சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 March 2011

பொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க..!!கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife
சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர்
சொல்ற பேச்சை கேளுங்க..

கல்யாணமும் ஆகல.. லவ்வரும்
இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற
பேச்சை கேளுங்க..

ஏன்னா..
பொண்ணுங்க எது சொன்னாலும்.,
செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!

( அட., இந்த பொண்ணு ' நியூட்டன் '
கணக்கா இன்னாமா யோசிக்குது..?!! )

நான் சொல்லலே.. பொண்ணுங்க
தொலை நோக்கு பார்வை உடைய
சிறந்த சிந்தனைவாதிகள்னு..

அதனால தான் சொல்றேன்..
பொண்ணுங்க சொல்ற பேச்சை
நாமெல்லாம் கேக்கணும்னு..

" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம்
பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..

அட நானும் அப்படி பிடிவாதமா
இருந்தவன் தான். இந்த SMS வர்ற
வரைக்கும்..

என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச
அந்த SMS இதோ...

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க
கிளம்பும் போது அவருக்கு கல்யாணம்
ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன
சொல்லி இருப்பாங்க..?!!

" எங்கே போறீங்க..? "

" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "

" எப்போ வருவீங்க..? "

" எங்கே தங்குவீங்க..? "

" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "

" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" உங்களால முடியுமா.? "

" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "

" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "

" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "

" நானும் உங்க கூட வரட்டுமா.? "

கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்..
நான் எங்கேயும் போகல..!! "

இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு
ஒரு Wife இருந்திருந்து., அவரும்
Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை
கேட்டிருந்தா.. இன்னிக்கு..

1. அமெரிக்கா இப்படி எல்லோரையும்
நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி
போயிருக்காது.

3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..

இதை எல்லாம் விட முக்கியமா..

5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ
& Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!

ஹி., ஹி., ஹி..!!

என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!


ஆங்.. மறந்துட்டேனே..!!

" Wish You Happy Women's Day..!! "

டிஸ்கி : போன வருஷ மகளீர் தின Spl பதிவு
" ஆண்கள் Vs பெண்கள்..! " படிக்க..
.
.

43 Comments:

Anonymous said...

ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே..

இந்தப் பதிவ உங்க வீட்ல படிச்சிட்டாங்களா??

எஸ்.கே said...

கேக்கனும்னு சொல்றீங்களா? கேக்க வேண்டாம்னு சொல்றீங்களா?

வேடந்தாங்கல் - கருன் said...

அனைத்து மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற
பேச்சை கேளுங்க..//

அதுகாபுரம் அந்த பொண்ணுங்க கிட்ட நீங்க அடி வாங்கினத சொல்லவே இல்லை?

வெங்கட் said...

@ இந்திரா.,

// ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே.. //

ஹி., ஹி., ஹி..!!
நான் தான் சொன்னேன்ல.. பொண்ணுங்க
ரொம்ப புத்திசாலிங்கன்னு..
:-)

HVL said...

சரிங்க! அப்படியே செய்யறோம்.

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// கேக்கனும்னு சொல்றீங்களா?
கேக்க வேண்டாம்னு சொல்றீங்களா? //

சே..!! இந்த பசங்களே இப்படிதான்.!!
எதுக்கெடுத்தாலும் குழப்பிகிட்டு..

சரி., சரி., பக்கத்துல எதாவது
பொண்ணு இருந்தா கூப்பிட்டு
ஐடியா கேளுங்க.. டவுட் Clear ஆகிடும்..!!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அதுகாபுரம் அந்த பொண்ணுங்க கிட்ட
நீங்க அடி வாங்கினத சொல்லவே இல்லை? //

ஆமா பக்கத்து வீட்ல UKG படிக்கிற
என் தம்பி பொண்ணு இருக்கு..!!

எதிர் வீட்ல 2nd Std படிக்கிற
என் Friend பொண்ணு இருக்கு..!!

ஏன் ரமேஷூ.., இவங்க கிட்ட
நான் தினமும் அடி வாங்கறதை
பத்தியெல்லாம் பதிவுல சொல்லணுமா..?!!

Speed Master said...

ஹி ஹி குசும்பு

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில்ல இருந்தௌ எனக்கு கிடைச்ச நீதி - வெங்கட் பொண்ணுங்க பேச்சைக்கேட்பவர்

அனு said...

கொலம்பஸ் wifeக்கு தமிழ் தெரியாது.. இது கூட தெரியாம, வந்த SMSஐ அப்படியே யோசிக்காம போடுறிங்க.. போடுறதுக்கு முன்னாடி யாராவது பொண்ணு கிட்ட கேட்டிருக்கலாம்ல??

//இவங்க கிட்ட நான் தினமும் அடி வாங்கறதை பத்தியெல்லாம் பதிவுல சொல்லணுமா..?!//

சின்னவங்க பெரியவங்கன்னு பாரபட்சமில்லாம எல்லோர் கிட்டயும் வாங்கினாலும், அதை மறைக்காத உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. :)

சி.பி.செந்தில்குமார் said...

>>>>கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife
சொல்ற பேச்சை கேளுங்க..,

வெங்கட்கிட்டே எனக்கு பிடிச்ச அம்சமே அவரு ஒரு மனைவிப்பிரியன்கறதை ஒத்துக்குவாரு.. (பொண்டாட்டி தாசன்கறதை டீசண்ட்டா போட்டிருக்கேன்.. ஹி ஹி )

VELU.G said...

நல்ல அறிவுரைங்க

உடனே நீங்க சொன்ன மாதிரியே நடக்கனும்னு நிறைய பொன்னுங்ககிட்ட நின்னு அவங்க பேச்சைக் கேட்க ஆரம்பிச்சு எக்குத்தப்பாப் போச்சுங்க

சி.பி.செந்தில்குமார் said...

இந்திரா said...

ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே..

இந்தப் பதிவ உங்க வீட்ல படிச்சிட்டாங்களா??

இந்திராவுக்கு வெங்கட் மேட்டரே தெரியாது போல.. அண்ணன் வெங்கட் பதிவை ரெடி பண்ணிட்டு அம்மா,அப்பா,தாத்தா, பாட்டி, மனைவி, சித்தப்பா ,சித்தி இப்படி எல்லார் கிட்டேயும் காட்டி அப்ரூவல் வாங்கிக்குவாரு. அதுக்கப்புறம் தான் பதிவே போடுவாரு.. ஏன்னா அவர் பிளாக்கை அவர் குடும்பமே படிக்குதாம்.. ( நம்ம பிளாக்கை..?)

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா வெங்கட் ஏமாந்தார்... அவரைப்பாராட்டற கமெண்ட்ல நைஸா அண்ணன்னு குப்பிட்டதை அண்ணன் கவனிக்கலை.. அப்ப அவரை விட நான் யூத்த்ன்னு ஒத்துக்கிறாரோ..

royal ranger said...

@ வெங்கட்

கலக்குரிங்க பாஸ்

samhitha said...

venkat
வாவ் அடுத்த போஸ்ட்!! :)

உங்க போஸ்ட் படிச்சேன்!! :|

சத்தியமா எனக்கு நீங்க என்ன சொல்ல வரீங்கனு புரியல :| !!

புகழ்றீங்களா, இகழ்றீங்களா !!

//என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!
( ஹி., ஹி., ஹி..!! )
//

ஒஹ் உங்களுக்கே டவுட்டா???
அப்போ நீங்க தப்பா தான் பேசுறீங்க , திருத்திகோங்க!! ;)

பி.கு--கொஞ்சம் தெளிவாகி பின் அடுத்த போஸ்ட் எழுதவும் :(

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லோரும் வஞ்ச புகழ்ச்சின்னு சொல்லுறீங்க ...

வெங்கட் இந்த பதிவு கல்யாணம் ஆனா ஆண்களுக்குன்னு போட்டு இருக்கணும் ...

அப்போ தானே நம்ம கஷ்ட்டம் தெரியும் ..டெய்லி எத்தனை கேள்விக்கு பதில் சொல்லுரோம்ன்னு ஹி .ஹி

Mohamed Faaique said...

நீங்க பொண்டாட்டி பேச்சைக் கேக்குரத எப்படியெல்லாம் சமாளிக்க பாக்குரீங்க பாஸ்.

Lakshmi said...

இதுல நீங்க எந்தபக்கம்? சொல்லவே இல்லியே.உத்தரவு கேக்கனுமோ?

மாணவன் said...

ஓகே ரைட்டு கேட்டுடுவோம்... :))

Madhavan Srinivasagopalan said...

// ஆங்.. மறந்துட்டேனே..!!
" Wish You Happy Women's Day..!! " //

சொல்லுறதலாம் சொல்லிட்டு.. இது வேறையா ?
நடத்துங்க நடத்துங்க..

ராஜி said...

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற
பேச்சை கேளுங்க..//
....................
இது கொஞ்சம் over ஆ தெரியலை, அம்மா, தங்கச்சி, மனைவி, மகள் லாம், O.K. இதென்ன எதிர்வீடு, பக்கத்து வீடுனு கோர்த்து விடுறீங்க‌, ஏற்கனவே ரமேசு ஒரு நாளைக்கு நூறு பேர்கிட்ட செருப்படி வாங்குவாரு இனிமேல் பாருங்க அவன் நிலைமையை.

Chitra said...

கொலம்பஸ் wifeக்கு தமிழ் தெரியாது.. இது கூட தெரியாம, வந்த SMSஐ அப்படியே யோசிக்காம போடுறிங்க.. போடுறதுக்கு முன்னாடி யாராவது பொண்ணு கிட்ட கேட்டிருக்கலாம்ல??


....ha,ha,ha,ha,ha,ha,....

கும்மி said...

இந்த ஜோக்கோட ரெண்டாவது பார்ட் விட்டுட்டீங்களே தல! அதான், பொண்ணு அலுவலக வேலையா வெளியூர் போகும்போது கணவன் கேட்குற கேள்விகள். அடுத்தப் பதிவா வருமா அது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////கல்யாணமும் ஆகல.. லவ்வரும்
இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு.,
பக்கத்து வீட்டு பொண்ணு..
இப்படி எதாவது ஒரு பொண்ணு
இருக்கும்ல.. அவங்க சொல்ற
பேச்சை கேளுங்க..///////

யோவ் இப்படியெல்லாம் சொல்லிசிரிப்பு போலீச ஏத்தி விடுறது நீங்கதானா? ஏன் இந்த கொலவெறி? பாவம் சிரிப்பு போலீசு, எத்தன எடத்துல தான் அடிவாங்குறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife
சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர்
சொல்ற பேச்சை கேளுங்க../////////

ஏன் கால்லேயே விழச் சொல்லிடுங்களேன்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நான் சொல்லலே.. பொண்ணுங்க தொலை நோக்கு பார்வை உடைய சிறந்த சிந்தனைவாதிகள்னு..//////

இப்போ எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச
அந்த SMS இதோ...///////

உங்க அறிவுக்கண்ணு என்ன புதுசா கட்டுன ஜவுளிக்கடையா அந்த SMS வந்து தொறந்து வைக்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி : போன வருஷ மகளீர் தின Spl பதிவு
" ஆண்கள் Vs பெண்கள்..! " படிக்க.. ./////////

இந்த லட்சணத்துல இதுக்கு பழைய பதிவோட லிங்கு வேற..... மொதல்ல இந்த மாதிரி இத்துப்போன SMS களை உங்களுக்குன்னு தேடிப்புடிச்சி அனுப்புற ஆளுகள நாடுகடத்தனும்யா... எனக்கென்னமோ இது சிரிப்பு போலீசோட சதியா இருக்குமோன்னு டவுட்டு வருது.....!

வெங்கட் said...

@ சி.பி.,

// டைட்டில்ல இருந்து எனக்கு கிடைச்ச நீதி
- வெங்கட் பொண்ணுங்க பேச்சைக்கேட்பவர் //

வேற ஒண்ணும் இல்ல..,

இவங்க வீட்டுக்காரம்மா துணி துவைக்க
சொன்னப்ப " அதெல்லாம் முடியாதுன்னு "
சொல்லிட்டு பாத்திரம் மட்டும் கழுவிட்டு
வந்து இங்கே கமெண்ட் போடறாராம்..!!

வெங்கட் said...

@ அனு.,

// கொலம்பஸ் wifeக்கு தமிழ் தெரியாது..
இது கூட தெரியாம, வந்த SMSஐ அப்படியே
யோசிக்காம போடுறிங்க.. //

36 உலக மொழிகள் தெரிஞ்ச எனக்கு
இந்த சின்ன விஷயம் தெரியாதா..?

English பதிவா போட்டா.. அப்புறம்
உங்க வீட்டுக்காரர் வந்து அதை படிச்சு
அர்த்தம் சொல்ற வரைக்கும்
கமெண்ட் போட நீங்க Wait பண்ணனுமே..

அதுக்கு தான் தமிழ்ல Translate பண்ணி
போட்டேன்..

// சின்னவங்க பெரியவங்கன்னு பாரபட்சமில்லாம
எல்லோர் கிட்டயும் வாங்கினாலும், அதை
மறைக்காத உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.. :) //

நான் என்ன பண்றது..? வீதியில நடந்து
போகும் போது கூட சின்னவங்க,
பெரியவங்கன்னு யார் என்னை பார்த்தாலும்
எதாவது அன்பு பரிசு குடுத்திட்டே இருக்காங்க..
நான் வாங்கிட்டே இருக்கேன்..

அதை எதுக்கு மறைக்கணும்.?!

வெங்கட் said...

@ வேலு.,

// உடனே நீங்க சொன்ன மாதிரியே
நடக்கனும்னு நிறைய பொன்னுங்ககிட்ட
நின்னு அவங்க பேச்சைக் கேட்க ஆரம்பிச்சு
எக்குத்தப்பாப் போச்சுங்க //

பொண்ணுங்க சொல்ற பேச்சை
கேளுங்கன்னு சொன்னா..

நீங்க போயி... அவங்க என்ன
பேசறாங்கன்னு ஒட்டு கேட்டுட்டு
வந்திருக்கீங்க..

உதைக்காம விட்டாங்களேன்னு
சந்தோஷப்ப்டுங்க..

வெங்கட் said...

@ சி.பி.,

// நைஸா அண்ணன்னு குப்பிட்டதை
அண்ணன் கவனிக்கலை.. அப்ப அவரை
விட நான் யூத்த்ன்னு ஒத்துக்கிறாரோ.. //

அதெல்லாம் இருக்கட்டும் சிபி தாத்தா..

உங்க அறுபதாம் கல்யாணம்
நடக்க இருக்கறது ஈரோட்லயா.?
சென்னிமலையிலயா.?

வெங்கட் said...

@ இம்சை பாபு.,

// வெங்கட் இந்த பதிவு கல்யாணம்
ஆனா ஆண்களுக்குன்னு போட்டு
இருக்கணும் ... //

ஒரு வேளை நான் இப்படி போட்டிருந்தா..
என் Wife என்னை பாத்து...

" ஏன் இப்படி போட்டீங்க..? "

" யாரை கேட்டு போட்டீங்க..? "

" அவ்ளோ தைரியமா உங்களுக்கு.? "

" என்னை ஏன் கேக்கலை.? "

" யார் இப்படி உங்களை போட சொன்னது.? "

" உங்களுக்கே இப்படி தோணிச்சா..? "

" பூரி தெரியுமா உங்களுக்கு..? "

" பூரிகட்டைன்னா என்ன தெரியுமா உங்களுக்கு..? "

நான் : உஸ்ஸப்பா... இதுக்கு நான்
ஆணியே பிடுங்கி இருக்கலாம்..!!

வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க பொண்டாட்டி பேச்சைக் கேக்குரத
எப்படியெல்லாம் சமாளிக்க பாக்குரீங்க பாஸ். //

யாரை.? யாரை பாத்து..
என்னா கேள்வி கேட்டீங்க..?
நாங்கல்லாம் தன்மானச் சிங்கம்ல..

வீட்ல எப்பவும் நம்ம ஆட்சிதான்..

One Minute Pls..

இந்த கமெண்ட்டை போடலாமான்னு
என் Wife-கிட்ட சின்னதா ஒரு Permission
வாங்கிக்கிறேன்.. ஹி., ஹி.,ஹி..!!

வெங்கட் said...

@ ராஜி.,

// ஏற்கனவே ரமேசு ஒரு நாளைக்கு
நூறு பேர்கிட்ட செருப்படி வாங்குவாரு //

அப்படியே கிட்ட இருந்து பாத்த மாதிரி
சொல்றீங்க.. ஒருவேளை நீங்க தான்
அந்த லேடீஸ் ஹாஸ்டல் வார்டனா.?!!

ஹி., ஹி., ஹி..!!

ஆமா.. இங்கே ரமேஷு., ரமேஷுன்னு
ஒரு மானஸ்தன் இருந்தாரே அவரை
எங்கே காணோம்..?!!

( Mind Voice.. )

" அவர் இந்நேரம் எந்த பொண்ணுகிட்ட
அடி வாங்கிட்டு இருக்காரோ..?!! "

வெங்கட் said...

@ கும்மி.,

// இந்த ஜோக்கோட ரெண்டாவது பார்ட்
விட்டுட்டீங்களே தல! அதான், பொண்ணு
அலுவலக வேலையா வெளியூர் போகும்போது
கணவன் கேட்குற கேள்விகள். அடுத்தப்
பதிவா வருமா அது? //

உஷ்.!! சத்தம் போட்டு பேசாதீங்க..!!

அந்த SMS-ஐ எனக்கு நைசா Forward
பண்ணிவிடுங்க.. நானும் சொந்தமா
யோசிச்ச மாதிரியே பில்டப் குடுத்து
ஒரு பதிவா போட்டுடறேன்..!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// சத்தியமா எனக்கு நீங்க என்ன
சொல்ல வரீங்கனு புரியல :| !!
புகழ்றீங்களா, இகழ்றீங்களா !! //

ஹி., ஹி., ஹி..!!

போன மகளிர் தின பதிவு....
இந்த மகளிர் தின பதிவு....

ரெண்டையும் கூட்டி கழிச்சி பாருங்க..
கணக்கு சரியா வரும்..!!

// ஒஹ் உங்களுக்கே டவுட்டா???
அப்போ நீங்க தப்பா தான் பேசுறீங்க,
திருத்திகோங்க!! ;) //

// பொண்ணுங்க எது சொன்னாலும்.,
செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!! //

- தப்பா..?

// பொண்ணுங்க தொலை நோக்கு பார்வை
உடைய சிறந்த சிந்தனைவாதிகள்னு.. //

- அப்ப இது தப்பா..?

// " கேக்க மாட்டேன்"னு பிடிவாதம்
பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்.. //

- அட இதுவும் தப்பா..?

என்னங்க நீங்க.. எங்க பொண்ணுங்களை
புகழ்ந்து பதிவு எழுதினா.. இப்படி அவங்களை
மட்டம் தட்டறீங்களே..?!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்க பொண்டாட்டி பேச்சைக் கேக்குரத
எப்படியெல்லாம் சமாளிக்க பாக்குரீங்க பாஸ். //

யாரை.? யாரை பாத்து..
என்னா கேள்வி கேட்டீங்க..?
நாங்கல்லாம் தன்மானச் சிங்கம்ல..

வீட்ல எப்பவும் நம்ம ஆட்சிதான்..

One Minute Pls..

இந்த கமெண்ட்டை போடலாமான்னு
என் Wife-கிட்ட சின்னதா ஒரு Permission
வாங்கிக்கிறேன்.. ஹி., ஹி.,ஹி..!!

ஹா ஹா இனிமே உங்களை நான் கலாய்க்கவே மாட்டேன்.. பாவம். நீங்க.. எவ்வளவு அடி வாங்கி இருக்கீங்க..?

கோமாளி செல்வா said...

அந்த SMS எனக்கும் தான் வந்துச்சு ஆனா நான் இவ்ளோ யோசிக்கலையே ..
இப்பத்தான் புரியுது .. நீங்க ஏன் தலைவரா இருக்கீங்கன்னு ..

karthikkumar said...

கோமாளி செல்வா said...
அந்த SMS எனக்கும் தான் வந்துச்சு ஆனா நான் இவ்ளோ யோசிக்கலையே ..
இப்பத்தான் புரியுது .. நீங்க ஏன் தலைவரா இருக்கீங்கன்னு .///

அதுவே தொழிலா வெச்சு பதிவு போடறவங்களுக்கு அது பெரிய விஷயம் இல்ல மச்சி௦.... அதுனாலதான் அவர் உங்களுக்கெல்லாம் தலைவரா இருக்கார்....:))

karthikkumar said...

உங்க அறுபதாம் கல்யாணம்
நடக்க இருக்கறது ஈரோட்லயா.?
சென்னிமலையிலயா.?///
சரிங்க உங்க அறுபதாம் கல்யாணத்துக்கு ஏன் என்னை கூப்பிடல ....:)