சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 June 2010

மன்னிச்சுக்கோங்க ஜி...!



















நேத்து ஒரு SMS படிச்சேன்..

யாரோ நிக்க வெச்சு கன்னத்துல
பளார்., பளார்னு அறையிற
மாதிரியே இருந்தது..

அது ஜோக்கை பத்தின SMS.,
ஆனா ஜோக்கான SMS இல்ல..

நாம நிறைய சர்தார்ஜி ஜோக்ஸ்
படிச்சிருக்கோம்., சிரிச்சிருக்கோம்.,
மத்தவங்களுக்கு Forward-ம்
பண்ணி இருக்கோம்..

ஆனா ஒரு தடவை கூட
சர்த்தார்ஜிகளை இப்படி கிண்டல்
பண்றது சரியான்னு யோசிச்சி
இருக்க மாட்டோம்...

Actualy இந்த சர்தார்ஜி ஜோக்ஸ்
ஆரம்பிச்சி வெச்சதே
இங்கிலீஸ்காரங்க தான்..

சுதந்திர போராட்ட காலத்தில
இங்கிலீஸ்காரங்களுக்கு
பெரிய தலைவலியே
சர்தார்ஜிஸ் ( பஞ்சாப் மக்கள்) தான்..

அவங்கதான் எல்லா
போராட்டங்கள்லயும்
முழு மூச்சா கலந்துகிட்டாங்க..
ஆக்ரோஷமா போராடினாங்க..

உதாரணத்துக்கு..,

விடுதலை போராட்டத்தை ஒடுக்க
பிரிட்டிஷ் அரசு கொடூரமான
அடக்குமுறை சட்டத்தை
பஞ்சாப் சட்டசபையில
நிறைவேற்றியது.

அதை எதிர்த்து சட்டமன்றத்தில்
குண்டு போட்ட மாவீரன் பகத்சிங்..

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு
உத்தரவிட்ட " Michael O'Dwyer -ஐ "
21 வருஷம் Wait பண்ணி.,
லண்டனுக்கே போயி சுட்ட
உத்தம்சிங்..

இவங்கல்லாம் சர்தார்ஜிங்க
வீரத்துக்கு ஒரு சின்ன Sample...

சுருக்கமா சொல்லணும்னா..,
இங்கிலீஸ்காரனோட
கோபத்தின் வெளிப்பாடு - ஜாலியன் வாலாபாக்
இயலாமையின் வெளிப்பாடு - சர்தார்ஜி ஜோக்ஸ்

இன்னிக்கும் நம்ம
இந்திய ராணுவ வீரர்கள்ல
அதிகபடியானவங்க சர்தார்ஜிங்க தான்..

இப்படி தேசபற்று மிக்கவங்களை
"முட்டாள்னு " நாம சொல்றது சரியா..??

இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன்..
" Singh iz King "


ஹாய் வெங்கட் : ( கேள்வி-பதில் )
-----------------------------------

( கீர்த்தி )
School, College-ல எல்லாம் பியூன்
கொண்டு வர்ற " Circular " Notice
ஏன் Rectangular Paper-ல இருக்கு..?

அதுல இருக்கிற Matter
நாலா பக்கமும் போய் சேரணுமில்ல..
அதுக்குதான்..

இன்று ஒரு தகவல் :
---------------------

கஷ்ட்டப்பட்டு வேலை பண்ணுங்க..,
பணக்காரங்க எல்லாம் உங்களை
நம்பிதான் இருக்காங்க...!!
.
.

42 Comments:

முனைவர் இரா.குணசீலன் said...

சுருக்கமா சொல்லணும்னா..,
இங்கிலீஸ்காரனோட
கோபத்தின் வெளிப்பாடு - ஜாலியன் வாலாபாக்
இயலாமையின் வெளிப்பாடு - சர்தார்ஜி ஜோக்ஸ்


அருமை.

Chitra said...

சர்தார்ஜிகள் பற்றி இது போல விஷயங்களை கேள்விப்பட்டு இருக்கேன். அதன் பின், சர்தார்ஜி ஜோக்ஸ் வந்தாலும் யாருக்கும் forward பண்ணுவதில்லை.

ரசிகன் said...

Cool Cool Cool... சர்தார்ஜி ஜோக்ஸ்க்கு சிரிக்கறதாலயோ, Forward பண்ணறதாலயோ, நாம அவங்களை முட்டாள்னு நினைச்சிடுறோம்னு ஆகிடாது.. அப்படி பார்த்தா உயிர காப்பாத்துற டாக்டர்ஸ் , பாடம் சொல்லி தர்ற வாத்தியார்னு உணர்ச்சி வசப்பட்டுகிட்டே போனா, ஜோக்ஸ்க்கு கருப்பொருளே இருக்காது.. சர்தார்ஜி ஜோக்ஸ்கு பேர் போனவரே, குஷ்வந்த் சிங்னு ஒரு பஞ்சாபி தான்.. (அறை வாங்கின கன்னத்துக்கு கொஞ்சம் ஒத்தடம் குடுக்கலாமேன்னுதான் இந்த கருத்தை சொன்னேன்)..

பெசொவி said...

சர்தார்ஜி ஜோக்குகளைப் பிரபலப் படுத்தியதே குஷ்வந்த் சிங் என்னும் சீக்கியர்தான் என்பது என் நினைவு. நிற்க, அந்த ஜோக்குகளை ஜோக்குகளாக மட்டும் பார்க்கத் தெரிந்தால் சர்தார்ஜிக்களை இழிவு படுத்துகிறோம் என்னும் எண்ணம் வராது. இது தவிர, வடக்கே சென்றால், ஒட்டுமொத்த தென்னக மக்களையும் மதராசி என்று பொதுவாக இழிவுபடுத்துவது இன்னும் நிற்கவில்லை என்பது நிதரிசனம்.

Paleo God said...

:))

ManA said...

சர்தார்ஜிகள் பற்றி இப்படி ஒரு மேட்டர் இப்போதான் கேள்விப் படுறன்.. பாவம் அவங்கள வச்சி எவளவு காமடி பண்றாங்க .. நான் திருந்திட்டன். !!

உங்கள் கண்ணன் said...

வடக்கே சென்றால், ஒட்டுமொத்த தென்னக மக்களையும் மதராசி என்று பொதுவாக இழிவுபடுத்துவது இன்னும் நிற்கவில்லை என்பது நிதரிசனம்....உண்மைங்க ....ஏய் ..மாதரசி...என அலட்சியமாக தான் பார்ப்பவர்கள்...அதிகம்... ஜோக்குகளை ஜோக்குகளாக மட்டும் பார்போம்...ரொம்ப உணர்ச்சி வச பட வேண்டாம்...

soundr said...

//வடக்கே சென்றால், ஒட்டுமொத்த தென்னக மக்களையும் மதராசி என்று பொதுவாக இழிவுபடுத்துவது இன்னும் நிற்கவில்லை ...ரொம்ப உணர்ச்சி வச பட வேண்டாம்...//

repeattuuu...

அனு said...

சீரியஸ் போஸ்ட்-ல காமெடி கமெண்ட் போட்டா ஜனா-வின் கோபத்துக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால் "நல்ல பதிவு வெங்கட், keep it up" என்பதை மட்டும் போட்டு விட்டு எஸ்கேப் ஆகிடுறேன் :)

@ரமேஷ்,அருண்
ரொம்ப சீரியஸான matter ஓடிட்டு இருக்கு.. ஸோ, நம்ம discussions எல்லாம் உங்க farmville பதிவுகள்-ல போய் வச்சிப்போம்..

பெசொவி said...

//அதுல இருக்கிற Matter
நாலா பக்கமும் போய் சேரணுமில்ல..
அதுக்குதான்..
//

ஆனா எங்க ஸ்கூல்ல எட்டு திசைகள் இருக்கறதா சொல்லிக் கொடுத்திருக்காங்களே! அப்போ சர்க்குலர் எண்கோணத்தில இருக்க வேணாமா?
இப்படிக்கு எதிலும் குற்றம் பார்ப்போர் சங்கம்

அருண் பிரசாத் said...

யப்பா! யாருப்பா அது, வெங்கட் ரொம்ப சீரியஸ் - அ பதிவு போட்டிருக்கார் அவருக்கு ஒரு லசி யும் அவர் friend ஜனாவுக்கு டீயும் சொல்லுப்பா. நாங்க இந்த விளையாட்டுக்கு வரலை. நமக்கு பிடுங்க வேண்டிய ஆணி நிறைய இருக்கு. தமிழ் அ ஒழுங்கா TYPE பண்ணலைனா வேற வெங்கட் கோபித்து கொள்வார். COACHING CLASS போகணும் போல பின்னே எனக்கு யார் HOME WORK எழுதி கொடுப்பார். வெங்கட் நானே கஷ்டப்பட்டு தமிழ்ல TYPE செய்திருக்கிறேன் அதுக்காக பாராட்டலாம் வேணாம். அது எங்க சங்க கொள்கைக்கு எதிரானது.
(உஸ்ஸ்ஸ்ஸ் ஏதோ ஒரு கம்மெண்ட போட்டாச்சு)

அருண் பிரசாத் said...

@ வெங்கட், அனு, ரமேஷ்
FAMRVILLE கேம் பார் INSTALL செய்தால் 10 FV CASH கிடைக்குது. TRY செய்தீர்களா? நான் நேற்றுதான் செய்தேன், WORKOUT ஆச்சு

சிநேகிதன் அக்பர் said...

சர்தார்ஜீல ஒரு பிச்சைக்காரர் கூட இல்லையாம். அப்படியா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@ரமேஷ்,அருண்
ரொம்ப சீரியஸான matter ஓடிட்டு இருக்கு.. ஸோ, நம்ம discussions எல்லாம் உங்க farmville பதிவுகள்-ல போய் வச்சிப்போம்..//

ஆமா அணு வெங்கட் இப்படி ஏமாத்துவாருன்னு நான் கனவுல கூட நினைக்கல. கலாய்க்க முடியாம போச்சே...

அனு said...

@அருண்

//FAMRVILLE கேம் பார் INSTALL செய்தால் 10 FV CASH கிடைக்குது. TRY செய்தீர்களா? //

உங்க ப்ளாக்லயே reply போட்டிருக்கேன்.. பாருங்க..

M. Azard (ADrockz) said...

நான் ஒரு இலங்கையன். அதனால் சர்தாஜிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் கிட்டியதில்லை. ஆனால் அவர்களை இழிவுபடுத்தும் sms களை பார்க்கும் பொது மனம் நொந்தது உண்டு.. இது சம்பந்தமான உங்கள் பதிவு மிகவும் அருமையானது .. மனமார்ந்த வாழ்த்துக்கள்

Keerthi Kumar said...

என்னதான் கிண்டல் பண்ணாலும் நாம அவங்கள sardar-"ஜி" ன்னு மரியாதையாதான் சொல்லறோம்!

நம்பள கிண்டல் பண்றவங்களுக்கு இடமே குடுக்க கூடாதுன்னு "madras"a சென்னைன்னு மாத்திட்டோம்!

இப்போ சொல்லுங்க... யாரு கிங்!

வெங்கட் said...

@ சித்ரா..,
// சர்தார்ஜிகள் பற்றி இது போல
விஷயங்களை கேள்விப்பட்டு இருக்கேன். //

என்னென்ன விஷயங்கள்னு சொல்லி
இருந்தா நல்லா இருந்திருக்கும்..
தெரியாதவங்க தெரிஞ்சிக்குவோம்ல..

// சர்தார்ஜி ஜோக்ஸ் வந்தாலும் யாருக்கும்
forward பண்ணுவதில்லை. //

நான் இனிமே சர்தார்ஜி ஜோக்ஸ்
வந்தா., அதை " Mr. X -ன்னு "
Edit பண்ணி அப்புறம் Forward
பண்ண போறேன்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// உயிர காப்பாத்துற டாக்டர்ஸ் ,
பாடம் சொல்லி தர்ற வாத்தியார்னு
உணர்ச்சி வசப்பட்டுகிட்டே போனா,
ஜோக்ஸ்க்கு கருப்பொருளே இருக்காது.. //

டாக்டர் ஜோக்கும்., சர்தார்ஜி ஜோக்கும்
ஒரே மாதிரி தான்னு சொல்ல வர்றீங்க..
இதுல எனக்கு மாற்று கருத்து இருக்கு..

எந்த டாக்டரும்.,
டாக்டராவே பிறக்கறதில்ல.,
ஆனா ஒவ்வொரு சர்தார்ஜியும்
சர்தார்ஜியாதான் பிறக்கறாங்க..

டாக்டர் ஜோக் கேட்டு டாக்டர்
Tension ஆகறதில்லை தான்.. உண்மை.
ஆனா
சர்தார்ஜி ஜோக் கேட்டு சர்தார்ஜிங்க
Tension ஆகறதில்லையான்னு
யாராவது கேட்டு சொன்னா
நல்லா இருக்கும்..

ரசிகன் said...

//எந்த டாக்டரும்.,
டாக்டராவே பிறக்கறதில்ல.,
ஆனா ஒவ்வொரு சர்தார்ஜியும்
சர்தார்ஜியாதான் பிறக்கறாங்க.. //

குறிப்பிட்ட சமூகத்தினரை கிண்டல் பண்ணுறது தப்புன்னு
நீங்க கருத்து சொல்லி இருந்தா , இந்த point ok..
ஆனா, சர்தார்ஜிகள் வீரர்கள், தேச பக்தர்கள்,
அப்படின்னுல்ல காரணம் சொல்லி இருக்கீங்க..

கஷ்டப்பட்டு உழைச்சி டாக்டர் ஆனவங்களை
கிண்டல் பண்றது OKன்னா, கஷ்டமில்லாம சர்தார்ஜி
ஆனவங்களை base பண்ணின ஜோக்ஸ் மட்டும் எப்படி தப்பாகும்..

பகத்சிங் மாவீரர்தான். மாற்றுக்கருத்தே இல்ல...
ஆனா வாஞ்சிநாதனோட வீரம் எந்த விதத்துல குறைஞ்சி போச்சு..

சாகப்போறோன்னு தெரியாம ஜாலியன்வாலாபாக் போன மக்களின்
முடிவு கண்டிப்பா துடிக்க வைக்கிற விஷயம்தான்...
ஆன அது அங்க மட்டும்தான்னு ஏன் சொல்லனும்?
சாகடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சும் கொடிய தூக்கி பிடிச்ச
குமரன மறக்கவோ மறுக்கவோ முடியுமா...?

(அடடா, சுதந்திர தின விழா பேச்சு போட்டி மாதிரி இல்ல போகுது...
சரி...STOP )

வெங்கட் said...

@ பெ.சொ.வி..,

// அந்த ஜோக்குகளை ஜோக்குகளாக மட்டும் பார்க்கத் தெரிந்தால் சர்தார்ஜிக்களை இழிவு படுத்துகிறோம் என்னும் எண்ணம் வராது.
வடக்கே சென்றால், ஒட்டுமொத்த தென்னக மக்களையும்
மதராசி என்று பொதுவாக இழிவுபடுத்துவது இன்னும் நிற்கவில்லை என்பது நிதரிசனம். //

அவங்க நம்மள மதராசின்னு
இழிவுபடுத்தறாங்கன்னு சொல்றீங்க..
சரி..
நாமளும் அவங்கள
கேவலப்படுத்தி ஜோக் சொல்றோம்..
ஆனா இது இழிவில்லைன்னும்
சொல்றீங்க.. லாஜிக் புரியலையே..!!?

ரெண்டுமே தப்பு தான்..

இது நிலை மாறணும்னு நினைச்சா..
வாங்க., அது நம்மகிட்டே இருந்து
ஆரம்பிக்கட்டும்..

வெங்கட் said...

@ ManA.,

// சர்தார்ஜிகள் பற்றி இப்படி ஒரு மேட்டர்
இப்போதான் கேள்விப் படுறன்.. பாவம்
அவங்கள வச்சி எவளவு காமடி பண்றாங்க .. நான் திருந்திட்டன்.//

தெரியாம பண்றது " தவறு "
தெரிஞ்சே பண்றது " தப்பு "

நாம பண்ணிட்டு இருக்கறது
" தவறு " தானே தவிர " தப்பு " இல்ல..

So., ஒவ்வொருத்தரும் குறைஞ்சது
நாலுபேர்கிட்டயாவது இந்த Matter-ஐ
சொல்லணும்..

நீங்க மாறினது எனக்கு ரொம்ப
சந்தோஷங்க..

வெங்கட் said...

@ அனு., அருண்., ரமேஷ்..,

பாராட்டி எப்படி Comment போடுறது..?
அதுக்கு கட்சி கொள்கை
ஒத்துக்காதேன்னு ரொம்ப Confuse
ஆயிட்டீங்கன்னு நினைக்கறேன்..

Don't Worry.. நான் அடிக்கடி எல்லாம்
இப்படி எழுதமாட்டேன்.. ( தெரியாதில்ல..)

வெங்கட் said...

@ ரசிகன்.,

நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க..
டாக்டர்ங்கறது ஒரு Profession..

ஒருத்தர் டாக்டர் ஆகறதுக்கு
முன்னாடி ( For eg 20 வருஷம் )
அவரும் சாதாரண பொது மனுஷன்
தான். அப்பல்லாம் அவரும் டாக்டர்
ஜோக்கை கேட்டு சிரிச்சிருப்பாரு...

ஆனா எந்த சர்தார்ஜியும் அவங்களை
கிண்டல் பண்ணின ஜோக்கை
கேட்டு சிரிப்பாங்களான்னு தான்
கேட்டு இருந்தேன்..

ஆமா எதுக்கு வாஞ்சிநாதன், குமரன்
இவங்களை பத்தி எல்லாம்
சொல்லியிருக்கீங்க..??

வர வர நீங்களும் " நீயா..? நானா..? "
கோபிநாத் மாதிரி ஆயிட்டீங்க..
நல்லா கோர்த்து விடறீங்கன்னு சொல்றேன்..

வெங்கட் said...

@ கீர்த்தி.,

// என்னதான் கிண்டல் பண்ணாலும் நாம
அவங்கள sardar-"ஜி" ன்னு மரியாதையாதான்
சொல்லறோம்!
நம்பள கிண்டல் பண்றவங்களுக்கு இடமே
குடுக்க கூடாதுன்னு "Madras" சென்னைன்னு
மாத்திட்டோம்!
இப்போ சொல்லுங்க... யாரு கிங்..! //

ஆஹா என்ன ஒரு சிந்தனை..
I like it...

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// சர்தார்ஜி ஜோக்குகளைப் பிரபலப்படுத்தியதே
குஷ்வந்த் சிங் என்னும் சீக்கியர்தான் //

அதுக்காக நாம பண்றது சரின்னு
சொல்ல வர்றீங்களா..??

இப்ப உதாரணத்துக்கு..,
நீங்க உங்க பையனை திட்டறீங்க..
பார்த்திட்டு இருக்கிற நானும்
உங்க பையனை திட்டிட்டு..

" ஏங்க நீங்களே உங்க பையனை
திட்டும் போது நான் திட்டக்கூடாதான்னு..?? "
கேட்டா அது சரியா..?

வெங்கட் said...

இங்கே என் கருத்துக்கு ஆதரவு
தெரிவித்த அனைவருக்கும் நன்றி..

ஒரு சின்ன மாற்றத்தையாவது
நாம உண்டு பண்ணலாம்..
என்ன நான் சொல்றது..?

ரசிகன் said...

//ஆமா எதுக்கு வாஞ்சிநாதன், குமரன்
இவங்களை பத்தி எல்லாம்
சொல்லியிருக்கீங்க..?? //

வீரம்ன்றது பஞ்சாப்ல மட்டும் விளையல
இந்தியா முழுக்க உண்டுன்னு சொல்லதான்...

வீரர்களே இல்லாதிருந்தால், அந்த சமூகத்தை
கிண்டல் அடித்தால் பரவாயில்லயான்னு கேட்கதான்..

ஒரு இந்தியாகார‌ன், ஒரு அமெரிக்காகார‌ன்னு
ஆர‌ம்பிக்க‌ற‌ ஜோக்ஸ‌ ப‌டிச்ச‌தில்ல‌யா, இல்ல‌
அதுக்கெல்லாம் நீங்க டென்ஷன் ஆனதில்லயா?

//இப்படி தேசபற்று மிக்கவங்களை
"முட்டாள்னு " நாம சொல்றது சரியா..??//

ஜோக் கேட்கும் போது Mr.X ட‌ர்ப‌னோட‌ உருவ‌கிக்க‌ப்படுராரே த‌விர‌,
ட‌ர்ப‌ன் க‌ட்டின‌ எல்லாரும் முட்டாள்னு நினைக்க‌ற‌தில்ல‌..

//Mr. X -ன்னு "
Edit பண்ணி அப்புறம் Forward
பண்ண போறேன்..//

பார்த்துங்க‌.. அது என்ன‌ எல்லா‌ முட்டாளும் Mr. தானா?
அது எப்ப‌டி ஆண்க‌ளை ம‌ட்டும் முட்டாள்னு சொல்ல‌லாம்னு,
இன்னொரு ப‌திவ‌ர் கொதிச்சிட‌ போறார்...
எதுக்கும் Xன்னு மட்டும் அடிங்க..

வெங்கட் said...

@ ரசிகன்.,

எனக்கென்னவோ இது " நீயா..? நானா..? "
Program மாதிரியே இருக்கு..

நான் ரசிகன் வீட்டுக்கு போறேன்..

ரசிகன் : வாங்க., வாங்க..

நான் : நான் எதையும் வாங்க வரலைங்க..

ரசிகன் : அதான் என்கிட்ட உதை வாங்கிட்டு
போக போறீங்களே..!!

நான் : ஓ.. நீங்க ரொம்ப புத்திசாலிங்க..

ரசிகன் : அப்ப எங்க வீட்ல இருக்கிற
மத்தவங்க எல்லாம் முட்டாள்னு
சொல்றீங்களா..??

நான் : ?*#$#&^%$$## ?/


// அது என்ன‌ எல்லா‌ முட்டாளும் Mr. தானா?
அது எப்ப‌டி ஆண்க‌ளை ம‌ட்டும்
முட்டாள்னு சொல்ல‌லாம்னு, //

ஆஹா.. நல்ல வேளை காப்பாத்திட்டீங்க..
இனிமே " X " மட்டும் தான்.. " Mr " கட்..

Paleo God said...

//// அது என்ன‌ எல்லா‌ முட்டாளும் Mr. தானா?
அது எப்ப‌டி ஆண்க‌ளை ம‌ட்டும்
முட்டாள்னு சொல்ல‌லாம்னு, //

ஆஹா.. நல்ல வேளை காப்பாத்திட்டீங்க..
இனிமே " X " மட்டும் தான்.. " Mr " கட்..//
என்ன அனியாயம் இது X என்பது அனைத்து பாலினரையும் குறிப்பதாகாதா?? அப்ப அனைவரும் முட்டாள் என்கிறீர்களா?? ( நான் chromozome பற்றி சொன்னேன்..ஹிஹி)

ஜனா said...

எல்லோருக்கும் வணக்கம்பா / மா (அப்புறம் மகளிர் அணி கோவிக்கும்)...

என்ன ஞாபகம் வச்சி comment போட்ட
நம்ம தல ரமேஷ்,அனு,அருண் ரொம்ப நன்றிங்க...

@ரசிகன்...
இவங்களுக்காக நான் comment போட வேண்டியாத போச்சி...

வெங்கட் சொன்னத நீங்க தவறான
கண்ணோட்டத்தில பாக்குறீங்க...
மேலோட்டமா பார்த்தா உங்க matter-க்கு
கைதட்ட தொணும் (ஆஹா என்னமா நம்ம
தமிழனுக்கு support பண்ணுறாங்கன்னு)
உண்மை அது இல்ல....

இந்த பதிவுல ஒரு இடத்துல் கூட தமிழர்களை
மட்டம் தட்டி சொல்லல....அப்படி இருக்கும்
போது உங்க பின்னுட்டம் மரடோனாவுக்கும்,
கிரிக்கெட்டுக்கும் முடிச்சி போடுற மாதிரி இருக்கு...

உங்க பின்னுட்டம் இப்படித்தான் இருக்கு....

ஞாநி

சென்னையில் சில குடியிருப்புகளை அரசு அகற்றியதைப் பற்றியும் அதன் காரணமாக பள்ளிச் சிறுவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதையும் ஞாநி விரிவாக எழுதியிருந்தார். ஈழப் பிரச்சனை பற்றி பேசும் எந்த அரசியல்வாதியும் இது குறித்து கவலைப்படவில்லை என்று முத்தாய்ப்பாக முடித்திருந்தார்.

அதற்க்கு பதில்... (ரசிகனுக்கு இது தான் பதில்)

நம் வீட்டில் இருப்பவருக்கு காய்ச்சல் வந்துவிட்டது. முடியாமல் படுத்திருக்கிறார். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவருக்கு விபத்து நடந்துவிட்டது என்றால் நாம் முதலில் அவருக்குத்தான் உதவ வேண்டும். அதுதான் மனிதாபிமானம். முதலில் தமிழ்நாட்டு பிரச்சனையை கவனிக்கவேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. இங்கே கொத்து கொத்தாக மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்களா ? பல நூறு பெண்கள் கற்பழிக்கப் படுகிறர்களா ? வாழ்வு வசதிகளை இழந்து மண்ணோடு மண்ணாக புதைக்கப் படுகிறார்களா ? எஞ்சியுள்ள மிச்சப்பேரையும் அனுஅனுவாக பட்டினி போட்டு சித்திரவதை செய்கிறார்களா ? இங்கே இது நடக்கிறதா ? சொல்லுங்கள் …போராடலாம்.
-----------------

குறிப்பு:

இங்க ஞாநி = நம்ம ரசிகன்
ஈழம் = சர்தார்ஜி.

பெரிய பின்னுட்டத்திற்க்கு மன்னிக்க...

HVL said...

இவ்வளவு யோசிக்கலைன்னாலும் கொஞ்சம் யோசிச்சிருக்கேன்! இதுவரை எனக்கு வந்தவற்றை யாருக்கும் ஃபார்வேர்ட் செய்ததில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன வெங்கட் உங்க ப்ளாக் கையும் ஹேக் பண்ணிட்டாங்களா. மேட்டர் இவ்ளோ சீரியஸ்ஸா போகுது. யாருப்பா அது டீ இன்னும் வரலை

அருண் பிரசாத் said...

ஒத்துக்கறேன் இந்த பதிவு சீரியஸ் பதிவு தான்னு ஒத்துக்கறேன். ( ஜனா யாரையாவது திட்டினா அது சீரியஸ் பதிவுன்னு எழுத படாத விதி ) NEXT பதிவுல MEET பண்ணுறேன்.

@வெங்கட்
சீக்கிரமா அடுத்த பதிவ போட்டுடுங்க, வீணா ஒரு கொலை கேஸ் ல மாட்ட போறிங்க

நல்ல வேலை நம்ம சங்கம் இதுல இருந்து ஒதுங்கியே இருந்தது. கலவர பூமில நமக்கு எதுக்கு காத்து?

ரசிகன் said...

@ஜ‌னா..

அவ‌ர் க‌ருத்து த‌ப்புன்னு சொல்ல‌ல‌...
It is not That intentional to get so emotional ன்னு சொன்னேன்...
(டீக்கடை நாயர், வட்டிக்கடை சேட்,
கசாப்பு கடை பாய்... சமையல்கார ஐயர்..
இந்த மாதிரி, சொல் பழக்கத்துல வர்ற விஷயம்.. )
அதை மாத்திக்க‌ அவ‌ர் சொல்ற‌ கார‌ண‌ம் தான் பொருன்த‌ல‌ன்னு சொன்னேன்...

அப்புற‌ம்.. நான் போய் Complan குடிச்சிட்டு இன்னும் கொஞ்ச‌ம் வ‌ள‌ர்ந்துட்டு வ‌ந்து
உங்க‌ மீதி Commentஐ ப‌டிச்சிகிறேன்...

(ப‌திவ‌ரே.. ஜ‌னாவ‌ க‌மெண்ட் போட‌ வ‌ச்சாச்சு,.. சொன்ன‌ ப‌ண‌த்தை அக்க‌வுண்ட்ல‌ போட்டுடுங்க‌..)

வெங்கட் said...

@ ஷங்கர்.,

// என்ன அனியாயம் இது X என்பது அனைத்து
பாலினரையும் குறிப்பதாகாதா??
அப்ப அனைவரும் முட்டாள் என்கிறீர்களா?? //

ஆஹா.. கால் வெக்கிற இடமெல்லாம்
கண்ணி வெடி வெக்கறாங்களே..?!!

விக்னேஷ்வரி said...

சர்தார்ஸைப் பத்தி உண்மை சொன்னதுக்கு நன்றிகள். அவங்களை எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

மாலா said...

@ வெங்கட்,ரசிகன்,ஜனா.

ஏம்பா இவங்கள எல்லாம் விட்டுட்டீங்க?
கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், மா சே துங்,
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ,
லெனின், V.T. விஜயன்.( ஓ, இவரு எடிட்டரோ.!)

வெங்கட் said...

@ ஜனா.,

ரொம்ப பவர்புல் Comment.,
நான் மேலோட்டமா சொன்ன
கருத்தை நீ அழுத்தமா சொல்லி
இருக்கே.. ரொம்ப Hot...

ரொம்ப Tension ஆயிட்டயோ..?!!
Cool.. Cool..
என்ன இருந்தாலும் ரசிகன்
நம்ம ஆளுப்பா..
சொன்னா புரிஞ்சிக்குவாரு..

வெங்கட் said...

@ எல்லொருக்கும்..,

எப்பவும் ஒரு விஷயத்துக்கு
கருத்து, மாற்று கருத்துன்னு
ரெண்டு விஷயம் இருக்கும்..

விவாதம் பண்ணும் போதுதான்
அந்த மாற்றுக்கருத்தை நாம
தெரிஞ்சிக்க முடியும்..

இங்கே என் கருத்துக்கு சில பேர்
ஆதரவு தெரிவிச்சி இருக்கீங்க..
அதே சமயம்
ரசிகன் சொல்றது சரிதானேன்னு
சிலர் பேர் போன் பண்ணி
என்கிட்ட கேட்டாங்க..

அதனால நான் என்ன சொல்றேன்னா..

இங்கே ஒரு விவாதம் நடந்து இருக்கு.,
அதுல உங்க மனசுக்கு எது சரின்னு
படுதோ அதை எடுத்துக்கோங்க..
No Problem..

Anonymous said...

இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன்..
" Singh iz King "


ந‌ல்ல‌ த‌கவ‌ல் + ப‌திவு.

கஷ்ட்டப்பட்டு வேலை பண்ணுங்க..,
பணக்காரங்க எல்லாம் உங்களை
நம்பிதான் இருக்காங்க...!!


கொல்லா....

எந்த டாக்டரும்.,
டாக்டராவே பிறக்கறதில்ல.,
ஆனா ஒவ்வொரு சர்தார்ஜியும்
சர்தார்ஜியாதான் பிறக்கறாங்க..


ந‌ல்ல‌ பதில்...

ஏங்க நீங்களே உங்க பையனை
திட்டும் போது நான் திட்டக்கூடாதான்னு..?? "
கேட்டா அது சரியா..?

நல்ல உதாரணம்...
நல்ல சிந்திக்கிறீங்களே...

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

சர்தார்ஜிகள் அவர்களையே கிண்டல் பண்ணிக் கொள்வார்கள் - அவர்கள் வீரத்திலும் உழைப்பினிலும் சிறந்தவர்கள்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா