாதை.,
சௌண்டம்மன் கோவில்ல பரிவட்டம்னு
எல்லாமே உங்களுக்கு தான்னு
3 கோவில்காரங்களும் ஒரே அன்பு தொல்லை..///

இதெல்லாம் நமக்கு தெரியாதுங்க...

///அப்ப நான் தான் தேர்ச் சங்கிலியை
தொட்டு கும்பிட்டு.., தேர் ஓட்டத்தை
துவக்கி வைக்கணும்..!! //

நீங்க சங்கிலி அருத்து’ட்டு ஓடுர பார்ட்டி’னு ஊர் முழுதும் தெரியுமா?

Mohamed Faaique said...

///இதை வேடிக்கை பார்க்க..,
சுத்து பத்து 18 பட்டியில இருந்தும்
மக்கள் வருவாங்க.. ///

திருவிழா’ல குரங்கு சேட்டை நடக்குற இடத்துலயும் இது நடக்கும்

///இவ்ளோ ஏன்.. போன வருஷம்
சேலம் கலெக்டரும்.,எம்.எல்.ஏ வுமே
வந்தாங்கன்னா பாருங்களேன்..!!///

உங்கள தேடி போலீஸ் வந்ததை சொல்லவே இல்ல....

///அட அரசியல் மேட்டரெல்லாம்
நம்மகிட்ட வருதுப்பா..///

வீட்ல வேலையில்லாம குந்திடு இருந்தா, இதெல்லாம் சகஜம் தல....

Mohamed Faaique said...

///அரசியல் பத்தியெல்லாம் நாம எதுக்கு
பேசணும்னு ஒதுங்கி இருந்தாலும்
நம்மள விட மாட்டேங்குறாங்க..///

ஆமா!! உங்கள கூட்டி போய், போட்டோ எடுத்து, நரிக் குரவர்கள் ஆதரவு எங்கள் பக்கம்’னு போஸ்டர் அடிக்கிராங்க..அப்டிதானெ!!!!

Mohamed Faaique said...

///" VAS ஆதரவு எங்களுக்கு வேணும்.,
எங்களுக்கு வேணும்னு" போன்ல
டார்ச்சர் பண்றாங்க., //
VASன்னா, vote அளிப்போர் சங்கம்’னு யார்ரோ தவறி சொல்லி இருப்பாங்க....

///வீட்டுக்கும் வந்து..
" Atleast எங்களுக்காக வாய்ஸாவது
குடுங்கன்னு " கெஞ்சறாங்க..///

வாங்கின பணத்துக்கு இது கூட பண்ணா விட்டால் எப்படி தல?

///இதன் மூலம் 7 கோடி VAS அன்பர்களுக்கும்
நான் சொல்லிக்கிறது என்னான்னா..///
நீங்களே தெருக் கோடில தனியா குந்திட்டு இருக்கீங்க......

///" நம்ம கட்சியில எந்த வித கட்டுப்பாடும்
இல்ல..!! வர்ற Election-ல உங்களுக்கு
பிடிச்ச கட்சிக்கு நீங்க ஓட்டு போடுங்க..
ஓ.கே.வா.?! "///

நீங்க இதை சொல்லாவிடில் என்ன பண்ணியிருப்பாங்க?

Mohamed Faaique said...

கிடைக்குற கொஞ்ச நேரமும் உங்கள கும்முறதுலயே போயிருது... இப்படியே போனா, நானும் ஒரு பதிவர்!!!! என்கிறது மறந்துரும்.. சோ, உங்க விடுமுறையை வர வேற்கிறோம்.
ஒரு ச்சின்ன அட்வைஸ்..
தேங்காய் பொருக்கும் போது, போன எப்பவும் போல ஏரியா பிச்சைக் காரர்களோடு சண்டை பிடிக்காம இருக்கனும்...

திருவிழா’ல இருக்குற பீப்பீ’யெல்லம் வாங்கிட்டு வந்து அடுத்தவங்க தூக்கத்தைகெடுக்க கூடாது.

ஒரு வாரம் என்ன? ஒரு வாரம்.. ஒரு மாதம் ஜாம் ஜாம்’னு திருவிழா நடத்திட்டு மெதுவா வாங்க சார்.... (இதுல சத்தியமா உல் குத்து இருக்கு...)

Mohamed Faaique said...

உலகக் கோப்பை பரிசுப் போட்டி’னு அறிவிச்சுட்டு, இப்போ சமயம் பாத்து, escape ஆகுரதா, ஒரு பேச்சு அடி படுதே சார்.... உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேர்தல் பிரச்சாரத்துக்கு போறீங்க அவ்வளவுதானே? அத சொல்றதுக்கு ஏன் இவ்வளவு கூச்சம்...? ஓ நீங்க கார்த்திக் கட்சிக்காக பிரச்சாரம் பண்ண போறீங்கள்ல? சரி சரி நான் எதையும் வெளிய சொல்லலீங்க...!

Chitra said...

ha,ha,ha,ha,ha... very funny!

வெங்கட் said...

@ கவிதை வீதி.,

// எப்படிப்பா இப்படியெல்லாம் பெருமையா...
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..
அப்படி தானே.. //

நீங்க நம்ம பிளாக்குக்கு புதுசு..

நாங்கல்லாம் கொஞ்சம் விட்டா.,
ஓபாமாவையே பக்கத்து கடையில
போயி ரெண்டு " டீ " வாங்கிட்டு வர
சொல்லுவோம்..

எங்க பிளாக்ல இதெல்லாம் சகஜமப்பா..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//" சிங்கம்.., சிங்கம்.. நீ துரை சிங்கம்.."
( ஒண்ணுமில்ல.., என் மொபைல்
Ring ஆகுது..!! )//


சிங்கம், சிங்கம் ஈஸ்வர சிங்கம் அப்படின்னு ஒரு பாட்டு இருக்கு, கேள்விப்பட்டு இருக்கேன், இது புதுசா இருக்கு?
ஒரு வேளை VAS எடுத்துக் கையோட பொட்டிக்குள்ள போயிட்ட ஒரு சினமாவுல வர பாட்டா இது?

ராஜி said...

வர வர ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கீங்க. இதெல்லாம் நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் ஆமாம். எங்களால ஓரளவுக்குதான் இந்த இம்சையெல்லாம் தாங்க முடியும்.

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// தல... உங்க ஊர்ல இந்த மாடு
பிடிக்கறது, வழுக்கு மரம் ஏறுவது
மாதிரி வீரவிளையாட்டு எல்லாம்
இல்லையா..? அதெல்லாம் கூட
நீங்கதான் தொடங்கி வைப்பிங்களா..? :) //

ஆமா.. ஆனா.. என்னை கலந்துக்க
கூடாதுன்னு சொல்லி தடுத்துடுவாங்க..

பின்ன தொடர்ந்து 10 வருஷம் நானே
ஜெயிச்சிட்டு இருக்கேன்.. மத்தவங்களுக்கும்
ஒரு Chance தரணும்ல.. அதுக்கு தான்..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// நீங்க இந்த கட்சிக்குதான் வோட்டு
போடுங்கன்னு சொன்னாலும் யாரும்
கேக்க போரதில்ல... அப்புறம் எதுக்கு
இவ்ளோ வெட்டி பில்டப்...:)) //

நாங்க என்ன VKS-ஆ.? சொல்ற பேச்சை
கேக்காம இருக்க..

நாங்க செயற்குழுல ஒரு முடிவு
எடுத்து ஒரு Announcement பண்ணினா
போதும்... 7 கோடி Votes-ம் அப்படியே
ஒரே கட்சிக்கு விழும் தெரியும்ல..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// ஒன்னும் அவசரம் இல்ல.
பொறுமையாவே வாங்க...(அப்பாடா
மக்கள் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க)... :))//

மக்கள் நிம்மதியா இருப்பாங்களா.?
இல்ல நீங்க நிம்மதியா இருப்பீங்களா..?

ஷாலினி + ஷம்ஹிதா உங்கள ரவுண்ட்
கட்டி அடிக்கறாங்க.. அதை தாங்க முடியல..
அதுக்கு இப்படி ஒரு பில்டபா..?!!

வெங்கட் said...

@ Speed Master.,

// அரசியல்வாதிகளை மிஞ்சிட்டீங்க //

எந்த அரசியல்வாதியை நான்
மிஞ்சிட்டேன்..?

Evening 5 மணிக்கு என்கிட்ட Training
எடுத்துக்க எல்லா அரசியல்வாதியும்
வருவாங்க.. அப்ப வந்து பாத்து
கரெக்ட்டா சொல்லுங்க..

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// இவுங்க கட்சியவே ஒழுங்கா நடத்த
முடியல. இதுல மத்த கட்சிக்கு வாய்ஸ்
கொடுக்குறாங்களாம்.. சாமீ....:))//

ரொம்ப நல்ல கேள்வி., ஆனா
ஆள் மாத்தி கேட்டுடீங்க..

போங்க.. போயி உங்க தலைவியை
தேடி பிடிச்சி இந்த கேள்வியை கேளுங்க..!!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// என்ன இருந்தாலும் ரஜினி சாரும்
நீங்களும் இப்டி பேசி வச்சிகிட்டு
ஒரே மாதிரி சொன்னா எப்டி..?! //

ஆஹா.. இந்த மேட்டர் எப்படி லீக் ஆச்சு..?
ரொம்ப ரகசியாமாத்தானே வெச்சிருந்தோம்..?!

வெங்கட் said...

@ HVL.,

// நீங்க சொன்னா நாங்க ஒபாமாவுக்கு கூட
ஓட்டு போட தயாரா இருக்கோம். ஆனா
அவரு இங்க வந்து போட்டி போடப்போறதா
சொல்லவேயில்ல. அது தான் கொஞ்சம்
வருத்தம். உங்க மேல இல்ல, அவரு மேல! //

வருத்தப்படாதீங்க.. கூடிய சீக்கிரம்
2014-ல எங்க பஞ்சாயத்து தலைவர்
Post-க்கு அவருதான் நிக்க போறாரு..

அப்ப உங்க பொன்னான வாக்குகளை
அவருக்கு போடுங்க..

கோமாளி செல்வா said...

///போங்க.. போயி உங்க தலைவியை
தேடி பிடிச்சி இந்த கேள்வியை கேளுங்க..!///

இன்னிக்கு காலைல கார்த்தி எனக்குப் போன் பண்ணிருந்தான்.

கார்த்தி : செல்வா , நான் எந்தக் கட்சில இருக்கேன் ..

நான் : அது எனக்கு எப்படித் தெரியும் ..

கார்த்தி : அது இல்ல இந்த கோகுலத்தில் சூரியன்ல கூட இருக்குமே ..

நான் : அங்க ஒரு கட்சிதான் இருக்கு .. The Great VAS !

கார்த்தி : இல்ல , இன்னொன்னு இருக்கு , அதோட பேர் மறந்திட்டேன் .. அதான் உனக்குத் தெரியுமான்னு கேட்டேன் ..

நான் : இன்னொரு கட்சிலாம் கிடையாது , சும்மா ஒரு ஆறு பேர் சேர்ந்த்திட்டு VAS கலாய்க்கிறோம்னு சொல்லிட்டு மேல போடுற போஸ்ட் காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டு ஓடிருவாங்க ... அவுங்கள சொல்லுற போல ..

கார்த்தி : ஆமா ஆமா அவுங்கதான் .. நான் கூட அந்தக் கட்சிலதான இருக்கேன் ..

நான் : அப்படியா ? சரி அதுக்கு இப்ப என்ன ?

கார்த்தி : அதுக்கு ஒண்ணும் இல்ல .. நான் எதுக்கு அந்த கட்சில இருக்கேன் .. ?

நான் : அது எனக்கு எப்படித் தெரியும் ?

கார்த்தி : சரி .. நான் போய் வழக்கம் போல எதாச்சும் ஒளரிட்டு வரேன் ..

karthikkumar said...

@ சம்ஹிதா
///aama karthik
நீங்க கமென்ட்னு போடுற மொக்கைல இருந்து மக்கள் தப்பிச்சி கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க :) ///

ஆமா, ஆமா நீங்க அப்படியே சிலப்பதிகாரம், குண்டலகேசி கலந்து காவியம் எழுதி வெச்சிருக்கீங்க பாருங்க.. நான் வந்து மொக்கை கமென்ட் போடறேன். சொல்றீங்க..:)) இந்த ப்ளாகுக்கு ரீடர்ஸ் வர்றாங்கன்னா அது VKS இன் கமெண்ட்ஸ் படிக்கதான்... அவர்தான் தன்னோட பதிவ படிக்க வந்திருக்காங்கன்னு தப்பா நெனச்சு எப்ப பாத்தாலும் ஃபீலா விட்ராருன்னா நீங்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அவர சின்னாபின்னமாக்கிருவீங்க போல...:))


///சே உண்மைய எப்டி ஒத்துகறீங்க நீங்க கிரேட் கார்த்திக் ;)///

உண்மைதான்.. இவர் எழுதுற பதிவுக்கு கமென்ட் போட்ற நான் மட்டும் இல்ல நீங்களும்தான்....:))

karthikkumar said...

@ வெங்கட்

///ஷாலினி + ஷம்ஹிதா உங்கள ரவுண்ட்
கட்டி அடிக்கறாங்க.. அதை தாங்க முடியல..
அதுக்கு இப்படி ஒரு பில்டபா..?!!///

செல்வா ஆர்வமாக VKS இன் கமெண்ட்ஸ்-ஐ படித்து கொண்டிருக்கிறார். அப்போது ஷாலினி, சம்ஹிதா, வெங்கட் வர்றாங்க.. ஷாலினி VKS இன் கமெண்ட்ஸ்-ஐ பார்த்ததும் மிரண்டு போய் வேறு வலைத்தளம் போறாங்க.. அப்போது

செல்வா : ஏங்க அந்த கமெண்ட்ஸ் போங்க VKS எவ்ளோ சூப்பரா கமென்ட் போட்ருக்காங்க பாருங்க.

ஷாலினி : முடியாது.

செல்வா : ஏங்க ப்ளீஸ் அந்த கமெண்ட்ஸ் போங்க.

ஷாலினி : வேணும்னா நான் கமென்ட் போடுவேன் அப்போ போய் பாரு.

செல்வா : ம்க்கும். நீங்க போடறதெல்லாம் ஒரு கமென்ட் அதை நான் போய் பாக்கணுமா. வெளில பேசிக்கிறாங்க உங்களுக்கு கமெண்ட்ஸ் போடவே தெரியலைன்னு.. உங்களுக்கு கூட பரவாயில்ல. சம்ஹிதா எபவுமே ஓவரா கூவுராங்கலாம். உங்கள சொல்லி தப்பில்ல உங்களுக்கெல்லாம் சம்பளம் கொடுத்து உருப்படியா ஒரு கமென்ட் கூட வாங்க தெரியாத நம்ம தலைவர் வெங்கட் இருக்காரே அவர சொல்லணும்.

( இதை கேட்ட ஷாலினி & சம்ஹிதா அழுகிறார்கள் ) உடனே வெங்கட் செல்வாவிடம்,

வெங்கட் : செல்வா, எதுக்கு ரெண்டு பேரும் அழுறாங்க என்ன சொன்ன?

செல்வா : இல்ல தல , வெளில பேசிக்கிரதைத்தான் சொன்னேன்.

வெங்கட் : உன்ன பத்தி எனக்கு தெரியும். நீ எப்பவுமே வெளில பேசுறத கரெக்டாவே சொல்லமாட்ட.

சம்ஹிதா & ஷாலினி : வெளில அப்படி என்ன பேசிக்கிறாங்க?

வெங்கட் : அது ஒண்ணுமில்ல. நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே வாங்குற சம்பளத்த விட அதிகமாத்தான் பேசுவீங்களாமே!!!!... அதைதான் பேசிக்கிறாங்க..:))

samhitha said...

c karthik
//VKS இன் கமெண்ட்ஸ் படிக்கதான்...//

VKS எப்போவுமே கோப்பி அடிச்சி எழுதுற வழக்கத்த விடமாட்டேங்கறீங்க..[copycat] ;)

மொத்த போசஸ்டையும் கோப்பி பண்ணி உங்க ப்ளாக்ல யூஸ் பண்றது இல்லேன லைட்டா modify பண்ணி அதையே கமெண்ட் போடுறது.. ;)
இத படிக்க ஒரு கூட்டம் வருதா?

//நீங்க அப்படியே சிலப்பதிகாரம், குண்டலகேசி கலந்து காவியம் எழுதி வெச்சிருக்கீங்க பாருங்க.. //

no no ஏற்கனவே இருக்கறத நாங்க திரும்ப எழுத மாட்டோம் !! bcoz u r t copycat :P

அப்புறம்,ரெண்டையும் கலந்து எழுதுன காவியம் வராது!! கண்றாவியா வரும்!! :D


//நீங்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி அவர சின்னாபின்னமாக்கிருவீங்க போல...:))//
cha cha அதெல்லாம் உங்கள மாதிரி காமெடி பீஸ்(கைப்புள்ள) கிட்ட தான் ;) [jus kidding]

வெங்கட் madhiri பிரபல பதிவர் கிட்ட இல்ல :D

##venkat
//அப்ப உங்க பொன்னான வாக்குகளை
அவருக்கு போடுங்க..//
உங்க ஊரானு கேட்டுட்டு சொல்லுங்க!!
அப்புறம் கள்ள ஒட்டு போட வெங்கட் அழைக்கிறார்னு கிளப்பிட போறாங்க ஹா ஹா

//VKS எவ்ளோ சூப்பரா கமென்ட் போட்ருக்காங்க பாருங்க.//

செல்வா: இதுக்கு நான் குட்டிசுவர்ல போய் தலைய முட்டிக்குவேன்

கார்த்திக்: :( எனக்காக ஒரு பொய் கூட சொல்ல மாட்டேங்குறானே!!!

MV :நானும் கொஞ்சம் திருந்த பார்க்கணும்!!VKS ல சேர்ந்து பொய் சொல்ல பழகிட்டேன் :(

கோமாளி செல்வா said...

//செல்வா : ஏங்க அந்த கமெண்ட்ஸ் போங்க VKS எவ்ளோ சூப்பரா கமென்ட் போட்ருக்காங்க பாருங்க//

அப்படி சொன்னாவச்சும் அவங்க அந்த கமெண்ட் பாப்பாங்கலான்னு பார்த்தேன் ..
ஆனா VAS எப்பவுமே அறிவாளிகளின் சங்கமம் .. அதனால அவுங்க பூமி சுத்துரத நிறுத்திருச்சு அப்படின்னு சொன்னா கூட நம்புவாங்க , ஆனா VKS காரங்க நல்ல கமெண்ட் போட்டிருக்கறதா சொன்னா நம்ப மாட்டாங்க .. ஏன்னா அது நடக்குறதுக்கு 0.0000000000000000000000000000001 சதவிகிதம் கூட வாய்ப்பு இல்ல :-)

வெங்கட் said...

@ To All.,

சாரி மக்களே.. திருவிழா பிஸில
Comments Reply போட முடியல..

இன்னிக்கு முடியுமான்னு பார்க்குறேன்..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// நீங்க இப்டி இருந்தா இந்தியா &
அமெரிக்காவை யார் காப்பாத்துறது //

அதுல என்ன சந்தேகம்..?

நான் எப்ப வருவேன்.,
எப்படி வருவேன்னு தெரியாது..- ஆனா
வர வேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்.

ஹா., ஹா., ஹா..!!

வெங்கட் said...

@ செல்வா.,

// எப்பவுமே நம்ம பலத்த நீங்க குறைவாவே
நீங்க வெளிய சொல்லுறது எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு.. ஏன்னா உலகத்துல இருக்குற
எல்லோருமே VAS தான. //

ஆமா செல்வா.. ஆனா இது தமிழ்நாடு
லெவல்ல நடக்குற சட்டசபை எலக்ஷன்..
அதனால தான் 7 கோடி பேர்னு சொன்னேன்..

வெங்கட் said...

@ மாதவன் & வினு.,

// அப்ப கிரிக்கெட் பாயின்ட் டேபிள் அப்டேட்
பண்ண மாட்டீங்களா.,பிளாகுக்கு லீவா ?. //

// apa parisu poti mudivukal yarunka solu vanka //

அதெல்லாம் கரெக்ட்டா நடக்கும்ங்க..
அடுத்த பதிவு போறது மட்டும் தான் 6.4.2011

Mohamed Faaique said...

///அடுத்த பதிவு போறது மட்டும் தான் 6.4.2011////

பதிவு’னு (நீங்க மட்டும் சொல்லிக் கொள்றீங்க...) போடுரதே 4 வரி. அதுக்கு இவ்ளோ பில்ட் அப்’ஆ?

samhitha said...

faaique
// போடுரதே 4 வரி. அதுக்கு இவ்ளோ பில்ட் அப்’ஆ?//
நாலடியார் 4 அடி தான்
திருக்குறள் 2 அடி தான்

ஆனா அது எவ்ளோ பெரிய கருத்தை எல்லாம் சொல்லுது..

அது மாதிரி வெங்கட் போடுற போஸ்ட் சின்னதா இருந்தாலும் அதுல பெரிய கருத்து இருக்கு!! நல்ல ஆழமா படிங்க :)

aru(su)vai-raj said...

போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க