சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 March 2011

டன்டனக்கா டன் *
டிஸ்கி :
டன் ( Ton ) = 100 Runs
டன்டனக்கா டன் = 200 Runs தானே..?!!
( ஆஹா என்ன ஒரு சிந்தனை..!! )

இது என்னோட 200th Post..!!

என்னோட 100வது பதிவு மாதிரியே
இதுவும் ஒரு FAQ Type பதிவு :

FAQ : ( Frequently Asked Questions )

1. " டோனி என் Friend "-ன்னு சொன்னீங்க..
அப்புறம் சச்சின், A.R.ரஹ்மான், மாதவன்,
ஹரிஹரன்னு உங்க Friend's ரீல் லிஸ்ட்
பெரிசாயிட்டே போகுதே.. இதுல ஒருத்தர் கூட
" வெங்கட் என் Friend-ன்னு " சொல்லலையே..?

" வெங்கட் என் Friend இல்லைன்னு "
யாராச்சும்., எங்கயாச்சும் சொன்னாங்களா..?


2. S.A-வை ஜெயிக்க தோனியும்.,நானும்
ஒரு ரகசிய பிளான் வெச்சி இருக்கோம்னு
பீலா விட்டீங்க..? அப்ப எப்படி S.A ஜெயிச்சது..?

அது ரொம்ப ரகசியமான பிளான்னு
தோனிகிட்ட சொல்லியிருந்தேன்.. அதான்
அவர் டீம்ல மத்த Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல.. ஹி., ஹி., ஹி..!!


3. உங்க பதிவு Popular ஆக ரெண்டு மூணு
ஓட்டு கம்மியா இருந்தா.. நீங்களே நைசா
2 கள்ள ஓட்டு போட்டுக்குவீங்களாமே..?
உண்மையா..?!!

ஹி., ஹி., ஹி.!! இதுக்கு பேரு தாங்க
" நமக்கு நாமே திட்டம்.! "


4. நீங்க பாத்து பயப்படும் பதிவர் யாரு..?

வேற யாரு..? எல்லாம் நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தான்..

நேர்ல பாத்தப்ப.." ஐயோ.. பூச்சாண்டின்னு.! "
கத்தி மயக்கமாயிட்டேன்னா பாருங்க.
அவ்ளோ பயம் அவர் மேல..!


5.நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுதறது
இல்ல.?

நான் அதிகமா சினிமா பார்க்கறதில்ல..,

எப்பவாச்சும் சினிமா பார்க்கணும்னு
ஆசை வந்தா... விஜய் படத்தை தான்
DVD-ல போட்டு பார்ப்பேன்..

அப்புறம் சினிமா பாக்குற ஆசை போயிடும்..!!


6. விஜய்யை கலாய்ச்சு அடிக்கடி Post
போடறீங்களே.. நீங்க அஜித் ரசிகரா..?

ஒருத்தர் தான் " அரை லூசு "
இல்லன்னு சொன்னா.. அப்ப
அவரு " முழு லூசுன்னு " அர்த்தமா..?!!

நான் விஜய் படத்தை திருட்டு DVD-ல
பார்ப்பேன்.. - அஜித் படத்தை அதுல கூட
பார்க்க மாட்டேன்.. போதுமா..?


7. இப்பல்லாம் உங்க பதிவுக்கு
Indli-ல 30 Votes ஈஸியா வந்துடுது
போல இருக்கே..?

எங்க ஈஸியா வருது..?!

ஒவ்வொருத்தரையும் Chat-லயும்.,
Phone-லயும் விரட்டி பிடிச்சு.,
மிரட்டி கொண்டு வந்து Vote போட
வெக்கறதுக்குள்ள நான் படற கஷ்டம்
இருக்கே.. அப்பப்பா...


8. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு..?

ஹி., ஹி., ஹி..!!
30 Votes வாங்கற என்னையே இப்படி
திட்றீங்களே..! அப்ப 45 Votes வாங்கற
மங்குனியை என்னா சொல்லி திட்டுவீங்க.?!!

ஐ..! கற்பனை பண்ணி பார்க்கு போதே
சந்தோஷமா இருக்கே..!!


9. VKS-காரங்க Comments பார்த்தா நீங்க
டென்ஷன் ஆயிடுவீங்களாமே.. ஏன்..?

இதெல்லாம் ஒரு கமெண்டான்னு தான்..!


10. பதிவுலக பிரச்சினையில நீங்க அதிகமா
தலையிடறதில்லையே ஏன்..?

ஆரம்பிச்சு வெச்சதுக்கு அப்புறம்
நமக்கு அங்கே என்ன வேலை..?!

( நாராயணா..! நாராயணா..! )


11. உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?

என்ன பண்றது..? நான் Post போட்டா..,
என்னை பாராட்டி லட்சக் கணக்கான
Comments வந்துட்டே இருக்கு., அதனால
Google Server Jam ஆயிடுதாம்..

அதனால Google-காரங்க நம்ம Blog-ல
Comment Moderation வைக்க சொல்லி
என் கால்ல விழுந்து கெஞ்சுனாங்க..

அதான் வேற வழியில்லாம Moderation
வெச்சு இருக்கேன்.!

( ஹி., ஹி., ஹி..!! அடங்க மாட்டோம்ல.. )


12. உங்க 287 Followers-க்கு எதாவது
அட்வைஸ்..?

இந்த 287 பேருக்கு மட்டுமில்ல..
நம்ம Blog-ஐ சீக்ரெட்டா Follow பண்ற
அந்த 5692 பேருக்குமே சேர்த்து
ஒரு அட்வைஸ்...

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "

( எப்புடி..? )
.
.

83 Comments:

சி.பி.செந்தில்குமார் said...

200 வது பதிவுல கும்மக்கூடாதோன்னு நினச்சேன்.. ஆனா டி வி ல விஜய் பாட்டு ஓடுது.. இப்போ இல்லாட்டி எப்போ?

சி.பி.செந்தில்குமார் said...

அரசியல் பதிவு எழுதுபவர்கள், சர்ச்சைக்குரிய பதிவு எழுதுபவர்கள் தான் மாடரேஷன் வைப்பாங்க.. எனக்கு தெரிஞ்சு காமெடி ரைட்டர்ஸ்ல மாடரேட்டர் வைக்கற ஒரே நபர் நீங்க தான்

சி.பி.செந்தில்குமார் said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. 200 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.. வழக்கமா நீங்க போஸ்ட் போடற நேரத்துக்கு முன்னாலயே போடறப்பவே நினைச்சேன்

ராஜி said...

Congurtualations

ராஜி said...

அது ரொம்ப ரகசியமான பிளான்னு
தோனிகிட்ட சொல்லியிருந்தேன்.. அதான்
அவர் டீம்ல மத்த Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல
>>>>>>>>>>>..
இது வேறயா?

ராஜி said...

நீங்க பாத்து பயப்படும் பதிவர் யாரு..?

வேற யாரு..? எல்லாம் நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தான்..

நேர்ல பாத்தப்ப.." ஐயோ.. பூச்சாண்டின்னு.! "
கத்தி மயக்கமாயிட்டேன்னா பாருங்க.
அவ்ளோ பயம் அவர் மேல..!
>>>

இந்த பதிவுலையே இதுதான் உண்மையான விஷயம். மத்ததெல்லாம் டூப்பு

ராஜி said...

உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?

என்ன பண்றது..? நான் Post போட்டா..,
என்னை பாராட்டி லட்சக் கணக்கான
Comments வந்துட்டே இருக்கு., அதனால
Google Server Jam ஆயிடுதாம்..

அதனால Google-காரங்க நம்ம Blog-ல
Comment Moderation வைக்க சொல்லி
என் கால்ல விழுந்து கெஞ்சுனாங்க..

அதான் வேற வழியில்லாம Moderation
வெச்சு இருக்கேன்.!
>>>
கமெண்ட் போடுற எங்களுக்குதானே தெரியும். உங்களை பாராட்டி போடுறமா? இல்லை திட்டி போடுறமானு?

ரசிகன் said...

காட்டாற்று வெள்ளமென‌
பல நூறு பொய் பேசி
இரு நூறு பதிவிட்டு
வரலாறு படைத்திட்ட [?!:-‍( ]
உங்களை.... உங்களைய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
என்னத்த செய்ய..(வாழ்த்துக்கள்)
ஆண்டவா.. எதையும் தாங்கும் இதயத்தை
எம் மக்களுக்கு கொடு...

♔ம.தி.சுதா♔ said...

அட நிங்க இம்புட்டு வெளிப்படையானவரா ஹ..ஹ..ஹ.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

வெங்கட் said...

சி.பி.,

// 200 வது பதிவுல கும்மக்கூடாதோன்னு
நினச்சேன்.. ஆனா டி வி ல விஜய் பாட்டு
ஓடுது.. இப்போ இல்லாட்டி எப்போ? //

இவரு என்னை கும்ம போறாராமா..??
ஐய்யய்யோ.. எனக்கு பயமா இருக்கே..!!

ஹா., ஹா., ஹா..!!

" வீணா எரிமலையில எச்சி துப்பி
Enjoy பண்ணனும்னு நினைக்காதீங்க..! "

Anonymous said...

//டன் ( Ton ) = 100//
டன் என்பது 1000.
1000kg= 1 ton
ஆரம்பமே பிழை..

Anonymous said...

சச்சின்‍ 40 வயது
A.R.ரஹ்மான் 45வயது
மாதவன் 45 வயது
ஹரிஹரன் 55 வயது?
இவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் எனில் உங்களி வயது என்ன?
அ) 50
ஆ) 55
இ) 60
ஈ) 60 க்கு மேல்

Anonymous said...

உங்கள் நண்பர் சச்சினே 18 வருடங்கள் விளையாடித்தான் 200 அடித்தார். ஆனால் நீங்கள் 2 வருடத்திலே 200 அடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.வாழ்த்தியவர்களிற்கு பார்ட்டி இல்லையா?

middleclassmadhavi said...

வாழ்த்துக்கள்!

Mohamed Faaique said...

///சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!///

இவ்வளவு நாளும் காத்துக் கொண்டு இருக்கேன். இந்த வார்த்தையை நிறைவேற்றுர போல ஒரு உருப்படியான பதிவு வரும்னு, 200 பதிவு ஆச்சு..ஏமாற்றம்தான் மிச்சம்.

///டன் ( Ton ) = 100
டன்டனக்கா டன் = 200 தானே..?!!
( ஆஹா என்ன ஒரு சிந்தனை..!! )//

டன் என்றால் 100 இல்லீங்க... 1000 KG. நீங்களே ஒப்புக் கொண்ட விஷயம் நீங்க படிச்ச ஸ்கூல் ரொம்ப மோசம்’னு. நாங்க என்ன சொல்ல?

///டன்டனக்கா டன்//

”டன் கணக்கா பன்” இது நல்ல இருக்குல்ல

///என்னோட 100வது பதிவு மாதிரியே
இதுவும் ஒரு FAQ Type பதிவு ///

நானே கேள்வி நானே பதில்

///" வெங்கட் என் Friend இல்லைன்னு "
யாராச்சும்., எங்கயாச்சும் சொன்னாங்களா..?///

ஆமா.. சந்தன கடத்தல் வீரப்பன், ஒசாமா, தவூத் இப்ராஹீம் கூட “வெங்கட் என் friend இல்லை’னு சொல்லல. உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன தொடர்பு?

///அது ரொம்ப ரகசியமான பிளான்னு
தோனிகிட்ட சொல்லியிருந்தேன்.. அதான்
அவர் டீம்ல மத்த Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல.. ஹி., ஹி., ஹி..!!//
நானும் ஒரு ரகசிய பிளான் வெச்சிருந்தேன், ரொம்ப ரகசியம் என்பதால தோனி கிட்ட கூட சொல்லல.....ஹி..ஹி..ஹி

///ஹி., ஹி., ஹி.!! இதுக்கு பேரு தாங்க
" நமக்கு நாமே திட்டம்.! "//
அத பாக்குரவங்களுக்கெல்லாம் “கட்டம்”

///நான் அதிகமா சினிமா பார்க்கறதில்ல..,///
டிக்கெட் எங்கேயும் ஃப்ரீயா கிடைக்குரதில்ல...

///நான் விஜய் படத்தை திருட்டு DVD-ல
பார்ப்பேன்.. - அஜித் படத்தை அதுல கூட
பார்க்க மாட்டேன்.. போதுமா..?
///

சாம் அண்டர்சன் படத்த குடும்பத்தோடு போய் பார்ப்பாரு. தியேட்டர்’ல ஓடல்லன்னா, வீட்லயே கொட்டகை அடித்து எல்லோரயும் (எதிரிகளை) கூப்பிட்டு ஃப்ரீயா (யாரு பைசா குடுப்பாங்க?) படம் போட்டு காட்டுவாரு..

///ஒவ்வொருத்தரையும் Chat-லயும்.,
Phone-லயும் விரட்டி பிடிச்சு.,
மிரட்டி கொண்டு வந்து Vote போட
வெக்கறதுக்குள்ள நான் படற கஷ்டம்
இருக்கே.. அப்பப்பா...//

நான் எவ்வளவு கேவலமா கெஞ்சியும், 6-7 ஓட்டுதான் விழுது, உங்க 30 ஓட்டுக்கும் எவ்வள்வு கேவலமா கெஞ்சி இருப்பீங்க...
ஐ..! கற்பனை பண்ணி பார்க்கு போதே
சந்தோஷமா இருக்கே..!!

//VKS-காரங்க Comments பார்த்தா நீங்க
டென்ஷன் ஆயிடுவீங்களாமே.. ஏன்..?//
வெங்கட் பதிவை பார்த்து vas காரங்களே டென்சன் ஆயிர்ராங்க...அதை விடவா.....

///உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?///

எவ்வ்ளவு அடி வாங்கினாலும் வெளில தெரிய கூடாதில்ல...

///சீக்ரெட்டா Follow பண்ற
அந்த 5692 பேருக்குமே சேர்த்து
ஒரு அட்வைஸ்... ///

எடுத்த கடனை குடுக்கா விட்டா இப்படி follow பண்ணாம இருப்பாங்களா?

///உங்க 287 Followers-க்கு எதாவது
அட்வைஸ்..? ///

உங்களுக்கு 287 பெயர்ல gmail account இருக்கா? சொல்லவே இல்ல....

Yoga.s.FR said...

அதனால Google-காரங்க நம்ம Blog-ல
Comment Moderation வைக்க சொல்லி
என் கால்ல விழுந்து கெஞ்சுனாங்க..???!!!///நல்ல வேளை "அம்மா" கால்ல வுழுந்து கெஞ்சலையே?///

Sen22 said...

VV..


Etho thirennu ninaikatheenga...


Vazhuthuval Venkat.. appadi sonnen..


:))))

Madhavan Srinivasagopalan said...

//1. " டோனி என் Friend "-ன்னு சொன்னீங்க..
அப்புறம் சச்சின், A.R.ரஹ்மான், மாதவன் ,
ஹரிஹரன்னு உங்க Friend's ரீல் லிஸ்ட்
பெரிசாயிட்டே போகுதே.. இதுல ஒருத்தர் கூட
" வெங்கட் என் Friend-ன்னு " சொல்லலையே..? //

எல்லாரும் நல்லா கேட்டுகங்க..
வெங்கட்(கோகுலத்தில்..) என்னோட பிரண்டு தான்..
-- மாதவன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

200-க்கு வாழ்த்துகள்!

Madhavan Srinivasagopalan said...

// டன்டனக்கா டன் = 200 தானே..?!!
( ஆஹா என்ன ஒரு சிந்தனை..!! ) //


'டன்டனக்கா டன் / 10 = 200'

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

// நான் Post போட்டா..,
என்னை பாராட்டி லட்சக் கணக்கான
Comments வந்துட்டே இருக்கு., //

திட்டி கோடிக் கணக்கில கமெண்ட்ஸ் வருதே, அது பத்தி சொல்லாம விட்டுட்டீங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?//

நீங்கலாம் ஏன் Blog வச்சிருக்கீங்கன்னு கூட ஒரு கேள்வி இருக்கு, ஆனா அதுக்குதான் பதில் சொல்லாம போறீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் என் Friend இல்லைன்னு "
யாராச்சும்., எங்கயாச்சும் சொன்னாங்களா..?
//

ஒசாமா பின் லேடன் கூட உங்களை பிரெண்ட் இல்லைன்னு சொல்லவே இல்லை, அதுனால இன்டர்போல் உங்களைத் தேடிகிட்டறதா கேள்விப் பட்டேன், ஜாக்கிரதை!
(என்னதான் VKS மெம்பரா இருந்தாலும், உங்க மேல ஒரு அக்கறை இருக்கத் தான் செய்யுது....................................எங்களுக்கும் ஓட்டறதுக்கு ஆள் வேணுமில்ல?)

மங்குனி அமைச்சர் said...

டன் ( Ton ) = 100
////

ஹைய்யோ , ஹைய்யோ .......உங்கள் அறிவுக்கூர்மைய பார்க்கும்போது ........ கால்ல இருந்து தலைவரைக்கும் இருக்க முடியெல்லாம் நட்டமா நிக்குது

மங்குனி அமைச்சர் said...

Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல.. ////

ஆமா , பேங்க் லாக்கர்ல அச்சிட்டு ,....சாவிய கூட வேணுமின்னே தொலைச்சுப்புட்டாராம்

வெங்கட் said...

@ சி.பி.,

// எனக்கு தெரிஞ்சு காமெடி ரைட்டர்ஸ்ல
மாடரேட்டர் வைக்கற ஒரே நபர் நீங்க தான் //

ஒண்ணு ரெண்டுன்னா பரவாயில்ல..
Moderation இல்லன்னா.. நீங்க போடுற
27 மொக்கை கமெண்ட்ல இருந்து
மக்களை எப்படி நான் காப்பாத்தறது...?!

Uma said...

உங்க ப்ளாக் ரொம்ப நாளா படிச்சிட்டிருக்கேன். இன்னிக்குதான் முதல் கமெண்ட் போடறேன். காமெடியா கலக்குறீங்க. இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Uma said...

சந்தன கடத்தல் வீரப்பன், ஒசாமா, தவூத் இப்ராஹீம் கூட “வெங்கட் என் friend இல்லை’னு சொல்லல. உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன தொடர்பு?//

ஹா ஹா

வெங்கட் said...

@ ராஜி.,

//எல்லாம் நம்ம சிரிப்பு போலீஸ்
ரமேஷ் தான்.. நேர்ல பாத்தப்ப..
" ஐயோ.. பூச்சாண்டின்னு.! " கத்தி
மயக்கமாயிட்டேன்னா பாருங்க.
அவ்ளோ பயம் அவர் மேல..! //

// இந்த பதிவுலையே இதுதான் உண்மையான
விஷயம். மத்ததெல்லாம் டூப்பு //

ஹா., ஹா., ஹா..

நீங்க வேணா நான் குடுத்த லிங்க்ல
போயி பாருங்களேன்.. எல்லோரையும்
இப்படி பயமுறுத்திட்டு இருக்கார்னு
Govt. இவரை புடிச்சு குடுக்கறவங்களுக்கு
எவ்ளோ பெரிய பரிசு Announce பண்ணியிருக்குன்னு..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// காட்டாற்று வெள்ளமென‌
பல நூறு பொய் பேசி
இரு நூறு பதிவிட்டு
வரலாறு படைத்திட்ட [?!:-‍( ]
உங்களை.... உங்களைய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
என்னத்த செய்ய..(வாழ்த்துக்கள்)
ஆண்டவா.. எதையும் தாங்கும் இதயத்தை
எம் மக்களுக்கு கொடு... //

எச்சூஸ் மீ..!! உங்க கமெண்ட்ல
ஒரு இடத்துல " பொய்னு " எதோ
எழுதி இருக்கீங்களே அதுக்கு
Meaning என்னாங்க..?!

வெங்கட் said...

@ பாரதி.,

// டன் என்பது 1000.
1000kg= 1 ton
ஆரம்பமே பிழை.. //

நீங்க சொல்றது Tonne..
நான் சொல்றது Ton..

கிரிக்கெட்ல Ton-ன்னு சொன்னா
100 ரன்னு அர்த்தம்..

சர்ச்ல இருக்கறவரையும் Father-ன்னு
சொல்வோம்..
நம்ம அப்பாவையும் Father-ன்னு
சொல்வோம்..

Spelling ஒண்ணா இருந்தாலும்.,
அர்த்தம் வேற வேற இல்லையா பாரதி..!!

வெங்கட் said...

@ பாரதி.,

// சச்சின்‍ 40 வயது., A.R.ரஹ்மான் 45வயது
மாதவன் 45 வயது., ஹரிஹரன் 55 வயது?
இவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள்
எனில் உங்களி வயது என்ன? //

" ரஜினி என் நண்பர்னு., கலைஞர்
அடிக்கடி சொல்லி இருக்கார்..! "

அப்ப ரஜினிக்கும்., கலைஞர்க்கும்
ஒரே வயசா உங்க லாஜிக் படி...?

Friends-ஆ இருக்க மனசு தான் முக்கியம்
வயசு இல்ல..

அதனால தான் என்னால இந்த
25 வயசுல என்னை விட பெரியவங்க கூட
எல்லாம் Friendship-ஆ இருக்க முடியுது..!! :)

வெங்கட் said...

Double Ton ( 200th Post ) அடிச்சதுக்காக
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்..!!

மாதேவி said...

வாழ்த்துகள்.

அருண் பிரசாத் said...

//வெங்கட் said...

Double Ton ( 200th Post ) அடிச்சதுக்காக
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்..!!//
இதுக்கு மேல வாழ்த்தினாலாம் ஒத்துக்க மாட்டீங்களா?

வாழ்த்துக்கள்....

அருண் பிரசாத் said...

1. " டோனி என் Friend "-ன்னு சொன்னீங்க..
அப்புறம் சச்சின், A.R.ரஹ்மான், மாதவன்,
ஹரிஹரன்னு உங்க Friend's ரீல் லிஸ்ட்
பெரிசாயிட்டே போகுதே.. இதுல ஒருத்தர் கூட
" வெங்கட் என் Friend-ன்னு " சொல்லலையே..?

ஆமா வடிவேலு சொல்லிக்குவாரே நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு அந்த மாதிரிதான இதுவும்

அருண் பிரசாத் said...

2. S.A-வை ஜெயிக்க தோனியும்.,நானும்
ஒரு ரகசிய பிளான் வெச்சி இருக்கோம்னு
பீலா விட்டீங்க..? அப்ப எப்படி S.A ஜெயிச்சது..?

அட நீங்க சொல்லுறதை என்னைக்கு நம்பி இருக்கோம் இன்னைக்கு நம்ப.... இந்த பதிவை நீங்கதான் எழுதனேன்னு சொல்லி பாருங்க!?!?! அட சொல்லி தான் பாருங்களேன் அடுத்த பதிவுல

அருண் பிரசாத் said...

3. உங்க பதிவு Popular ஆக ரெண்டு மூணு
ஓட்டு கம்மியா இருந்தா.. நீங்களே நைசா
2 கள்ள ஓட்டு போட்டுக்குவீங்களாமே..?
உண்மையா..?!!

அட ஓட்டு மட்டுமா? கமெண்ட்டுலாம் மட்டும் யாரோவா போடுறாங்க இவரே பல fake profile வெச்சி போட்டுகறதுதானே

அருண் பிரசாத் said...

4. நீங்க பாத்து பயப்படும் பதிவர் யாரு..?

நல்ல வேளை அவரை பதிவருனு ஒத்துக்கிடீங்களே.... சரி, தினமும் கண்ணாடில உங்க முகத்தை பார்க்கற பழக்கம் இருக்கா உங்களுக்கு?

அருண் பிரசாத் said...

5.நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுதறது
இல்ல.?

வெளங்கிரும்....

6. விஜய்யை கலாய்ச்சு அடிக்கடி Post
போடறீங்களே.. நீங்க அஜித் ரசிகரா..?

விஜய்யை கலாய்ச்சதைவிட தன்னை தானே கலாய்ச்சி போட்ட பதிவுகள்தான் அதிகம்

7. இப்பல்லாம் உங்க பதிவுக்கு
Indli-ல 30 Votes ஈஸியா வந்துடுது
போல இருக்கே..?

இதுக்கு மட்டும்தான் உண்மையான பதில்... சரி எனக்கு வர வேண்டிய 2000 ரூ இன்னும் வந்து சேரலை....

அருண் பிரசாத் said...

8. எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு..?

இவர் பதிவு எழுதறதை விடவா இது மானங்கெட்ட பொழப்பு?

9. VKS-காரங்க Comments பார்த்தா நீங்க
டென்ஷன் ஆயிடுவீங்களாமே.. ஏன்..?
//இதெல்லாம் ஒரு கமெண்டான்னு தான்..!//
இல்லையா பின்ன, மாங்கு மாங்குனு யோசிச்சி பதிவை போட்டா அசால்ட்டா கலாச்சி ஸ்கேர் பண்ணிட்டு போயிடுறாங்களே

10. பதிவுலக பிரச்சினையில நீங்க அதிகமா
தலையிடறதில்லையே ஏன்..?

போட்டு இருக்கற பதிவை கலாய்ச்சவங்களுக்கு பதில் சொல்லவே நேரம் போதல இதுல பதிவுலக பிரச்சனை வேறயா

அருண் பிரசாத் said...

11. உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?
வெச்சே எனக்கு இவ்வளோ டேமேஜ்.... வெக்காம இருந்து இருந்தா அவ்வ்வ்வ்வ்வ்.....

12. உங்க 287 Followers-க்கு எதாவது
அட்வைஸ்..?

போங்க சார் போங்க போய் பொழப்பை பாருங்க.... இங்க என்ன வெட்டி வேலை

samhitha said...

hi venkat
congrats for ur 200th post!!

உங்க 100th போஸ்ட விட இது இன்னும் செமயா இருக்கு!!
உங்க காமெடி சென்ஸ்க்கு அளவே இல்ல!! :D

//
தோனி டீம்ல மத்த Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல..//

உங்கள டெண்டுல்கர் மட்டும் இல்ல தோனியும் தேடி வந்து பேட் வச்சி அடிக்க போறாங்க :)

so cute and sweet answers!!
so sweet of u!!
cant ctrl my laugh!!

*** said...

//அதனால தான் என்னால இந்த
25 வயசுல என்னை விட பெரியவங்க கூட
எல்லாம் Friendship-ஆ இருக்க முடியுது..!! :)
//

this is the best joke u hav ever said ji !!! ;)

//சீக்ரெட்டா Follow பண்ற
அந்த 5692 பேருக்குமே சேர்த்து
ஒரு அட்வைஸ்..//

ohhh ivlo kammiya??
venkat enna idhu???mathavangala(10,000 ppl) deal la vittuteengala enna?
u cant do like this yaar!!
he he ;)

karthikkumar said...

எச்சூஸ் மீ..!! உங்க கமெண்ட்ல
ஒரு இடத்துல " பொய்னு " எதோ
எழுதி இருக்கீங்களே அதுக்கு
Meaning என்னாங்க..?!///

அதுக்கு மீனிங் வெங்கட் எழுதுவதெல்லாம்,
VAS ஆளுங்க சொல்றதெல்லாம்.....:)

karthikkumar said...

samhitha said..//
so cute and sweet answers!!
so sweet of u!!
cant ctrl my laugh!!////

இவரோட POST க்கு எல்லாம் வந்து இந்தமாதிரி நீங்க கமென்ட் போடறத பாத்தா என்னாலையும்தான் சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல.....:)

Mohamed Faaique said...

///விஜய்யை கலாய்ச்சதைவிட தன்னை தானே கலாய்ச்சி போட்ட பதிவுகள்தான் அதிகம்///
like it

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் இன்னிக்குத்தான் பர்ஸ்ட் டைம் கமென்ட் போடுறேன் னு நெனைக்கிறேன்!


இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா! டண்டணக்கா டன் சூப்பர்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

5.நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுதறது
இல்ல.?

நான் அதிகமா சினிமா பார்க்கறதில்ல..,

எப்பவாச்சும் சினிமா பார்க்கணும்னு
ஆசை வந்தா... விஜய் படத்தை தான்
DVD-ல போட்டு பார்ப்பேன்..

அப்புறம் சினிமா பாக்குற ஆசை போயிடும்..!!

வீராச்சாமி படம் பாருங்க எல்லாம் நல்லதே நடக்கும்!

suthan said...

பாஸ் உங்ககிட்ட எனக்கு பிடிச்சதே உங்க எழுத்து நடையும் நேர்மையும்தான். ... மனமார்ந்த வாழ்த்துக்கள் பாஸ். suthan Canada.

வெங்கட் said...

@ Mohamed.,

// சந்தன கடத்தல் வீரப்பன், ஒசாமா,
தவூத் இப்ராஹீம் கூட “ வெங்கட் என்
friend இல்லை’னு சொல்லல. உங்களுக்கும்
அவங்களுக்கும் என்ன தொடர்பு? //

" காக்கா கருப்பா இருக்கும்னு "
சொன்னா..

அதுக்காக கரடியை பாத்து..
" இது கருப்பா இருக்கே..,
அப்ப இதுவும் காக்காவான்னு..? "
கேக்கற மாதிரில்ல இருக்கு..

நான் " என் Friend-ன்னு " சொன்னவங்க
யாரும் “ வெங்கட் என் friend இல்லை’னு
சொல்லலை அதான் இங்கே Point..

அதுக்காக “ வெங்கட் என் friend இல்லை’னு
சொல்லாதவங்க எல்லாம் " என் Friend-ன்னு "
அர்த்தம் இல்ல..

வெங்கட் said...

@ Mohamed.,

// நானும் ஒரு ரகசிய பிளான் வெச்சிருந்தேன்,
ரொம்ப ரகசியம் என்பதால தோனி கிட்ட
கூட சொல்லல.....ஹி..ஹி..ஹி //

ஹி., ஹி., ஹி..!!

அதனால தான் நாம 3 மேட்ச்
ஜெயிச்சிட்டோமோ.!!

// உங்களுக்கு 287 பெயர்ல gmail account
இருக்கா? சொல்லவே இல்ல.... //

ஏன்.. நிறுத்திட்டீங்க.. Google Company-யே
என்னுது தான் கிளப்பி விடுங்களேன்..
காசா., பணமா..?!

samhitha said...

//இவரோட POST க்கு எல்லாம் வந்து இந்தமாதிரி நீங்க கமென்ட் போடறத பாத்தா என்னாலையும்தான் சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல.....:)//

உங்களுக்கு இப்டி எழுத வரல
அதான் யாரும் இப்டி கமெண்ட் போடல!!
அதுக்காக இவ்ளோ வயித்தெரிச்சலா?
போங்க போய் இப்டி எழுத ட்ரை பண்ணுங்க!!
வரலேனா ட்ரைனிங்க்கு வாங்க!!
VKS க்கு தெரியாம தான்!!

samhitha said...

//அதனால தான் நாம 3 மேட்ச்
ஜெயிச்சிட்டோமோ.!!//
ஹா ஹா!!
எப்டி வெங்கட் இதெல்லாம் ;)

//ஏன்.. நிறுத்திட்டீங்க.. Google Company-யே
என்னுது தான் கிளப்பி விடுங்களேன்..
காசா., பணமா..?!//

நோ அப்புறம் google value ஜாஸ்தி ஆய்டும்
எகனாமிகல் ப்ராப்ளம் வந்துடும்!!
உடனே அவங்க unga மேல பழிய தூக்கி போட்டுடுவாங்க!! ;)
எப்போவும் நீங்க Simple &
Sample-ஆவே இருங்க!!

அனு said...

சரி.. சரி.. பீலா விட்டே எப்படியோ 200 பதிவுகள் ஓட்டிங்க..
வாழ்த்துக்கள்!!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// எல்லாரும் நல்லா கேட்டுகங்க..
வெங்கட்(கோகுலத்தில்..) என்னோட
பிரண்டு தான்..- மாதவன் //

ஹி., ஹி., ஹி..!!
உங்க அன்புக்கு நன்றி..!!

இங்கே நாங்க பேசிட்டு இருக்குறது
உங்களை பத்தி இல்ல..

அந்த மாதவன் Univercel-ல
செல் போன் விக்கிற Salesman..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////1. " டோனி என் Friend "-ன்னு சொன்னீங்க..
அப்புறம் சச்சின், A.R.ரஹ்மான், மாதவன்,
ஹரிஹரன்னு உங்க Friend's ரீல் லிஸ்ட்
பெரிசாயிட்டே போகுதே.. இதுல ஒருத்தர் கூட
" வெங்கட் என் Friend-ன்னு " சொல்லலையே..?////////

பேசாம பன்னிக்குட்டி என் ஃப்ரெண்டுன்னு சொல்லி இருக்கலாம்ல, இந்த நெலமை வந்திருக்காது.... (இப்போ கூட ஒண்ணும் கெட்டு போயிடலை, ஒரு பெரிய அமௌண்ட என் அக்கவுண்ட்ல போட்டுட்டா வெங்கட் என் ஃப்ரெண்டுன்னு ஒரு பதிவு போட்டுடுறேன்.... எப்படி வசதி?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////2. S.A-வை ஜெயிக்க தோனியும்.,நானும்
ஒரு ரகசிய பிளான் வெச்சி இருக்கோம்னு
பீலா விட்டீங்க..? அப்ப எப்படி S.A ஜெயிச்சது..?

அது ரொம்ப ரகசியமான பிளான்னு
தோனிகிட்ட சொல்லியிருந்தேன்.. அதான்
அவர் டீம்ல மத்த Players-கிட்ட கூட
சொல்லாம ரொம்ப ரகசியமாவே
வெச்சிட்டார் போல.. ஹி., ஹி., ஹி..!!///////

அது என்ன கருமாந்திர ஐடியான்னு நம்ம ப்ளாக்லதான் போட்டு கிழிச்சாச்சே? அப்புறம் இன்னும் என்ன ரகசியம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

9. VKS-காரங்க Comments பார்த்தா நீங்க
டென்ஷன் ஆயிடுவீங்களாமே.. ஏன்..?

இதெல்லாம் ஒரு கமெண்டான்னு தான்..!//

நாங்க கூடத்தான் இதெல்லாம் ஒரு பதிவான்னு பீல் பண்றோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////4. நீங்க பாத்து பயப்படும் பதிவர் யாரு..?

வேற யாரு..? எல்லாம் நம்ம
சிரிப்பு போலீஸ் ரமேஷ் தான்..

நேர்ல பாத்தப்ப.." ஐயோ.. பூச்சாண்டின்னு.! "
கத்தி மயக்கமாயிட்டேன்னா பாருங்க.
அவ்ளோ பயம் அவர் மேல..!/////////

நல்லவேள நீங்க அவரு மேக்கப்பு இல்லாம இருக்கும் போது பாக்கல....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////5.நீங்க ஏன் சினிமா விமர்சனம் எழுதறது
இல்ல.?

நான் அதிகமா சினிமா பார்க்கறதில்ல..,

எப்பவாச்சும் சினிமா பார்க்கணும்னு
ஆசை வந்தா... விஜய் படத்தை தான்
DVD-ல போட்டு பார்ப்பேன்..

அப்புறம் சினிமா பாக்குற ஆசை போயிடும்..!!//////

அவனவனுக்கு வாழற ஆசையே போயிடுது... ஆனாலும் உங்களுக்கு தில்லு ரொம்ப ஜாஸ்திங்கோ.... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////7. இப்பல்லாம் உங்க பதிவுக்கு
Indli-ல 30 Votes ஈஸியா வந்துடுது
போல இருக்கே..?

எங்க ஈஸியா வருது..?!

ஒவ்வொருத்தரையும் Chat-லயும்.,
Phone-லயும் விரட்டி பிடிச்சு.,
மிரட்டி கொண்டு வந்து Vote போட
வெக்கறதுக்குள்ள நான் படற கஷ்டம்
இருக்கே.. அப்பப்பா...////////

இதுக்கேன்னே சம்பளத்துக்கு 10 பேரு வெச்சிருக்கறதா கேள்விப்பட்டேன்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////10. பதிவுலக பிரச்சினையில நீங்க அதிகமா
தலையிடறதில்லையே ஏன்..?

ஆரம்பிச்சு வெச்சதுக்கு அப்புறம்
நமக்கு அங்கே என்ன வேலை..?!

( நாராயணா..! நாராயணா..! )//////

வீட்ல வாங்கற அடி பத்தாதா....? விடுங்கப்பா விடுங்கப்பா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////11. உங்க Blog-ல ஏன் Comment Moderation
வெச்சு இருக்கீங்க..?

என்ன பண்றது..? நான் Post போட்டா..,
என்னை பாராட்டி லட்சக் கணக்கான
Comments வந்துட்டே இருக்கு., அதனால
Google Server Jam ஆயிடுதாம்..

அதனால Google-காரங்க நம்ம Blog-ல
Comment Moderation வைக்க சொல்லி
என் கால்ல விழுந்து கெஞ்சுனாங்க..

அதான் வேற வழியில்லாம Moderation
வெச்சு இருக்கேன்.!

( ஹி., ஹி., ஹி..!! அடங்க மாட்டோம்ல.. )/////////

மாடரேஷன் வெச்சும் சில ஏடாகூட கமெண்ட்டுகள் தப்பிச்சு, வீட்ல வெளக்கமாத்து அடிவாங்கிக் கொடுத்துடுது...... இதுல இப்படி ஒரு கேள்வி...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////12. உங்க 287 Followers-க்கு எதாவது
அட்வைஸ்..?

இந்த 287 பேருக்கு மட்டுமில்ல..
நம்ம Blog-ஐ சீக்ரெட்டா Follow பண்ற
அந்த 5692 பேருக்குமே சேர்த்து
ஒரு அட்வைஸ்...

" யார் சொல்ற அட்வைஸையும்
கேக்காதீங்க..!! "

( எப்புடி..? )//////////

அப்பிடி நல்ல நல்ல அட்வைச கேக்கறவங்களா இருந்தா உங்களை ஏன் ஃபாலோ பண்றாங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// அனு said...
சரி.. சரி.. பீலா விட்டே எப்படியோ 200 பதிவுகள் ஓட்டிங்க..
வாழ்த்துக்கள்!!!//////

200-ம் பீலாவா?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// திட்டி கோடிக் கணக்கில கமெண்ட்ஸ்
வருதே, அது பத்தி சொல்லாம விட்டுட்டீங்க? //

ஆமா என்னை பாராட்டி லட்ச கணக்கான
கமெண்ட்ஸும்., VKS-ஐ திட்டி
கோடிக்கணக்கான கமெண்ட்ஸூம் வருது..
சொன்னா பீல் பண்ணுவீங்களேன்னு
சொல்லாம விட்டேன்..

// நீங்கலாம் ஏன் Blog வச்சிருக்கீங்கன்னு
கூட ஒரு கேள்வி இருக்கு, ஆனா
அதுக்குதான் பதில் சொல்லாம போறீங்க! //

" என்சைளோபீடியா " - இதோட அருமை
சைக்கிள் கடை Owner-க்கு தெரியாது..
புத்திசாலிகளுக்கு தெரியும்.!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஒசாமா பின் லேடன் கூட உங்களை
பிரெண்ட் இல்லைன்னு சொல்லவே
இல்லை, //

இது ஏற்கனவே Mohamed எழுதின
கமெண்ட்.. இந்த VKS -காரங்களுக்கு
காப்பி அடிக்கறது., உல்டா பண்றது
இதை விட்டா வேற எதுவுமே தெரியாதா.?

வெங்கட் said...

@ மங்குனி.,

// ஹைய்யோ , ஹைய்யோ..,
உங்கள் அறிவுக்கூர்மைய பார்க்கும்போது . //

அறிவுக்கூர்மைய பத்தி பேசறது
இருக்கட்டும்..

முதல்ல உங்க Mobile-ல SMS Type
பண்ணும் போது " Dictionary " Off
பண்ணறது எப்படின்னு கத்துகிட்டீங்களா..?
ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ உமா.,

// உங்க ப்ளாக் ரொம்ப நாளா படிச்சிட்டிருக்கேன்.
இன்னிக்குதான் முதல் கமெண்ட் போடறேன்.
காமெடியா கலக்குறீங்க. இருநூறாவது
பதிவுக்கு வாழ்த்துக்கள். //

நன்றி உமா.!!

இவ்ளோ நாள் நீங்க ஏன் கமெண்ட்ஸ்
போடலை.. இனிமேலாவது கமெண்ட்ஸ்
போடுங்க..

என்னை பாராட்டி எப்படி கமெண்ட்ஸ்
போடறதுன்னு தெரியலைன்னா
சொல்லுங்க.. அதுக்கு ஒரு SPL Training
இருக்கு.. :)

வெங்கட் said...

@ அருண்.,

// அட ஓட்டு மட்டுமா? கமெண்ட்டுலாம்
மட்டும் யாரோவா போடுறாங்க இவரே
பல fake profile வெச்சி போட்டுகறதுதானே //

என்ன இப்படி சொல்லிட்டீங்க..?

உங்க பிளாக்குக்கு கூட தான்
பல Fake Profile-ல கமெண்ட்ஸ்.,
Votes போடறேன்.. அதை தெரிஞ்சும்
தெரியாத மாதிரி பேசறீங்க..?!!

வெங்கட் said...

@ அருண்.,

கேள்வி நம்பர் 13.
நீங்க பாத்து பொறாமப்படும் பதிவர் யார்.?

" அருண் பிரசாத் "


இதை எனக்கு எழுதி குடுத்து.,
இந்த பதிவுல போட சொன்னாரு..
நான் போடலை.. அதான் கடுப்புல..
வழக்கம் போல உல்டா..

மனம் திறந்து ... said...

ஒரு மார்க்கமாத்தான் இருக்கு உங்க பேச்சு, சிந்தனை, நடவடிக்கை எல்லாம்! பட்டயக் கெளப்புங்க! வாழ்த்துகள்!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இருநூறு கண்ட இளஞ்-
சூரியனே -இன்னும்
பல நூறு படைத்து -இப்
பதிவுலகம்
பயனடைய-வாழ்வாங்கு
வாழ்வாயாக...

வெங்கட் said...

@ சம்ஹிதா.,

// ohhh ivlo kammiya?? venkat enna idhu???
mathavangala(10,000 ppl) deal la vittuteengala
enna? //

நம்ம பிளாக்கை சீக்ரெட்டா Follow பண்ற
5692 பேரை பத்தி தான் சொன்னேன்..

இந்த 10.000 பேர் நம்ம பிளாக்கை
படு சீக்ரெட்டா Follow பண்றவங்களாச்சே..!!

ஹி., ஹி., ஹி..!!

வெங்கட் said...

@ கார்த்தி.,

// " பொய்னு " எதோ எழுதி இருக்கீங்களே
அதுக்கு Meaning என்னாங்க..?! //

// அதுக்கு மீனிங் VAS ஆளுங்க
சொல்றதெல்லாம்.....:) //

ஓ.. இன்னிக்கு செல்வா ( VAS ) எனக்கு
போன் பண்ணி " கார்த்தி ரொம்ப
அறிவாளின்னு " சொன்னானே..

அப்ப அதான் பொய்யா.?!!

வெங்கட் said...

@ அனு.,

// சரி.. சரி.. பீலா விட்டே எப்படியோ
200 பதிவுகள் ஓட்டிங்க.. வாழ்த்துக்கள்!!! //

சரி., சரி.. இப்படி மொக்கை கமெண்ட்
போட்டே எப்படியோ 200 பதிவுகள் ஓட்டிங்க..
அதுக்கும் வாழ்த்துக்கள்..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat
//என்னை பாராட்டி எப்படி கமெண்ட்ஸ்
போடறதுன்னு தெரியலைன்னா
சொல்லுங்க.. அதுக்கு ஒரு SPL Training
இருக்கு.. :)
//

அப்போ ட்ரைனிங் கொடுத்தாதான் உங்களைப் பாராட்டி எழுத முடியும். இயல்பா எழுதறதா இருந்தா, திட்டத் தான் முடியும். இந்த உண்மையை இருநூறாவது பதிவிலாவது ஒப்புக் கொண்ட உங்களுக்கு வாழ்த்துகள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat

//எச்சூஸ் மீ..!! உங்க கமெண்ட்ல
ஒரு இடத்துல " பொய்னு " எதோ
எழுதி இருக்கீங்களே அதுக்கு
Meaning என்னாங்க..?!
//
இந்தக் கேள்விக்கு .......................

//அதனால தான் என்னால இந்த
25 வயசுல என்னை விட பெரியவங்க கூட
எல்லாம் Friendship-ஆ இருக்க முடியுது..!! :)
//

இதுதான் பதில்.

சேலம் தேவா said...

பதிவுலக நகைச்சுவை மன்னனுக்கு மேலும் இதுபோன்ற உற்சாகமூட்டக்கூடிய பதிவுகளுடன் வளர வாழ்த்துகள்..!! :)

கோமாளி செல்வா said...

அட ச்சே.. !! எனக்கு ஏன் இவ்ளோ ஆணி இருந்து உங்களோட 200 பதிவுக்கு வரமுடியாம பண்ணிட்டாங்க ? ஒருவேளை VKS சதியா இருக்குமோ ?

சரி எப்படியோ தல , அடுத்த நூறாவது பதிவு எழுதரக்குள்ள VKS அப்படின்னு சொல்லிட்டு இருக்குறவங்கள ப்ளாக் உலகத்த விட்டு விரட்டுறோம் அவுங்க கிட்ட இருந்து ப்ளாக் உலகத்த காப்பாத்துறோம் !!

Uma said...

இனிமேலாவது கமெண்ட்ஸ் போடுங்க..//

கண்டிப்பா.

என்னை பாராட்டி எப்படி கமெண்ட்ஸ் போடறதுன்னு தெரியலைன்னா சொல்லுங்க//

எப்படி நீங்க ரொம்ப நல்லவர், வல்லவர்னா? அதுக்கெல்லாம் ட்ரைனிங் எதுக்கு?