சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

23 January 2010

நேதாஜி - ஒரு சல்யூட்


காந்திஜி ., நேருஜி பிறந்தநாள் தெரியும்..!
நேதாஜி பிறந்தநாள்...?

நம்ம பல பேருக்கு தெரியாது..
அந்த நாள் -
ஜனவரி 23

நம்ம நேதாஜியை
ஜெர்மனிய வரலாறு
"உயர்ந்த புரட்சி வீரன்" கொண்டாடுது..

ஆனா., இந்தியா..?

ஜெயித்தால் புரட்சியாளன்..,
தோற்றால் தீவிரவாதி..! - இது தான்
புரட்சியாளர்களுக்கு கிடைக்கும் பரிசு..

" சுதந்திரம் " அகிம்சை வழியில் வந்ததால்
நேதாஜியின் புரட்சி வழி தப்புங்கிற
மாதிரியே ஒரு மாயை உருவாக்கிட்டாங்க..

கட்டபொம்மனும்., மருது சகோதரர்களும்
செய்தது சரின்னா..,
பிடல் காஸ்ட்ரோவும்., சே குவேராவும்
செய்தது சரின்னா..,

நேதாஜி செய்தது மட்டும் எப்படி
தப்பாகும்..?

நேதாஜி பிரிடிஷ்காரனை எதிர்த்தார்
கூடவே
அகிம்சையையும் எதிர்த்தார்..,

"சுதந்திரம்" என்பது
பிச்சை கேட்பதில்லை..,
நாமே எடுத்துக்கொள்வது என்றார்.

மக்கள் சக்தியை வீணடிக்கிறார் என்று
காந்திஜி மீதுகூட அவருக்கு
கோபம் இருந்தது..

உங்க வீட்டுல யாரோ வந்து.,
உங்களையே அடாவடி.,
அதிகாரம் பண்ணினா..
நீங்க என்ன பண்ணுவீங்க..?

* " வெளிய போங்கன்னு..! "
உண்ணாவிரதம் இருப்பீங்களா..?

- இல்ல..,

* நாலு தட்டு., தட்டி துரத்துவீங்களா..?

முன்னது காந்தி வழி.,
அடுத்தது நேதாஜி வழி..
இப்போ நீங்களே முடிவு பண்ணுங்க..!

" நேதாஜி " - இந்த உயர்ந்த தலைவனை
பற்றி ஒரு பதிவில் எழுதிவிட முடியாது..
ஆனா.,
ஒரு புத்தகத்தை மட்டும்
பரிந்துரை செய்ய முடியும்.

" நேதாஜி - ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம் "

புத்தகத்தை படிச்சவுடனே
மனசு வலிக்கிறதையும்.,
நரம்புகள் துடிக்கிறதையும்
உங்களால தடுக்கவே முடியாது..

இது நாள் வரைக்கும்
நேதாஜி பத்தி தெரியாதது
தப்பில்ல.., - ஆனா..
இனிமேலும் தெரிஞ்ச்சிக்காம
இருக்கிறது ரொம்ப தப்பு..!

பின் குறிப்பு : மேலே இருக்கும் படத்தில்
இருப்பது நேதாஜியே அல்ல..,
இதை நீங்க கண்டு பிடிச்சீங்களா.?
.
.

10 Comments:

Anonymous said...

all your comments abt. our beloved Nethaji are true... of course after reading the line only i saw it& found that....

ஜிஎஸ்ஆர் said...

உண்மைதான் நேதாஜியை பற்றி நமது அரசாங்கம் கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லையென என்பது தெரிகிறது


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

ipl live said...

உண்மைதான், நாம் நேதாஜி வழியில் சதந்திரம் வாங்கியிருந்தால் நம் நாடு 20 வருடங்களுக்கு முன்பே வல்லரசு ஆகியிருக்கும்.

LK said...

nehru maatrum gandhin pangu kurainthu vida pogirathu endra ore kaaranthukaga nethajin pangu velichattuku varala

வெங்கட் said...

GSR.,
உண்மைதான் சார்..,
அவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை.,
தொந்தரவு அல்லவா கொடுத்தார்கள்.

வெங்கட் said...

IPL Live.,
உங்க கருத்தை நான்
அப்படியே வழிமொழிகிறேன்..

வெங்கட் said...

LK.,
நான் சொல்ல தயங்கினதை
நீங்க தைரியமா சொல்லிட்டீங்க..
நன்றி..

LK said...

@venki

namaku manasula patta tappunu sollidanum. pposi molugarathu enaku pidikathu

வெங்கட் said...

LK.,
எல்லோராலயும் அப்படி இருக்க
முடியலையே சார்..
இருந்தாலும் உங்க கருத்தை
ஏத்துகிட்டு., அப்படி நடக்க
முயற்சி பண்ணுறேன் சார்..

cheena (சீனா) said...

புத்தக அறிமுகமும் நேதாஜி பற்றிய ஆதங்கமும் அருமை - நல்வாழ்த்துகள் வெங்கட்