சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

08 February 2011

சூப்பர் கம்பெனி...!!

நேத்து காலையில என் Wife
அவங்க தம்பி கல்யாணத்துக்கு
கிளம்பிட்டு இருந்தாங்க..

நான் கொஞ்சம் பீலிங்கா இருந்தேன்..
ஏன்னா.., அதுக்கு ஒரு Flashback இருக்கு..
அதை தெரிஞ்சிக்க க்ளிக் Here..

நான் பீலிங்கா இருந்ததை பார்த்த
என் Wife என்கிட்ட..

" ஏங்க ஒரு மாதிரி இருக்கீங்க..?
கல்யாணத்துக்கு போகணும்ல..
சீக்கிரம் எந்திச்சி ரெடி ஆவுங்க... "

" உன் தம்பி கல்யாணத்துக்கு
வர்றதுல எனக்கு 2 கவலை...!! "

" உங்களுக்கு என்ன கவலை..? "

" என் சகலை வேற ஊர்ல இல்லையாம்..
கல்யாணத்துல எனக்கு யார் கம்பெனி
குடுப்பா..? "

" கவலைப்படாதீங்க.. எங்க அண்ணன்
இருக்கான்.. அவன் கம்பெனி குடுப்பான்..!! "

" ம்ஹூம்... என் ரெண்டாவது கவலையே
அதானே..!! "

என் Wife கோபத்துல முறைச்சாங்க..

பார்ரா..! இவங்க அண்ணன் தம்பிகளை
கிண்டல் பண்ணினா மட்டும் என்னாமா
கோவம் வருதுன்னு..

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது
மனைவியை கோபப்படுத்தி பாக்குற
சந்தோஷம் இருக்கே..

அதெல்லாம் அனுபவிச்சு பாக்கணும்..!!
ஹி., ஹி..!!

கொஞ்சம் நேரத்துல என் Wife-க்கு
ஒரு போன் வந்தது..

போன் பேசிட்டே என் Wife
என்கிட்ட..

" எங்க அண்ணன் தான் போன்
பண்ணி இருக்கான்..!! "

" என்ன சொல்றான்..? "

" நீங்க கல்யாணத்துக்கு வந்து
உங்க Blog பத்தி பேசறதா இருந்தா
அவன் கல்யாணத்துக்கே வரலையாம்.. !! "

" அடப்பாவிகளா.......! "

டிஸ்கி : என்ன பார்க்குறீங்க..?
இந்த பதிவுல இருக்கறது
நம்ம Friend கல்யாண போட்டோ..!!

அடங்க மாட்டோம்ல...
ஹி., ஹி., ஹி..!!
.
.

66 Comments:

Chitra said...

" நீங்க கல்யாணத்துக்கு வந்து
உங்க Blog பத்தி பேசறதா இருந்தா
அவன் கல்யாணத்துக்கே வரலையாம்.. !! "

.....அவ்வ்வ்வவ்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது என்னமோ உங்க wife-வோட அண்ணன் அவங்க wife-கிட்ட உங்களை பத்தி சொன்ன மாதிரி இருக்கு. ப்ளாக் மேட்டர் மட்டும் நீங்க add பண்ணிருக்கீங்க

ரசிகன் said...

அப்பாடா... World cup வரப்போகுதே.. உலக த்ருஷ்டியெல்லாம் நம்ம Dhoni மேல தான் இருக்குமேன்னு கவலை பட்டுட்டு இருந்தேன்..
ஒரு வழியா த்ருஷ்டி கழிஞ்சது.. இனி பயமில்ல..

விக்கி உலகம் said...

இப்படியெல்லாமா பல்பு வாங்குறது ஹி ஹி!!

middleclassmadhavi said...

:))

Anonymous said...

//ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது
மனைவியை கோபப்படுத்தி பாக்குற
சந்தோஷம் இருக்கே..

அதெல்லாம் அனுபவிச்சு பாக்கணும்.//


ஆமாங்க.. அப்புறம் வாங்கின அடிய பத்தி சொல்லவேயில்லையே...

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது
மனைவியை கோபப்படுத்தி பாக்குற
சந்தோஷம் இருக்கே..

அதெல்லாம் அனுபவிச்சு பாக்கணும்..!!
ஹி., ஹி..!!//

அப்போ அடி வாங்கி அனுபவிச்சு பார்த்து ஒரு பதிவு எழுதுங்க வெங்கட் ....ஹ .........ஹா

Speed Master said...

ஸ்

Shalini(Me The First) said...

@ரமேஷ்
//இது என்னமோ உங்க wife-வோட அண்ணன் அவங்க wife-கிட்ட உங்களை பத்தி சொன்ன மாதிரி இருக்கு. ப்ளாக் மேட்டர் மட்டும் நீங்க add பண்ணிருக்கீங்//
எப்புடி எப்புடி உங்கள யார்னா திட்னா பக்கத்துல இருக்ரவர திட்ராங்கன்னும் பக்கத்துல இருக்கவங்கள பாராட்டுன உங்கள பாராட்ராங்கன்னும் நினைச்சுப்பீங்களே அப்புடியா?

@ரசிகன்
//அப்பாடா... World cup வரப்போகுதே.. உலக த்ருஷ்டியெல்லாம் நம்ம Dhoni மேல தான் இருக்குமேன்னு கவலை பட்டுட்டு இருந்தேன்..
ஒரு வழியா த்ருஷ்டி கழிஞ்சது.. இனி பயமில்ல..
//

என்னது தோனிக்கு கல்யாணமானது அவருக்கு த்ருஷ்டி கழிக்கவா? சொல்லவே இல்ல. லக்‌ஷ்மிராய்
ரசிகரோ தாங்கள்?

@இந்திரா
//ஆமாங்க.. அப்புறம் வாங்கின அடிய பத்தி சொல்லவேயில்லையே.//

எல்லாரும் இந்திராவா இருப்பாங்களா என்ன?! ;)

மங்குனி அமைச்சர் said...

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது
மனைவியை கோபப்படுத்தி பாக்குற
சந்தோஷம் இருக்கே..///

அதுனால ஏற்பட்ட பின்விளைவுகள பத்தி ஒன்னும் சொல்லலையே ???

மங்குனி அமைச்சர் said...

அவன் கம்பெனி குடுப்பான்..!! "///

அவரு என்னா கம்பனி வச்சிருக்காரு ??? அவரோட கம்பனிய உங்க கிட்ட கொடுத்திட்டா அப்புறம் அவரு என்ன செய்வாரு ???

Suresh Kumar M said...

" நீங்க கல்யாணத்துக்கு வந்து
உங்க Blog பத்தி பேசறதா இருந்தா
அவன் கல்யாணத்துக்கே வரலையாம்.. !! "

பொறாமையாக கூட இருக்கலாம்... ஆவ்வ்...

Lakshmi said...

புது பதிவு போடனும்னே புது விஷயங்கள் உங்களைத்தேடி வருதோ.?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நான் கொஞ்சம் பீலிங்கா இருந்தேன்..
ஏன்னா.., அதுக்கு ஒரு Flashback இருக்கு..
//

//இந்த பதிவுல இருக்கறது
நம்ம Friend கல்யாண போட்டோ..!!
//

பதிவு போடற சாக்கில பழைய பதிவுகளைப் படிக்க வைக்க சதி நடக்குதோ?

கோமாளி செல்வா said...

//நீங்க கல்யாணத்துக்கு வந்து
உங்க Blog பத்தி பேசறதா இருந்தா
அவன் கல்யாணத்துக்கே வரலையாம்.. //

இத படிச்சதுமே இந்த VKS காரங்க நாங்க நினைச்சோம் அவுங்க சொல்லிட்டாங்க அப்படின்னு நினைச்சிக்க வேண்டியது. ஆனா தலா உண்மைலேயே அவர் அப்படி சொன்னதுக்கு வேற காரணம் இருக்கு ..

அவர் சொன்னதுக்கு அஞ்சு காரணம் இருக்கு ..

1. உங்க ப்ளாக் பத்தி பேசினா நேரம் போறதே தெரியாது .

2. உங்க ப்ளாக் பத்தி பேசினா மாப்ளையும் பொண்ணும் கல்யாணம் அப்படிங்கிறதையும் மறந்திட்டு ப்ளாக் படிக்க போய்டுவாங்க.

3. உங்க ப்ளாக் படிச்சா இருக்குற அத்தன பேரும் சந்தோசத்துல சாப்பிட கூட மறந்துரூவாங்க .. இதழான அங்க இருக்குற சாப்பாடு வேஸ்ட் ஆகிடும் ..

4. உங்க ப்ளாக் பத்தி பேசினா அவருக்கு அவுங்க வீட்டுல திட்டு விழும் , நீங்களும் இப்படி ஒரு ப்ளாக் எழுதலாம்ல அப்படின்னு ..

5. உங்க ப்ளாக் பத்தி பேசினா அங்க இருக்குற நம்ம VAS அதாவது அங்க இருக்குற எல்லோருமே VAS தான .. அவுங்க உங்க கிட்ட ஆட்டோ கிரப் கேட்டு தொல்லை பண்ணுவாங்க ..

மேற்கண்ட காரணங்களால தான் அவர் அப்படி சொல்லிருக்கார் .. இப்பவாவது இந்த VKS காரங்க புரிஞ்சுக்குவாங்களா ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது
மனைவியை கோபப்படுத்தி பாக்குற
சந்தோஷம் இருக்கே..
//

VAS மெம்பர்சை நாங்க கோவப்படுத்தறதில இருக்கற சந்தோஷத்த விடவா?

MANO நாஞ்சில் மனோ said...

அதானே நாம அடங்குனதா சரித்திரம் பூகோளம் ஒன்றுமில்லை......

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் கோமாளி செல்வா, தெரிஞ்சோ தெரியாமலோ அவரு வீட்டு பக்கம் போயிராதே அவரை பாராட்டி நீ எழுதுன இந்த மினி பதிவுக்கு, உனக்கும் பூரிகட்டை அடி உண்டு.......

Shalini(Me The First) said...

@செல்வா

செம செம!

அங்க பாருங்களேன் கார்த்திய அனு என்naa திட்டு திட்ராங்கன்னு

அனு: அங்க பாரு அந்த செல்வா எவ்ளோ அறிவா பேசுறான் நீயும் தான் இருக்க எவ்ளோ ட்ரைனிங் குடுத்து அனுப்புனாலும் அடி வாங்கிட்டு வர்ரதே உன் பொழப்ப போச்சு

கார்த்தி: நான் என்னா பண்ண? அவங்க பாஸ் அப்புடி எங்க தலைவி(தி) இப்புடி...

செல்வா keep rocking :)))
VKSன் கண்ணு காது மூக்கில் புகை மட்டும் அல்ல லாவாவையே பொங்க வைத்த செல்வா வாழ்க!

Shalini(Me The First) said...

@பெசொவி
//VAS மெம்பர்சை நாங்க கோவப்படுத்தறதில இருக்கற சந்தோஷத்த விடவா?//

எங்கள்ட்ட அடி வங்குறதுனா அம்பூட்டு சந்தோசமா?!

எஸ்.கே said...

நீங்க கல்யாணத்து போனதாலதான் டோனி இவ்வள சந்தோசமா ஃபோட்டோல சிரிக்கிறாரோ?

எஸ்.கே said...

அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு என்ன அட்வைஸ் பண்ணீங்க? பிளாக் பத்தி பேசினீங்களா?

கோமாளி செல்வா said...

@ ஷாலினி :

//கார்த்தி: நான் என்னா பண்ண? அவங்க பாஸ் அப்புடி எங்க தலைவி(தி) இப்புடி...//

நம்ம தலைவர் மாதிரி யாரும் இருக்க முடியாது. பாவம் கார்த்தி தெரியாத்தனமா அங்க போய் சேர்ந்திட்டான். இப்ப அழுது என்ன பண்ணுறது ?
அனு அக்கவ சொல்லி என்ன பண்ணுறது..? முதல்ல அவுங்களுக்கு கட்சிய எப்படி நடத்துரதுனே தெரியாது .. அப்படியே எதாச்சும் தெரிஞ்சு சொன்னாலும் அங்க அவுங்க சொல்லுறத புரிஞ்சிக்கிற அளவுக்கு ஆளுங்க இல்ல ..

Shalini(Me The First) said...

@செல்வா
//அனு அக்கவ சொல்லி என்ன பண்ணுறது..? முதல்ல அவுங்களுக்கு கட்சிய எப்படி நடத்துரதுனே தெரியாது .. அப்படியே எதாச்சும் தெரிஞ்சு சொன்னாலும் அங்க அவுங்க சொல்லுறத புரிஞ்சிக்கிற அளவுக்கு ஆளுங்க இல்ல ..//

கட்சிய நடத்துரதுன்னதோட அனு பாருங்க எனக்கா தெரியாதுன்னு என்னா பண்ராங்கன்னு லெஃப்ட் ரைட்னு மார்ச்ஃபார்ஸ்ட் நடத்துராங்க நம்ம போலீஸ பாருங்க இப்டி வரிசையா கூட்டிட்டு போயி சுண்டல் தருவாங்கங்ர நம்பிக்கைல அவரும் பின்னாடியே போரார் ஆமா பெசொவி எதுக்கு திரும்பி திரும்பி பார்த்துட்டு போறார் ஓ யார்னா அடிக்க வந்துடுவாங்களோன்னா?!ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது ரசிகன் ரொம்பவே பெர்ஃபெக்ட் பாருங்க கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு கார்த்தியா ஒரு கைல இழுத்து பிடிச்சுட்டே லெஃப்ட் ரைட் போட்ரார் ஆனா இந்த Sun`snetway மட்டும் நைஸா எங்கியோ (அனேகமா சின்ன அருண்ட்ட அன்னிக்கு வாங்கி தந்த டீக்கு வசூல் பண்ண போயிருப்பாரு) எஸ் ஆகிட்டாரு

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// இது என்னமோ உங்க wife-வோட
அண்ணன் அவங்க wife-கிட்ட உங்களை
பத்தி சொன்ன மாதிரி இருக்கு. //

ஏங்க லூசு ரமேஷு..,
( மரியாதையா திட்றேனா.. )

என் Wife-வோட அண்ணன் அவரு..
ஆனா அவர் Wife-க்கு அண்ணன்
நானில்ல.. அது வேற ஆளு..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// அப்பாடா... World cup வரப்போகுதே..
உலக த்ருஷ்டியெல்லாம் நம்ம Dhoni
மேல தான் இருக்குமேன்னு கவலை
பட்டுட்டு இருந்தேன்.. ஒரு வழியா
த்ருஷ்டி கழிஞ்சது.. இனி பயமில்ல.. //

ஆமா தோனி கல்யாணத்துல ஆரத்தி
எல்லாம் எடுத்து திருஷ்டி கழிச்சாச்சு..

கொசுறு தகவல் : தோனிக்கு பின்னாடி
தெரியற அந்த Brown Coat போட்ட
கை யாருது தெரியுமா..?

அது.. அது... சரி விடுங்க நமக்கு
இந்த விளம்பரம் பிடிக்காதுல்ல..
ஹி., ஹி., ஹி....

வெங்கட் said...

@ இந்திரா.,

// ஆமாங்க.. அப்புறம் வாங்கின அடிய
பத்தி சொல்லவேயில்லையே... //

@ இம்சை பாபு.,

// அப்போ அடி வாங்கி அனுபவிச்சு
பார்த்து ஒரு பதிவு எழுதுங்க //

@ மங்குனி.,

// அதுனால ஏற்பட்ட பின்விளைவுகள
பத்தி ஒன்னும் சொல்லலையே ??? //

என்ன இது..? எல்லோரும் நான்
அடி வாங்கி இருப்பேங்கற மாதிரியே
கமேண்ட் போட்டு இருக்கீங்க..?

என் மனைவியாவது..
என்னை அடிக்கறதாவது..

நாம கையில சிக்கினாத்தானே..!!

வெங்கட் said...

@ சுரேஷ் குமார்.,

// பொறாமையாக கூட இருக்கலாம்...
ஆவ்வ்... //

இருக்கும்., இருக்கும்..!!
எனக்கும் அதே டவுட்டு தான்..

:)

கே. ஆர்.விஜயன் said...

இந்த உலககோப்பை முடிகிற வரைக்கும் உங்க நண்பர் டோனிகிட்ட ப்ளாக்கை பற்றி சொல்லதீங்க. இந்தியாவின் மானமே(அப்படி ஒண்ணு இருந்தால்) உங்ககிட்டதான் இருக்கு. அவரு ஓடிட்டார்னா கீப்பிங் பண்ணகூட ஆள் இருக்காது.

ரசிகன் said...

//கொசுறு தகவல் : தோனிக்கு பின்னாடி
தெரியற அந்த Brown Coat போட்ட
கை யாருது தெரியுமா..? //

ம்ம்ம் தெரியாம என்ன?
shoe lace கட்ட குனிஞ்ச நேரத்துல நீங்க அத்து மீறி மண்டபத்துல நுழைஞ்சி பந்திகுள்ள ஓடினத பாத்துட்டு பின்னாடியே வந்து இழுத்துட்டு வந்து வெளிய விட்டாரே security chief, அவரு கை தான??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த போட்டோவுல உள்ளவர எங்கேயோ பார்த்திருக்கேனே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு பீலிங்கு..... சேம்.... பீலிங்கி....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////" என் சகலை வேற ஊர்ல இல்லையாம்..
கல்யாணத்துல எனக்கு யார் கம்பெனி
குடுப்பா..? "//////

யோவ் என்னய்யா வெவரம் புரியாத ஆளா இருக்கீரு..... சகலை இருந்தா போட்டிதானே... மரியாதை கவனிப்பு, விருந்து உபசாரம் எல்லாம் போட்டியே இல்லாம தனியா என்சாய் பண்ணலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" நீங்க கல்யாணத்துக்கு வந்து
உங்க Blog பத்தி பேசறதா இருந்தா
அவன் கல்யாணத்துக்கே வரலையாம்.. !! "/////

உங்க ப்ளாக்கை வெச்சி நீங்க ஆற்றிக் கொண்டிருக்கும் சமூகத் தொண்டை நெனச்சா புல்லரிக்குதுண்ணே.....! எதெதுக்கெல்லாம் யூஸ் ஆகுது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அடங்க மாட்டோம்ல...
ஹி., ஹி., ஹி..!!/////

ஏன் இந்த வேல.... வீட்ல பம்மிக்கிட்டு இருந்துட்டு இங்கன வந்து துள்ள வேண்டியது, இதெ வேலையாப் போச்சி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் உங்க பிரண்டுகிட்ட சொல்லி, உருண்டையா, கலரா இருக்குமே அதாங்க ஒலக கோப்ப, அதுல ரெண்டு வாங்கிட்டு வர சொல்லுங்க.... ஃப்ரீயா இல்லேங்க, காசுக்குத்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் கம்பெனின்னு டைட்டிலை பார்த்த உடனே நீங்க புதுசா ஒரு சீட்டுக் கம்பேனி ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நெனச்சேன்.....!

வெங்கட் said...

@ செல்வா.,

// இத படிச்சதுமே இந்த VKS காரங்க
நாங்க நினைச்சோம் அவுங்க சொல்லிட்டாங்க
அப்படின்னு நினைச்சிக்க வேண்டியது. //

அவுங்க எதை தான் சொந்தமா
சொன்னாங்க..? இல்ல எதை தான்
கரெக்ட்ட புரிஞ்சிக்கிட்டாங்க..?

@ VKS.,

என்ன செல்வா சொன்ன 5 காரணங்கள்
படிச்சு பாத்தாவது உண்மை என்னான்னு
விளங்கிச்சா..?!!

ம்ம்.. அப்படியே விளங்கிட்டாலும்..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// பதிவு போடற சாக்கில பழைய பதிவுகளைப்
படிக்க வைக்க சதி நடக்குதோ? //

இது சதியா..? அபாண்டம்..!!

மக்கள்., நம்ம எல்லா பதிவையும்
படிச்சிட்டு சந்தோஷமா
இருக்கட்டுமேங்கிற பொது நலம்...!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// VAS மெம்பர்சை நாங்க கோவப்படுத்தறதில
இருக்கற சந்தோஷத்த விடவா? //

இதென்னங்க சந்தோஷம்..?

அதுக்கு அப்புறம் நாங்க ரவுண்ட் கட்டி
அடிக்கும் போது " எங்களை அடிக்காதீங்க..
அடிக்காதீங்கன்னு " கெஞ்சுவீங்களே..

அது இதை விட சந்தோஷம் இல்ல..!!

வெங்கட் said...

@ மனோ.,

// எலேய் கோமாளி செல்வா, தெரிஞ்சோ
தெரியாமலோ அவரு வீட்டு பக்கம் போயிராதே
அவரை பாராட்டி நீ எழுதுன இந்த மினி பதிவுக்கு,
உனக்கும் பூரிகட்டை அடி உண்டு. //

நாங்கல்லாம் அணுகுண்டு போட்டாலே
அலட்டிக்காம கேட்ச் பண்ணி., அதை
அமைதியா பாக்கெட்ல வெச்சுட்டு
போறவங்க...

After all வெறும் பூரிக்கட்டைக்கா
பயப்படுவோம்..?!!

( இதுக்கு மேல சொல்ல போறது ரகசியம்..
செல்வா தவிர எல்லோரும் காதை மூடிக்கோங்க.. )

அதான் ரகசியம்னு சொல்லிட்டேன்ல..
மறுபடியும் ஒன்ரை கண்ணுல என்ன பார்வை..?


@ செல்வா.,

நீங்க பயப்படாம வீட்டுக்கு வாங்க..
நான் வேணா பூரிக்கட்டையை எடுத்து
ஒளிச்சு வெச்சுடறேன்..

வெங்கட் said...

@ ஷாலினி.,

// அனு: எவ்ளோ ட்ரைனிங் குடுத்து
அனுப்புனாலும் அடி வாங்கிட்டு வர்ரதே
உன் பொழப்ப போச்சு //

பின்ன ரவி சாஸ்த்ரி கிட்ட ட்ரைனிங்
எடுத்துட்டு சேவாக் மாதிரியா ஆட முடியும்..?

// கார்த்தி: நான் என்னா பண்ண?
அவங்க பாஸ் அப்புடி எங்க தலைவி(தி)
இப்புடி... //

ஹா., ஹா., ஹா..!!
செம செம..

கார்த்தி மனசுல இருக்கறதை அப்படியே
கமெண்ட்டா போட்டுடீங்க..

வெங்கட் said...

@ எஸ்.கே.,

// அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு
என்ன அட்வைஸ் பண்ணீங்க? //

ஓ.. அதுவா..

நான் : மண்டபத்துக்கு வெளியில VKS
ஆளுங்க 6 பேர் நிக்கறாங்களாம்..
உங்க Security Chief-கிட்ட சொல்லி
அவங்களை உள்ளே விட சொல்லு..

டோனி : அவங்கள நான் கல்யாணத்துக்கு
Invite பண்ணவே இல்லையே..

நான் : அவங்க எந்த கல்யாணத்துக்குபா
Invite பண்ணி..., போறாங்க..?

டோனி : ஓ... அப்படியா..? சரி., சரி
அப்ப Reception Entrence-ல நிக்கிற
Security-கிட்ட சொல்லி உள்ள விட சொல்றேன்..

நான் : No., No., இங்கே அவங்களுக்கு
என்ன வேலை..? நேரா Buffet நடக்குற
ஹால் கதவை திறந்து விட சொல்லு..
வந்த வேலையை முடிச்சிட்டு போகட்டும்..

( ரமேஷுக்கு என்ன வேலை..?
" பிளேட் கழுவுற வேலையா..? " என்று
கமேண்ட் போட தடை விதிக்கப்படுகிறது.. )

வெங்கட் said...

@ செல்வா.,

// அனு அக்கவ சொல்லி என்ன
பண்ணுறது..? முதல்ல அவுங்களுக்கு
கட்சிய எப்படி நடத்துரதுனே தெரியாது.. //

அவங்க என்ன பண்ணுவாங்க..?
அவங்களுக்கு டைம் இல்லபா..
செம Busy-யாம்.

காலையில எந்திரிச்சதுல இருந்து
ராத்திரி தூங்கற வரைக்கும் வேலை
சரியா இருக்காம்..

என்ன வேலையா..?

அதான்பா..
Breakfast சாப்பிடறது & தூங்கறது..
Lunch சாப்பிடறது & தூங்கறது..
Dinner சாப்பிடறது & தூங்கறது..!!

samhitha said...

//நாங்கல்லாம் அணுகுண்டு போட்டாலே
அலட்டிக்காம கேட்ச் பண்ணி., அதை
அமைதியா பாக்கெட்ல வெச்சுட்டு
போறவங்க...
//

venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்டியே எதிரி படை மேல தூக்கி போட்டுடனும் :)

//Breakfast சாப்பிடறது & தூங்கறது..
Lunch சாப்பிடறது & தூங்கறது..
Dinner சாப்பிடறது & தூங்கறது..!!//

என்ன இருந்தாலும் அவங்களும் ஒரு கட்சி(அப்டி ஒன்னு இருக்கா?) தலைவி

இப்டிய damage பண்றது!! ;)
பாருங்க எப்டி அழறாங்க!!

karthikkumar said...

@ செல்வா
///பாவம் கார்த்தி தெரியாத்தனமா அங்க போய் சேர்ந்திட்டான். இப்ப அழுது என்ன பண்ணுறது ?///

அதான் மச்சி நானும் கேக்குறேன் எதுக்கு உங்க தலைவர் இப்போ அழுகுறாரு.. அப்பவே என்ன உங்க கட்சில தக்க வெச்சிக்க முடியாம நான் போன பிறகு இப்ப அழுது என்ன பிரயோஜனம்....


இது VAS க்கு குறிப்பா ஷாலினி உங்களுக்கு,

அதெப்படி ஆள் இல்லாத சமயமா பாத்து உங்க டீம் வந்து எங்கள அடிக்கறதா நெனச்சுட்டு கூவிக்கிட்டு இருக்கீங்க. நாங்க வந்த அப்புறம் எங்க போறீங்கன்னு மட்டும் தெரியமாட்டேங்குது.... :)

karthikkumar said...

@ சம்ஹிதா
venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்டியே எதிரி படை மேல தூக்கி போட்டுடனும் :)////

வெங்கட் அண்ணனுக்கு எதிரி படைன்னா அது செல்வா, ஷாலினி, டெரர் இந்த க்ரூபுதான்.... ஏன்னா நாங்க அடிக்கிறத விட, இவர் பேச்சை கேக்காம அந்த க்ரூப் எங்ககிட்ட நல்லா செமத்தியா வாங்கி கட்டிக்கிட்டு இவரையும் இழுத்து விட்டுருவாங்க .....

Anonymous said...

அவர் ரொம்ப நல்லவர் எவ்வளவு கொடுத்தாலும் பாவம் தாங்குவார் என்று அந்த அம்மாவுக்கு தெரியும்.
பாவம் மனுஷ்சன் வீட்டில் அடிவாங்க என்றே த‌த்துபித்து என்று எதையாவது டப்ளாக்கில் எழுதி பேந்த பேந்த முழிப்பார்..

Shalini(Me The First) said...

ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா?

lekha said...

//ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா//

singam kalam irangiduchu ;)

karthikkumar said...

@ செல்வா
///1. உங்க ப்ளாக் பத்தி பேசினா நேரம் போறதே தெரியாது .///
ஆமா உங்க ப்ளாக் பத்தி பேசினாலே எல்லோரும் தூங்கிருவாங்க அப்புறம் எப்படி நேரம் போறது தெரியும்?

///2. உங்க ப்ளாக் பத்தி பேசினா மாப்ளையும் பொண்ணும் கல்யாணம் அப்படிங்கிறதையும் மறந்திட்டு ப்ளாக் படிக்க போய்டுவாங்க.///
கல்யாணத்தையே மறக்குற அளவுக்கு உங்க தலைவர் வூர்ல வுள்ள எல்லோரையும் மொக்க போட்டே வருத்திருக்கிறார் அப்டின்னு அர்த்தம் மச்சி...

///3. உங்க ப்ளாக் படிச்சா இருக்குற அத்தன பேரும் சந்தோசத்துல சாப்பிட கூட மறந்துரூவாங்க .. இதழான அங்க இருக்குற சாப்பாடு வேஸ்ட் ஆகிடும் ///
உங்க ப்ளாக் படிச்சா இருக்குற அத்தன பேரும் சாப்பாடும் வேணாம் ஒன்னும் வேணாம் னு சொல்லி ஓடிபோயிருவாங்க அதனால சாப்பாடு மிச்சமாயிரும் .

///4. உங்க ப்ளாக் பத்தி பேசினா அவருக்கு அவுங்க வீட்டுல திட்டு விழும் , நீங்களும் இப்படி ஒரு ப்ளாக் எழுதலாம்ல அப்படின்னு ///
மக்களை பாடாபடுத்த கோகுலத்தில் சூரியன் அப்டிங்கிற ஒரு ப்ளாகே போதும் நீங்க எதாவது இந்த மாதிரி ப்ளாக் ஆரம்பிச்சீங்க சோறு கெடையாதுன்னு சொல்லி மெரட்டிருப்பாங்க.

///5. உங்க ப்ளாக் பத்தி பேசினா அங்க இருக்குற நம்ம VAS அதாவது அங்க இருக்குற எல்லோருமே VAS தான .. அவுங்க உங்க கிட்ட ஆட்டோ கிரப் கேட்டு தொல்லை பண்ணுவாங்க .///

THIS IS CALLED மீனே தனக்கு மசாலாவ தடவி என்னச்சட்டிகுள்ள குதிச்சிக்கிறது (உங்க தலைவர் சொன்னதுதான்)

karthikkumar said...

/// Shalini(Me The First) said...
ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா?////காட்டாறுக்கு ஏது நேரம் காலமெல்லாம்?? ANYTIME....

கோமாளி செல்வா said...

//வெங்கட் அண்ணனுக்கு எதிரி படைன்னா அது செல்வா, ஷாலினி, டெரர் இந்த க்ரூபுதான்.... ஏன்னா நாங்க அடிக்கிறத விட, இவர் பேச்சை கேக்காம அந்த க்ரூப் எங்ககிட்ட நல்லா செமத்தியா வாங்கி கட்டிக்கிட்டு இவரையும் இழுத்து விட்டுருவாங்க ...//

நீங்க குடுக்குரதுக்குப் பேரு அடியா மச்சி ? ஹி ஹி .. ஹய்யோ ஹய்யோ .. அது எங்க தட்டி குடுக்கறது மாதிரியே இருக்கு .. ஓ , இத்தன நாளும் எங்க அடிக்கிற மாதிரியே நினைச்சுட்டு இருந்தீங்களா ? கொடுமையே .. அப்பவும் அடிக்கடி நினைப்பேன். உங்க சங்கத்து ஆளுக யாரையும் தட்டி கொடுக்க மாட்டாங்களே அப்படின்னு .. இப்பத்தான் தெரியுது ..

கோமாளி செல்வா said...

@ ஷாலினி
//
ஓக்கே கார்த்தி டைம் சொல்லுங்க நேருக்கு நேர் ஒரு வார் வச்சுக்கலாம்
டீல் ஆ நோ டீலா?/

ஹி ஹி , போயும் போயும் சின்னப் பையன் கிட்ட (அதாவது மூளை வளர்ச்சி அடிப்படைல சொன்னேன்) நேருக்கு நேர் சண்டை போட்டுக்கிட்டு .. அப்புறமா அடி பட்டுருச்சு அப்படின்னு அனு அக்கா கிட்ட போய் அழுவான். அவுங்களும் இதுதான் நல்ல சமயம் அப்படின்னு நினைச்சிட்டு VKS சங்கத்த கலைச்சிட்டு VAS ல சேர்ந்திடலாம் அப்படின்னு நினைப்பாங்க.. அதனால சண்டை எல்லாம் வேண்டாம் ..

Shalini(Me The First) said...

@ கார்த்தி
அப்ப சரி நாளைக்கு காலை சுமார் 11 மணிக்கு ரெடியாயிருங்க அடி வாங்க...

@ செல்வா
இல்ல செல்வா அவர் மூளைய கொஞ்சமாச்சும் வளர வைக்கனும்

வெங்கட் said...

@ கே.ஆர்.விஜயன்.,

// இந்த உலககோப்பை முடிகிற வரைக்கும்
உங்க நண்பர் டோனிகிட்ட ப்ளாக்கை
பற்றி சொல்லதீங்க. //

ஓ.கே.. சொல்லலைங்க..!!

பிளாக் மேல Interest ஆகிட்டு., அதனால
ஆட்டத்துல Interest குறைஞ்சிடுமோன்னு
பயப்படறீங்க.. உங்க பயம் கூட ஒரு விதத்துல
நியாயம் தான்..

வெங்கட் said...

@ ரசிகன்.,

// பந்திகுள்ள ஓடினத பாத்துட்டு பின்னாடியே
வந்து இழுத்துட்டு வந்து வெளிய விட்டாரே
security chief, அவரு கை தான?? //

" அரண்டவனுக்கு இருண்டதெல்லாம்
பேய்ங்கிற " மாதிரி.. பாவம் உங்களுக்கு
யார் கையை பாத்தாலும் அந்த
Security Chief கைதான் ஞாபகத்துக்கு வருதோ..?!!

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// சகலை இருந்தா போட்டிதானே.,
மரியாதை கவனிப்பு, விருந்து உபசாரம்
எல்லாம் போட்டியே இல்லாம தனியா
என்சாய் பண்ணலாம்ல? //

ஆமா.. நாம அங்கே போன உடனே..
வாசல்லயே யானை வந்து மாலை
போட்டு., கும்பலா நின்னு ஆரத்தி எடுத்து.,
மேள தாளத்தோட., உள்ள கூட்டிட்டு
போறாங்களாக்கும்..

மண்டபத்துக்கு உள்ளே போனா..
எல்லோரும் வரிசையா வந்து
" வாங்க.. வாங்கன்னு " சொல்லிட்டு
ஓடி போயிடுவாங்க.. அவ்ளோ தான்..!!

அப்புறம் தனியா., ஒரு ஓரமா
உக்காந்துட்டு இருக்கணும்..

இதுல என்ன போட்டி..?

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// ஏன் இந்த வேல.... வீட்ல பம்மிக்கிட்டு
இருந்துட்டு இங்கன வந்து துள்ள வேண்டியது,
இதெ வேலையாப் போச்சி....! //

உஷ்.. ரகசியம்..!! ரகசியம்..!!
எதா இருந்தாலும் நாம தனியா பேசிக்கலாம்..
இப்படி பப்ளிக்ல எல்லாம் சொல்லக்கூடாது..!!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// venkat ஏன் பாக்கெடல வச்சிக்கணும் ??
அப்டியே எதிரி படை மேல தூக்கி
போட்டுடனும் :) //

அப்படி தூக்கி போட்டிருந்தா..
இப்ப எங்க Collection-ல
12,694 அணுகுண்டுகள்
இருந்து இருக்காதே..!!

// இப்டிய damage பண்றது!! ;)
பாருங்க எப்டி அழறாங்க!! //

அது அவங்க Full Time Job..!!

எங்களை கலாய்ச்சு கமெண்ட் போட
வேண்டியது.. அப்புறம் தெரியாம
போட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோங்கன்னு
அழ வேண்டியது..

இதை நாங்க தினமும் பாத்துட்டு
தானே இருக்கோம்..!!

வெங்கட் said...

@ கார்த்திக்.,

// அதெப்படி ஆள் இல்லாத சமயமா பாத்து
உங்க டீம் வந்து எங்கள அடிக்கறதா
நெனச்சுட்டு கூவிக்கிட்டு இருக்கீங்க. நாங்க
வந்த அப்புறம் எங்க போறீங்கன்னு
மட்டும் தெரியமாட்டேங்குது.... :) //

July - 2011..
ஹாங்காங் டீம் கிரிக்கெட் கேப்டன்
பிரஸ் மீட்டிங்கில்..

" உலக கோப்பை நடக்குதுன்னு
சொன்னாங்க.. எங்கே யாரையும் காணோம்..? "

" அது முடிஞ்சி 2 மாசம் ஆகுதே..!! "

" ஆ.. எங்களுக்கு பயந்துட்டு உலககோப்பையை
முன்னாடியே நடத்திட்டாங்களா..? "

" ஏய்..காமெடி பீசு..!!, அதெல்லாம் கரெக்ட்
டைம்ல தான் நடந்தது.. நீ தான் லேட்டு..!! "

" இருந்தாலும் நாங்க வர்ற வரைக்கும்
Wait பண்ணனும்ல..!! "

" பண்றோம்.. ப்ண்றோம்.. முதல்ல போயி
கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிக்கறதுன்னு
கத்துகிட்டு வா.. "

karthikkumar said...

@ ஷாலினி
இல்ல செல்வா அவர் மூளைய கொஞ்சமாச்சும் வளர வைக்கனும்////

அதை நான் பாத்துக்குறேன். உங்ககிட்ட இல்லாதத பத்தி தேவையில்லாம ஏன் பேசுறீங்க....:)

ராஜி said...

எல்லா கணவன்களும் மனைவிக்கிட்ட பல்ப் வாங்குவாங்க. ஆனால் அதையும் பதிவாக்கி போடும் சாமர்த்தியம் உங்களுக்கு மட்டுமே உண்டு

Madhavan Srinivasagopalan said...

//yes.ke said "அப்புறம் கல்யாணத்தில் தோனிக்கு என்ன அட்வைஸ் பண்ணீங்க? பிளாக் பத்தி பேசினீங்களா?" //

வேர்ல்டு கப்புல எப்படி விளையாடனும்னு டிப்ஸ் கொடுத்தாது..

Shalini(Me The First) said...

@கார்த்தி
// உங்ககிட்ட இல்லாதத பத்தி //
உங்க மூளை என்னட்ட இருக்குன்னு நினச்சுட்டிங்களா ஓ அத கடவுள் படைக்கவே இல்லைங்க
//தேவையில்லாம ஏன் பேசுறீங்க....:)
//

சரி விடுங்க உங்களுக்கு மூளை தேவை இல்லைன ஒண்ணும் பிரச்சினை இல்ல

Ganesh Chandrasekaran said...

Nice one